Tuesday, February 22, 2011

நடுநிசி நாய்கள் படமும் உண்மைத்தமிழனும்

பதிவர் உண்மைத்தமிழன் அவர்கள் “நடுநிசி நாய்கள்” படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று தன் பதிவில் எழுதியதை படித்தேன்.அதில் சொல்லப்படும் விஷயத்தை இப்படி வெளிச்சம் போட்டுக்காட்ட அவசியமில்லை என்பது அவர் வாதம்.இவர் சிபாரிசு செய்யும் “சிறுத்தை”ப் படமும் மறைமுகமான ஆபாசக் காட்சிகள் இருக்கும்.

இது தணிக்கை அதிகாரிகளால் தணிக்கைச் செய்யப்பட்டு  ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது.முதலில் சான்றிதழ் காட்டும்போது யசேச்சையாக இரண்டு பெயர்களைப் பார்த்தேன்.புஷ்பா கந்தசாமி மற்றும் நிர்மலா பெரியசாமி. மற்ற உறுப்பினர் பெயர்களைப் பார்க்க முடியவில்லை.

புஷ்பா கந்தசாமி இயக்குனர் பாலச்சந்தரின் மகள்.

இதைப் பற்றி எதிர்வாதமோ அல்லது நேர்வாதமோ செய்ய அல்ல இந்தப் பதிவு.மேலும் இப்போது இருக்கும் தலைமுறை விவரமாகத்தான் இருக்கிறார்கள்.ரத்தசம்பந்த “ஏ” ஜோக்குகளிலும் கக்கூஸ் சுவர்களில் பச்சைப் பச்சையாக  கிறுக்கப்படும் வாசகங்களும் சினிமாவில் முழு
(மறைமுகம்)முகமாகவே தூண்டப்படும் பாலியில் காட்சிகளுக்கு இது  பெட்டர்.

”எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் பாத்துட வேண்டியதுதான்” என்று ஒரு  நினைப்பும் அடுத்து ”உண்மைத்தமிழன் சாருக்கு விவரம் பத்தலயோ”என்ற எண்ணமும் வந்தது. சார்.. கோச்சுக்காதீங்க!

சரி எவ்வளவு பாத்தோம்?எவ்வளவு அதிர்ச்சிகளை கடந்து “நடுநிசி நாய்”களுக்கு வந்திருக்கிறேன்.

இப்போதுப் பரவாயில்லை 70/80 களில் படங்களில் பாலியல் வக்கிர காட்சிகள் ஏராளம். crude sex!மனம் திரியத்தான் செய்தது.பாலியல் விஷயங்கள் ஆரோக்கியமான முறையில் சொல்லப்படவில்லை.

அப்போது சரோஜாதேவி/கொய்யா/கொக்கரக்கோ/சிட்டுக்குருவி/வாலிபம் போன்ற ஆபாச புக்குகள். இப்போது நெட்.இப்போது ஆபாச நெட்வொர்க்கின் எல்லை விரிந்துவிட்டது.

Puffed up breast is more obscene than bare breast என்று ஒரு சொலவடை உண்டு.

இதை லூசாக மொழிப்பெயர்த்தால்.....

”பிரா போட்டு பில்ட் அப் கொடுத்துக்காட்டப்படும் மார்பகத்தை விட வெறும் மார்பகம் ஆபாசம் இல்லை”.


(”என்னை விட்டால்” படம்: நாளை நமதே. இதன் இந்தி வெர்ஷன் “ஓ மேரி சோனி” யில்  ஆபாசம் கிடையாது)

இதற்காகவே இந்தப் படத்தை இரண்டாம் முறைப் பார்ப்போம்.இதே உணர்வில் “நடுநிசி நாய்களை” எவ்வளவு இளைஞர்கள் இரண்டாம் முறை பார்ப்பார்கள்?

இது  யூ டூப்பில் 347508 முறைப் பார்க்கப்பட்டுள்ளது.

இவரின் சிஷ்யர் பாக்கியராஜ் 16 அடி பாய்ந்தார்.

(லேட்டஸ்ட்!மறைமுகமாக பாலியல் உணர்வைத் தூண்டும்  காட்சி)

மேலும் சில “எவ்வளவோ பாத்துட்டோம்”

”அசோக்குமார்” (1941)என்ற திரைப்படம் சிற்றன்னை தன் மகன் மேல் காமுறுவது போல் ஒரு கதை அமைப்பு. பாகவதர் நடித்தப் படம்.கேள்விப்பட்டது.

அபூவர்வ ராகங்கள் படம் சற்றுப் பிரச்சனையானது.பொருந்தக் காமம்.

தப்புத்தாளங்கள் படத்தில் கர்ப்பிணியை வன்புணர்ச்சி செய்யும் காட்சியும் பிரச்சனையானது.

தமிழ்ப்படத்தில் வில்லிகள் தம்/தண்ணி அடிக்கும் காட்சிகள்.பயங்கர அதிர்ச்சி அப்போது.

மறுபிறவி என்ற படமும் விவாதத்திற்குள்ளானது.மனைவியை நெருங்கும்போது கணவனுக்கு அம்மா ஞாபகம் வந்து விலகுவான்.

நான் கல்லூரியில்  படிக்கும்போது ஒருவன்  அவன் குடும்பத்தில் ரத்த சம்பந்தப்பட்ட உறவு சகஜம் என்று சொன்னான்.முதல் மகா அதிர்ச்சி! அவன் சொன்ன பதில் “skin to skin no sin". இது மகா மகா அதிர்ச்சி.

ஆபாசமான ரேப்பிங் சீன்  படங்கள்:

1.வசந்த மாளிகை 2.தோரஹா3.வரவேற்பு4.உலகம் சுற்றும் வாலிபன்5.தப்புத்தாளங்கள்.

அப்போதைய தூரதர்ஷனில் ஆபாசக் காட்சி வந்தால் கருப்பாக்கி விடுவார்கள்.

காயத்ரீ படத்தில் மனைவியை வைத்து நீலப் படம் எடுப்பது.

16 படத்தில் ஸ்ரீதேவி ஆற்றில் நடந்து வருவது.

அடுத்தவன் பெண்டாட்டியை காமுறும் படங்கள் அப்போது நிறைய வரும்.

பலாத்காரம் செய்ய நெருங்கும்போதுகதாநாயகி வசனம்” என்ன உட்ருங்க.. நா உங்க தங்கச்சி மாதிரி”

பலாத்காரம் செய்பவர்(ராதாரவி? படம் புலன் விசாரனை?):”தங்கச்சின்னு சொன்னதுனால... இப்பவே உன்ன...”

கிராமப் படங்களில் பாவாடைக் கதாநாயகிக்கு உள்ளங்காலில் முள் குத்தும். கதா நாயகன் பாவாடையைத் தூக்கி முட்டித் தெரியும் வரை காலை மடியில் போட்டுக்கொண்டுதான் முள் எடுப்பார். வெள்ளை உடை அணிந்தால் மழை நிச்சியம் பெய்யும்.ஆற்றில் குளிப்பதை வேடிக்கைப் பார்க்கும் காட்சிகள்.குளம் கிணற்றில் அடிக்கடி பெண்கள் விழுவார்கள். எதற்கு? விழும் பெண்களை வயிற்றை அமுக்கி தண்ணீர் எடுக்கத்தான்.

பேனர்:
வரிசையாகத் தொங்கும் பிராக்கள் நடுவே கமல் சேரில் உட்கார்ந்திருப்பார். இது சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான மவுண்ட்ரோட்டில் பேனர். பின்னால் அகற்றப்பட்டது. இதே மாதிரி “பகலில் ஒரு இரவு” ஸ்ரீதேவி ஸ்கர்ட் போட்டு நிற்கும் கட் அவுட்.காற்றில் எப்போது ஸ்கர்ட் அலையும் என்று சஸ்பென்சோடுக் காத்திருப்பார்கள் ரசிகர்கள்.

பாடல்கள்:
1.”இடைவிட்ட பூவினால் கடை விரித்துக்காட்டுவேன்”(படம்:வசந்த மாளிகை-பாடல்:”குடி மகனே”)”எதுவரை போகுமோ அதுவரைப் போகலாம்”
2.”நேத்து ராத்திரி யம்மா” (சகலகலா வல்லவன்) பாட்டில் வரும் ஓசைகள்
3.நிறைய காம முக்கல் முணகல் பாடல்கள் அதிகம் அப்போது.
4.”எடுத்துப் பாத்த பயங்களிலே இம்மா சைசுப் பாத்தியா... கைக்கு அடக்கமா ..கடிச்சுப்பாக்க வாட்டமா...(”இலந்தபயம்” படம்: பணமா பாசமா)

கதைகள்:
1.ரிஷி மூலம் - ஜெயகாந்தன்
2.சாளரம் -ஜெயகாந்தன்
3.எல்டொரேடோ (El Dorado) -சுஜாதா
4.புஷ்பா தங்கதுரை கதைகள்

(முதல் மூன்றும் ஆபாசம் இல்லை.ஆனால் கரு விவகாரமானது)

குமுதத்தின் நடுப்பக்க படங்கள் மற்றும் சினிமா.ஓவியர் ஜெ யின் கவர்ச்சிப் படங்கள்.சகட்டுமேனிக்கு வரைவார். துர்வாசர் என்பவர் துக்ளக்கில் பத்திரிக்கை ஆபாசங்களைப் போட்டுத் தாக்குவார்.மாட்டிக்கொண்ட எழுத்தாளர் ஹேமா ஆனந்ததீர்த்தன் என்பவர் இவருடன் விவாதம்  செய்வார்.

அப்போதைய ஆபாச மலையாள (மாமனாரின் காம வெறி)(பாவாடை இல்லாத கிராமத்திலே)மற்றும் டப்பிங் தமிழ்ப்பட போஸ்டர்களை கிழிக்கச் சொல்லி அடிக்கடி குரல் வரும் பெண்களிடமிருந்து.

நினைத்தால் குமட்டுகிறது. நடுநிசி நாய்களில் ஒரு அப்பா.ஆனால் 70/80களில் பல பேரால் வூடு கட்டி ஆபாசத்தால் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருக்கிறோம்.
கெட்ட கனவாக நினைத்து கடந்து வந்துவிட்டோம்.

இப்போது என்ன வாழ்கிறது?

நடுநிசி நாய்கள் விமர்சனம்

32 comments:

 1. நல்ல அலசல்..
  See.,

  http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_22.html

  ReplyDelete
 2. அப்பிடிப் போடு ரவிஷங்கர்...

  ReplyDelete
 3. நிறைய சிந்திக்க வைக்கிறது உங்கள் பதிவு

  நன்றி நண்பரே :)

  ReplyDelete
 4. நல்ல அலசல்..
  பழைய MGR படங்கள் நிறையா இவ்வரிசையில் சேரும்.

  ReplyDelete
 5. நல்ல points. இந்த மொக்கைப் படத்தை இவ்வளவு சீரியஸா எதுக்கு எடுத்துக்கறாங்கன்னு தெரியலை. புது முயற்சினு ஒரே ஒரு ப்ளஸ் பாயிண்ட் மட்டுமே. மத்தபடி edge of the seat, psychological thriller ரெண்டுமே இல்லை. நிறைய பேரு படம் எப்ப முடியும், கிளம்பலாம்னு edge of the seatla இருந்தாங்க.. அவ்வளவுதான்..

  ReplyDelete
 6. இந்த படத்தை பத்தி யாருமே நல்லா சொல்லையே.

  ReplyDelete
 7. நன்றி வேடந்தாங்கல் - கருன்

  நன்றி ரமேஷ் வைத்யா

  நன்றி மாணவன்

  ReplyDelete
 8. நன்றி கா.கி.

  நன்றி வினோத் கெளதம்

  நன்றி கே.ஆர்.விஜயன்.

  ReplyDelete
 9. M.G.R.படங்களில் இரு கதாநாயகிகள் இருந்தால், கனவு என்ற பெயரில் எல்லை மீறி காட்சிகள் வைத்து விட்டு கடைசியில் தங்கச்சியாக்கி விடுவார்.

  ReplyDelete
 10. அக்கு வேறு ஆணி வேறு பிரித்து மேய்தல்...

  அந்த எம்ஜிஆர் பாட்டு-இதயக்கனி என நினைக்கிறேன்...

  ReplyDelete
 11. ரவி செமையா எழுதி இருக்கிங்க. நன்றி

  ReplyDelete
 12. இதற்குள்ள இவ்வளவு விஷயமா..

  ReplyDelete
 13. நடுநிசி நாய் படம் பார்க்கலை...ஆனால் பல ப்லாக்கேர்ஸ் எழுதிய விமர்சனத்தில் ஆபாசம்..கலாச்சார சீர்கேடு ங்கற மாதிரி தான் படிச்சேன்...இந்த பதிவு அதிகமாய் என்னை யோசிக்க வைத்தது...நீங்கள் சொன்ன அத்தனை கருத்துகளுடன் உடன்படுகிறேன்...(பருத்தி வீரன் கிளைமாக்ஸ் விட்டுடிங்க..)குஷ்பூ,நமீதாவை விரும்பும் பல தமிழ் ரசிகர்கள் இருக்கும் இந்த தமிழ் கூறும் நல்லுலகத்தில் எத்தனையோ ஆபாசங்கள் நேரிடையாக...மறைமுகமாக படங்களில் உணர்த்தபட்டுடு தான் இருக்கு...அதில் எந்த சந்தேகமும் இல்லை...

  ReplyDelete
 14. நல்ல அலசல். யோசிக்க வைக்கிறது. நான் இத்திரைப்படம் பார்க்கவில்லை.

  இத்திரைப்படத்தில் சொல்லப்பட்ட விடயமா அல்லது சொன்ன விதமா எது தான் பிரச்சனை என்று புரியவில்லை.

  இந்தப்பிரச்சனை நாம் வாழும் சமூகத்தில் இல்லை என்பதை மறுக்க முடியாதே!

  ReplyDelete
 15. super alasal, innum niraiya thanga brother

  ReplyDelete
 16. என்னமோ போங்க... இதெல்லாம் மறைக்கப்படுவதும், மறுக்கப்படுவதும் தான் சீர்கேடு என தோன்றுகிறது

  ReplyDelete
 17. நன்றி மைதீன்
  நன்றி தமிழ்ப்பறவை
  நன்றி ஜாக்கி சேகர்

  ReplyDelete
 18. நன்றி ரியாஸ்

  நன்றி ஆனந்தி

  நன்றி ரதி

  ReplyDelete
 19. நன்றி ஜாக் அண்ட் ஜில்லு

  ReplyDelete
 20. நீங்களே சொல்லீங்க நாடு எவ்வளவு கெட்டுப் போயிட்டுச்சுன்னு, அதில் இந்த கோணம் இன்னும் கேவலமா போகுதே தல,

  கிரிக்கெட் ஏற்கனவே மேட்ச் ஃபிக்சிங் நடந்திருக்கு அப்படிக்கிறதுக்காக இந்த உலகக் கோப்பைல மேட்ச் பிக்ஸிங் பண்ண வர்ரவங்க வரவேற்பீங்களா..,


  இல்லை மேட்ச் பிக்ஸிங் செய்பவர்களை புறக்கணிக்கச் சொல்பவர்களை கேலி செய்து இடுகை போடுவீர்களா..,

  என்னமோ போங்க..,

  ReplyDelete
 21. நல்ல வாதம், பல பழைய படங்களை மேர்கோள் காட்டி மிக அருமையாக எழுதி இருக்கீங்க.

  நீங்கள் இந்த தொலைக்கட்சிகளின் சேவையை சுட்டி காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!

  ஒருகாலத்தில் சன் டிவியில் "Mid Night Masala" எண்டு போட்டார்கள், அதை பலார் ரசித்து பார்த்தார்கள் ஆனால் யாரும் "கலாநிதி மாறன்" வீட்டிற்க்கு சென்று எதிர்க்கவில்லை.

  இன்றும் சில தனியார் தொலைக்கட்சிகளில் "Mid Night Masala" போட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். அதை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

  ஆனால் இவர்களை யாரும் கேட்க்க மாட்டார்கள்? கொடி பிடிக்க மாட்டார்கள்? ஆனால் ஒரு சினிமாக்காரன் தவறு செய்தால்??

  வாழ்க தமிழகம்! வெல்க தமிழ்!

  ReplyDelete
 22. நல்ல பதிவு.

  இங்கு வாங்க வந்து பாருங்க "நடுநிசி நாய்கள்" பற்றி

  http://hotvideosbazar.blogspot.com

  ReplyDelete
 23. super

  http://karurkirukkan.blogspot.com/2011/02/blog-post_6961.html

  ReplyDelete
 24. நன்றி வீராங்கன்
  நன்றி தமிழ்மகன்
  நன்றி ஹாட் ஸ்பை காம் வீடியோஸ்

  நன்றி கரூர்கிறுக்கன்

  ReplyDelete
 25. aththa peththa malligaip poo paattula

  mangammaa kulikkuratha pakkaiyile
  en kOvil maNi adikkuthadi :)

  - maravantu -

  ReplyDelete
 26. ஒரலு ஒண்ணு அங்கிருக்கு ஒலக்கை ஒண்ணு இங்கிருக்கு... நெல்லு குத்து நேரம் எது சொல்லுடி என் சித்திரமே... இதை விடவா ஒரு ஆபாசம் வேணும்...
  படம்-இந்து பாடல்-ஏய் குட்டி...

  ReplyDelete
 27. நன்றி அனானி

  நன்றி அஷோக்

  நன்றி தினேஷ்

  நிறையப் பாட்டு இருக்கிறது.அதுவும் பழையபாட்டுக்கள்.

  ReplyDelete
 28. ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க பாஸ்... இவனுக எல்லாருமே ஆங்கிலப்படங்களை பார்த்து விமர்சனம் எழுதிறதோட நிறுத்திட்டா ரொம்ப நல்லா இருக்கும் ஏன்னா இவனுக எழுதிறத அவங்க பார்க்கபோறதும் கிடையாது படிக்கப்போறதும் கிடையாது.... என்ன கருமத்தை வேணும்னாலும் எழுதித்தொலைக்கலாம்... தமிழ் சினிமாவப்பற்றி தரக்குறைவா பேசறதைத்தான் தாங்கிக்க முடியல்லை......

  ReplyDelete
 29. ஆடலுடன் பாடலைக் கேட்டு இரசிப்பத்துதான் சுகம்... செங்கனியில் தலைவன் பசியாற...

  ReplyDelete
 30. நன்றி ஆனந்த்-ஷா

  நன்றி ந.ர.செ.ராஜ்குமார்

  ReplyDelete
 31. OKAY AANA UNMAI TAMIZHANA PATHI PESARATHU OVER

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!