Thursday, April 9, 2009

கதையின் முடிவு என்ன? சொல்லுங்கள்!

பத்திரிக்கையில் அந்த நடிகையின் போட்டோவைப் பார்த்தான் தாமு. நீச்சல் உடையில் .நீர் துளிகள் அங்கும் இங்குமாக படர்ந்திருந்தது.தள தளவென புஷ்டியாக இருந்தாள். நீச்சல் உடையின் மேல் கிழ் மறைப்பு முடிச்சுக்கள் துருத்திக் கொண்டு அலட்சியமாக இருந்தது. எச்சிலை மென்று விழுங்கினான்.

தாமு ஒரு டிராவெல்ஸ் கம்பெனி கார் டிரைவர்.ஒரு BPO கம்பெனிக்கு வேன் ஒட்டுகிறான். பிக்-அப் மற்றும் டிராப்.இவன் டிரிப்பில் 4 பெண்கள் 3 ஆண்கள் வருவார்கள். இதில் வரும் ஒரு பெண் ஸ்டெல்லா. இதே நடிகையின் முகச் சாயல்.அதே வாளிப்பான உடல்.ஸ்டெல்லாதான் கடைசி ட்ராப்.இவள் வீடு புற நகர் பகுதி.கொஞ்ச நேரம் பேசி விட்டு வேன் சீட்டில் குந்திக் கொண்டு உலகம் மறந்து தூங்கி விடுவாள். தாமு ரியர் வீயூ கண்ணாடி வழியாக வண்டியை ஒட்டிக் கொண்டே ,காமம் பொங்கப் பார்த்துப் பெருமூச்சு விடுவான். வீடு வந்ததும் அவன் தான் அவளை எழுப்புவான்.

சே!என்ன வாழ்க்கை.தானும் அந்தப் பெண்ணும் ஒரே வாழ்க்கை வாழ்வதாகப் பட்டது. உலகம் தூங்கும் போது இருவரும் விழித்துக் கொண்டு,விழித்திருக்கும் போது தூங்கிக்கொண்டு.ஒய்வு நேரத்தில்,கார் கதவை திறந்து வைத்து, பனியனுடன் மல்லாக்காக ”ஆ”வென வாய் திறந்து உடம்பு சூட்டுடன் படுத்தவாறே,FM கேட்டுக் கொண்டு.... அன்றும் அப்படித்தான் FMல் ஒரு பெண் “ரகசிய ராத்திரிகள்” நேயர்களுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தாள்.

குடும்ப சுழ்நிலை.தங்கை,தம்பி,குடிகார அப்பா, கடன்.திருமணம் செய்யவும் வழியில்லை..இந்த மாதிரி தினமும் பார்த்து உஷ்ணத்தில் பெருமூச்சு விட்டுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவது வெறுப்பாக இருந்தது.மாவா பாக்கெட்டை பிரித்து வாயில் கொட்டிக் கொண்டான்.ஜிவ்வென்று தலையில் ஏதொ ஏறி மார்பு சற்று அடைத்தது.

ஸ்டெல்லாவும் நம் மாதிரிதானே.அவளும் உடம்பு சூடோடுதானே இருப்பாள்? திடீரென்று உள்ளே ஒரு சாத்தான் எழுந்தது. கடைசி டிராப்பானதால் அவளை மிரட்டி ஒதுக்குபுறமாக உள்ள அந்த பூட்டிய வீட்டின் பின்னே அழைத்துப்போய்.அனுபவிக்க வேண்டியதுதான். உடன்பட்டால் உச்சம். இல்லையேல் மிரட்டல்.கொலை.எதையும் சந்திக்க தயார்.மீண்டும் அந்த நடிகையின் முடிச்சுக்களைப் பார்த்தான். 

BPO டூட்டி முடிந்துஎல்லோரும் வெளியே வர ஆரம்பித்தார்கள்.தாமு ட்ரிப் ஆண் பெண்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து ஏறிக்கொண்டார்கள்.கடைசியாக ஸ்டெல்லா படிகளில் இறங்கிக்கொண்டிருந்தாள்.இன்றும் அவளை லாங்க் ஷாட்டில் பார்க்கிறான்.குலுங்கி குலுங்கி ஒரு தேவதைப் போல் இறங்கியது மாதிரி பட்டது.இப்போது காமத்துடன் காதலும் சேர்ந்து அலைக்கழித்து அவளை முழுங்கிவிடுவது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

எல்லோரும் ஏறினார்கள்.மணி இரவு 12.05.வண்டியை எடுத்தான்.தெருவெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது.ஓனிக்ஸ் குப்பை வண்டிகள் சுறு சுறுப்பாக இருந்தது. 

இன்றும் அவளுடைய வழக்கமான ஓர சீட்டில் ஏறினவுடன் குந்திக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டாள்.அவ்வப்போது ரீயர் வியூ கண்ணாடி வழியாக ரசித்துக்கொண்டுதான் ஓட்டிக் கொண்டிருந்தான். 

கொஞ்ச நேரம் கழித்து இரண்டு பேர் “பை” சொல்லி இறங்கிக்கொண்டார்கள். மணி 12.28. 

இன்னும் கொஞ்ச தூரத்தில் மூன்று பேர் இறங்கினார்கள். மணி 1.00.  கதவு அறைந்து சாத்தியும் அவள் அசையவில்லை.

அடுத்த திருப்பத்தில் ஒரு பையன் இறங்கிக்கொண்டான். மணி 1.15பின்னால் ஒரு முறைப் பார்த்தான். துப்பட்டா விலகியது தெரியாமல் தூக்கத்தில் இருந்தாள்.

கைநடுக்கத்துடன் மாவாவை எடுத்து வண்டியை ஓட்டியவாக்க்கிலேயே எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.போதையில் உடம்பு ஒரு மாதிரி விறுவிறுத்தது. தண்ணீரி குடித்தான். கண்ணாடியில் முகத்தைப் பார்த்து வியர்வையை துடைத்துக் கொண்டான். செல்லை slient modeல் வைத்தான்.டாஷ் போடைத் திறந்து கத்தியை எடுத்து வைத்துக் கொண்டான்.

அவள் இருக்கும் புற நகருக்கு போகாமல் வேறு ஒரு பாதையில் வண்டியை திருப்பினான். இங்கிருந்தும் வேறு BPO கம்பெனி ஆட்கள் போவதைப் பார்த்திருக்கிறான்.மணி 1.25.ஹெட்லெட்டை அணைத்தான். அவன் நண்பன் வாட்ச்மேனாக இருக்கும் பூட்டியவீட்டைத்(ஓனர் அமெரிக்கா போய் விட்டார்)  தேடியபடி  மெதுவாக ஓட்டினான்.  சே!முன்னதாக அவனுக்குச் சொல்லியிருக்கலாம்.

அப்போது .........
 
முடிவு என்ன?  சொல்ல முடியுமா?

நான் ஒரு முடிவு வைத்திருக்கிறேன்.அந்த முடிவோடுதான் நீங்கள் சொல்லும் முடிவு ஒத்துப் போக வேண்டும். உங்கள் முடிவு வித்தியாசமாக இருந்தால் “மீ பஸ்ட் பின்னூட்டதாசன்” ஆவேன்.


23 comments:

 1. Why???????????????


  Very Interesting................:)

  ReplyDelete
 2. Anonymous,


  //Very Interesting.....)//

  Thanks.

  //Why???????????????//

  ?????????

  ReplyDelete
 3. அந்தப் பெண் ஆணா?

  ReplyDelete
 4. அந்த நிஜ நடிகையே எதிர்பட்டாளா?

  ReplyDelete
 5. நர்சிம்,

  //அந்தப் பெண் ஆணா?//
  சுத்தமான ISO2009 பெண் தல.

  ReplyDelete
 6. தல,

  //அந்த நிஜ நடிகையே எதிர்பட்டாளா?//
  அதே டூ பீஸ்ல?இது கூட நல்லா இருக்கு.ஆனா தாமு அதுக்கும் கொடுத்து வைக்கல.

  வெயிட் பண்ணுங்க தல. பைனகுலர்ல
  ரொம்ப நேரமா பாககறேன் ஒரு பின்னூட்டமும் காணும்.

  ReplyDelete
 7. முடிவு - 1

  எதிரில் வந்த லாரி எதிர்பாராமல் மோதியதில் டிரைவர் படுகாயம். ஆபத்தான நிலையில் பின்னால் தூங்கிக்கொண்டிருந்த பெண் அவனை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று காப்பாற்றினாள்.

  முடிவு - 2

  ரோட்டோரம் குடிகாரத்தந்தை மயங்கி கிடக்கலாம்.

  முடிவு - 3

  அவனது நாலு பேர் சேர்ந்து நடுரோட்டில் பலவந்தமாக பலாத்காரம் செய்ய முயன்றிருக்கலாம்.


  முடிவு எதுவாக இருந்தாலும் ,பாவம் டிரைவர் எப்போதும் போல நமக்கு நாமே திட்டம்தான்.

  ReplyDelete
 8. மூன்றாவது முடிவில் அவனது தங்கையை என்று வாசிக்கவும். ;-)

  ReplyDelete
 9. வாங்க அதிஷா.கருத்துக்கு நன்றி.

  //எதிரில் வந்த லாரி எதிர்பாராமல்//

  இல்லை.இது வழக்கமானது.

  //ரோட்டோரம் குடிகாரத்தந்தை மயங்கி கிடக்கலாம்//

  இல்லை.இதுவும் வழக்கமானது.


  //அவனது தங்கையை நாலு பேர் சேர்ந்து//

  இல்லை.ஆனால் முடிவு தங்கையை வைத்துதான் பின்னப்பட்டிருக்கிற்து.

  ReplyDelete
 10. சாலையில் அவனது தங்கை இரவு அலுவல் முடிந்து இதே போல் ஒரு டாக்ஸியில் பயணம் செய்ததைப் பார்த்திருக்கலாம்.
  (அ)
  ஆட்டோவில் தனியாக பயணம் செய்ததைப் பார்த்திருக்கலாம்...

  ReplyDelete
 11. வந்துட்டேன்...

  இந்த கதைக்கு நான் ஒரு முடிவு டிசைட் ப்ண்ணிருக்கேன். உங்களோடதோட மேட்ச் ஆவுதான்னு பாக்கலாம்.

  ReplyDelete
 12. தமிழ்ப்பறவை,

  //ஆனால் முடிவு தங்கையை வைத்துதான் பின்னப்பட்டிருக்கிற்து//

  அதிஷா பதிலில் இதைச் சொன்னது தப்பா போச்சு.

  ReplyDelete
 13. அறிவிலி,

  வருகைக்கு நன்றி.

  //இந்த கதைக்கு நான் ஒரு முடிவு டிசைட் ப்ண்ணிருக்கேன். உங்களோடதோட மேட்ச் ஆவுதான்னு//

  இப்ப சொல்லுங்க மேட்ச் ஆவுதான்னு
  பாக்கிறேன்.

  ReplyDelete
 14. வாட்ச் மேன் நண்பனும் அவன் தஙகையும் வீட்டிற்குள்...

  கத்தி,துரோகியின் உயிரெடுக்க உதவ

  துப்பட்டா விலகிய பெண் கற்புடன் (இன்னமும் இருந்தால்) வீடு திரும்பினாள்.

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. நான் சொல்லுறது இருக்கட்டும்..

  நீங்க எப்போ முடிவ சொல்ல போறீங்க..?

  இல்லனா எனக்கு தனியா மெயில் பண்ணுங்க.!!

  தலையே வெடிச்சிடும் போல இருக்கு..??

  ReplyDelete
 17. அறிவிலி,

  //வாட்ச் மேன் நண்பனும் அவன் தஙகையும் வீட்டிற்குள்..//

  இது இல்லை.இதை நானும் யோசித்தேன்.வழக்கமானதா
  (எல்லோரும் யூகிக்கும்) இருக்கும் என்று விட்டு விட்டேன்.

  நன்றி.

  ReplyDelete
 18. பட்டிக்காட்டான்,

  //நான் சொல்லுறது இருக்கட்டும்.//

  தல,படிச்சதுக்கு அடையாளமா ஒரு கடிதாசு போடக் கூடாதா?அதான் நான்

  //எதுவும் சொல்லாத போகாதீங்க!//

  கொட்டை எழுத்திலபோட்டுருக்கமில்ல.

  நா சின்ன பதிவருங்க.மத்தவங்க மாதிரியா?

  கொஞ்சம் இருங்க.ஹாஸ்பிடல் போயிட்டு வந்திடறேன்.

  ReplyDelete
 19. நான் இன்னும் கேட்குற அளவுலதான் இருக்கேன்..

  பெரியவங்க முன்னாடி எதுவும் சொல்லுறது இல்ல..

  சும்மா ஒரு தன்னடக்கம் தான்..

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. முந்தய கருத்துல ஒரு எழுத்துப் பிழை அதனாலதான்..??!!

  மெதுவா, பொறுமையா நோயாளிகள பாத்துட்டு வாங்க..

  வார விடுமுறை கொண்டட்டம்..

  நான் ஊருக்கு போக போகிறேஏஏஏஏஏஏஏன்...

  ReplyDelete
 22. பட்டிக்காட்டான்,

  உங்கள் ஆர்வத்திற்க்கு நன்றி.
  எனக்கு ஊக்கம் அளிக்கிறது.

  //நான் ஊருக்கு போக போகிறேஏஏஏஏஏஏஏன்...//

  அதுக்குள்ள படிச்சிடுங்க.

  நன்றி.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!