திட்டுத் திட்டாய்
தீவுகள் போல்
பல வண்ணங்களில்
உதிர்ந்து கிடக்கிறது
கன்னம்கரேலென்ற
புதிதாய் போட்ட
தார் சாலையின்
இரு பக்க ஒரங்களிலும்
பெயர் தெரியாதப்
பூக்கள்
ஒவ்வொன்றாக
ரசித்து நடந்து
சாலையின் கடைசிக்கு
வந்து ஒரு புழுதி
படிந்த காரின்
கண்ணாடியில்
I love this avenue
என்று ஒற்றை விரலால்
எழுதுகையில்
உதிர்கிறது
என் தலை மேலும்
சில பூக்கள்
நல்லாயிருக்கு...!
ReplyDeleteஆஹா
ReplyDelete\\எதுவும் சொல்லாத போகாதீங்க!\\
ReplyDeleteஉங்க கவிதைய படிச்சிட்டு என்ன சொல்றதுனே தெரியல சார்.
இதப்படிச்சதும் ஒருமாதிரியா இருக்கு!!! அந்த சாலைக்குள்ள நுழைஞ்சி பூக்களை தலையில வாங்கினது மாதிரி!!!! எக்ஸலண்ட்!!! அருமையான கவிதை
ReplyDeleteRVC said...
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
முரளிகண்ணன் said...
ReplyDeleteவாங்க, ரொம்ப நாளைக்குப் பிறகு.
நன்றி.
அதிஷா,
ReplyDeleteரொம்ப நன்றி.
ஆதவா said...
ReplyDelete//இதப்படிச்சதும் ஒருமாதிரியா இருக்கு!!! அந்த சாலைக்குள்ள நுழைஞ்சி பூக்களை தலையில வாங்கினது மாதிரி!!!! எக்ஸலண்ட்!!! அருமையான கவிதை//
எங்க ஏரியா கவிதங்க.நேரில் அனுபவிச்சு எழுதினது.
கவிதை இவ்வளவு அழகாப் புரியுது. அழகாவும் இருக்குது.
ReplyDeleteஇது நெசமாலுமே அண்ணா நகர் பூங்கா படமா? நானும் ஒரு வருசம் அண்ணா நகரில் வாழ்ந்திருக்கிறேன். அந்த நினைவுகள் வந்து போயின :)
ReplyDeleteAlignment எல்லாம் கொஞ்சம் தாறுமாறா இருக்கே. கவனியுங்களேன்
ReplyDeleteநன்றி தமிழ்ப்பறவை.
ReplyDelete//கவிதை இவ்வளவு அழகாப் புரியுது. அழகாவும் இருக்குது//
எனக்கு எழுதும்போதே அப்படித்தான் வருகிறது.
பிரேம்குமார்,
ReplyDelete//இது நெசமாலுமே அண்ணா நகர் பூங்கா படமா? நானும் ஒரு வருசம் அண்ணா நகரில் வாழ்ந்திருக்கிறேன்.//
இல்லீங்க.நெட்டுல சுட்டது.ஆனா அ.நகர்ல சூப்பர் அவென்யூலாம் இருக்குது.
பிரேம்குமார் said...
ReplyDelete//Alignment எல்லாம் கொஞ்சம் தாறுமாறா இருக்கே. கவனியுங்களேன்//
கருத்துக்கு நன்றி. எந்த இடம்னு சொல்ல முடியுமா? எனக்குப் பிடிபடல.
நல்லா இருக்கு அண்ணா.. :)) ஏற்கனவே படிச்சிருந்தாலும் இப்போ தான் முதல் முறையா பின்னூட்டம் போடறேன்..
ReplyDeleteஸ்ரீமதி said..
ReplyDeleteவருகைக்கு நன்றி.அடிக்கடி வாங்க.
அனுபவம் மனதிற்கு நெருக்கமாயிருக்கிறது, கவிதை அருமை.
ReplyDeleteyathra said..
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
ரொம்ப அழகுங்க இந்த கவிதை...
ReplyDeleteசார் ஒவ்வொரு வரியையும் உடைச்சி ஒவ்வொரு கலர் கொடுத்திருப்பது அழகு.
ReplyDeleteஆனா இது கவிதையான்னு எனக்கு தெரியல :-(
லக்கிலுக்,...
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
//சார் ஒவ்வொரு வரியையும் உடைச்சி ஒவ்வொரு கலர் கொடுத்திருப்பது அழகு//.
நன்றி
//ஆனா இது கவிதையான்னு எனக்கு தெரியல//
அண்ணே! இது புது கவிதைண்ணே.அப்படித்தான் தோற்றம் தரும்.
இங்கே போய் பார்க்க
http://senshe-kathalan.blogspot.com/2009/04/2.html