Monday, April 6, 2009

சாதனா சர்க்கம்,ஷ்ரேயா கோஷால்,உதித் நாராயண்

சுசிலா,ஜானகி,சித்ரா,வாணி ஜெயராம்,ஜென்ஸி.மின்மினி,ஜெயஸ்ரீ, சின்மயி 
மற்றும் சிலர் பாடிய காதல்  பாட்டுகளில் உள்ள உணர்ச்சிகளுக்கும் வட இந்தியப் பாடகிகள் பாடிய காதல் பாட்டுகளில் உள்ள உணர்ச்சிகளுக்கும்  நிறைய வித்தியாசம் தெரிகிறது எனக்கு. 

உங்களால் உணர முடிகிறதா?

கிழே வரும் பாடல்களை கவனிக்க(மற்ற பாடல்களையும் கவனிக்க): மழலை+உணர்ச்சியற்ற உச்சரிப்பு.ஒரு இடத்தில் அல்ல பல இடங்களில்.

தயவு ”செய்த்து உன்னிப்பாகே கெவனிய்ங்கள்”:-

உதாரணம்:படம்:விருமாண்டி பாட்டு:சண்டியரே சண்டியரே (ஷ்ரேயா)
(உன்ணூருவம் வெரட்டுது) 

படம்:ஆய்த எழுத்து:பாட்டு: சண்டைக் கோழி(மதுஸ்ரீ) (துடங்கட்டும் உற்வு)

படம்:அழகி:பாட்டு:பாட்டுச் சொல்லி(சாதன சர்க்கம்) (ஓவர் மழலை )
உச்சரிப்பில் சற்று உயிர் இல்லை.(ஒட்டிப் பிறந்த ரெட்டை குழந்தை)

தமிழ் மொழி தெரிந்து சினிமா பின்னணிப் பாடல் பாடுவதற்க்கும் தெரியாமல் பாடுவதற்க்கும் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கிறது.ரசிகர்கள் சற்று உன்னிப்பாகக் கவனித்தால் கண்டு பிடிக்கலாம். கவனிக்க...சற்று ஆழமாக பாட்டை உள் வாங்க வேண்டும்.முக்கியமாக வட இந்திய பாடகி பாடகர்கள் பாடிய பாடல்களை கேட்டால் தெரியும்.

சாதனா சர்க்கம்,ஷ்ரேயா கோஷால் இருவருக்கும் 
இனிமையான குரல். தேன். அற்புதமான பாடல்களை பாடி
உள்ளார்கள். இவர்களிடம் பெரிய குறை மழலை தட்டுகிறது..
ரொம்ப ஓவரான மழலை. சொப்பு வாய் உச்சரிப்பு.சில இடங்களில் உச்சரிப்பு வீரியமாக இல்லை.

வடஇந்திய ஆண் பாடகர்கள் உச்சரிப்பு அபத்தம் பெண் பாடகர்களிடம் அவ்வளவாக இல்லை. உதாரணம்: “மெய்க்கம், நெர்க்கம் ,சிருப்பம்“”பருவாயில்லை”.திருவாளர் உதித் திருவாய் உதிர்த்தது.


உணர்ச்சி:
வர்கள் ஆங்கிலம் அல்லது வேறு மொழியில் எழுதி வைத்துக் கொண்டு பாட்டின் வரிகளை பாடுகிறார்கள்.track க்கில் கூட பாடலாம்.பாட்டின் சில இடங்களில் நம்முடைய மொழி,கலாசாரம்,பண்பாடு பின்புலம் இல்லாததால் ”உணர்ச்சி” இல்லாமல் நமுத்து வருகிறது.முக்கியமாக பாட்டின் அர்த்தம் தெரியாவிட்டால் பாட்டோடு ஒன்றி பாட முடியாது.

சுசிலா,ஜானகி,சித்ரா,, ஜென்ஸி,மின்மினி ம்ற்றும் ஜெய சந்திரன்,மது,இவர்கள் எல்லோருமே வேறு மாநிலத்தவர்கள்தான்.ஆனால் இவர்கள் பாடல்களில் அப்படி இல்லை.காரணம் இவர்கள் இங்கேயே வசிப்பது.மொழி,கலாசாரம்,பண்பாடு ஒரளவுக்கு ஒத்துப் போவது.இவர்களிலும் சிலர் அவர்கள் மொழி அல்லது ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு பாடுகிறார்கள்.ஆனாலும் பாட்டில் உயிர்ப்பு  இருக்கிறது.(மூக்கில் பாடும் குறையைத் தவிர)

கடைசியாக - உளியின் ஓசையில்”கல்லாய இருந்தேன்” என்ற பாடலைப் பாடியவர். ஒரு வெளி நாட்டில் வாழும் அசல் தமிழ்ப் பெண். பெயர் தான்யா. அற்புதமான குரல. ஜானகியின் ஜாடை.ஆனால்-

 "யார் யாருக்கும் மண்ணில் நிலைக்காத "அளகு" காலத்தின் "ஒலுங்கு" என்று பாடுகிறார்..இளையராஜாவும் கண்டுக்கொள்ளவில்லை.(பாடல்’(கல்லாய இருந்தேன்)

24 comments:

 1. தவறு அவுங்க மேல மட்டும் இல்லீங்க.... அவுங்கள பாட வைக்கும் இசையமைப்பாளர்களும் பாடலாசரியர்கள் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தாங்கன்னா அவங்க ஒழுங்காவே பாடியிருப்பாங்க

  நம்மாளுங்களுக்கு அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு?

  ReplyDelete
 2. பிரேம்குமார் வருகை கருத்துக்கு நன்றி

  //கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தாங்கன்னா அவங்க ஒழுங்காவே பாடியிருப்பாங்க//

  ஆனா மொழி தெரிந்து பாடும் உணர்வை இசையமைப்பாளர் கொண்டு
  வர முடியுமா பிரேம்குமார்?

  ReplyDelete
 3. நீங்கள் சொல்வது மாதிரி மொழி தெரிந்து பாடும் பாடகர் பாடும் பாடல்களில் ஒரு feel இருக்கிறது.நானும் உணர்ந்தேன்.

  ReplyDelete
 4. உங்க ஆதங்கம் புரிகிறது!!!

  பிரேம் குமார் சொன்னதுமாதிரி!! இசையமைப்பாளர் கையிலும் உண்டு!!!

  ரஹ்மான் பாடல்களில் பெரும்பாலும் உச்சரிப்பு பிரச்சனை (நல்ல பாடல்களில்) இருக்காது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 5. ஆதவன்,

  உச்சரிப்பு பிரச்சனை இல்லை.பாடலில்
  உள்ள உணர்வு. இது எல்லா இசையமைப்பாளர் இசையிலும் இருக்கிறது.

  //ஆனா மொழி தெரிந்து பாடும் உணர்வை இசையமைப்பாளர் கொண்டு
  வர முடியுமா பிரேம்குமார்?//

  ReplyDelete
 6. "பூச் செடிகள் பூத்தது" என்பது " பூச் செட்டிகள் பூத்தது" என மாறி உச்சரிக்கப்படுவது அபத்தம்.கே.ஜே.ஜேசுதாசின் ஆரம்ப கால பாடல்களில் இத்தவறுகள் இருந்தது."தெருக் கோவிலே ஓடிவா".இவ்வாறு தவறாக உச்சரிக்கப்பட்ட பாடல் வரிகளை யாராவது தொகுத்து தனி பதிவாகப் போடலாம்.

  ReplyDelete
 7. ***
  ஆனா மொழி தெரிந்து பாடும் உணர்வை இசையமைப்பாளர் கொண்டு
  வர முடியுமா
  ***

  கொண்டுவர முடியும்ன்னு தான் தோனுது. அதுக்குரிய முயற்சி இருந்தா. அழகி படத்துல நந்திதா தாஸ் நடிச்ச கதாபாத்திரம் பார்த்ததுக்கு பிறகு, ஒரு நல்ல கலைஞரால மொழி, கலாச்சாரம் எல்லாத்தையும் கடக்கமுடியும்ன்னு தான் நினைக்கறேன்.

  சாதனா சர்கம் கூடவா உணர்ச்சி இல்லாம பாடறாங்க ? எதாவது ஒரு பாட்டு சொல்லுங்க. கேட்டு பாக்கறேன்.

  ReplyDelete
 8. ***
  ஆனா மொழி தெரிந்து பாடும் உணர்வை இசையமைப்பாளர் கொண்டு
  வர முடியுமா
  ***

  கொண்டுவர முடியும்ன்னு தான் தோனுது. அதுக்குரிய முயற்சி இருந்தா. அழகி படத்துல நந்திதா தாஸ் நடிச்ச கதாபாத்திரம் பார்த்ததுக்கு பிறகு, ஒரு நல்ல கலைஞரால மொழி, கலாச்சாரம் எல்லாத்தையும் கடக்கமுடியும்ன்னு தான் நினைக்கறேன்.

  சாதனா சர்கம் கூடவா உணர்ச்சி இல்லாம பாடறாங்க ? எதாவது ஒரு பாட்டு சொல்லுங்க. கேட்டு பாக்கறேன்.

  ReplyDelete
 9. உண்மைதான் ரவிஷங்கர்...இசையமைப்பாளர் மனசு வைத்தால் இந்நிலை மாற்றும்..அந்நாளில் இசையமைப்பாளர்கள் மனசு வைத்தார்கள்..இந்நாளில் இசைக்கு மொழி ஏது என்கிறார்கள்..இசை வேறு தனிமொழிப்பாடல் வேறு என அவர்கள் புரிந்து கொண்டு..பாடகர்களிடம் வலியுறுத்த வேண்டும்...

  மணிகண்டன்,
  சாதனாவின் குரலில் உணர்ச்சிகள் இல்லாமல் இல்லை..இசையமைப்பாளர் இன்னும் சற்று மெனக்கெட வைத்தால் அவரால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்று தோன்றுகிறது..

  ReplyDelete
 10. நல்லதொரு பதிவு.

  //உளியின் ஓசையில்”கல்லாய இருந்தேன்” என்ற பாடலைப் பாடியவர். ஒரு வெளி நாட்டில் வாழும் அசல் தமிழ்ப் பெண். பெயர் தான்யா. அற்புதமான குரல. //

  ஆமாம். இவர் ஈழத்துத் தமிழ்ப்பெண். தற்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார்.

  ReplyDelete
 11. அப்படிப் பாடுவதால் தான் romantic feel அதிகரிப்பதாக பரவலாக பேசப்படுகிறாதே :?

  ReplyDelete
 12. ஞா.வருதே,
  //"பூச் செடிகள் பூத்தது" என்பது " பூச் செட்டிகள் பூத்தது" //

  சூப்பர்

  //தெருக் கோவிலே ஓடிவா//
  இதில் பெரிய சண்டை வந்ததாக கேள்வி.அடுத்து “இளைய பருவம்” என்பதை “இலைய பருவம்”

  ReplyDelete
 13. மணிகண்டன் நன்றி.
  //அழகி படத்துல நந்திதா தாஸ் நடிச்ச கதாபாத்திரம் பார்த்ததுக்கு பிறகு, ஒரு நல்ல கலைஞரால மொழி, கலாச்சாரம் எல்லாத்தையும் கடக்கமுடியும்ன்னு தான் நினைக்கறேன்//

  நல்ல பயிற்சி இருந்தால் கடக்கலாம்.
  (கமல்:தெலுங்குபல்ராம் நாயுடு)
  ஆனால் தாய் மொழி தாய் மொழிதான்.

  ReplyDelete
 14. மணிகண்டன்.

  //சாதனா சர்கம் கூடவா உணர்ச்சி இல்லாம பாடறாங்க ? எதாவது ஒரு பாட்டு சொல்லுங்க. கேட்டு பாக்கறேன்//

  என்னுடைய பதிவை பாருங்கள்

  இவர் பாடிய பாடல்களை உற்றுக் கேளுங்கள்:-
  1.மழலைத் தட்டும்
  2.சொப்பு வாய் உச்சரிப்பு
  3.அசல் தமிழ் பாடகி எப்படி உச்சரித்திருப்பாள் என்பதை கற்பனைச்
  செய்து பாருங்கள்

  ReplyDelete
 15. நன்றி பாசமலர்!

  //இசையமைப்பாளர் மனசு வைத்தால் இந்நிலை மாற்றும்//

  (நீங்கள் மதுரைக்கா(ரி)ரர் என்று நினனைக்கிறேன்)

  உலகம் முழுவதும் நம் வீடு அது மாதிரி துபாயும் என்று தினமும் அட்வைஸ் செய்கிறேன்.

  மதுரையில் ஒட்டுவது போல் மனது துபாயில் ஒட்டாது. ஏன்?

  ReplyDelete
 16. எம்.ரிஷான் ஷெரீப் கருத்துக்கு நன்றி

  //ஆமாம். இவர் ஈழத்துத் தமிழ்ப்
  பெண்.தற்பொழுது புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார்//

  அருமையான குரல்.ஜானகியின் சாயல்.

  முத்துலிங்கம் உயிர்மை கட்டுரையில்
  சொல்லித்தான் நானே அறிந்துக்
  கொண்டேன்.

  ReplyDelete
 17. Shakthiprabha

  //அப்படிப் பாடுவதால் தான் romantic feel அதிகரிப்பதாக பரவலாக பேசப்படுகிறாதே//

  இருக்கலாம் இந்த தலைமுறைக்கு.

  நீங்கள் என்னை விட நிறையப் பாடலகள் கேட்டவர்.

  இதழில் கதை எழுதும்,காதலின் பொன்
  வீதியில்,ஒரு வெள்ளை மழை கேளுங்கள். romantic feel இல்லையா?

  ReplyDelete
 18. நீங்க நான் பேசுவதைக் கேட்டால் கொன்று விடுவீர்கள். எழுதும் போதுகூட ஏகப்பட்ட பிழைகள். ஆனாலும் பிடிவாதமாய் ஒரு தமிழார்வம்... எத்தனைபேர் சபிக்கிறார்களோ :(

  அப்புரம், நீங்கள் சொல்கிற உச்சரிப்பு பிழைகள் மற்றும் உணர்வு/உயிற்பு அற்ற வரிகள் பாடல்களில் வருவதற்கு பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களின் அசால்ட் (திமிர்) தான் முக்கியமான காரணமாக இருக்கனும். அல்லது அடிப்படையில் திறமை இல்லாத ஆனால் வாய்ப்பும் (வாய்ஸும்) அமைந்த வாண்டுகள்.....

  குரலில் மழழை எனக்கு ஓகே! நீங்கள் பட்டியலிட்டுருக்கும் அணைவரின் பாடல்களும் எனக்கு பிரியம்.

  ReplyDelete
 19. சுகுமார்,

  மொழித் தெரிந்தால் ஒரு வித ஈடுபாட்டுடன் பாடலம்.

  ReplyDelete
 20. கயல்விழி said...
  //நிஜம் ..//

  நன்றி கயல்விழி.என்னை மதித்து வருகை தந்ததற்கு.

  ReplyDelete
 21. எனக்கென்னவோ இப்போ பாடும் பெண் பாடகர்களில் சாதன சர்க்கம் பாடுவது தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.நல்ல இசைக்கு மொழி அவ்வளவு முக்கியமா?

  ReplyDelete
 22. நண்பர் ரவி அவர்களே எதேர்ச்சையாக உங்கள் வலைப்பூவினை காண நேரிட்டது. இது போன்ற புதுவிதமான விடயங்களை அலசுவது உண்மையில் பாராட்டத்தக்கது.... எனது பதில் என்ன வென்றால் அவர்கள் தமிழை சற்று உளறி பாடினாலும் அது ரசிக்கும் படியாக உள்ளது எனவே கருதுகிறேன். உதாரணமாக அவர்களின் தமிழ் சில நேரங்களில் மிகுந்த ரசனையுடன் உள்ளது... உதாரணம் (அதே உதித் நாரெய்ன்)அவர் பாடிய ”வெண்பஞ்சு” மேகம் (கண்டேன் காதலை) மற்றும் சோனியா சோனியா, போன்ற பல பாடல்கள் ஒரு புதிய நளினத்துடன் இருக்கும்.. மேலும் அவர்கள் தமிழில் மட்டும் பாடவில்லை சுமார் 10 மொழிகளில் பாடுபவர்கள் அதனால் அவர்களால் தான் பாடும் மொழிகள் அனைத்தையும் கற்பது என்பது கடினம் தான் !!!!

  ReplyDelete
 23. கடும் விமர்சகர் வெங்குடு,

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  //ஒரு புதிய நளினத்துடன் இருக்கும்// ஒத்துக்கொள்கிறேன். இதுவும் ஒருவகையான ரசனைதான்.

  உதித் நாராயண் குரலில் ஒரு வசீகரம் இருக்கிறது.

  அவர்களின் வீரியம் இல்லாத “நம்பிள்கி நிம்பிள் சொல்றான்” சேட் உச்சரிப்பு எனக்கு நிறைய நெருடுகிறது.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!