Sunday, February 13, 2011

ஹார்ட் அட்டாக் பெஸ்ட்டுப்பா..!

”காலா என் காலருகே வாடா...உன்னை  என் காலால் மிதிப்பேன் ” என்று பாரதி சாவை மிரட்டினார்.ஆனால் அறுபதை நெருங்கும் சில மூத்த குடிமகன்கள்  ரொம்ப செலக்டீவாக “ஹார்ட் அட்டாக்கை” பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று அணைத்துக்கொள்ள ஆசைப்படும் பேச்சுகள் நிறைய ரொம்ப வருஷமாக கேட்கிறேன்.(இன்னொரு பக்கம் இதய நோய் சம்பந்தமான விழிப்புணர்ச்சி இதே மூத்த/இளைய குடிமகன்களுக்கு நிறைய வந்துவிட்டது)

அடுத்து ”சிரிச்சுக்கிட்டே இருக்கும்போது போய்டனும்” அல்லது ”தூக்கத்துல அப்படியே போய்டனும்” என்று ரெடிமேட் சாவு எதிர்பார்த்து மனசிலேயோ வெளிப்படையாகவோ பேசுவதுண்டு. ரொம்ப டீசெண்டான சாவு.உள் காயம் வெளிக்காயம் எதுவும் இல்லாமல்.

ரொம்ப வருடம் முன்பு ஒரு பெரிய நீதியரசர் ராஜகுமாரி தியேட்டரில் “காசேதான் கடவுளடா” நகைச்சுவைப் படத்தைச் சிரித்தவாறே பார்த்து ஹார்ட் அட்டாக்கில் இறந்ததாக படித்ததுண்டு.”கொடுத்து வச்சவண்டா” என்று என் வீட்டு பெரியவர்கள் சொன்னதும் கேட்டதுண்டு.

சச்சின்  பூஜ்யத்தில் அவுட்டானால் அல்லது கடைசிப்பந்து,அதில் ஒரு ரன் அடித்தால் ஜெயிப்போம் என்ற நிலையில் சில ஹார்ட் அட்டாக வந்து இறந்திருக்கிறார்கள்.இன்னும் நிறைய அதிர்ச்சி ஹார்ட் அட்டாக்குகள்.

என் பள்ளி வயதில் பக்கத்து வீட்டு  அரசு அலுவலர் ஐம்பது  ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக மாட்டி ஹார்ட் அட்டாக் வந்து இறந்துப்போனார்.ஆனால் 1,75,000 கோடிக்கு ஒன்றும் ஆகவில்லை. நமக்குதான் தொகையைக் கேட்டால் ஹார்ட் அட்டாக் வருகிறது.

ஏன் ஹார்ட் அட்டாக் பெஸ்ட்?
  •  பெட்ல  பீயும் மூத்திரமா கிடந்து யாரையும் துன்புறுத்தக் கூடாது
  •  தானும்  எந்த நோயாலும் நீண்ட நாள் துன்பப்படக் கூடாது
  •  மனைவிக்கு முன்னால் எஸ்கேப் ஆகிவிட வேண்டும்
  •  மருமகள்,மகன் தொல்லைகள்
  •  நோய்க்குண்டான  எகிறும் செலவுகள்
  •  முதியோர் இல்லத்திற்குப் போகக் கூடாது
  •  கடன் தொல்லை
  •  இன்னும் சில காரணங்கள்

ஒவ்வொரு முறையும்  மருத்துவமனை சென்று அங்கு இருக்கும் வித விதமான நோயாளிகளைப் பார்த்துத் திரும்பும்போது எனக்குத் தோன்றுவது ”நோயற்ற வாழ்வே குறைவற்றச் செல்வம்”.ஆனால் உப்பும் உறைப்பும் உடலில் இறங்க அது அடுத்த நாள் ஆவியாகிவிடுகிறது.மருத்துவமனை வைராக்கியம்.

பழிக்குப் பழி வாங்கும் ரவுடிகள் திடீரென்று கண் முன் தோன்றி எதிரியை ரவுண்டு கட்டி துடிக்க துடிக்கப் போட்டுத்தள்ளுவார்கள்.ஆனால் எந்த எதிரியும் போடுவர்களைப் பார்த்து அதிர்ச்சியாகி ஹார்ட் அட்டாக்கில் செத்ததாக கேள்விப்பட்டதில்லை.காரணம் எதிர்பார்த்துதானே?
 
எனக்கு ஹார்ட் அட்டாக்  எப்போது வரும்?

எனக்கு உண்மையிலேயே 500 கோடி கூகுள் ஸ்பாம் லாட்டரியில் விழுந்து  நம்ப முடியாமல் திகைத்து   என் மாரைப் பிடித்துக்கொண்டு உதடுகள் துடிக்க,கன்னக் கதுப்புகள் எகிறி, கண் சிமிட்டி,ஒரு கையை மேற்புறம் நீட்டி...ஓ கூகுள்ள்ள்ள்ள்ள்ள்.ஹா ஹா ஹா.....


"நரகமாக  நான் நினைத்தது... இன்று சொர்க்கமாக மாறிவிட்டது... யாருக்காக..? இது யாருக்காக...?ஜொய்ங் சச்சர... ஜொய்ங் சச்சர...( கோரஸ் வயலின்)

5 comments:

  1. உண்மையாகவே சரியான வயதில் கஷ்டப்படாமல் திடீரென மரணம் அடைவது நம்முடைய வாழ்க்கைக்கான கவுரவம்.

    ReplyDelete
  2. Different post:-) ithaiyae oru kavithaiya unga style la ezhuthunga sir

    ReplyDelete
  3. நன்றி அனானி

    நன்றி தமிழ்ப்பறவை

    ReplyDelete
  4. வித்தியாசமான சிந்தனை..!!

    ReplyDelete
  5. நன்றி சேலம் தேவா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!