Friday, February 25, 2011

பி.ஏ.எகானமிக்ஸ்ஸும் Bus Dayயும்

”இவனுங்க பி.ஏ.எகானமிக்ஸ் இல்லேன்னா பி.ஏ.ஹிஸ்ட்ரி படிக்கிற வெட்டிப்பசங்க.அதான் பொறுப்பே இல்லாம பஸ் டேன்ற பேர்ல பொறுக்கித்தனம் பண்றாங்க” என்று படித்த பொதுமக்கள் அந்தக் காலத்தில் எரிச்சலடிப்பார்கள்.

பி.ஏ.எகா அண்ட் ஹிஸ் மாணவர்கள் கையில் சின்ன நோட்புக் வசதியாக பஸ்ஸில் தொங்குவதற்கு.இப்படித்தான் கல்லூரிக்கு வருவார்கள்.படித்து முடித்ததும் கிளார்க் வேலைக்கு போக வசதி.

மருத்துவமோ பொறியியலோ அல்லது மேற்ப்படிப்பு படிப்பவர்கள் சற்றுப் பொறுப்பாக நடந்துக்கொள்வார்கள் என்று ஒரு நம்பிக்கை. அப்படித்தான் இருந்தது அப்போது.
சென்னையில் இருக்கும் மூன்று கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு பெண் கொடுக்கவே பயப்படுவார்கள் அப்போது.

நடத்துனர்/ஓட்டுனர்- மாணவர்கள் இடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்டது இது.ஆனால் தலையில் கர்சீப் கட்டி பஸ்ஸின் தலையில் ஏறி விசிலடித்து,ஆணுறையை பலூன் போல் ஊதி பறக்கவிட்டு,லேட்டஸ்ட் குத்துப்பாடலைப் பாடியபடி,உலகத்திலுள்ள எல்லா சேனல்களிலும் தன் முக தெரியவேண்டும் ,பொதுமக்களுக்கு தொந்திரவு கொடுப்பது என்றாகிவிட்டது. கடைசியில் போலீஸ்-மாணவர் மோதலில் முடிவடையும்.

பஸ் டே குஸ்ஸூ டே ஆகி நாறுகிறது.

பல மாணவர்கள் சாமர்த்தியமாக முதலிலேயே நழுவிக்கொண்டு விடுவார்கள்.(கண்ணால் பார்த்தேன்.சினிமா தியேட்டரில்)அடிப்படையில் இவர்களுக்கு ரவுடித்தனம் அருவருப்பாக இருக்கிறது.

இப்போது இந்த இழவை நிறுத்தப்போவது மகா சந்தோஷம்.அடைப்படையில் சென்னையில் உள்ள சில கல்லூரிகளை சீர்திருத்த வேண்டும்.அதில் வழங்கப்படும் பட்டப் படிப்புக்களும் மாற வேண்டும்.


3 comments:

  1. கல்லூரிகள் தான் இவற்றுக்கு முக்கிய காரணம்.பேருந்தி தினம் கொண்டாடும் மாணவர்களை கடுமையாகத் தண்டிக்க்கத் தவறியது அவர்களினால் தான் ......... அதே போல சமூகப் பொறுப்பினை எந்தப் பள்ளியில் சொல்லிக் கொடுக்கிறார்கள்... காசுக்கு சீட்டு மார்க் - இப்படித்தானே கல்வி நிலையங்கள் இருக்கின்றன

    ReplyDelete
  2. நன்றி இக்பால் செல்வன்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!