Saturday, April 25, 2009

”அயன்” விமர்சனம் -ரொம்ப லேட்


“அயன்” என்ன அர்த்தம்? பிரம்மா என்று அர்த்தம். சுசீந்திரத்தில் 

தாணுமாலயன் சுவாமி என்ற கோவில் இருக்கிறது.தாணு +மால்+அயன்  தாணு =சிவன், மால்(திருமால்)=விஷ்ணு அயன் = பிரம்மா. பிரம்மா என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் வந்து விட்டது.தமிழ் பெயர் இல்லையே. சன் பிக்சர்ஸ் அதனால் பிரச்சனை இல்லை.இதில் சூர்யா பிரம்மாவா? தெரியாது ஆனால் தேவனாக வருகிறார்.





”பர்மா பஜார் பரமசிவம்” அல்லது ”ஒரு கடத்தல்காரனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்” என்று வைத்திருக்கலாம்.பட ஆரம்பத்தில் கேரக்டர் அறிமுகம்,சிறிது நேரத்தில் கதைக்கு உள்ளே வந்து ஒரு முடிச்சு விழுதல் ,இண்டர்வெல் அப்புறம் கதையை நகர்த்தி அந்த முடிச்சை அவிழ்த்தல் இல்லாமல் இந்த படம் சம்பவங்களாகப் போய்க்கொண்டிருக்கிறது.




அந்த சம்பவங்களை அசத்தல் கேமராவோடு லாஜிக்கோடு சொல்லியிருக்கிறார்கள்.படத்தில் காட்சிகள் விறு விறு.out and out action packed film.தெளிவு.காட்சிகள் நடக்கும் இடம்,கேமரா,லொகேஷன் சூப்பர்.ஆனால் கதை?விஜய் டீவியில் வெள்ளி இரவு சைனீஸ் அல்லது ஜப்பான் அதிரடிப் படங்கள் வரும்.அது ரொம்ப சீப்.அதேதான் அயன்.. ஆனால் சூப்பர் குவாலிடி.கதாபாத்திரங்கள் அதனதன் இயல்பு நிலையிலேயே காட்டப்படுகிறது. 


காங்கோ நாட்டில் நடைபெறும் சண்டை காட்சி சூப்பர்.கெளபாய் பட ஞாபகம் வருகிறது.


நடிப்பில் நிற்பவர் சூர்யாவின் நண்பனாக வரும் ஜெகன்.அடுத்து சூரியா.நாளுக்கு நாள் நடிப்பு மெருகேறுகிறது.அந்த தேவர் மகன் மீசை போலீஸ்...ஏதோ ஒரு படத்தில் போலீஸ் கெட்டப்பை போட்டவர்தான் இன்னும் கழட்டவில்லை. பிரபுவுக்கும் நல்ல ரோல்.வில்லன் ஒகே.அவர் பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் முக ஜாடை.


தமன்னா 45.5kg வாழைத்தண்டு உடம்பை வைத்துக்கொண்டுக் கொல்றாண்ணா!



சூரியா தமன்னா காதல் குறும்புகள் கலக்கல்.






படத்தில் காமெடி ஏர்போர்ட் கஸ்டம்ஸ் ஆபிசர் பொன்வண்ணன் சூர்யாவிடம் ”சொப்பு” வைத்து குழந்தை மாதிரி திருடன் போலீஸ்விளையாடுவது.அடுத்த காமெடி இவர்களெல்லாம் யாரிடமும் மாட்டாமல் இருப்பது.தொழிலில் இவ்வளவு சம்பாதிக்கும் சூர்யா ஏன் ஏழையாய் இருக்கிறார்.




இசை ஹாரிஸ்..”பல பல” பாட்டுக்கு தியேட்டர் அதிருகிறது.”நெஞ்சே நெஞ்சே” பாட்டு நல்லாருக்கு. ஆனால் அதில் வரும் prelude கிடார் இசை அப்பட்டமான காப்பி.ராஜாவின் பாட்டு “விடிய விடிய நடனம்”  படம் “இதயத்தை திருடாதே” மற்ற பாடல்கள் வழக்கமான ஊளை.சுமார்.படத்தின் பின்னணி இசை கொடுமை.




மொத்ததில் ”அயன்” கதையில்லாமல் சம்பவங்களை விறு விறுப்பாகச் சொன்ன படம்.




படிக்க திரில்லர் கதை:-














8 comments:

  1. ஆரம்ப விளக்கம் புதுசா இருக்ககே
    ஒரு கோவிலை பற்றி தெரிந்து கொள்ள வைச்சிட்டீங்க.

    //அந்த சம்பவங்களை அசத்தல் கேமராவோடு லாஜிக்கோடு சொல்லியிருக்கிறார்கள்.//

    ரவிசங்கர்.. லாஜிக் இடரல் ஒன்னு வருமே கவனிக்கலையா?
    தமன்னா அண்ணன் இறந்து அந்த குடும்பம் முழுக்க துக்கத்தில் இருக்கம்போது தமனா மட்டும் சூரியோவோட டூயட்..!
    கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத இடத்தில் அந்த பாட்டு!!!

    மற்றபடி சன்னதா கொஞ்சம் சரி விமர்சனம் பண்ணிட்டீங்க...!!

    ReplyDelete
  2. கோவில் மேட்டர் நல்ல information...

    அயன்...சூர்யா Super...(நான் சூர்யாவுக்காக 2 முறை பார்த்தேன்..hehe)

    விமர்சனம் லேட்டா வந்தாலும் latesta வந்து இருக்குங்க..

    ReplyDelete
  3. இந்த படம் குறித்து நான் பல எதிர் விமர்சனங்கள் எழுதியிருக்கக் கூடும்..... ஆனால் என் வலையில் அப்படி எழுதுவதில்லை என்பதால் விட்டுவிட்டேன்..

    இசை - படுசுமார்
    தமண்ணா சீன்கள் - படுபோர்
    பாடல்கள் ஒன்றும் ஒட்டவில்லை
    புதுமையில்லாத கதை (தமிழ்ல கொஞ்சம் புதுசுதான் பில்லாக்கு அப்பறம்)

    இத்தனைக்கும் நான் தமன்னாவோட தீவிர ரசிகன்.

    படம் நெளிந்து கொண்டே பார்க்கவேண்டியிருந்தது... என்னைச் சுற்றிலும் தங்கைகள்!!!!

    சில சீன்கள் படு இழுவை... ஆரம்பத்தில் இருந்த ஸ்பீட்.. முடிவு வரையிலும் இல்லை

    ReplyDelete
  4. ஆ.முத்துராமலிங்கம் said...

    //தமன்னா அண்ணன் இறந்து அந்த குடும்பம் முழுக்க துக்கத்தில் இருக்கம்போது தமனா மட்டும் சூரியோவோட டூயட்..!
    கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத இடத்தில் அந்த பாட்டு!//

    சார்..கவனிக்கல.மன்னிக்கவும்.

    ReplyDelete
  5. கயல்விழி நடனம் said...
    //கோவில் மேட்டர் நல்ல information..//


    நன்றி.

    //அயன்...சூர்யா Super...(நான் சூர்யாவுக்காக 2 முறை பார்த்தேன்..hehe)//

    அண்ணி ஜோ கிட்ட சொல்லாதீங்க.

    நன்றி.

    ReplyDelete
  6. வாங்க ஆதவா.கருத்துக்கு நன்றி.

    //இசை - படுசுமார்//
    ஆமாம்.
    //தமண்ணா சீன்கள் - படுபோர்//

    படம் நெளிந்து கொண்டே பார்க்கவேண்டியிருந்தது... என்னைச் சுற்றிலும் தங்கைகள்!!!!

    //பாடல்கள் ஒன்றும் ஒட்டவில்லை//
    சரி.

    //புதுமையில்லாத கதை (தமிழ்ல கொஞ்சம் புதுசுதான் பில்லாக்கு அப்பறம்)//
    கதையே இல்லையே.

    //புதுசுதான் பில்லாக்கு அப்பறம்//
    பச்சைக்கிளி முத்துச்சரம் படம்?(இது ஒரு ஆங்கில படம் சுட்டது)

    மொத்தத்தில் ரசனை ஆளாளுக்கு மாறு படும்.

    ReplyDelete
  7. //அண்ணி ஜோ கிட்ட சொல்லாதீங்க.

    yennathu ithu...chinna pulla thanamalla irukku...
    antha family nalla irukkattum pa...

    ReplyDelete
  8. கயல்விழி நடனம் said...
    //yennathu ithu...chinna pulla thanamalla irukku...
    antha family nalla irukkattum pa.//

    நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!