சஸ்பென்ஸ் த்ரில்லர்களில் எனக்குத் தெரிந்து இரண்டு வகை உண்டு.
ஒன்று மர்மமான சம்பவங்களை விறுவிறுப்பாகக் காட்டி முடிவில் ஏன்?எதற்கு?எப்படி? என்று முடிச்சை அவிழ்ப்பார்கள். இரண்டு ஏன்?எதற்கு?எப்படி? என்று முடிச்சை முதலிலேயே அவிழ்த்துவிட்டு அதன் சம்பவங்களை விறுவிறுப்பாக சொல்லிக் கடைசியில் முடிப்பார்கள். மூன்று இரண்டும் கலந்தவாறு சொல்லுவார்கள்.இது ரொம்ப அபூர்வம்.
( ஸ்வப்னா ஆபிரகம்(பக்கத்து வீட்டு பெண்மணி).கவிதை எழுதுவாராம்.பெரிய பாடகர்.எம்பிஏ பட்டதாரியாம்.)
கெளதம் இரண்டாவது வகையை தேர்ந்தெடுத்துள்ளார்.நடுநிசி நாயகள் தலைப்பு மட்டும் திகிலாக இருக்கிறது.தன்னுடைய கடைசி victimஐ ஒரு இரவில் வேட்டையாடுவதுதான் கதை.
ஆனால் ஒரு தாக்கமும் இல்லை.மேக்கிங் பளபளவென்று இருக்கிறது.ஆனால் ஒன்ற முடியவில்லை.பல படங்களில் இதைப்போல் பார்த்தாயிற்று.அந்நியன்,ஆளவந்தான்,
யுத்தம்செய்.மொட்டை அல்லது தலை முடியை விரித்துப்போட்டுக்கொண்டு உறுமுதல்.சைக்கோ/விசிட்டிங் அவர்ஸ் மற்றும் பல.
இப்போதுதான் யுத்தம் செய் பார்த்த சீட்டின் சூடு ஆறவில்லை.அதை டைப்பில் இன்னும் ஒரு திரைப்படம்.அடுத்தது என்ன என்ற ஒரு பரபரப்பு இல்லாததால் த்ரில் இல்லை.திரைக்கதையில் ”மீனாட்சி அம்மா” தீடிரென்று “பக்கத்து வீட்டு ஆன்ட்டி”ஆவது பெரிய சறுக்கல்.அவனின் சுகன்யாவின் மேல் காதலும் சரியாகக் காட்டப்படவில்லை.
இவன்தான் பக்கத்து வீட்டு ஆன்டியாகவும் சமராகவும் இரண்டு மனம் பிழ்ற்ந்த ஆளுமையாக (split personality) முதலிலேயே காட்டி இருக்கலாம்.முதல் கொலை அவள் செய்வதாகத்தான் காட்டப்படுகிறது.
கதைக் கரு?இது சிகப்பு ரோஜாக்களின் வேறு வடிவம்தான்.ஆனால் அது வந்த காலம் வேறு.1978 கிட்டத்தட்ட 32 வருடம் ஆகிவிட்டது.அப்போது அது வித்தியாசம்.எடுக்கப்பட்ட விதமும் அருமை.
சிறுவயதில் தன் தந்தையாலேயே பாலியல் தொந்தரவிற்கு ஆளாகி அதன் நினைவுகளால் மனம் பிழ்ற்ந்து பிற்காலத்தில் தவறான காம அணுகுமுறைக்கு அலையும் இளைஞனின் கதைதான் கரு.
சிறுவயதில் தவறான அனுபவங்களினால் “மனம் திரிந்து”
அதனால் எதிர்மறை காரியங்களை செய்யும் கருக்கள்
இயக்குனர்களுக்கு லட்டு மாதிரி.அதில்தான்
வன்முறையையும் பாலியில் காட்சிகளை அழகுப்படுத்திக்காட்டலாம்.
அவன் மருத்துவத்திற்கோ அல்லது இந்திய ஆணைப் பணிக்கு படித்து பாஸ் பண்ணுவது மாதிரி காட்டுவதில்லை.காட்டினால் தியேட்டரில் ஈ அடிக்கும்.
படத்தில் ஹிரோவாக நடித்திருக்கும் வீரா நன்றாக செய்திருக்கிறார்.கள்ள விழி விழித்துக்கொண்டு “பீலா” விடும் இடங்கள் அருமை.(சிகப்பு ரோஜாக்கள் கடைசிக்காட்சி கமல் போலவே தோற்றம்).அவருடைய உடல் மொழியும் ஒத்துவருகிறது.சமீரா ரெட்டி ஒகே.மீனாட்சி அம்மாவாக வரும் ஸ்வப்னா ஆபிரகம் உணர்ந்து நடித்திருக்கிறார்.
டெயில் பீஸ்-1:
முதலில் காட்டப்படும் தணிக்கைச் சான்றிதழில் ஏதேச்சையாக இரண்டு உறுப்பினர்கள் பெயர் கண்ணில் பட்டது. 1.நிர்மலா பெரியசாமி 2.புஷ்பகந்தசாமி.
டெயில் பீஸ்-1:
நான் படம் பார்க்கும் வழக்கமான தியேட்டரில் நாகரிகமானவர்கள் வருவார்கள். அமைதியாக படம் பார்ப்பார்கள்.இந்த முறை இரண்டு “நடுநி”ச்சீ” நாய்கள்” ஆபாசமாக குரைத்து எல்லோரையும் நெளிய வைத்தது.தனியாக படம் பார்த்த எனக்கே அருவருப்பாக இருந்தது.

டெஸ்ட்.(எனக்கு கமெண்ட் பாக்ஸ் திறக்கவில்லை அதற்காக)
ReplyDeleteGood post! thanks for sharing the information.
ReplyDeleteநன்றி leons0133.
ReplyDeleteசார்....ஃபேமிலியோட ‘பயணம்’ போய்ப் பாருங்க... நல்ல எண்டர்டெயினர்... சிரிப்புக்குப் பஞ்சமே இல்லை...
ReplyDeleteநன்றி தமிழ்ப்பறவை. முயற்சி செய்கிறேன்.
ReplyDeletegood perception for the welfare of the common good of the society.
ReplyDeleteநன்றி ஆண்டனி பிரான்சிஸ்
ReplyDelete