Wednesday, February 9, 2011

இளையராஜா- King of Heavenly Hummings-2

மேஸ்ட்ரோ ஹம்மிங்கை பாட்டின் இடைவெளியை வெத்தாக
நிரப்புவது(just filling up) போல் அல்லாமல் கலையாக செய்கிறார்.எல்லாவற்றையும் போல இதற்கும் ஒரு
ஒழுங்கு அணுகுமுறை (structured approach) வைத்திருக்கிறார்.ஹம்மிங்கிற்கும் நோட்ஸ் உண்டு என்று எண்ணுகிறேன்.

இதை இசைக்கருவியாக பயன்படுத்துகிறார்.ஆச்சரியமான பரிமாணங்கள் கண் முன் விரிகிறது.பல கட்டங்களைத் தாண்டுகிறோம்.

பெண்களுக்கு 33% அல்லாமல் 92% ஹம்மிங்கில் ஒதுக்கீடு.அவர்கள்தான் 92% ஹம்முகிறார்கள். ஆண்கள் ஜாலியாக ஹம்மிங் மழையில் குளித்தபடி டூயட் பாடுகிறார்கள்.ஆண் ஆதிக்க மனோபாவம்.

பாரதி ராஜாவின் பாடல்களில்  வெள்ளை உடை தேவதைகள் வந்தப் பிறகு கோரஸ் ஹம்மிங்களின் ஜனத்தொகை அதிகமாயிற்று.
படம்:”இளமைகாலங்கள்” மோகன் - சசிகலா மற்றும் ”தோழிகள்”

முந்தைய பதிவு-1ல் குறைவானப் பாடல்களைத்தான் பார்க்க முடிந்தது. இதில் நிறைய பாடல்கள்.எடுக்க எடுக்க அலைஅலையாய் வந்துக்கொண்டே இருக்கிறது.ஒரு பெரிய பிராஜகெட் மாதிரி செய்ய வேண்டி இருக்கிறது.

இளையராஜா ஹம்மிங் நிகர்நிலை பல்கலைக்கழகமே நடத்தலாம். அவ்வளவு ஹம்மிங்!

தெரியாத பாடல்களில் எந்த இடத்தில் ஹம்மிங் வரும் என்று யூகிப்பது கஷ்டம்.கையில் துண்டு வைத்துக்கொண்டு கோழி அமுக்குவது போல் அமுக்க வேண்டி இருக்கிறது.

ஏழுமலையான் மகிமை படத்தில் (பாட்டு:எந்த ஜன்மம் என்ன)முடியப்போகிறது என்று ஆடியோவை மூட யோசிக்கையில் 4.23ல் ஹம்மிங் வருகிறது.

யோசித்துப் பாருங்கள்.கிட்டத்தட்ட (சுமார் கணக்குதான்)5000 பாடல்கள்.இதில் 80/90களில் வழக்கமான ராமராஜன்,முரளி,மோகன்,பாண்டியராஜன்,சுரேஷ் (ரஜனி,கமல் இதில் அடங்குவார்கள்) இத்யாதிகளின்  புளித்தமாவையே புளிக்கவைக்கும் கதைகள் அதில் டூயட்டுகள்,மற்ற பாட்டுக்கள்.ஒரு கையில் ஹார்மோனியமும் மற்றொரு கையால் மூக்கையும் பிடித்துக்கொண்டு
(புளித்த மாவு நெடி) டியூன் போட்டிருப்பாரோ?

முடிந்தவரை சாயல் வராமல் தனித்தன்மையோடு ஹம்மிங்குகளைப் போட்டிருக்கிறார்.காரணம்.இவரிடம் நிறைய  out of box thinking மற்றும் எல்லாவகை இசை ஞானங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்.

"You  just name it director.... I  create it" என்றபடி போட்டிருக்கிறார் ஞானி ராஜா.

மொத்தம் எடுத்தது 55 ஹம்மிங்.(கைத்தட்டுங்ப்பா!)

             Melody Queen of South India என்கிற ஹம்மிங் ராட்ஷசி

ஹம்மிங்கில் ஜானகிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.சிலம்பாட்டம் ஆடுகிறார்.HATS OFF JANAKIAMMA!அவர் குரலின்  பன்முகத்தன்மை ஒரு காரணம்.2000 வோல்ட்ஸ் கம்பி இழைக் குரல்.குரலில் ஒரு சில்லிப்பு.கவர்ச்சியும் ஹிந்துஸ்தானி டச்சும் கூடுதல் பலம்.

ஹம்மிங்கில் லட்சக்கணக்கான ரசிகர்களை இம்சைப்படுத்தியவர். 

அறிவிப்பு:
மிதக்கும் ஆடியோ பிளேயர்(fileden)தளம் தொழில் நுட்ப
கோளாறு காரணமால்Divshare ஆடியோ பிளேயர் பாதி வைக்க வேண்டியதாய் போயிற்று.
 
சோலை இளங்குயிலே - அண்ணனுக்கு ஜே -1989
வித்தியாசமாக  டூயட்டில்  ஆண்களின் கோரஸ் ஹம்மிங்.அண்ணிக்கு ஜே? 0.57-1.15 ஹம்மிங்கின் ஊடே செல்லும் இசை அருமை.மென்மையாக ஹம்முகிறார்கள்.
Humm2Annanukku-Solaiilam.mp3
அடுத்து முக்கியமானது ஹம்மிங்குடன் இசைக்கப்படும் மற்ற இசை நாதங்கள்.இதனால் ஹம்மிங்கிற்கு ஒரு களை வருகிறது.புத்திசாலித்தனமும் மிளிர்கிறது.

உதாரணம் சில:நான் என்பது, ஆறு அது,முத்தமிழ் கவியே,ராசாவே உன்ன,காதல் ஓவியம்,புத்தம் புது காலை.இதில் புத்தும் புது காலை பிரமிக்க வைக்கிறது.

புத்தம்புது காலை -அலைகள் ஓய்வதில்லை-1981
இனிமையான இசை நாதங்களுக்கு நடுவே மொட்டு விரியும் ஹம்மிங்.ராஜாவின் மேதைத்தனமான இசை.ஒரு வானவில் வர்ணஜால கற்பனை.மார்கழி மாத பனிகாலை இழைகள்.
ஆறு அது ஆழமில்ல -முதல் வசந்தம்-1990
தாளக்காட்டு ஹம்மிங்கிற்கு எக்ஸ்ட்ரா கிராமியம மணம் கொடுக்கிறது.எனக்கு பிடித்தமான ஒன்று.இதெல்லாம் மறுபடியும் உருவாக்கமுடியுமா.இதெல்லாம் classics ஆகிவிட்டது.
Humm2Aaruathuazha.mp3

முத்தமிழ் கவியே -தர்மத்தின் தலைவன் -1988
ஹம்மிங்கிறகு இசைக்கப்படும் தபலா ரம்யம்.0.16,0.19,0.22 இல் எழுப்பப்படும் ”ஊஊ” ஹம்மிங் அல்ல.இசைக்கருவி. நான் எப்போதும் ரசிக்கும் ஹம்மிங்.சும்மா கணீர் கணீர் என்று வருகிறது. 

அலைகள் ஓய்வதில்லை - காதல் ஓவியம் -1982
0.20-0.32 தாளமும் ஹம்மிங் செய்கிறது.0.36-0.49ல் கவுண்டர் பாயிண்ட்.
நான் என்பது நீ - சூரசம்ஹாரம் -1988
முதலில் வருவது ஹம்மிங்கா இசைக்கருவியா?
 Humm2Nanenpathu.mp3
ராசாவே உன்ன நான் எண்ணித்தான் - தனிக்காட்டுராஜா-1982
தன தம் தம் தம் தம்மெல்லாம் ஹம்மிங்ல சேருமா? இதில் கவுண்டர் பாயிண்ட்0.33-0.52 வருகிறது.(ஹம்மிங் ஒரு மெட்டிலும் கிடார் வேறு ஒரு மெட்டிலும் வாசிக்கப்படுகிறது).0.16ல் ஹம்மிங்கில் இசை குறுக்கிட்டு அழகு படுத்துகிறது.
Humm2RaasaveThanikati.mp3
பாடல்களில் ஹம்மிங்கின் காம்பினேஷனை மாற்றி அழகுப்படுத்துகிறார்.back to back ஜிராக்ஸ் எடுப்பதில்லை.சிலது ஹம்மிங்கா இசைக் கருவியா என்று தெரியவில்லை.

ஸ்டைலோ ஸ்டைல்
ஒரு குங்கும செங்கமலம் - ஆராதனை -1981
என்ன ஒரு ஸ்டைல்! அட்டகாசம்.
Humm2Oru gunguma.mp3


பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்-1981
முன்பாதியில் வரும் ஹம்மிங் பின் பாதியில்  வேறுபடுகிறது.அதுவும் முந்தியதைவிட தரத்தில் மேம்படுகிறது.துள்ளல் ஹம்மிங்.
Humm2PoonAada.mp3

பூமாலையே தோள்சேரவா - பகல் நிலவு -1985
இது தமிழிற்கு புதுசு.இதில் வார்த்தைகளும் ஹம்மிங்கும் கலந்து வருகிறது.ராஜா பாடும்போது ஜானகி செய்யும்  ஹம்மிங்கை  ஜானகி பாடும்போது ராஜா செய்வதில்லை.(ஆடியோவில் இல்லை)
Humm2Poomalaye Thol.mp3

இளையராஜாவின் சோதனை முயற்சி?
 பொன்னோவியம் கண்டேன் - கழுகு -1981
4.05 நிமிட பாடலில் 1.54 நிமிடம் ஹம்மிங்.1.54 நிமிடங்கள் ஹம்மிங்கயே இசைக்கருவியாக பயன்படுத்தி உள்ளார்.
Humm2PonnoviumKazhugu.mp3
 மதம் சம்பந்தப்பட்ட ஹம்மிங்:
மாறுகோ மாறுகோ - வெற்றி விழா-1989
சர்ச் சம்பந்தபட்ட கோரஸ் ஹம்மிங்(பிரார்த்தனை)(?).
Humm2Marugo.mp3

அல்லா உன் ஆணை -சந்திரலேகா - 1995
இஸ்லாம் சம்பந்தபட்ட அரேபியன் டைப் ஹம்மிங்(?).அட்டகாசம்.
Humm2Allahunanai.mp3
டூயட்டில் கதாநாயகன் பாடல் வரிகளைப் பாடுவதும் அதை கதாநாயகி ஹம் (ஆரம்பம்/நடு/முடிவு)செய்வதும் அந்தக்காலப் பாடல்களில்  பார்க்கலாம். இப்போது  குறைந்துவிட்டது.

ரொம்ப ஆச்சரியமான விஷயம் பாடகி சித்ரா ஹம் செய்யும் பாடல்கள் ரொம்ப ரொம்ப குறைவு.காரணம்?

 கீதம் சங்கீதம் - கொக்கரக்கோ - 1983
இதில் முக்கியமானது 0.22ல் ஷைலாஜாவின் குரல் எக்கோவும் இசைக்கருவிகளும் கலந்து வித்தியாசமாக இருக்கிறது.அட்டகாசம்.

Humm2Geetham Sangee.mp3

அருமையான ஒரு குரல் ஹம்மிங்குகள்:
 
Chamber welcomes Ilayaraja
(புது முகம்?)
Humm2Naan Thedum .mp3
காதல் வந்திருச்சு-கல்யாணராமன் -1979  
நல்லவர்கெல்லாம் - தியாகம் -1978
ராஜாவின் இசையில் டிஎம்எஸ் ஹம்மிங் அருமை.சிவாஜி கண்முன் வருகிறார்.எஸ்பிபியையேக் கேட்டுக்கொண்டிருக்கும் காதுகளுக்கு இது புதுசு.
Humm2NallavaThiyagam.mp3
 
 ஏதோ நினைவுகள் - அகல் விளக்கு-1979
Humm2EthoNinaivu.mp3
 இளஞ்சோலைப் பூத்ததோ-உனக்காகவே வாழ்கிறேன் - 1986
Humm2Ilanjolai.mp3

மன்றம் வந்த தென்றலுக்கு - மெளனராகம் -1986
Humm2MandramVantha.mp3

அழகே அழகே - ராஜபார்வை - 1981
Humm2Azhake.mp3

பெண்ணும் ஆணும் சேர்ந்த ஹம்மிங்:

தென்றல் வந்து - தென்றலே என்னைத் தொடு -1985
Humm2ThendralVanthu.mp3

பெண் மானே - நான் சிகப்பு மனிதன் - 1985
Humm2PennMaane.mp3

அழகே உன் முகம் - அந்தப்புரம்(1999)

 Soul-stirring and ever haunting hummings
ஆரோ பாடுன்னு - கதா பரயுன்னு-2010
Humm2Aaro Padunnu .mp3
 காற்றில் எந்தன் கீதம் - ஜானி -1981
(இந்தப் பாடலைப் பற்றிய தனி பதிவே என்னிடம் இருக்கிறது.இந்தப் பாட்டை R&D செய்வதற்குண்டான விஷயம் இருக்கிறது)
(ஜானகி)கண்டேன் எங்கும் -காற்றினிலே வரும் கீதம்-1978

(வாணி)கண்டேன் எங்கும் -காற்றினிலே வரும் கீதம்-1978

தெய்வீக ராகம் -(உல்லாசபறவைகள் -1980)&ஆயிரம் மலர்களே (நிறம் மாறாத பூக்கள் - 1979)
இது மாதிரி  மனதை பிழியும் ஹம்மிங் கடந்த முப்பது வருடத்தில் ஏதாவது இருக்கிறதா?ஹம்மிங்கை அழகாக டிசைன் செய்திருக்கிறார்.

  
இளமையெனும் பூங்காற்று - பகலில் ஒரு இரவு - 1979
இதில் 0.07ல் ஹம்மிங்கும்  தபலாவும் புல்லாங்குழலும் சங்கமமாகும் இடம்  மெலிதான பூங்காற்று  வீசத்தான் செய்கிறது.பிரமாதம் ஞானி சார்!
Humm2Ilamaiennum.mp3
 

பொன்வானம் பன்னீர் - இன்று நீ நாளை நான் - 1983
Humm2PonvanamPanner.mp3
 
ஒரு கணம் ஒரு யுகமாக - நாடோடிதென்றல் -1992 
இதன் தாக்கத்தில்தான் “போறாளே பொன்னுத்தாயி”ன் ஹம்மிங் ரஹ்மான் போட்டிருப்பார் என்பது என் யூகம்.
Humm2OruKanamOru.mp3

எங்கே நான் காண்பேன் -  சாதனை - 1986
Humm2EngeNaanKanpen.mp3

ரோஜாவைத் தாலாட்டும் -நினைவெல்லாம் நித்யா-1982

தென்றல் காற்றே - ஈரமான ரோஜாவே-1991

ரொம்ப ஸ்டைலான ஹம்மிங்குகள்:
இந்த மின்மினிக்கு - சிகப்பு ரோஜாக்கள்-1978
Humm2Intha Minminikku.mp3

ஏ ராசாத்தி- என் உயிர் தோழன் - 1990
Humm2Hey Rasaathi.mp3

ஏதோ மோகம் - கோழிகூவுது -1982
Humm2Ethomogam.mp3

ஹேய் ஐ லவ் யூ - உன்னை நான் சந்தித்தேன் -1984
Humm2Hey I Love.mp3

ஆகாய கங்கை - தர்மயுத்தம் -1979
Humm2Agayagangai.mp3
கிளாசிகல் ஹம்மிங்: 
ராகவனே ரமணா - இளமைகாலங்கள்-1983  
இன்றைக்கு ஏன் இந்த - வைதேகி காத்திருந்தாள் -1984 
சோலைக்குயிலே - பொண்ணு ஊருக்குப் புதுசு-1979
Humm2SolaiKuyile.mp3


மான் கண்டேன் - ராஜரிஷி-1985
Humm2Mankanden.mp3

 
மாடத்திலே கன்னி - வீரா-1994
இதில் ஆண்கள் ஹம்மிங் புதுசு.சூப்பர். குத்துப்பாட்டில் இது மாதிரி ஹம்மிங் கேட்டதாக ஞாபகம் இல்லை.
Humm2Maadatthile.mp3
நாதவினோதங்கள் - சலங்கை ஒலி -1982
இதில்  எஸ்பிபி சொல்லும் காளிதாசன் எழுதிய  ரகுவம்சத்தில் வரும் ஸ்லோகத்திற்கு ஹம்மிங் ஒரு special effect கொடுக்கிறது.0.40-0.46  எஸ்பிபியை தொடர்ந்து ஒரு follower humming ஷைலாஜா கொடுக்கிறார்.அருமை.
வித்தியாசம்.
humm2Nathavinothangal.mp3



  ஊரடங்கும் சாமத்திலே - புதுப்பட்டி பொன்னுத்தாயி-1994
Humm2Ooradangum.mp3

இசைமேடையில் - இளமைகாலங்கள் - 1983
Humm2Isaimedaiyil.mp3

தாம்த தீம்த - பகலில் ஒரு இரவு -1979
Humm2Pagalil-Thamtha.mp3

கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும்-1987
மடைதிறந்து கூவும் - நிழல்கள்-1981
சங்கத்தில் காணாத கவிதை - ஆட்டோ ராஜா-1982
எள்ளு தாத்தா வெர்ஷன்.புது முயற்சி.

யாரும் விளையாடும் - நாடோடி தென்றல் -1992

99 comments:

  1. பொக்கிஷமாக வைத்துக் கொள்ள வேண்டிய பதிவு....

    ReplyDelete
  2. நன்றி சித்ரா.

    ReplyDelete
  3. good collection ravi. vintage raja.

    ReplyDelete
  4. Dear Ravi,
    Greatest post came from u.............
    Thanks a ton........................
    inum blog parkalai. padikalai. Humming kaekalai..
    Ella lllai galaiyum complete pannitu,
    .............
    romba naal agum pola irukae.........
    Periya HOme work Ravi idhu.....
    Sweet Home work..............

    Thank u once Again.

    with Love,
    Usha Sankar.

    ReplyDelete
  5. sola ilanguyilae - Male Chorus with Violin - GEM.......

    Beautiful Portion. Thanks Ravi.
    ipadi ovovru paatukum oru post pottu - unga padhivai Respect panna nenaikaren Ravi.
    ahhahahah.

    With Love,
    Usha Sankar.

    ReplyDelete
  6. wow.. நண்பரே.. கலக்கிட்டீங்க..
    இது தான் நான் உங்க தளத்திற்கு வரும் முதல் முறை.. முதல் முறையே அசந்துட்டேன்..
    நிறைய ஆய்வு செய்துருக்கீங்க.. என்ன சொல்லறதுன்னே தெரியல.. வாழ்த்துக்கள்??? வேண்டாம்..

    நன்றி.. (இது தான் சரி

    ReplyDelete
  7. ரவி, நல்ல தொகுப்பு ராஜாவோட ஹம்மிங் ல எனக்கும் மோகம் உண்டு. நன்றி

    ReplyDelete
  8. இளையராஜாவின் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இப்பதிவில் உள்ளதும் @ravishankar krishnamoorthi yin அசுர உழைப்பு. இதைக் கேட்பதற்கே நமக்கு இரண்டுமணி நேரமாகுமெனில், இப்பதிவிட எவ்வளவு நேரமாகும். ரசியுங்கள் காதுகளையும், இதயத்தையும் அகலத் திறந்து...
    http://raviaditya.blogspot.com/2011/02/king-of-heavenly-hummings-2.html

    ஃபேஸ்புக்கில் பகிர்ந்தது...
    செமயாக இருக்குமென எதிர்பார்க்கிறேன்... கேட்டுவிட்டுச் சொல்கிறேன்...

    ReplyDelete
  9. தல...அருமை...அனைத்துமே அருமை ;)

    உண்மையிலேயே உங்க ரசனைக்கும் ரசிகன் நான் ;)

    இம்புட்டு நாம பேசுறோம்..ஆனா இதில் பல பாட்டுகள் எத்தனை நிமிடங்களில் முடிச்சாரோ அவருக்கு தான் வெளிச்சம் ;)

    அப்படியே R&D பண்ண பாட்டை சீக்கிரம் பதிவு போட்டுடுங்க ;)

    \\தென்றல் காற்றே - ஈரமான ரோஜாவே-1991\\

    இதுல ஆட்டோ ராஜா வருது

    ReplyDelete
  10. இந்த பதிவை நான் மிகவும் ரசித்தேன்.. இந்த உழைப்புக்கு எனது ராயல் சல்யூட்.....அதனால் இந்த பதிவை எனது பதிவில் எழுதி லிங் கொடுத்து இருக்கின்றேன்.. அந்த லிங்க்..
    http://www.jackiesekar.com/2011/02/18-09022011.html

    ReplyDelete
  11. என்ன உழைப்பு நிறைய நாள் செலவு செய்திருப்பீர்கள் பாராட்டுக்கள் நண்பரே.
    உங்கள் இசைஞானி பதிவுகளுக்கும் ஒலிக்கலவைக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  12. நண்பரே இன்ட்லியில் இணைத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  13. amazing work ravi...hats off to you

    ReplyDelete
  14. Great work,friend.
    Ramesh.

    ReplyDelete
  15. அறிவுப்பு:
    கிழ் வருவன பின் இணைத்தது.காரணம் குறிப்பு எடுத்து மறந்துப்போனது.

    பாரா:”யோசித்துப்” “முடிந்தவரை” “You name"

    ஆடியோ:”யாரும் விளையாடும்” பதிவின் கடைசியில் இருக்கும் ஆடியோ.

    நன்றி.

    ReplyDelete
  16. Wow what a collection of Humming. Salute to your hardwork. Since you are doing as a passion, you must be enjoying it.

    Your blog is like a Ilayaraja's Boutique shop. We can't get these things anywhere else.

    ReplyDelete
  17. எவ்வளவு அழகிய கணங்களையும், நினைவுகளையும் மீட்டுகின்றன இந்த ஹம்மிங்ஸ். பகிர்வுக்கு நன்றி நண்பரே! தீராத பக்கங்களின் முகப்பில் (http://www.mathavaraj.com/) sliderல் இந்தப் பதிவை இணைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  18. ரவி முதலில் என் பாராட்டை பிடிச்சுக்கோங்க..இசை ஞானியின் உண்மையான விரும்பியின் கடுமையான உழைப்பில் உண்டான மீண்டும் ஒரு அழகான பதிவு...ராஜா ஹம்மிங் இல் மன்னர்...அதுவும் பெண்கள் குரல் ஒலிக்க மெதுவாய் வண்டு சுத்துற மாதிரி ரீங்காரமாய் ப்ளுட்டும் சேர்ந்து தாலாட்டும் அழகு ஹம்மிங் எல்லாம் ராஜா சார் க்கு மட்டுமே கை வந்த கலை.

    ReplyDelete
  19. //முத்தமிழ் கவியே -தர்மத்தின் தலைவன் -1988
    ஹம்மிங்கிறகு இசைக்கப்படும் தபலா ரம்யம்.0.16,0.19,0.22 இல் எழுப்பப்படும் ”ஊஊ” ஹம்மிங் அல்ல.இசைக்கருவி. நான் எப்போதும் ரசிக்கும் ஹம்மிங்.சும்மா கணீர் கணீர் என்று வருகிறது. //

    ஆமாம் ரவி...தபேலா specialist னு வேணும்னால் தாராளமாய் சொல்லலாம் ராஜா சார் ஐ...unique நிறைய பாட்டுகளை ராஜா சார் இசைன்னு இந்த தபேலா இசை வச்சே கண்டு பிடிச்சிடலாம்..அந்த அளவுக்கு தபேலா தவிர்க்க முடியாத இசை கருவி ராஜா சார் ரின் பாடல்களில்...கிரேட்

    ReplyDelete
  20. //நான் என்பது நீ - சூரசம்ஹாரம் -1988
    முதலில் வருவது ஹம்மிங்கா இசைக்கருவியா? //

    கொஞ்சம் குழப்புது தான்...:)) ஆனால் முதலில் வருவது இசைக்கருவி மாதிரி தான் தோணுது..சரணம் இல் வரும் ஆண் கோரஸ் கிளாஸ் ரவி..எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் இது...

    ReplyDelete
  21. //(ஹம்மிங் ஒரு மெட்டிலும் கிடார் வேறு ஒரு மெட்டிலும் வாசிக்கப்படுகிறது)

    இது ரொம்ப சூப்பர்...பாடல் கம்போஸ் முடிஞ்சபிறகு பினிஷிங் இல் சேர்த்து இருப்பங்களோ கிடார் இசையை...ஆனால் அந்த அளவு தொழிநுட்பம் அப்போ இருந்திருக்காது இல்லையா??

    ReplyDelete
  22. //பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்-1981
    முன்பாதியில் வரும் ஹம்மிங் பின் பாதியில் வேறுபடுகிறது.அதுவும் முந்தியதைவிட தரத்தில் மேம்படுகிறது.துள்ளல் ஹம்மிங்.//

    இத ஹம்மிங் செம...ஆ..ஓ..ஆ...ஓ..னு நம்மையும் நடனமாட வைக்கும் துள்ளல் ஹம்மிங் ஏ தான்...ராஜா வின் அற்புத மெலடி இல் இதுவும் டாப்பர் இல்லையா..

    ReplyDelete
  23. //பூமாலையே தோள்சேரவா - பகல் நிலவு -1985
    இது தமிழிற்கு புதுசு.இதில் வார்த்தைகளும் ஹம்மிங்கும் கலந்து வருகிறது.ராஜா பாடும்போது ஜானகி செய்யும் ஹம்மிங்கை ஜானகி பாடும்போது ராஜா செய்வதில்லை.(ஆடியோவில் இல்லை)//

    பலதடவை நானும் கவனிச்சிருக்கேன் ரவி..இது நிஜமாய் தமிழுக்கு புதுசு...

    ReplyDelete
  24. //மாறுகோ மாறுகோ - வெற்றி விழா-1989
    சர்ச் சம்பந்தபட்ட கோரஸ் ஹம்மிங்(பிரார்த்தனை)(?)//

    எனக்கு இந்த சர்ச் கோரஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...ஹை டெம்போவில் சில சமயம் எகிறி போகும்,uniform கோரஸ் களுக்கு நான் அடிமை..:))

    ReplyDelete
  25. //இதில் முக்கியமானது 0.22ல் ஷைலாஜாவின் குரல் எக்கோவும் இசைக்கருவிகளும் கலந்து வித்தியாசமாக இருக்கிறது.அட்டகாசம்.//
    அட ஆமாம்..ஷைலஜா குரல் echo வில் ஒலிக்குது...

    ReplyDelete
  26. //தென்றல் வந்து - தென்றலே என்னைத் தொடு //

    இதில் ஜானகியின் ஹம்மிங் கை தொடர்ந்து ஒலிக்கும் ப்ளூட் செம க்ளாஸ் இல்லையா..அதுவும் s.p.b ன் லோ லெவல் ஹம்மிங் ரொம்ப அழகூட்டும் ..

    ReplyDelete
  27. /இளமையெனும் பூங்காற்று - பகலில் ஒரு இரவு - 1979
    இதில் 0.07ல் ஹம்மிங்கும் தபலாவும் புல்லாங்குழலும் சங்கமமாகும் இடம் மெலிதான பூங்காற்று வீசத்தான் செய்கிறது.பிரமாதம் ஞானி சார்!//

    superb...

    //ஒரு கணம் ஒரு யுகமாக - நாடோடிதென்றல் -1992
    இதன் தாக்கத்தில்தான் “போறாளே பொன்னுத்தாயி”ன் ஹம்மிங் ரஹ்மான் போட்டிருப்பார் என்பது என் யூகம். //

    may be (or) ofcourse :))))

    ReplyDelete
  28. //எஸ்பிபியை தொடர்ந்து ஒரு follower humming ஷைலாஜா கொடுக்கிறார்.அருமை.
    வித்தியாசம்.//

    அது தான் அந்த பாட்டுக்கே அழகு ரவி...


    //மடைதிறந்து கூவும் - நிழல்கள்-௧௯௮௧//

    i love this ப்பா...பா...பா...ஹம்மிங் :))

    ReplyDelete
  29. அருமை அருமை. டௌன் லோட் பண்ண வசதி பண்ணி கொடுத்து இருந்தீர்கள் என்றால் ரிங் டோன் ஆக யூஸ் பண்ணிருக்கலாம்

    ReplyDelete
  30. ///எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!///

    அப்படின்னு சொல்றீங்க.. ஆனா வார்த்தைகள் வரவில்லை. கண்டிப்பாக இது எனக்கு பொக்கிஷம் தான். அறிமுகப்படுத்திய ஜாக்கி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  31. Anonymous said...

    // good collection ravi. vintage raja.//

    நன்றி அனானி.

    ReplyDelete
  32. Ŝ₤Ω..™ said...

    // wow.. நண்பரே.. கலக்கிட்டீங்க..
    இது தான் நான் உங்க தளத்திற்கு வரும் முதல் முறை.. முதல் முறையே அசந்துட்டேன்..
    நிறைய ஆய்வு செய்துருக்கீங்க.. என்ன சொல்லறதுன்னே தெரியல.. வாழ்த்துக்கள்??? வேண்டாம்..//

    வாங்க Ŝ₤Ω..™.இதற்கு முன் வந்ததாக ஞாபகம்.கவிதைக்கு பின்னூட்டம் போட்டதாக.
    கருத்துக்கு நன்றி.

    நன்றி.. (இது தான் சரி

    ReplyDelete
  33. நன்றி அய்யனார்.

    ReplyDelete
  34. தமிழ்ப்பறவை /கோபிநாத்

    பார்ட்டி கிடையாதா? வெறும் பாராட்டுதானா?தி.நகர்ல எப்ப சந்திக்கலாம்னு யாரோ எங்கோ கேட்ட மாதிரி தெரியுது.

    நன்றி பக்தர்களே.

    ReplyDelete
  35. ஜாக்கி சேகர் said...

    வாங்க ஜாக்கி சேகர்.கருத்துக்கு நன்றி. இணைப்புக்கும் நன்றி.முடிந்தால் ராஜாவைப் பற்றிய வேறு பதிவுகளும் படிக்கவும்.

    ReplyDelete
  36. நன்றி வந்திய தேவன்.

    ReplyDelete
  37. எவ்வளவு அருமையான உழைப்பு
    நிறைய நாள் செலவு செய்திருப்பீர்கள்
    பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  38. இளையராஜாவை தெளிவாக உணர்ந்தவர்களால்தான் இப்படியான அருமையான விசயங்களை  பதிவு செய்யமுடிகிறது.பலத்தகரகோசம் உங்கள் உழைப்புக்கு

    ReplyDelete
  39. Dear Mr. Ravi,

    Hats off to you. Superb collection.

    May be, you missed another humming special song -
    Thenral vanthu theendum podu from movie Avatharam.

    The song starts with lady voices ( including Janaki ) humming, then the Maestro joins-in humming & then wonderful drums pitch-in.

    Just 1 point - nowadays, it's easy for us to get things in internet.. Everything is available everywhere.

    How Maestro managed to create this kind of music ( including humming, tune, music ), without any such support 20-30 years back ?.

    Genius to the last blood cell in his body !!!.

    Sudharsan

    ReplyDelete
  40. //எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!//

    intha maathiri oru pathiva poottutu, eppai ethuvume sollamal pooga mudiyathu....


    Super Post...!!! Great work... Keep rocking..!!

    ReplyDelete
  41. மிக அற்புதமான தொகுப்பு. நன்றி.

    ReplyDelete
  42. Sudhar said...

    // Wow what a collection of Humming. Salute to your hardwork. Since you are doing as a passion, you must be enjoying it.

    Your blog is like a Ilayaraja's Boutique shop. We can't get these things anywhere else.//

    நன்றி சுதர்.

    ReplyDelete
  43. மாதவராஜ் said...

    வாங்க மாதவராஜ்.
    // எவ்வளவு அழகிய கணங்களையும், நினைவுகளையும் மீட்டுகின்றன இந்த ஹம்மிங்ஸ். பகிர்வுக்கு நன்றி நண்பரே! தீராத பக்கங்களின் முகப்பில் (http://www.mathavaraj.com/) sliderல் இந்தப் பதிவை இணைத்திருக்கிறேன்.//

    ரொம்ப நன்றி.

    ReplyDelete
  44. எவ்வளவு உழைப்பு! செம பதிவு பாஸ் :)

    ReplyDelete
  45. நன்றி ஆனந்தி.

    //பாடல் கம்போஸ் முடிஞ்சபிறகு பினிஷிங் இல் சேர்த்து இருப்பங்களோ கிடார் இசையை...//

    தவறு ஆனந்தி. இதற்கு கவுண்டர் பாயிண்ட் என்று பெயர்.மேற்கத்திய இசையின் ஒரு கூறு.என்னுடைய பதிவு பார்க்கவும்:

    ”இளையராஜாவின் -கவுண்டர் பாயிண்ட்”

    http://raviaditya.blogspot.com/2010/01/blog-post_15.html

    ReplyDelete
  46. சிட்டி பாபு said...

    // அருமை அருமை. டௌன் லோட் பண்ண வசதி பண்ணி கொடுத்து இருந்தீர்கள் என்றால் ரிங் டோன் ஆக யூஸ் பண்ணிருக்கலாம்//


    நன்றி சிட்டி பாபு.

    ReplyDelete
  47. ப்ரீதம் கிருஷ்ணா said...

    ///எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!///

    அப்படின்னு சொல்றீங்க.. ஆனா வார்த்தைகள் வரவில்லை. கண்டிப்பாக இது எனக்கு பொக்கிஷம் தான். அறிமுகப்படுத்திய ஜாக்கி அவர்களுக்கு நன்றி.


    ரொம்ப நன்றிங்க.ஜாக்கிக்கும் நன்றி.

    ReplyDelete
  48. நன்றி மகாராஜன்.

    ReplyDelete
  49. Nesan said...

    // இளையராஜாவை தெளிவாக உணர்ந்தவர்களால்தான் //

    உண்மை.இவரின் இசையில் பல கூறுகளை பாமரத்தனமாக உணர்ந்தவன்.

    ReplyDelete
  50. Suddi said...

    //ust 1 point - nowadays, it's easy for us to get things in internet.. Everything is available everywhere.//

    But there is no soul in the manufactured music.
    Thanks.
    //May be, you missed another humming special song -
    Thenral vanthu theendum podu from movie Avatharam.

    The song starts with lady voices ( including Janaki ) humming, then the Maestro joins-in humming & then wonderful drums pitch-in.//

    I covered this in my "counter point" post.I, with lots of pain, avoided it.
    Thanks.

    ReplyDelete
  51. நன்றி பாலாஜி சரவணன்.

    ReplyDelete
  52. நன்றி அனானி.

    ReplyDelete
  53. உங்களின் இந்த உழைப்பிற்கும் முயற்சிக்கும் ராயல் சல்யூட் நண்பரே...

    இசையைபற்றி அவ்வளவாக ஞானம் இல்லையென்றாலும் ஆனால் ராகதேவனின் தீவிர வெறியன்... இசைஞானியைபற்றிய உங்கள் பதிவுகளை படிக்கும்போது இன்னும் வியப்பாக உள்ளது நன்றி நண்பரே...

    ReplyDelete
  54. wonderful blog,one more important addition
    Macchanai parthingala- Annakkili
    Rasave unna nambi-mudhal mariyathai ena
    sila enathu ninaivugal.

    vazhthukkal
    Thiyagarajan

    ReplyDelete
  55. I have no words to praise you.
    Its really fantastic. i can feel ur hard work.
    hats off to you

    ReplyDelete
  56. இந்த பதிவை படிச்ச பிறகு நம்மளும் பிளாக் எழுதறோம்றது நானும் ரவுடிதான் சொல்ற மாதிரி காமெடியா இருக்கு பாஸ்..!!

    ReplyDelete
  57. ////பாடல் கம்போஸ் முடிஞ்சபிறகு பினிஷிங் இல் சேர்த்து இருப்பங்களோ கிடார் இசையை...//

    தவறு ஆனந்தி. இதற்கு கவுண்டர் பாயிண்ட் என்று பெயர்.மேற்கத்திய இசையின் ஒரு கூறு.என்னுடைய பதிவு பார்க்கவும்:

    ”இளையராஜாவின் -கவுண்டர் பாயிண்ட்”//

    நன்றி ரவிசங்கர் சார்..நான் அதை படித்து மேலும் தெரிஞ்சுக்குறேன்...

    ReplyDelete
  58. great ..Evlo panneetingalay....oru small help ji .. click to "Tamil" add pannuga ji

    ReplyDelete
  59. இளையராஜா ஹம்மிங்கிற்க்கு நான் அடிமை, இத மொத்தமாக கேட்கும்போது கண்ணில் நீர் கோர்த்துக்கொள்வதை தடுக்க முடியவில்லை. இந்தப் பதிவு ஒரு பொக்கிஷம். உங்கள் உழைப்பிற்கு நான் தலை வணங்குகிறேன். அறிமுகப் படுத்திய ஜாக்கிக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  60. ரவிஷங்கர்
    பதிவை முழுவதும் படிக்கவில்லை.

    நான் எதிர்பார்த்த ஒரு ராஜ ஹம்மிங் விட்டு விட்டீர்கள். வா வெண்ணிலா - ஜானகி தனியாக பாடியது. இதன் ஆரம்ப ஹம்மிங், காற்றில் எந்தன் கீதத்துடன் ஒப்பிடலாம் (மெல்லத் திறந்தது கதவு).

    மற்றவற்றை படித்தபின் சொல்கிறேன். சொஞ்சம் வேறு வேலைகளில் பிஸியாக இருப்பதால், உடனே க்மெண்ட் எழுத முடிவதில்லை.

    நன்றி

    ரவி நடராஜன்
    http://geniusraja.blogspot.com

    ReplyDelete
  61. டாக்டர் இசைஞானி ஐயா உங்கள் பதிவை படித்தால் ரொம்ப மகிழ்ச்சி அடைவார்.
    அருமை...அருமை..
    வாழ்த்துகள்.

    வெள்ளங்குளி மணிகண்டன்

    ReplyDelete
  62. கூகுள் பிரச்சனையால் ஒன்றரை நாள் என் வலை திறக்க முடியவில்லை.இன்றுதான் சரியாகியது.

    நன்றி மாணவன்.

    ReplyDelete
  63. நன்றி தியாகராஜன்.

    //Macchanai parthingala- Annakkili
    Rasave unna nambi-mudhal mariyathai ena
    sila enathu ninaivugal.//

    என்னுடைய பகுதி-1ல் வருகிறது இந்தப் பாடல்கள்.

    ReplyDelete
  64. நன்றி சேலம் தேவா.

    ReplyDelete
  65. நன்றி பாண்டியா.

    ReplyDelete
  66. yasomathi said...

    // great ..Evlo panneetingalay....oru small help ji .. click to "Tamil" add pannuga ji//

    தமிழில் கமெண்ட் போடுவதற்கா?விளக்கவும்.

    போட்டால், நான் NHM தமிழ் எழுத்துரு பயன்படுத்துவதால் இது அதனுடன் clash ஆகி எழுதமுடியாமல் படுத்தும்.

    நன்றி.

    ReplyDelete
  67. மைதீன் said...

    வாங்க மைதீன்.

    //இத மொத்தமாக கேட்கும்போது கண்ணில் நீர் கோர்த்துக்கொள்வதை தடுக்க முடியவில்லை.//
    காரணம் வெறும் ஹம்மிங் அல்ல ஆதமா பொதிந்தது.அதனால் நிலைத்து நிற்கிறது.

    நேரம் இருந்தால் அவரின் மற்றையப் பதிவுகளைப் படிக்கவும்.

    நன்றி.

    ReplyDelete
  68. avinat said...

    // நான் எதிர்பார்த்த ஒரு ராஜ ஹம்மிங் விட்டு விட்டீர்கள். வா வெண்ணிலா - ஜானகி தனியாக பாடியது. இதன் ஆரம்ப ஹம்மிங், காற்றில் எந்தன் கீதத்துடன் ஒப்பிடலாம் (மெல்லத் திறந்தது கதவு).//

    இந்தப் பாடல் என்னுடைய தேர்ந்தெடுக்கும் முறையில்((SOP) பின்னால் போய்விட்டது.அதே மாதிரி சித்ராவின் “கொஞ்சி கொஞ்சி” வீரா பாடல் ஹம்மிங் கிடைக்கவில்லை.தவற விட்டது வருத்தம்.
    குணா பாடல் ஹம்மிங்கும் விட்டுவிட்டேன்.

    // சொஞ்சம் வேறு வேலைகளில் பிஸியாக இருப்பதால், உடனே க்மெண்ட் எழுத முடிவதில்லை//

    பொறுமையாக படித்துவிட்டு எழுதவும்.

    நன்றி

    ReplyDelete
  69. Mani said...

    // டாக்டர் இசைஞானி ஐயா உங்கள் பதிவை படித்தால் ரொம்ப மகிழ்ச்சி அடைவார்.//

    அவர் தன் இசையின் மூலம் எல்லோருடனும் பேசுகிறார்.எழுத வைக்கிறார்.



    நன்றி வெள்ளங்குளி மணிகண்டன்.

    ReplyDelete
  70. Puthu Puthu Arthangal - Keladi Kanmani. Song is missing.

    Regards
    Sudharsan

    ReplyDelete
  71. எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!

    அடிங்க!!

    இப்படி எதுனா சொல்லிட்டு போனா போதுமா?




    மிகவும் பாராட்டப் பட வேண்டிய பதிவு.
    கடின உழைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  72. Anonymous said...

    //Puthu Puthu Arthangal - Keladi Kanmani. Song is missing.//

    More than 25 songs are still there for humming.This is one.I applied a yardstick to select songs.

    Thanks.



    Regards
    Sudharsan

    ReplyDelete
  73. //மிகவும் பாராட்டப் பட வேண்டிய பதிவு.
    கடின உழைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!//

    நன்றி அனானி.

    ReplyDelete
  74. Fantastic post!. Please include, "Pudhu Maapillaikku" from Aboorva sagodharargal.

    ReplyDelete
  75. Thanks Azhagan. It is already in my list.It is a different humming.

    ReplyDelete
  76. Hi,
    Usually i wouldn't comment and i am a silent reader.
    But i just want applause your effort for this post.
    Really Gr8 post......

    -NoName

    ReplyDelete
  77. அன்பு நண்பருக்கு...
    கடுமையான வலியை தாங்கி சுகபிரவேசம் (சவ) முடிந்து மனைவி கணவனை பார்த்ததும் கண்கள் கலங்கி ஒரு பார்வை பார்ப்பாளே.. அதற்க்கு எத்தனை பொன்னும் பொருளும் தகாது.. அது போல தான்... உஙகளது... இந்த பதிவும்..
    ராகதேவனுக்கு...இது ஒரு ஆராதனை...ல்ல்ல்..ல்லா (ஹம்மிங்)

    இன்னும் எதிர்பார்ப்புடன்..
    ntrdas@yahoo.com

    ReplyDelete
  78. நன்றி வீரை மன்னன்.

    நன்றி ntrdas

    ReplyDelete
  79. Wow Sir...Ungalai adichukkave mudiyathu...
    Ilayaraja Sir should be gifted to have such an awesome fan...I don't think any other MD will have such kind of...
    Ungaludaya Nanban endru koorikolvatharku perumai padugiren..!!

    ReplyDelete
  80. இதைவிட ஒரு கலைங்கனுக்கு நீங்க என்ன மாதிரியான மரியாதை செலுத்தி விட முடியும்.

    ReplyDelete
  81. நன்றி கிரன்

    நன்றி காதர்24

    ReplyDelete
  82. அசத்தல் பதிவு..ராஜாவின் ராஜாங்கத்தில் வாழும் அத்தனை பேரும் இதைப் பாதுகாத்து வைப்பார்கள்.உங்களுக்கு இனிய தம் தனனம் தன வாழ்த்துகள்.அறிமுகம் செய்த ரகுவை வாழ் ..வய..வணங்குகிறேன்..

    ReplyDelete
  83. மேற்கண்ட பதிவு எனதே..[தொ .நு.கோளாறு]

    ReplyDelete
  84. வாங்க அவைநாயகன்.முதல் வருகைக்கு நன்றி.உங்கள் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  85. ஆனந்தி அவர்களின் பதிவிலிருந்து நேற்றுதான் உங்கள் பதிவை உணர்ந்தேன்.. அருமை.. அத்தனையும் கோர்த்தெடுத்த முத்துக்கள்.. என் நண்பர்கள் அனைவரோடும் உங்கள் தளத்தைப் பகிர்ந்துள்ளேன்..

    மிக்க நன்றி இப்படியொரு ஆக்கப்பூர்வமான பதிவிற்கு..

    எல்லாம் உணர்ந்தபிறகும் பின்னூட்டம் எழுதாமல் போனால் அது உங்கள் உழைப்பிற்கு இழைக்கும் அவமரியாதை..

    வாழ்த்துக்களுடன்..

    இசைப்பிதாமகரின் பக்தன்..

    அரவிந்த் குமார்.பா

    ReplyDelete
  86. முதல் வருகைக்கு நன்றி அரவிந்த் குமார்.பா.

    உங்கள் கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  87. I liked the way the post has developed and the explanation..........! Good Work!!! :)

    Wonderful Post..........!!! Putham Puthu Kalai & Rasave Unnaithan....Humming's stands out!!! :)

    ReplyDelete
  88. நன்றி கவிதா

    ReplyDelete
  89. அருமையான கலெக்ஷன். பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  90. நன்றி வியபதி.

    ReplyDelete
  91. ஹம்மிங்க்ஸ் பற்றி தேடிக்கொண்டிருக்கும்போதுதான் உங்கள் தளத்தை வந்தடைந்தேன்..
    சேமித்து வைக்க வேண்டிய அருமையான பல பதிவுகள் உங்களிடத்தில் உள்ளது..
    இன்னும் பல்வேறு கோணங்களில் ராஜாவினது இசையை எங்களுக்கு அளிக்க வேண்டும்..

    "பகலில் ஒரு இரவு" பற்றி சொல்லும்போது தோட்டம் கொண்ட ராசாவே பாட்டை விட்டு விட்டீர்கள்.. "ஏலா ஏலா ஏலேலா" என்று கேட்க்கும்போது ஒரு உற்சாக துள்ளல் நம்மிடையே வரும் கொண்டு ஹம்மிங் அது...

    ReplyDelete
  92. அருமை........ அனைத்தும் திகட்டாதவை

    ReplyDelete
  93. நன்றி பிரசன்னா கண்ணன்

    நன்றி மோகன்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!