Friday, April 17, 2009

குதிரைகள்...குதிரைகள்.. மாயஜால கதை-பாகம் -1

எப்போதோ ஒரு புத்தகத்தில் படித்த மாயஜால கதை. மாயஜால கதைகள் பிடித்தமானது.ரொம்ப பிடித்துப் போய் மனசில் இன்னும் இருக்கிறது.நெடுநாள் மனசில் இருக்க வேண்டும் என்றால் நமக்குப் பிடித்திருக்க வேண்டும்.இது தொடர்கதையாகத்தான் எழுத வேண்டும்.கொஞ்சம் பெரிசு. என்னுடைய முதல் தொடர்கதை முயற்சி

தொடரலாமா? சொல்லுங்கள். Hello! Followers & others..... Please tell me....

இனி கதை.............
                                                           
ரொம்ப தூரத்தில் குதிரைகளின் குளம்பொலி சத்தம் கேட்டது.குதிரைகளின் காலடியில் எழுந்த புழுதிப் படலம் பெரிதாக எழுந்து வானத்தில் படர்ந்தது. குதிரைகள் பேய் வேகத்தில் ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு ஒடிக் கொண்டிருந்தது.எதையும் லட்சியம் செய்யாமல் ஒடின.உலகத்தின் கடைசி எல்லைதான் இதன் இலக்கு என்பது மாதிரி.எதிரில் தடுக்க வந்தால் பிரிந்துச் சிதறி ஒடுகின்றன.

மொத்தம் ஏழு குதிரைகள்.

இது பாரி பாண்டியன் ஆளுகைக்கு உட்பட்ட மக்களுக்கு தினமும் அதிகாலையில் தென்படும் காட்சி. அதே மாதிரி மாலையிலும் இந்த ஏழு குதிரைகள் திரும்பும் காட்சி.

இவை அரண்மனை லாயத்திலிருந்து அதிகாலையில் புறப்படுகிறது என்று தெரியும். எங்கு போகின்றன்,இடையில் எங்கு தங்குகின்றன,எதற்கு,ஏன் என்பது யாருக்கும் தெரியாது.சில பேர் கூடவே ஓடி களைத்துத் திரும்பி விட்டார்கள்.மேல் ஏறி உட்கார்ந்தவர்கள் கிழே தள்ளப்பட்டார்கள்.மரம், வீடு இவற்றின் மேல் ஏறி பார்த்தாலும் சிறிது தூரத்திற்க்குப் பிறகு கண்ணுக்கெட்டுவதில்லை.

இது மன்னன் பாரி பாண்டியனுக்குத் தெரியும் என்றும் தெரியாது என்றும் மக்கள் ஊகம். புரியாத புதிர்.


ஒரு நாள்...

”டம்டம்டம்...டம்டம்டம்... இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் தினமும் அதி காலையில் அரண்மனை லாயத்திலிருந்து ஒரு ஏழு குதிரைகள் கயிற்றை முரட்டுத்தனமாக அறுத்துக்கொண்டு அசுர வேகத்தில் பறந்து நம் இடத்தை விட்டு எங்கோ போகின்றன. மாலையானதும் திரும்பி சாதுவாக லாயத்தில் போய் நின்று விடுகின்றன.இடையில் என்ன நடக்கிறது?டம்டம்டம்..இது என்ன தெய்வச்செயலா?...டம்டம்டம்..சூன்யமா?....டம்டம்டம்..”

”இந்த மர்மத்தை கண்டுபிடித்தால், கண்டுபிடிப்பவருக்கு தக்க சன்மானமும் அதோடு பேரழிகியான தன் மகள் சூரியகாந்தியை திருமணம் செய்து வைப்பார் நமது மன்னர்  பாரி பாண்டியன்.டம்டம்டம்..” 

                                            தொடரும் ............

17 comments:

 1. ஆரம்பமே நல்லா இருக்கு ரவி. தொடர்ந்து எழுதுங்க.

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

  ReplyDelete
 2. // பைத்தியக்காரன் said...
  ஆரம்பமே நல்லா இருக்கு ரவி. தொடர்ந்து எழுதுங்க.
  //

  உண்மைதான். தொடருங்கள்

  ReplyDelete
 3. நல்ல இருக்குங்க...சீக்கிரம் தொடருங்கள்...கதை + குதிரைகள்...இரண்டையும் தான்,,,

  ReplyDelete
 4. நல்ல இருக்குங்க...சீக்கிரம் தொடருங்கள்...கதை + குதிரைகள்...இரண்டையும் தான்,,,

  ReplyDelete
 5. தொடுருங்கள் ரவி ஸார்...
  ஆனா இவ்வளவு சிறுசு சிறுசா எழுதுனீங்கன்னா உங்களுக்கும் கண்டனப்பதிவு போட வேண்டி வரும்...!
  அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்...!
  ஆமா, அதென்ன சைடுபார்ல "Score"அப்டினு போட்டு எனக்கு (5)ன்னு போட்டு இருக்கு!
  (Are those are No. Of Comments Put by me?)

  ReplyDelete
 6. பைத்தியக்காரன்,

  ரொம்ப நன்றி சார்.தொடர்கிறேன். பொறுப்பு கூடுகிறது.

  ReplyDelete
 7. சென்ஷி,

  ரொம்ப நன்றி சென்ஷி.தொடந்துட்டா போச்சு.

  ReplyDelete
 8. கயல்விழி

  வாங்க ரெண்டு கயல்விழி.சண்டேனா ரெண்டு மாதிரி கமெண்டனாலும் ரெண்டா?வருகைக்கு நன்றி.என்னை மதித்து வந்ததற்கு.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 9. டக்ளஸ்..said...

  //தொடுருங்கள் ரவி ஸார்//

  அம்மாடி! ரீத்திஸ் கணக்கா ஆதரவ
  அள்ளிவிடறீங்க.

  //ஆனா இவ்வளவு சிறுசு சிறுசா எழுதுனீங்கன்னா உங்களுக்கும் கண்டனப்பதிவு போட வேண்டி வரும்..//

  அண்ணே நம்ம சொந்த பீலாவெல்லாம் கலந்து வுடவேணாமா?


  // "Score"அப்டினு போட்டு எனக்கு (5)ன்னு போட்டு இருக்கு!
  (Are those are No. Of Comments Put by me?//

  Yes sir but I don"t know how logical and reliable.

  இதுல என்னோட கமெண்டும் வர ஆரம்பிச்சுது.உடனே ஒரே அமுக்கா அமுக்கி html மாத்தி எழுத வைச்சுட்டேன்.
  நம்ம சம்பத் குமார்ன்னு ஒரு பதிவர்
  கொடுத்தது.
  http://mytamilweb.blogspot.com/2009/04/blog-post_13.html

  ReplyDelete
 10. அருமையான தொடக்கம். தொடர்ந்து வாசிக்க ஆவலாய் இருக்கிறேன்.

  ReplyDelete
 11. தொடர்கதையை தனி பிளாக் காக போடலாமே.கவிதை போன்ற ஏனய பதிவுகள் ஊடே இது...கொஞ்சம் தடங்கலாக இருக்காது?

  ReplyDelete
 12. நல்ல ஆரம்பம் கதை சுவாரசியமாகவே இருக்கின்றது.
  தொட்ந்து படிக்க ஆர்வம் உள்ளது
  தொடர்ந்து தொட்ரை எழுதுங்கள்

  ReplyDelete
 13. நன்றி லக்கி லுக்!

  ReplyDelete
 14. ஞாபகம் வருதே..,

  உங்கள் யோசனைக்கு நன்றி.தயவு செய்து மன்னிக்கவும்.இந்த பிளாக்கே இருக்கட்டும்.

  ReplyDelete
 15. ஆ.முத்துராமலிங்கம் said...

  //தொட்ந்து படிக்க ஆர்வம் உள்ளது
  தொடர்ந்து தொட்ரை எழுதுங்கள்//

  நன்றி.

  ReplyDelete
 16. நன்றி மணிகண்டன்.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!