Friday, February 25, 2011

இளையராஜா- King of Musical Beats-2

தாளம் என்று சொல்லும்போது முதன்முதலில் எனக்கு அறிமுகமான எம் எஸ்வி - ராமூர்த்தி பாட்டின் சில தாளங்களை என்னால மறக்க முடியாது.வித்தியாசமான தாளங்கள் மற்றும் பாட்டு. அந்தக் காலத்திற்கேற்ற இசைக்கருவிகளுடன். அவை:


தொட்டால் பூ மலரும் - படகோட்டி-1964,
காற்று வாங்கபோனேன் -கலங்கரை விளக்கம் -1965
அவளுக்கென்ன - சர்வர்சுந்தரம் -1964
பொன்மகள் வந்தாள்-சொர்க்கம்-1970
காற்றுக்கென்ன வேலி- அவர்கள் -1977
அன்புள்ள மான் விழியே -குழந்தையும் தெய்வமும் -1965
கண்ணன் என்னும் மன்னன் பெயரை -வெண்ணிற ஆடை-1965

இன்னும் இருக்கிறது.

இளையராஜா தாளத்தை அடுத்தக் கட்டத்திற்கு தன் நவீன இசையால் நகர்த்தினார்.தாளக்கட்டில் புரட்சியே செய்திருக்கிறார்.Master of  Musical Beats.பின் வரும் தாளத்துடிப்புகளே இதை சொல்லும்.



He is musical genius in blending the Melody(song) and Rhythm(beat) artistically. 

ஸ்ருதி(மெட்டு) மாதா லயம்(தாளம்) பிதா என்று சொல்வார்கள்.

பாட்டிற்குக்கொடுத்த அதே ஆளுமையை (personality)இதற்கும் கொடுத்து புதிய பரிமாணங்களைத் தொட்டு இருக்கிறார்.மெட்டில் இருக்கிற அதே உயிர் துடிப்பும் ஆத்மாவும் இதிலும் இழையாக ஓடுகிறது. ஆத்மா இல்லாத இசை வெறும் சவம்.

ஆச்சரியமான விஷயம் இவரின் ஆரம்பகால தாளங்களில் கூட பெரும்பாலும் “கத்துக்குட்டித்தனம்” இல்லை. மேதமை பொருந்தி இருக்கிறது.

ரசிகன் மனநிலையிலிருந்து  ஆராய்ச்சி மாணவன் மனநிலைக்கு கொண்டுப்போய் விடுகிறார்.(எப்போதும் நடப்பது)

கர்நாடக இசையில் உள்ள விதவிதமான தாளங்களை தன் இசையில் நவீனமாக உபயோகப்படுத்தி உள்ளார்.அதைப் பற்றிய அறிவு எனக்கு இல்லை.

ஒரு காமன் சென்ஸ் பார்வையில் தாளத்தைப் பற்றி:(தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்)
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு மெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக:
  1. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
  2. சோலைப்பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
  3.  உன் பார்வையில் ஓராயிரம்
  4.  ஓ... உன்னாலே நான் பெண்ணானேனே...
  5.  பொதுவாக என் மனசு தங்கம்
இந்தப் பாடல்களை அதே மெட்டில் பாடியபடி கையால் மேஜையில் தாளம் போடுங்கள்.(நாம் மியூசிலாகத் தட்ட முடியாது.சும்மா தட்டுங்கள்). தட்டல் எண்ணிக்கை வித்தியாசப்படும். காரணம் 1.வார்த்தை 2.மெட்டு. 3.உச்சரிப்பு.

”சோலைப்பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்” ராஜாவின் மெட்டுலேயே பாடும்போது போடும் தட்டல் அதிகமாகும். காரணம் நீளமான பல்லவி.” ஓ... உன்னாலே” அந்த ஓவை ஸ்டைலாக உச்சரிக்கும்போது தட்டல் எண்ணிக்கை அதிகமாகும்.

அதே போல்”உன் பார்வையில் ஓராயிரம்” மாறுபடும்.

இப்படி தட்டல்களின் எண்ணிக்கையை வைத்து ஆதி தாளம்,மிஸ்ர சாபு, கண்ட சாபு என்று வகைப்படுத்தி உள்ளார்கள்.

மொத்தத்தில் ஒவ்வொரு வார்த்தையும் பாடும் வினாடிகள்  அதற்குள் தட்டப்படும் தட்டல்கள். இதுதான் பாட்டுக்கு ஏற்ற தாளம்.

நாம வேண்டியவர்களுக்கு அடிக்கும் அதே “ஜிங் சக்”தான் தாளம்.

ராஜா இதை வைத்துக்கொண்டு விளையாடுகிறார். பின் வரும் பாட்டெல்லாம் ஏதோ ஒரு தாளத்தில் அடங்கும்.எல்லாம் ஒரு கணக்குதான்.


நாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.ராஜா 1975ல் வந்தது நல்லதாகப் போயிற்று.இல்லாவிட்டால் இவ்வளவு விதவிதமான தாளக்கட்டுக்கொண்ட பாடல்கள் கிடைத்திருக்காது.காரணம் படங்கள் மாறிவிட்டது.பாட்டுத் தேவையா என்ற கட்டத்திற்கு வந்துவிட்டோம்.


கிராமம்,நகரம்,திகில்,சரித்திரம், மாயஜாலம்,பக்தி,ஆர்ட்
பிலிம்,கிராபிக்ஸ் படம்,புராணம், குற்றம்,குடும்பம்,முடிச்சவ்ழிக்கி,மொள்ளமாரி என்று எல்லாவித பிரிவுகளுக்கும் பாட்டுப்போட்டதால் மேஸ்ட்ரோவுக்கு சோதனை முயற்சிகள் செய்ய நிறைய வாய்ப்பு.போட்டுப்பின்னியிருக்கிறார்.

Master Blaster Maestro  எல்லா fielding positionகளிலும்  தன் பேட்டை சுழற்றி ரன்(தாளம்) அடித்திருக்கிறார்.ரிவர்ஸ் பேட்டும் ஆடி இருக்கிறார்.

 
  •  தாளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மெட்டை(பாட்டு) கைவிடவில்லை
  • தாளமும் மெட்டும் இணைந்துப்போகிறது
  •  தாளத்திற்காகக் கூட மெட்டு அமைத்தப் பாடல்கள் இருக்கிறது
  • ஒரு சில பாட்டில் மேலோட்டமாகப் பார்த்தால் தாளம் இணைந்துப் போவது மாதிரி உணர்வோம்.ஆனால் சற்றுத் தள்ளிப்போகும்.அது ஒரு டெக்னிக் என்று சொல்லாம்
  • ஒரே பாட்டில் டிரம்ஸ்,தபலா,மிருதங்கம்,டோலக் என்று தாளம் தாவுகிறது
  • தாளத்தின்  சின்ன சின்ன உணர்ச்சிகளை கவனமாக கேளுங்கள் 
  • தாரை,தப்பட்டை,உறுமி,தப்பு,கஞ்சிரா,மிருதங்கம், தவில்,டிரம்ஸ்,கைத்தட்டல்,தொடைத்தட்டல்,காங்கா, பேங்கோ மற்றும் பல
  • தாளத்திற்கு முன்னும் பின்னும் பின்னப்படும் இசை முக்கியமானது

இதன் பெயர் Vibraslap.இதைக் கூட பயன்படுத்தியதாக நண்பர் சொன்னார். எந்தப் பாட்டிற்கு என்று தெரியவில்லை.
    குறைந்தப்பட்சம்  3 நிமிடங்கள்தான் ஆடியோ ஓடும்.பாட்டின் பின் வரும் தாளத்தை சற்று உன்னிப்பாக கவனித்தால் அதன் தனித்தன்மையைக் காணலாம்.முன்னும் பின்னும் பாட்டு ஒடுவது ஒரு முழுமைக்காகதான்.

    தென்ன மரத்துல” இருந்து ”பீட் பீட் பீட்” வரை 17 பாடல்களை சிவப்பு நிறத்தில்  கொடுத்திருப்பது இசைஞானியின் தாளத்தின் பன்முகத் தன்மையை முன்னிலைப்படுத்துவதற்காக.ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை.அதற்குப் பிறகு வருபவையும் தனிதன்மை கொண்டவையே.

    தாளங்களை கூர்ந்து கவனியுங்கள்.

    தென்ன மரத்துல தென்றல் அடிக்குது-லஷ்மி-1979

    அழகே தமிழே அழகிய - கோவில் புறா-1981
    Two - in -One.மெட்டுக்குத் தாளமும் தாளத்திற்கு மெட்டும் திருப்பிக்கொள்ளலாம்

    ஆடும் நேரம் இதுதான் -சூரசம்ஹாரம் -1988

    தகிடதகிட தந்தானா - சலங்கை ஒலி-1982
    சும்மா குமுறவில்லை. ஒரு கலை அம்சத்தோடு குமுறுகிறார்.
     0.10ல்மிருதங்கத்திலிருந்து தபலாவுக்கு தாவுகிறது தாளம்.
     
    காதல் ஓவியம் -அலைகள் ஓய்வதில்லை-1981
    தாளம் புதுசு.பின் பாதியில் அப்படியே தாளத்தை மாற்றுகிறார்.அம்மாடியோவ்!ஹிட்சாக் படத்தில் அடுத்து வருவதை கூட யூகிக்கலாம்.ஆனால் இவர் பாட்டில்.

    குயிலே குயிலே - காதல் ஓவியம் -1982
    சோகமான பாட்டிற்கு மென்மையாகத்தான் தாளம் வைக்கப்படும்.இதில் சற்று
    கடினமாக தாளம் போகிறது.சோதனை முயற்சி?வெற்றியும் பெற்றுவிட்டார்.

    போற்றிப்பாடடி கண்ணே -தேவர்மகன் -1992

    கன்னிப்பொண்ணு கைமேல -நினைவெல்லாம் நித்யா-1982

    உன் பார்வையில் -அம்மன் கோவில் கிழக்காலே-1986
    28BeatUnParvaiyil.mp3
     
    என்ன சுகமான உலகம்- கர்ஜனை-1981
    மிருதங்கம் வயலின் கலவை அருமை.
    42BeatEnnaSougamana.mp3

    ஒரு ராகம் தராத பாடல் -உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்1992
    என்ன ஒரு மெட்டு..! தாளம் பேசுகிறது..!

    இப்போதென்ன தேவை - மக்களாட்சி -1995
    அமிர்தவர்ஷ்னி ராகத்தின் சாயலில் ஒரு பாட்டு.
    9BeatMakkalAati-IppothuEnna.mp3

    பார்த்த விழி பூத்திருக்க - குணா -1991
    29BeatPaarthavizhi-Guna.mp3

     கேளடிகண்மணி - புதுப்புது அர்த்தங்கள்-1989

    தாம்பூரின் என்ற இந்த  இசைக்கருவியின் ஓசை இதில் கேட்கலாம்.அதன் நாதம் எப்படி பாட்டை அழகுப்படுத்துகிறது.
    34BeatKeladiKanmani.mp3

    கொத்தமல்லிப்பூவே - கல்லுக்குள் ஈரம் -1980
    7BeatKoothamallepoove.mp3

    கிழே இருக்கும் ஜலதரங்கம் இன்னும் இசைக்கருவியில்தான்
    முதலில் வரும் இசை வாசிக்கப்பட்டிருக்கிறது.

    (திருமதி சீதாலஷ்மி துரைசாமி)

    இளநெஞ்சே வா - வண்ண வண்ண பூக்கள்-1992
    இந்தப் பாட்டில் தோல்கருவிகள்தான்.உரையாடலை
    கவனியுங்கள்.தாளக்கட்டை வைத்தே முக்கால்வாசி பாட்டு ஓடுகிறது.ஒரு மைல் கல். சோதனை முயற்சி.

     1.07 பிறகு பல்லவியில் ட்ரம்ஸ் ,தபலா என்று மாறி மாறி தட்டப்படுகிறது.

    தாளம் மெட்டை விட்டு தப்பிப்போகிறது ஆனால் போகவில்லை??!!

    பருவமே புதிய பாடல் பாடு -நெஞ்சத்தே கிள்ளாதே-1980
    தொடையில் தட்டித் தாளம் எழுப்பப்பட்டதாக கேள்வி. தொடைத் தட்டலில் ஆரம்பித்து மெதுவாக வெஸ்டர்ன் கிளாசிக்கலுக்குப் போய் ஹார்மனியத்தில் முடிகிறது.
    14BeatParuvamePudhiya.mp3

    சோலைப்பூவில் - வெள்ளைரோஜா-1983

    48BeatSolaiPoovil.mp3

    காத்திருந்தேன் தனியே - ராசா மகன் -1994
    7 beat cycle rhythm என்ற வகையில் போடப்பட்டதாம்.”காத்திருந்தேன் தனியே” “எதிர்பார்த்திருந்தேன் உனயே” “பூத்திருந்தேன் விழியே” ஒவ்வொரு வார்த்தையும்  முடிக்க ஐந்து  செகண்ட் ஆகிறது.அந்த ஐந்து செகண்டில் எத்தனை beat அடிக்கப்படுகிறது என்று மேஜையில் தட்டிப்பார்க்கவும். ஏழு வருகிறதா?

    மோகனராகமும் கூடவே மெட்டில் போகிறது.ஜிக்கியின் மகன் சந்திரசேகர் பாடுகிறார்.
    BeatKaathirunthen.mp3

    மிஷ்கின் பயந்து ஓடும் காட்சி - நந்தலாலா Trailer -2010
    Nandalaala miskin run.mp3

    பீட் பீட் பீட்

    ____________________________________________________________

    சிவகர தமருக -கொச்சு கொச்சு சந்தோஷங்கள்-2000
    சித்ரா குரலில் கொல்கிறார்.ராஜா தாளத்தில்.
    BeatShivkaradamaruka.mp3

    அடிடா மேளத்த-கண்ணுக்குள் நிலவு-2000
    25BeatAdidaMelatha.mp3

    நிலவு பாட்டு -கண்ணுக்குள் நிலவு-2000

    தாகம் எடுக்கிற நேரம் - எனக்காகக் காத்திரு-1981
    6BeatDhagmEdukkura.mp3

    ஆட்டுக்குட்டி முட்டையிட்டு 16 வயதினிலே-1977
     அட்டகாசம்.
    3BeatAatukkutiMuttai.mp3

    ஓ உன்னாலே நான்-என் அருகில் நீ இருந்தால் -1991


    மெலடியும் தாளமும் ரொமாண்டிக் ஆகப்போகிறது.ரொம்ப சிம்பிள் ரிதம்(தாளம்) அண்ட் மெலடி(பாட்டு).இப்போது இருக்கும் எல்லா இசையமைப்பாளர்களும் இந்தப்பாட்டை(முழுசு) காலை,மதியம்,இரவு மூன்று முறை வாக்மேனில் ஒரு மாசம்  கேட்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    4BeatOhUnnaleNaan.mp3

    தேவனின் கோவிலிலே யாவரும் -வெள்ளைரோஜா-1983
    BeatDevaninKovilVellaiRoja.mp3

    இது ஒரு நிலா காலம் - டிக் டிக் டிக் -1981
    முதலில் வரும் டிரம்ஸ் எவ்வளவு வித்தியாசம்!
     BeatIthuoruNilakalam.mp3

    செவ்வானமே -நல்லதோர்குடும்பம் -1979
    BeatSevvanameNallathorKudu.mp3

    நேத்து நேத்து ஒருத்தர - புதுப்பாட்டு -1990
    13BeatNethuOruthara.mp3

    ஆயிரம் மலர்களே - நிறம் மாறாத பூக்கள்-1979
    BeatAayiramMalargale.mp3

    பொதுவாக என் மனசு -முரட்டுக்காளை-1980
    15BeatPothuvaga En.mp3

    அந்தரங்கம் யாவுமே - ஆயிரம் நிலவே வா -1983
    BeatAntharanYaumE.mp3

    கா..கா..காக்கா கருப்பு -ஜுலி கணபதி -2004
    BeatJulieganapathy.mp3
      
    மாமா மச்சான் - முரட்டுக்காளை-1980
     (மாமனைத் தேடுகிறார் ராஜாவின் பின்னணியில்)

    0.42-0.57 முதல் பீட்டை கவனியுங்கள்.முன்னால் நளினமான புல்லாங்குழல் நாதமும் பின்னால் ரம்யமான தாளமும் awesome!

    Hats off Maestro!

    17BeatMamanMachan.mp3

    ஆகாயவெண்ணிலாவே - அரங்கேற்றவேளை-1990
    வித்தியாசமான  தாளக்கட்டில் போடப்பட்டது.(”முல்லை மலர்மேலே மொய்க்கும் வண்டுபோலே” யின் நவீன வடிவம் இது)

    உற்று உள்வாங்கினால் பாட்டின் போக்கிலிருந்து தாளம் சற்று தள்ளித்தான் போகிறது. பின்னால் சேருகிறது.மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் தெரியாது.
    19BeatAagayavennilave.mp3

    காயத்ரீ - வாழ்வே மாயமா-1977
    0.38-0.42 இரண்டு தாளங்கள் ஆனால் இரண்டு கருவிகளில்.
    20BeatGayathri-Vaazhvey.mp3

    மெளனம் ஏன் மெளனம் ஏன் - என் ஜீவன் பாடுது-1988
    BeatMounamenMounamen.mp3

    இளமை இதோ இதோ - சகலகலாவல்லவன் -1982
    21BeatElamaiSakala.mp3

    அம்மா என்றழைக்காத -மன்னன் -1992
    தாளத்திற்கு வயலினா வயிலினுக்கு தாளமா?வயலினைச் சுற்றி ஒரு வலையே பின்னப்படுகிறது.
    23BeatAmma Entrui-Mannan.mp3

    ஆதிஉஷஸ் சந்தியப்பூத்தது இவ்டே - பழசி ராஜா-2009


    இதழில் கதை எழுதும் - உன்னால் முடியும் தம்பி -1988
    26BeatIdhazhilKadhai.mp3

    புதிய பூவிது - தென்றலே என்னைத் தொடு -1985
    ஒரு சமயத்தில் எல்லாவற்றையும் இசைப்பது மாதிரி தெரியும்.ஆனால் தாளத்தின் புதிய பரிமாணம்.சோதனை முயற்சி.ராஜாவின் மாஸ்டர் பீஸ்
    30BeatPudhiyaPoo.mp3

    விழியிலே மலர்ந்தது - புவனா ஒரு கேள்விக்குறி-1977
     31BeatVizhiyilaeBhuvana.mp3

    ராஜா கைய வச்சா - அபூர்வ சகோதரர்கள் -1989
    பலவித  மணம் கொடுக்கிறார் பாருங்கள் ஒரு தெருப் பாட்டுக்கு.
    33BeatRajakaiyavecha.mp3

    செந்தூரப் பூவே-16 வயதினிலே -1981
    35BeatSenthooraPoove.mp3

    சுக ராகமே சுப கீதமே - கன்னிராசி -1985
    36BeatSuga Raagamey.mp3

    கொஞ்சி கொஞ்சி -வீரா -1994
    37BeatVeeraKonjiKonji.mp3

    அந்திமழை - ராஜபார்வை -1981
    39BeatAnthimazhai.mp3

    குழலூதும் கண்ணனுக்கு - மெல்லத் திறந்தது கதவு-1986
    40BeatKulaloothumKannanukku.mp3

    பாட்டுத்தலைவன் - இதயக்கோவில்-1985
    41BeatIdhayaKoil-PaatuThalai.mp3

    கலகலக்கும் மணியோசை - ஈரமான ரோஜாவே-1991
    43Beatkalakalakum.mp3

    கஸ்தூரி மானே - புதுமைப்பெண்-1984
    44BeatKasthuriMane.mp3

    ஒரு ராகம் பாடலோடு - ஆனந்தராகம்-1982
    ஆரம்பத் தாளத்தில் உணர்ச்சிகள் அபாரம்

    45BeatOruragamPaadaloda.mp3

    ஓ மானே மானே - வெள்ளைரோஜா-1983
    46BeatOhManeMane.mp3

    சிறிய பறவை சிறகை - அந்த ஒரு நிமிடம்-1985
    0.17-0.32 இடையில் தாளம்  மற்றும் இதர நாதங்களுக்கிடையே நடக்கும் உரையாடல் stunning!

    47BeatSiriyaparavai.mp3

    பொன்மேனி உருகுதே -மூன்றாம் பிறை-1982
    BeatPonmeni.mp3

    ஆனந்த ராகம் - பன்னீர் புஷ்பங்கள் - 1981
    ராஜாவின் மாஸ்டர் பீஸ்.அருமையான தபலா.1.00-1.15 பாட்டின் வேகம் சற்று கூட தபலாவின் தாளம் மாறுகிறது. சுருதி மாற லயமும் மாறுகிறது.எல்லாம் ஒரு கணக்குதான்.
    BeatPannerPushAnantha raa.mp3

    ராதா அழைக்கிறாள் - தெற்கத்திக் கள்ளன் -1988
    இதில் வெஸ்டர்ன் மற்றும் இந்திய தாளகட்டுக்கள் மாறி வருகிறது.

    BeatRadha AzhaiTherkkathiKallan.mp3

    பழமுதிர்சோலையிலே-வருஷம் 16 -1989
    BeatPazhamudhir.mp3

    தை பொங்கல் -மகா நதி -1993
    BeatMahanathi-Thai ponga.mp3

    காதல் கசக்குதுய்யா-ஆண்பாவம் -1985
    BeatKadhal KasakkuthaiyaAan Paavam.mp3

    ஆயிரம் தாமரை மொட்டுக்களே
    BeatAayiramThama.mp3

    பாட்டுக்கள் “பழசு” ஆகிவிட்டது உண்மைதான்.ஆனால் அதன் soulful தாக்கம் எப்போதும் உண்டு.

    .

    40 comments:

    1. நீங்கள் கொடுத்துள்ள மற்றொரு பொக்கிஷ பதிவு. :-)

      ReplyDelete
    2. நன்றி சித்ரா.

      ReplyDelete
    3. நானும் இசைஞானியை அணு அணுவாக ரசிப்பவன் தான். ஆனால் உங்கள் இந்த பதிவை வாசிக்கும் போது, உங்கள் அளவு ரசித்ததை எழுத முடியுமா என்று வியக்கிறேன்.

      ReplyDelete
    4. கேட்க முடியாத சூழல் :) கண்டிப்பா கேட்டுட்டு பின்னூட்டம் போடுறேன்

      ReplyDelete
    5. Pala kethiraatha paadalgal + Kettum gavanithiraatha paadalgal..!!
      Super..!!
      ketka ketka inimai..!!

      ReplyDelete
    6. Dear Ravi,
      Vaarthai ilai paarata.........
      Vaarthai ilai Nandri solla.....

      My Hearty Salute to your Dedication........

      idhu dhan ipodhaiku avasra paaratu.......

      unga writings ai padikanam. apram dhan paatai kaekanam.

      With Love,
      Usha Sankar.

      ReplyDelete
    7. A good compilation. You may want to add the following as well:
      ஆறு அது ஆழமில்ல.. (முதல் வசந்தம்)
      மாசி மாசம் ஆளான பொண்ணு.. (தர்மதுரை)
      கருத்த மச்சான்.. (புது நெல்லு புது நாத்து)

      Thanks!

      ReplyDelete
    8. innum padikkala ravi sir..antha piano play panra raja sir photo mattum paarthen...enna lovely photo..apdiye oru divine irunthathu...

      infact ..innaiku naane ungakitte malaysia vasudeven sir patriya oru post podunganu sollalaam ninaichen..avaroda sila hummings sila paattukalil keten...neenga post potal romba different aa nunukkamaai ellaame sutti kaamippinga..y dont u try sir???

      appuram vanthu intha post padichuttu..naan comment poduren sir...

      mikka nandri ravi sir oru ilaiyaraaja rasikaiyaai ithai solkiren...

      ReplyDelete
    9. நன்றி தமிழ் உதயம்
      நன்றி இளா

      நன்றி கிரன்

      ReplyDelete
    10. Great work!. Keep it up

      ReplyDelete
    11. நன்றி உஷா

      நன்றி அனானி

      நன்றி மிடில்கிளாஸ் மாதவி

      ReplyDelete
    12. Anonymous said...

      // ஆறு அது ஆழமில்ல.. (முதல் வசந்தம்)
      மாசி மாசம் ஆளான பொண்ணு.. (தர்மதுரை)
      கருத்த மச்சான்.. (புது நெல்லு புது நாத்து)//

      Thanks Anony.I have already had this in my list."ஆறு"I already listed this into my humming post.So I avoided it.

      ReplyDelete
    13. நன்றி ஆனந்தி.

      //neenga post potal romba different aa nunukkamaai ellaame sutti kaamippinga..y dont u try sir???//

      மன்னிக்கவும்.இப்போதைக்கு என்னால் முடியாது.எனக்கா மூடு வந்து அதற்குரிய ஹோம் வொர்க் செய்துவிட்டுதான் போடத் தோணும்.

      நன்றி ஆனந்தி.

      ReplyDelete
    14. பின்னூட்டம் போட்டவர்களே.ஒரு பின் இணைப்புச் செய்துள்ளேன். இது போஸ்டில் அலைன் ஆகாமல் படுத்தி எடுத்து ஒரு மாதிரி சரி செய்து பின் இணைப்புச் செய்துவிட்டேன். அது:

      “ஒரு காமன்சென்ஸ் ........... எல்லாம் ஒரு கணக்குதான்”

      ரொமப படுத்தி எடுத்துவிட்டது.

      நன்றி.

      ReplyDelete
    15. வழக்கமான டெம்ப்ளேட் பின்னூட்டம்தான் போடணும்.:)
      ஹாட்ஸ் ஆஃப் டூ யுவர் ஒர்க் அண்ட் ராஜா சாங்ஸ்...

      ReplyDelete
    16. வணக்கம்.இன்றுதான் முதல் முறையாக வந்துள்ளேன்.மிக மிக மிக அருமையான ஒரு பதிவு.கடலில் கிடைத்த முத்தைப் போல் இந்த இணையத்தில் கிடைத்த ஒரு அற்புதமான வலை முத்து என்று சொன்னால் மிகை ஆகாது.இதை பொக்கிஷம் போல் காப்பேன்.மிக்க நன்றி
      இன்னும் கண்ணதாசன் பாடல்களைப் பற்றி தனியாக ஒரு பதிவு போடுங்கள்.நிச்சயம் உங்கள் வாழ்வு மென்மேலும் வளம் பெரும்.நன்றி..



      by.a.chandar singh.
      arjunchandarsingh@GMAIL.COM

      ReplyDelete
    17. அனைத்தையும் கேட்டேன் சார்...என்ன சொல்றதுன்னு தெரியலை ..இளையராஜா வை இந்த அளவுக்கு ரசிக்கும் ரசிகரும் இருக்கார் அப்டிங்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு...நீங்க சொன்னதுபோலே வாசு சார் பற்றி எப்போ முடியுமோ அப்போ போடுங்க...ரொம்ப பெர்பெக்ட் ஆ பண்ற உங்களுக்கு தான் தெரியும் ஒவ்வெரு படைப்பின் உழைப்பும்,,,தயார்படுக்கிறதும்....மிக்க நன்றி சார்..

      ReplyDelete
    18. Good writeup
      this is the first time I am visiting your blog

      the only blot was this sentence

      ”மாமி நீங்கதான் வாசிச்சேளோ இந்தப் பாட்டுக்கு?
      “இதாலயே...மண்டைலேயே போடுவேன்... வேலய பாத்துண்டு போ..!

      why such wordings towards an elderly person and that too who is a performing musician?

      ReplyDelete
    19. முதல் வருகைக்கு நன்றி பாலலஷ்மி.அந்த வசனத்தை எடுத்துவிட்டேன்.சுட்டிக்காட்டியதற்கு நன்றி.உங்கள் கருத்துக்கும் நன்றி.

      ReplyDelete
    20. நன்றி தமிழ்ப்பறவை.எப்ப பார்ட்டிங்க?ஞானி பக்தர இன்னும் காணலயே!

      ReplyDelete
    21. முதல் வருகைக்கு நன்றி சந்தர் சிங்.

      கருத்துக்கும் நன்றி சார்.

      ReplyDelete
    22. நன்றி ஆனந்தி.

      //இளையராஜா வை இந்த அளவுக்கு ரசிக்கும் ரசிகரும் இருக்கார் அப்டிங்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு...//

      ஆஹா ஆனந்தி! நெட்ல போய் பார்த்தோம் என்றால்
      கன்னாபின்னாவென்று ரசிகர்கள் இருக்கிறார்கள்.அதுவும் ரொம்ப டெக்னிக்கலாக ஆராய்ச்சிச் செய்கிறார்கள்.அவரோட இசையை இசை நோட்ஸ் எழுதி பிரமிக்கிறார்கள்.

      நன்றி.

      ReplyDelete
    23. thanks Ravi for honoring my comments
      Honestly did not expect such a quick action

      ReplyDelete
    24. ரவி ஷங்கர் ஜி, ராகதேவன் பாடல்களை அருமையாக அலசி ஆய்ந்து அற்புதமாகத் தொகுத்திருக்கிறீர்கள். இசையுலகின் சச்சினுக்கு இணையற்ற அர்ப்பணிப்பு. இதே வகையிலான...இன்னும் மேம்பட்ட பல படைப்புகளை வழங்க வாழ்த்துக்கள். அடியேனும் சென்னை வாசிதான்...ஷங்கர் தான்!. வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்/சிந்திப்போம்.
      பா.சங்கர் (irandaamshankar.blogspot.com)

      ReplyDelete
    25. அருமை தலைவரே..... தாளம் என்ற உடனேயே நேத்து ஒருத்தர ஒருத்தர் (புதுப்பாட்டு) பாடலை எதிர்பார்த்தேன், அதே மாதிரியே கலக்கிட்டீங்க....!

      நானும் சில பாடல்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
      1. மலைக்கோவில் வாசலில் (வீரா)
      2. அதோ அந்த நதியோரம் (ஏழை ஜாதி)
      3. ப்ரிய சகி (கோபுர வாசலிலே)
      4. ஆசை அதிகம் வெச்சு (மறுபடியும்)
      5. ஒரு சுடர் (ராஜாவின் பார்வையிலே)
      6. பூங்காற்று உன் பேர் சொல்லும் (வெற்றிவிழா)
      7. வந்ததே ஓ குங்குமம் (கிழக்கு வாசல்)
      8. காயத்திரி கேட்கும் (காக்கைச்சிறகினிலே)
      9. ஒளியிலே தெரிவது (அழகி)
      10. இளங்காத்து வீசுதே (பிதாமகன்)
      11. மாலை என் வேதனை (சேது)

      இவ்வளவுதான் ஞாபகம் வந்தது.......

      நன்றி!

      ReplyDelete
    26. தல நம்ம பறவை சொன்னது போல எங்களுக்கு வேற வார்த்தைகள் தேடி போடல முடியல. உங்கள் உழைப்புக்கும் இசை தெய்வத்தின் இசைக்கும் என்றும் மனமார்ந்த நன்றிகள் ;)

      ReplyDelete
    27. What a Musical Delight.....Great Blogging Man..CONGRATS.

      ReplyDelete
    28. I shared this post for my FaceBook Friends.

      ReplyDelete
    29. வாங்க பன்னிக்குட்டி ராமசாமி.

      உங்க லிஸ்டுக்கு நன்றி.விட்டுப்போனதைக்(3) குறித்துக்கொண்டுவிட்டேன்.பாருங்க ராஜாவோட தாளம் இன்னும் உங்கள் காதில் இசைத்துக்கொண்டே இருக்கிறது.

      நன்றி.

      ReplyDelete
    30. நன்றி கோபிநாத்.

      நன்றி ஜெரி ஈசானந்தன்.பகிர்விற்கும் நன்றி.

      ReplyDelete
    31. இப்படி தோண்டித் துருவி அனுபவிக்கிற அளவுக்கு இசை ஞானம் இல்லாவிட்டாலும் இப்பாடல்களை அனுபவித்து ரசித்திருக்கிறேன்.

      ReplyDelete
    32. பிரியா டைட்டில் இசை இணையத்தில் கிடைக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் கேளுங்கள்... அதில் வரும் ஒரு டிரம்ஸ் பீட்... STILL BORN CHILD ....அந்த நவீன இசை இன்னும் பல நவீனங்களை உருவாக்கிக்கொண்டெயிருக்கிறது.

      ReplyDelete
    33. நன்றி வடுவூர் குமார்

      நன்றி ராஜா.

      ReplyDelete
    34. கலக்கலான தொகுப்பு புக் மார்க் பதிவு நன்றி

      ReplyDelete
    35. நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்

      ReplyDelete
    36. இளையராஜாவை மட்டும் அல்லாமல் அவர் இசையை ரசிக்கிரவங்களையும் நமக்கு பிடித்து போகுதுன்னா
      அவரு பாடல்களுக்கு என்னா பவர் பாருங்களேன்

      ReplyDelete
    37. நன்றி இரண்டாம் ஷங்கர். வருந்துகிறேன்.உங்கள் பெயர் விட்டுப்போய்விட்டது.

      நன்றி யாரோ கண்மணியான்.

      ReplyDelete
    38. sir, i can't leave this place w/o saying anything.

      your posts on raja are gifts to us. pls save them.

      thanks for making us more close to raja than ever.

      ReplyDelete
    39. Thanks Senthil Kumar. Thanks for the visit.

      ReplyDelete

    எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!