Saturday, April 11, 2009

தம்மாத்தூண்டு/ரவூண்டு/ மினி கதைகள்

ஜல்லிக்கட்டு!

நமீதாவின் தொடையை தின்ன வந்த மாட்டை ஆக்ரோஷத்துடன் விரட்டினார் நமீதா ரசிகர். கிழிந்திருந்த போஸ்டரை நாக்கில் எச்சில் எடுத்து தடவி மீண்டும் சுவற்றில் ஒட்டினார்.மீண்டும் ஆக்ரோஷமாக வந்து அவரை விரட்டிபோஸ்டரை சாப்பிட்டு முடித்தது.


இன்றைய ஸ்பெஷல்

ரெண்டடுக்கு டிபன் பாக்ஸில் இருந்த பையனின் மதிய டிபனை குப்பைத் தொட்டியில் கொட்டினாள் அம்மா இரவு.அலாரம் வைத்து விடிகாலையில் எழுந்து செய்த டிபன். 

வாக்கிங்

நடுநீசியில் பாலத்தின் மீது எக்பிரஸ் ரயில் எதற்கோ நின்றிருந்தது.அவசரமாக கதவை திறந்து இறங்கினான் சுப்புரத்தினம். இவனுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு. 


EMI அதிர்வுகள்

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று கணினி திரை அதிர்ந்தது.அலைபேசியில் எஸ் எம் எஸ். வீட்டுக் கடனின் 12வது தவணை Rs.7224/- இன்று வங்கியில் வருகிறது.தகுந்த பேலன்ஸ் வைக்கவும்.அடுத்து ”டிங்” என்று அவன் இன்பாக்சில் வந்த மெயிலில் “உங்கள் வேலை அடுத்த மாதத்திலிருந்து .”படிக்க: திரில்லர்
கதையின் முடிவு என்ன? சொல்லியாச்சு!
35 comments:

 1. சூப்பர்...கடைசி மிக மிக அருமை அண்ணா

  ReplyDelete
 2. \\செம்ம தாஙக்ஸ் மச்சான்!\\\

  ம்ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்

  ReplyDelete
 3. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம்.அனைத்தும் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 4. ஈஸ்வரன்April 11, 2009 at 12:11 PM

  வாக்கிங் கதை மனதை என்னமோ செய்தது. Too sadistic.

  ReplyDelete
 5. அன்பு கருத்துக்கு நன்றி!

  ReplyDelete
 6. செம்ம தாங்க்ஸ் அன்பு!

  ReplyDelete
 7. கருத்துக்கு நன்றி குடந்தைஅன்புமணி

  ReplyDelete
 8. ஈஸ்வரன் said...
  //வாக்கிங் கதை மனதை என்னமோ செய்தது. Too sadistic.//

  எல்லாம் வல்ல ஈஸ்வரனே அப்செட
  ஆயிட்டார்.இதுதான் கதையின் வெற்றி.கதைக்கு காலூண்டா?

  ReplyDelete
 9. நமீதா தொடையை மட்டும் நான் பாக்கல..சாரி படிக்கல‌
  நான் ரொம்ப நல்ல பையனாக்கும்!

  ReplyDelete
 10. டக்ளஸ்,

  கருத்துக்கு நன்றி.

  நம்ம முடிவு இல்லாத கதையின் முடிவு பாத்தீங்களா?

  ReplyDelete
 11. பார்த்தேன்..ரவி ஸார்..
  உங்களோட கதையை நீங்க முடிவு போடுவதற்கு முன்னமே படித்து முடிவை யோசித்து வைத்திருந்தேன்..
  அன்று ஆபிஸில் கொஞசம் ஆணி அன்று அதிகம்..அடுத்த நாட்களில் மறந்தும் விட்டேன்..
  நீங்கள் விடை போட்ட பிறகு தான் ஞாபகம் வந்து உங்களோட விடையின் பதிவுக்கு என்னோட முடிவுகளை பின்னூட்டமா போட்டேன்..
  நீங்க என்னிடம் "முதலயே ஏன் பின்னூட்டம் போடவில்லை?" என்று கேட்டதற்கு இதுதான் உண்மையான பதில்.
  நார்மலாவே எனக்கு இந்த மாதிரியான் புதிர் கதைகள் மிகவும் பிடிக்கும்..
  ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களின் பதிவில், என்னை பாராட்டியதற்கு நன்றிகள் பல ..ரவி ஸார்.
  காலம் கடந்து தரும் நீதியும் அநீதிதான்..எனவே நான் இழைத்த அ நீதிக்கு வருந்துகிறேன்!

  ReplyDelete
 12. டக்ளஸ்,

  நான் இந்த கதை(முடிவு என்ன?) பதிவு போட்டு வழக்கமான பின்னூட்ட “ஈ’ அடிக்க ஆரம்பித்து, வலிய சென்று நர்சிம்மின் பதிவில் இட்டேன்.உடனே நர்சிம் 2 பின்னூட்டம் போட்டார்.அப்புறம் அதிஷா தானாகவே வந்தார்.அப்புறம் சில நண்பர்கள்.

  Lot of hits(62), but no comments.


  (எனக்கும் பின்னூட்டம் மற்ற பதிவுகளுக்கு வருகிறது.
  உண்மையாகவே ரசித்துப் போடுகிறார்கள்.குறையில்லை.)

  //நீங்க என்னிடம் "முதலயே ஏன் பின்னூட்டம் போடவில்லை?"//

  இது மாதிரி வாசகரை நம்பி எழுதப்படும் “முடிவு என்ன” டைப்புக்கு
  பின்னூட்டம் இல்லாமல் என்ன செயவது?

  கதை நன்றாக வந்திருக்கு. எனக்கே தெரிகிறது.ஒரே வருத்தம்,
  சில மொக்கைக் கதைகளுக்கு 60/70
  பின்னூட்டம்.கொடுமைடா?

  நன்றி டக்ளஸ் என் உணர்ச்சிகளை புரிந்துக் கொண்டதற்க்கு.

  ReplyDelete
 13. \\கதை நன்றாக வந்திருக்கு. எனக்கே தெரிகிறது.ஒரே வருத்தம்,
  சில மொக்கைக் கதைகளுக்கு 60/70
  பின்னூட்டம்.கொடுமைடா?\\

  உண்மைதான் ரவி ஸார்...
  நானும் புலம்பியிருக்கிறேன்....!
  இந்த மொக்கைகள் சில சமயங்களில் "சூடான இடுகை" களாகவே வந்து விடுகின்றது...
  அதுதான் மிகப் பெரிய கொடுமை...
  அப்பப்போ நம்ம பக்கமும் வந்து போங்க ரவி ஸார்.

  ReplyDelete
 14. //நாக்கில் எச்சில் எடுத்து தடவி//
  பிரம்மஹத்தி தோஷம்?....?

  ReplyDelete
 15. //நாக்கில் எச்சில் எடுத்து தடவி//
  பிரம்மஹத்தி தோஷம்?....?

  ReplyDelete
 16. வாங்க ஞாபகம் வருதே.
  //பிரம்மஹத்தி தோஷம்?//

  அவர் எச்சில் அவர் நமீதா அதத்தான் நான் ரிப்போட் பண்ணேன்.

  கோச்சுக்கப்படாது?

  கதையின் முடிவு என்ன கத படிச்சுட்டேளா?

  ReplyDelete
 17. வாக்கிங்க் கதை நல்லா இருக்குது...

  :))

  ReplyDelete
 18. அனைத்துமே ஒவ்வொரு விசயத்தில் நல்லா இருக்கு.

  இன்றைய ஸ்பெஷல்  ரெண்டடுக்கு டிபன் பாக்ஸில் இருந்த பையனின் மதிய டிபனை குப்பைத் தொட்டியில் கொட்டினாள் அம்மா இரவு.அலாரம் வைத்து விடிகாலையில் எழுந்து செய்த டிபன்.

  இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

  ReplyDelete
 19. வாக்கிங் மற்றும் நமீதா கதைகள் அருமை...
  டிஃபன் பாக்ஸ் ஓ.கே..

  ReplyDelete
 20. சென்ஷி கருத்துக்கு நன்றி.

  நாய் கதையை எடுத்து விட்டேன். அடுத்து நமீதா/EMI கதைகளை கொஞ்சம் சீர் செய்து விட்டேன்.

  ReplyDelete
 21. ஆ.முத்துராமலிங்கம்,

  கருத்துக்கு நன்றி.


  நாய் கதையை எடுத்து விட்டேன்.இரண்டாவது வாசிப்பில் பிடிக்கவில்லை. அடுத்து நமீதா/EMI கதைகளை கொஞ்சம் சீர் செய்து விட்டேன்.

  ReplyDelete
 22. தமிழ்ப்பறவை,

  கருத்துக்கு நன்றி.


  நாய் கதையை எடுத்து விட்டேன்.இரண்டாவது வாசிப்பில் பிடிக்கவில்லை. அடுத்து நமீதா/EMI கதைகளை கொஞ்சம் சீர் செய்து விட்டேன்.

  ReplyDelete
 23. நமீதா/???? --- ஆ!!!!


  இன்றைய ஸ்பெஷல் கதை ஒரு கவிதை!!! அழகாக இருக்கிறது.

  வாக்கிங்.... இறுதி முடிச்சு!

  அதிர்வுகள்.... உண்மையிலேயே அதிர்வுகள்தான்!!!

  ReplyDelete
 24. நன்றி ஆதவா.

  //இன்றைய ஸ்பெஷல் கதை ஒரு கவிதை!!! அழகாக இருக்கிறது.//

  சரியாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
 25. கதைகள் நன்று..

  குமுதம் பாதிப்பா..??!!
  இல்ல சுஜாதா பாதிப்பா..??!!

  ReplyDelete
 26. //குமுதம் பாதிப்பா..??!!
  இல்ல சுஜாதா பாதிப்பா..??!!//

  10% பாதிப்பு.90% சொந்த சரக்கு.என்ன
  பாதிப்பு இருந்தாலும் சரக்கில்லாமல் காலம் தள்ளமுடியாது. இது மாதிரி மினி கதை எழுதுவதுதான் கஷ்டம்.

  ReplyDelete
 27. உண்மை..
  ஒத்துக்கொள்கிறேன்..!

  ReplyDelete
 28. "தலீவா"

  சூப்பரு.......... நான்கூட இதுபோல பல சில, சில பல குறுகதைகள் (சில வரி சிறுகதைகள்) எழுதி இருக்கேன்........ நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்.

  http://jokkiri.blogspot.com/2008/12/blog-post.html

  ReplyDelete
 29. நன்றி பட்டிக்காட்டான்

  ReplyDelete
 30. நன்றி R.Gopi. உங்கள் எடக்கு மடக்கு
  பிளாக் பார்க்கவும்.

  ReplyDelete
 31. நமீதாவின் தொடையை தின்ன வந்த மாட்டை ஆக்ரோஷத்துடன் விரட்டினார் நமீதா ரசிகர். கிழிந்திருந்த போஸ்டரை நாக்கில் எச்சில் எடுத்து தடவி மீண்டும் சுவற்றில் ஒட்டினார்.மீண்டும் ஆக்ரோஷமாக வந்து அவரை விரட்டிபோஸ்டரை சாப்பிட்டு முடித்தது.///

  மினி ஸ்கர்ட் போல மினி கதைகள்!!
  அருமை..

  ReplyDelete
 32. ரெண்டடுக்கு டிபன் பாக்ஸில் இருந்த பையனின் மதிய டிபனை குப்பைத் தொட்டியில் கொட்டினாள் அம்மா இரவு.அலாரம் வைத்து விடிகாலையில் எழுந்து செய்த டிபன். //

  வீண் செய்வது ரொம்ப தப்புங்க!!நல்லா சொல்லி இருக்கீங்க!!

  ReplyDelete
 33. //கே.ரவிஷங்கர் said...

  நன்றி R.Gopi. உங்கள் எடக்கு மடக்கு
  பிளாக் பார்க்கவும்.//

  ***********

  நண்பர் ரவி அவர்களே,

  "தல"ன்னு சொன்னாலே :

  வாக்குறுதி கொடுப்பது மட்டுமே (நிறைவேற்றுவதில்லை).

  நானும், அந்த மாதிரி ஆயிட்டேனோ என்னவோ பாஸ் (அதான் அந்த ஷார்ட் டெர்ம் மெமோரி லாஸ்).

  சுத்தி, சுழற்றி அடிச்சு, சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

  (ஆனா ஒண்ணு, இந்த கமெண்ட் போட்டப்பவாவது மறுபடியும் அங்க (எடக்கு மடக்கு) வந்தீங்களே, அதுக்கு நன்றி, அப்படியே அந்த புத்தாண்டு வாழ்த்து பத்தியும் ஏதாவது சொல்வீங்கன்னு நெனச்சேன், பரவாயில்லை....)

  ReplyDelete
 34. thevanmayam said.,

  கருத்துக்கு ரொம்ப நன்றி.

  ReplyDelete
 35. R.Gopi,

  உங்க பிளாக் பாருங்க.நன்றி.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!