Tuesday, April 21, 2009

அடுத்த சந்தில் திரும்பினேன் - கவிதை
















ஸ்கூட்டர்காரனை
பின் தொடர்ந்து
வரும் என்னை
நொடிக்கொருதரம்
விழி உருட்டி தொடர்ந்து
என் கண்களையே
உற்றுப் பார்க்கிறது
இந்த சுசிலா புரோட்டீன்ஸ்
கடை கோழிகள்
திரும்பி சடாரென்று
அடுத்த சந்தில்
நுழைந்து விட்டேன்
தெரிந்து விட்டது
இவைகளுக்கு 
சற்று முன் எடுதத
85வது தடவை சத்தியம்
சாப்பிடப்போவதில்லை
இனிமேல் அசைவம்

21 comments:

  1. இதனால்தான் நான் சத்தியமே எடுப்பதில்லை!! கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க ரவிஷங்கர்

    ReplyDelete
  2. :-))

    நல்லாருக்கு கேஆர்எஸ்!!!!

    ReplyDelete
  3. ரொம்ப சூப்பர் :))

    ReplyDelete
  4. ஆதவா said..
    //கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க ரவிஷங்கர்//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. சென்ஷி said..

    //நல்லாருக்கு கேஆர்எஸ்!!!!//

    நன்றி சென்ஷி.அது என்ன கேஆர்எஸ்?

    இந்தகவிதை,ஒருகவிஞரின்பாணியைப் பின்பற்றி எழுதியிருக்கிறேன்..யார் தெரிகிறதா?

    ReplyDelete
  6. ஸ்ரீமதி said...

    //ரொம்ப சூப்பர் :))//

    நன்றி. அடிக்கடி வாங்க. நீங்கெல்லாம்
    கவித எழுதறவங்க.எதாவது சொன்ன
    திருத்திக்கலாம்.

    ReplyDelete
  7. கே. ரவிஷங்கர் -ஐ சுருக்கிப்பார்த்தேன்.

    கேஆர்எஸ் கிடைத்தது.

    மன்னிக்க.. கவிஞர் யாரென என்னால அனுமானிக்க முடியவில்லை.

    சட்டென ஞாபகம் வந்தது விக்கிரமாதித்யன். தவறெனில் மன்னிக்க. :-)

    ReplyDelete
  8. சென்ஷி
    //தவறெனில் மன்னிக்க//

    //மன்னிக்க..//

    (நாகேஷ் பாணியில்)”நாம யாருண்ணா..மன்னிகறத்துக்கு...மேல இருக்கார் பகவான்...அவர் ஆட்றார்..நாம ஆடறோம்.”

    I am a craze fan of Nagesh.

    //கேஆர்எஸ் கிடைத்தது//
    சும்மா கேட்டேன்.Nothing serious.

    //கவிஞர் யாரென என்னால//

    முகுந்த் நாகராஜன்(veenapponavan)

    அவருடைய கவிதைகளில் அங்கதம் மெல்லிசாக ஒடும்.நிறைய சர்ரியலிசம்.

    சரி..சென்ஷி ஏதாவது ஜாடை கீடை அடிக்கிறதா?

    ReplyDelete
  9. பாவம் அந்த கோழிகளுக்கு எங்கே தெரியப்போகிறது

    ரவிக்கு சத்தியம் என்பது சர்க்கரை பொங்கல் போல் என்று??

    ReplyDelete
  10. நல்லா இருக்குங்க

    mankuthiray

    ReplyDelete
  11. வாஙக கோபி.

    //ரவிக்கு சத்தியம் என்பது சர்க்கரை பொங்கல் போல் என்று??//

    அது கவிதையில் வரும் நாயகனுக்கு.
    எனக்கு இல்லீங்கோ!

    ReplyDelete
  12. Anonymous said...

    //நல்லா இருக்குங்க//

    நன்றி mankuthiray

    ReplyDelete
  13. சத்தியம் சக்கரை பொங்கள்னு முன்னமே சொல்லியிருக்காங்க!!

    கவிதை நல்லா இருக்கு ரவிஷங்கர்.

    ReplyDelete
  14. ஆ.முத்துராமலிங்கம்,

    //கவிதை நல்லா இருக்கு ரவிஷங்கர்//

    நன்றி சார்.

    ReplyDelete
  15. சூப்பர்.

    நானும் பாககறேன் தினமும்.ஆனா கவிதை வரவில்லை.

    ReplyDelete
  16. //85வது சத்தியம்// சூப்பர்...

    நல்ல கவிதை....

    நம்ம கடைப் பக்கம் வாங்க... உங்களுக்கு ஒரு மார்கெட்டிங் பண்ணியிருக்கு !! :)

    ReplyDelete
  17. Mahesh said...

    //நல்ல கவிதை..//

    ரொம்ப நன்றி.

    //நம்ம கடைப் பக்கம் வாங்க... உங்களுக்கு ஒரு மார்கெட்டிங் பண்ணியிருக்கு//
    போய் பாத்துட்டேன்.நன்றி.பின்னூட்டமும் போட்டு விட்டேன்.

    ReplyDelete
  18. //.. சூப்பர்.

    நானும் பாககறேன் தினமும்.ஆனா கவிதை வரவில்லை..//

    ரிப்பீட்டு..

    நானும் பார்க்கிறேன்
    தினமும்..
    ஆனாலும்
    வரவில்லை கவிதை..

    ReplyDelete
  19. பட்டிக்காட்டான்.. said...
    // சூப்பர்//.

    நன்றி.

    ReplyDelete
  20. நல்லா இருக்குங்க ரவி.

    ReplyDelete
  21. வடகரை வேலன் said...

    //நல்லா இருக்குங்க ரவி//
    ரொமப நன்றி

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!