யாருமில்லாத வீட்டில் அழைப்பு மணி அடித்தது.
குரூப் போட்டோவில் இருந்தக் குட்டிப்பையன் வினு விருட்டென்று கெளரியின் மடியில் இருந்து எழுந்து” நான் தொறக்கரேம்மா” என்றான்.கெளரி அவனை அதட்டி மடியில்அழுத்தமாக இருத்தி” நாம தொறக்கக்கூடாது.தப்பா ஆயிடும்”. அவனை முந்தி இருந்த போஸிலேயே சரி செய்து அவளும் போஸ் கொடுத்தாள்.
அப்பா (கணவன்) எதுவும் காதில் வாங்காமல் போட்டோ ஸ்டியோவில் இருந்தவாரே இருந்தான்.போட்டோ எடுத்த அன்று கூட எடுத்து முடித்து மூன்று நிமிடம் கழித்துதான் அசைந்தான்.
மீண்டும் அழைப்பு மணி அடித்தது.
போன தடவை போகாத இடங்களுக்கெல்லாம் இந்தத் தடவை ஒலி அலைகள் சற்று முக்கியவாறு தொடமுயற்ச்சித்தன.அது கபடியில் ஏறு குந்தம் தொடும் முயற்ச்சியை ஒத்து இருந்தது. இந்த தடவை கிச்சனில் கிரைண்டர்,மிக்ஸி,பப்புள் டாப்,குத்துவிளக்கு இத்யாதிகளைத் தொட்டுவிட்ட்து சந்தோஷம்தான்.(ஆனால் ஒன்றும் பயனில்லை)
இன்னோரு போட்டோவில் இருந்த கவிதாவால் ஒன்றும்
செய்ய முடியாது.அவள் கேன்சரில் இறந்துவிட்டாள்.அவள் வந்து திறந்தாலும் அது அவ்வளவு நன்றாக இருக்காது.மேலும் பயந்துத்தொலைப்பார்கள்.பிரிஜ்ஜின் மேல் இருக்கும் ஜெலுசில் பாட்டில் சற்று குனிந்துப் பார்த்தால் சாவித்துவாரம் தெரியும்.ஆனால் அது அசதியில் இருந்தது.கடியார முட்களும் கண்ணாடியை விட்டு வெளிவரவில்லை.
செய்ய முடியாது.அவள் கேன்சரில் இறந்துவிட்டாள்.அவள் வந்து திறந்தாலும் அது அவ்வளவு நன்றாக இருக்காது.மேலும் பயந்துத்தொலைப்பார்கள்.பிரிஜ்ஜின் மேல் இருக்கும் ஜெலுசில் பாட்டில் சற்று குனிந்துப் பார்த்தால் சாவித்துவாரம் தெரியும்.ஆனால் அது அசதியில் இருந்தது.கடியார முட்களும் கண்ணாடியை விட்டு வெளிவரவில்லை.
சாவிக்கொத்துகளும் கண்டுக்கொள்ளவில்லை.திறந்தால் வம்பாகிவிடும்.
இரண்டு மின் விசிறிகளும் ஏதோ உடற்பயிற்ச்சி செய்வது மாதிரி தொங்கிக்கொண்டிருந்தது. தாங்கள் ஸ்விட்ச் கண்ட்ரோலில் இருப்பதாக அடிக்கடிச் சொல்லிக்கொள்ளும்.மற்றவைகளும் கண்டுக்கொள்ளவில்லை.செல்போனும் யாருக்காவது குறுஞ்செய்தி அனுப்பித் திறக்கச் செய்யலாம். மாட்டேன் என்றது.
அழைப்பவர்களுக்கு இந்த வீட்டைப்பற்றித் தெரியும்.இவர்கள் சற்று அசமஞ்சமானவர்கள்.எதையுமே சற்றென்று செய்யமாட்டார்கள்.அதே போல்தான் இதுகளும்.திருத்த முடியாது.இதே காரணத்தால் அழைப்பவர்களும் அழைத்துக்கொண்டே இருப்பார்கள்.லேட்டாக இருந்தாலும் வந்துவிடுவார்கள் என்று.
அழைப்பு மணிக்கு மூன்று மெட்டுகள் உண்டு.1.”Jingle bell”2.”Twinkle twinkle little star”.. 3.”Mary sheep” என்று வரிசையாக வரும்.முதல் மெட்டு வலது சுவர் போட்டோவில் இருக்கும் பத்மாவதி தாயாருக்குப் பிடிக்கும்.அடுத்த இரண்டு அவ்வளவாகப் பிடிக்காது.கேட்டுக்கொண்டே வெங்கடேசப்பெருமாளை எழுப்பினாள்.
அவர் ”திறந்தால் பிரயோஜனமில்லை.ஆந்திரா பேங்க் கடன் அட்டை பட்டுவாடா. நம் கையில் தரமாட்டார்கள்.சரி வேறு யாராக இருந்தாலும் திறந்தவுடன் “நீங்கள் யார்” என்று அழைத்தவர் கேட்டால் வெங்கடேசப்பெருமாள் என்று சொல்லவா முடியும்.ஒரு மாதிரி ஆகிவிடுவார்கள்"என்றார்.
இருவரும் பழையபடி தம்பதி சமேதராய் போட்டோவில் போஸ்கொடுத்தார்கள்.
இருவரும் பழையபடி தம்பதி சமேதராய் போட்டோவில் போஸ்கொடுத்தார்கள்.
”Jingle bell” மூன்றாவது தடவை மணி ஒலித்தது.இந்த முறை ஒலிகள் தம் பிடித்து எல்லா இடங்களுக்கும் கன்னபின்னாவென்று பரவியது.
பொறுமை இழந்தார்கள் 197 பாலோயர்கள்.கூடிப்பேசினார்கள்.வெளி ஊரில் இருப்பவர்கள் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிக அருகில் இருக்கும் ஒரு பாலோயர் திறப்பதாக முடிவாயிற்று.
(இடையில் இன்னோரு தடவை அழைப்பு மணி அடிக்கப்பட்டது)
அருகில் இருக்கும் பாலோயர் ஒப்புக்கொண்டுத் திறந்தார்.
”ஏன் இவ்வளவு லேட்டா தொறந்தீங்க” என்று செருப்பு அலமாரியில் செருப்பை விட்டு திரும்பி வெங்கடேசப் பெருமாளைப் பார்த்து புத்தி போட்டுக்கொண்டு கேட்டார் இந்தக்கதைச்சொல்லி.
ஏதோ கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு....
ReplyDeleteகதை நல்லா இருக்குங்க . ஆனா ரெண்டு தடவை படிக்கணும்.
ReplyDeleteநன்றி ஸ்வரணரேக்கா.
ReplyDeleteநன்றி கார்த்திகா.
பின்நவினத்துவக் கதையா இருக்குமோ?ஒன்றும் புரியவில்லை.
கதை பிடித்துப் போய், 198 வதாய் சேரும் follower, மற்றவர்களுடன் சேர்ந்து அடுத்த அழைப்போசைக்குக் காத்திருக்கிறார்.
ReplyDeleteஅருகில் இருந்த follower யார்?
ReplyDeleteவாவ்..செம ..ரவி சார்!!...ரொம்ப வித்யாசம்...இதழில் புன்னகையோடு..அட..அட னு ரசிச்சுட்டே படிச்சேன்...நல்ல க்ரியடிவிட்டி...புதுவிதமான யுக்தி...சூப்பர் சார்..
ReplyDelete//அருகில் இருந்த follower யார்? //
நான் தான் அருகில் இருந்த follower ..இங்கே மதுரை தானே..சகோதரருக்கு கதவை திறந்து விட்டு போயரமாடோம என்ன?...:))
புதிய கோணம் வெகுவாக ரசித்தேன்
ReplyDeleteஒண்ணியும் பிரியலை சார்...
ReplyDeleteமிக மிக நல்லா இருந்தது. கதை அமைப்பும், "பாத்திரங்களும்" செம!
ReplyDeleteஆமா, சமையலறை வரை இந்த காலிங் பெல் சவுன்டு போகலயாக்கும், நிசப் பாத்திரங்கள் வந்திருக்குமே:-)
//அருகில் இருந்த follower யார்? //
ReplyDeleteநான் தான் அருகில் இருந்த follower ..இங்கே மதுரை தானே..சகோதரருக்கு கதவை திறந்து விட்டு போயரமாடோம என்ன?...:))
... உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்குது!
நன்றி வி.பாலகுமார்.
ReplyDelete//அருகில் இருந்த follower யார்? //
யாரோ?
நன்றி மி.கி.மாதவி
நன்றி ஆனந்தி
நன்றி மைதீன்
ReplyDeleteநன்றி தமிழ்ப்பறவை
நன்றி கெக்கே பிக்குணி.
ReplyDeleteநன்றி சித்ரா
நல்லா இருந்தது... :)
ReplyDeleteஅப்புறம் நாந்தான் உங்க 200வது ஃபாலோயர்!!
வாங்க பிரபு.200வதுக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.
ReplyDelete