இனி குதிரைகள்......... பாகம் -3-
கிழவியின் அருகே போனான்.தோற்றம் பீதியை கிளப்பிற்று.
“வா...மகனே....வா...மகனே... “இரு கையையும் தூக்கி பரிவாகக் கூப்பிட்டாள்.தலை நரைத்து கண்கள் இடுங்கி எலும்புக் கூடாக காட்சியளித்தாள் கிழவி.கழுத்தில் ஒரு சங்கு மாலை அணிந்திருந்தாள்.
”மடியில் உட்காரு” குடுவையில் இருந்த தண்ணிரைத் தெளித்தாள்.தன் முந்தனையால் மட்டியின் முகத்தைத் துடைத்தாள்.தண்ணீர் குடித்தான்.பிறகு பழசாறு பருகினான்.கொஞ்சம் தெம்பு வந்தது. உடம்பு முழுவதும் குளிர் தண்ணீரால் துடைத்து விட்டாள்.தலை முடியை கோதிவிட்டு தன் கட்டைச் சீப்பால் வாரி விட்டாள்.தென்றல் காற்று வருட ஆரம்பித்தது.கண்கள் சொருக ஆரம்பித்தது.
“பூலோக ரம்பை சொப்பன செளந்திரி சூரியகாந்தி உன்னை தங்க தாம்பாளத்தில் பொற்காசுகளை ஏந்தி வந்து கைப்பிடிப்பாள்.”பாட்டி அவனை காது நுனியை வருடியபடி சொன்னாள்.
சூரியகாந்தி தங்க தாம்பாளத்தில் பொற்காசுகளை ஏந்தியபடி வர மட்டி சொர்க்கத்தின் நுனியில் மிதந்தப் படியே தூங்கிப் போனான்.
திடிரென்று குதிரையின் குளம்பொலி கேட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்தான்.புழுதிப் படலம் கண்ணை மறைத்தது.தூசி விலக்கிப் பார்த்தான். அந்த ஏழு குதிரைகள் ஒடிக்கொண்டிருந்தன.ஆனால் எதிர் திசையில் ஓடிக்கொண்டி
-ருந்தன.மட்டிக்குத்தெரியவில்லை.கிழவி சிரித்தாள்.
“போடா... போ மகனே பின் தொடர்ந்து ஓடு.. போ.. போனால் அரண்மனையை அடைந்து விடலாம்.”
”ஐய்யோ.... மாலை ஆகி விட்டதா? குதிரைகள் திரும்பி விட்டதா?” மன்னரிடம் இருந்த பயத்தில் கொஞ்சம் புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது.
“ இப்ப ...என்ன செய்வது .... பாட்டி?”
”கவலைப் படாதே. மன்னரை ஏமாற்ற ஒரு தந்திரம் சொல்லித் தருகிறேன்.கொஞ்சம் மலைப் புல்லையும், குடுவையில் அருவி நீரையும் தருகிறேன்... இவை இரண்டும் வேறு எங்கும் கிடைக்காது.மன்னரிடம் காட்டு. இதை மேய்வதற்க்கும் பருகுவதற்க்கும்தான் இங்கு வருகின்றன் என்று சொல்... நம்பி விடுவான்”. கண்கள் இடுங்கி சிரித்தாள்.மட்டி பயந்தான்.
“அப்படியே செய்கிறேன் பாட்டி” கிளம்பினான். இருட்டி விட்டது.
அரண்மனையை நெருங்கும் போது ஓடியபடி மூச்சு வாங்குவது போல் நடித்துக்கொண்டே ஓடினான்.
“என்ன... கண்டு பிடித்து விட்டாயா?”மன்னர் கேட்டார்.
”கண்டு பிடித்து விட்டேன் மன்னா. அதன் மீது பரிதாபப்பட்டு காலை ஒடிக்காமல்... பின் ஓடி கண்டு பிடித்து விட்டேன். எனக்கு பிராணிகளிடம் அன்பு உண்டு”
”அதற்க்கு பதிலாக உன் கால் ஒடிந்தது போல் ஓடியிருக்கிறாய்...ரத்தக் கறைகள் இருக்கிறதே. சரி..அந்த ஏழு குதிரைகள் எங்கே போகின்றன?”
புல்லையும் அருவித் தண்ணிரைக் காட்டினான். எல்லோரும் சிரித்தார்கள்.மன்னன் மந்திரி காதில் ஏதோ சொன்னான். உடனே மந்திரி வேலையாட்களிடம் கட்டளையிட்டான். சில நிமிடங்களில் இதே மாதிரி ஒரு 40 குடுவைகளும் புல் கட்டுகளும் ஒரு தள்ளு வண்டியில் வந்தது.
மட்டி அதிர்ச்சியானான்.
”உன் காதலி ... அந்த சொப்பன சுந்தரி பாட்டி உனக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததா? பார்த்தாயா...அவளுக்கு எவ்வளவு காதலர்கள்”
மன்னர் கண்கள் சிவந்தது.ஆணையிட்டார்.சவுக்கில் உப்பும் மிளகாயும் தடவி தாம்பாளத்தில் வேலையாட்கள் கொண்டு வந்தார்கள்.
_____________
மட்டியின் அண்ணன் வெட்டி அடுத்துப் புறப்பட்டான்.மட்டி சொன்னது எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.முதல் நாள் இரவே ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.
விடியற்காலை கண் விழித்தான்.அந்த ஏழு குதிரைகளும் காட்டாறு வேகத்தில் வந்து கொண்டிருந்தன.மரத்தை நெருங்கும் சமயம் தொப்பென்று குதித்து ஒரு குதிரையின் மேல் உட்கார்ந்து அதன் கழுத்தை இறுக கட்டிக்கொண்டு அட்டைப் போல் ஒட்டிக் கொண்டான்.காடு,மலை,அருவி,ஆறு என்று தலைத்தெறிக்க குதிரைகள் ஓடியது. குதிரைகள் தங்கள் இலக்கை நெருங்கும் சமயம்........
”தம்பி......” என்ற குரல் கேட்டு திரும்பினான்.கைப்பிடி தளர்ந்து வழுக்கி கிழே விழுந்தான். உடம்பெல்லாம் சிராய்ப்பு. “ஐய்யோ...அம்மா “ என்று வலியில் கத்தினான்.அங்கே அந்த கிழவி நின்றுகொண்டிருந்தாள்.
மட்டிக்கு செய்தாற் போல் எல்லா செயலகளும் அன்பாக அவனுக்கும் செய்தாள்.அவனுக்கு ஒரு குதிரை கொடுத்து, “இதில் சவாரி செய்து....அந்த ஏழு குதிரைகளைக் கண்டு பிடி.” என்றாள்.
அவள் சொன்னபடி அதில் வேகமாக சவாரி செய்தான்.பாதி வழியில் திடிரென்று கனைக்க ஆரம்பித்தது.உயரம் குறைந்து கழுதையாக மாறியது.அதற்குள் மாலையாகி குதிரைகள் அரண்மனையை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தன.கிழவி எதிரில் வந்து சிரித்தாள்.
மட்டிக்கு செய்த மாதிரியே இவனுக்கும் மலைப்புல்லும்,அருவி தண்ணீரும் கொடுத்து மன்னரைப் பார்க்கச் சொன்னாள்.அரண்மனையை அடைந்தான்.
“என்ன கண்டு பிடித்து விட்டாயா?”மன்னர் கேட்டார்.
புல்லையும், குடுவையில் உள்ள அருவி நீரையும் காட்டி “இதற்குத்தான் அங்கு வருகிறது” என்றான்.
“சரி...லாயத்தில் உள்ள அந்த ஏழு குதிரைகள் பசியோடு உள்ளன. போய் கொடு”
இவன் அங்கே போய் வைத்ததும் குதிரைகள் முன்னங்கால்களை தூக்கி எட்டி உதைத்தது.
இவனுக்கும் சவுக்கில் உப்பும் மிளகாயும் தடவி தாம்பாளத்தில் வேலையாட்கள் கொண்டு வந்தார்கள்.
___________________
அடுத்து மூன்றாவது மகன் புத்திசாலி சுட்டி புறப்பட்டான்.இவன் ஒரு மாதமாகவே எல்லா விதமான உடற் பயிற்சிகளும் செய்து தயார் நிலையில் இருந்தான். அடுத்த நாள் விடியலில் குதிரைகள் புழுதிக்கிளப்பி பறந்தது.சுட்டியும் மின்னல் வேகத்தில் துரத்தினான்.அவன் கண்களுக்கு அந்த ஏழு குதிரைகள்தான் தெரிந்தது.
அரண்மனையின் எல்லையை குதிரைகள் கடந்து வெகுதூரத்தில் போனதும்....”தம்பி...... இங்கே வர்...முகம் துடைத்து, கைகால்கள் கழுவி,இளைப்பாறி விட்டு போ...”
” மன்னிக்க வேண்டும் பாட்டி....எனக்கு நேரமில்லை....” விர்ர்ரென்று பறந்தபடியே பேசி மறைந்தான். மனம் தளராமல் துரத்திக்கொண்டேயிருந்தான்.
ஒரு திருப்பத்தில் சிங்கம் ஒன்று ஆக்ரோஷத்தோடு இவனை துரத்த ஆரம்பித்தது. இவன் கழுத்தை கவ்வுவதற்க்கு தோதாக இவனுடைய பக்கவாட்டில் ஒடி வந்து
நெருங்கியது.சிங்கத்தின் கால்களைப் பார்த்து ஒரு உதை விட்டான்.தடுமாறி சின்னபின்னமாகப் புறண்டு வெறியுடன் கர்ஜித்தது.”வா...மகனே..வா...மகனே’
இளைப்பாறி விட்டு போ.. விருந்தாளியை கவனிக்காமல் அனுப்பி விட்டனே” கர்ஜித்து முடித்து பாட்டியாக மாறி முடியாமல் படுத்துக் கொண்டாள்.
ஓடிக்கொண்டிருந்த வேகத்திலேயே ஒரு வெள்ளை குதிரை அவனை திரும்பிப் பார்த்து”போய் அந்த கிழவியிடம்...இளைப்பாறி விட்டு வா.... அவள் ஒரு தேவதை”
“முடியாது...எனக்கான தேவதை அரண்மனையில் இருக்கிறாள்...”துரத்தினான்.
”நீதான்....தேவ புருஷன்...எங்கள் தங்கைக்கு சரியான மணவாளன்....இலக்கை அடைந்து விட்டாய்....வா ...என் முதுகில் ஏறிக்கொள்” என்றது ஒரு சாம்பல் வர்ண குதிரை.
“தங்கையா?” வியந்துக்கொண்டே முதுகின் மேல் ஏறினான்.
”ஆம்...சொல்கிறேன். எங்களை சாபத்திலிருந்து காப்பாற்றப் போகிறாய்..
வெகுதூரம் ஓடி மற்ற ஆறுகுதிரைகளுடன் சேர்ந்துக்கொண்டது.ஆறு குதிரைகளையும் கிட்டத்தில் பார்த்தான்.தேவலோக குதிரைகள் போல் வீர்யமாக இருந்தது.ஒவ்வொன்றும் பிடரி முடி சிலிர்த்தபடி காற்றில் மிதந்தவாறு பயணித்தன. குளம்பொலி சத்தம் சங்கிதமாக ஒலித்தது.பார்க்க ரம்யமாக இருந்தது.
இதெல்லாம் மங்களகரமான நிமித்தமாகத் தோன்றி வெற்றி இலக்கை அடையும் நேரம் வந்து விட்டதாக மனதில் பட்டது.
எல்லா குதிரைகளும் ஒரு குகையின் முன் வந்து நின்றது.கலைந்து ஒரு வரிசை அமைத்தது.மீண்டும் கலைந்து வேறொரு வரிசை அமைத்தது.எல்லாம் முன்னாம் கால்களைத் தூக்கி கனைத்தன.முதல் குதிரை குகையில் நுழைய மற்ற குதிரைகளும் தொடர்ந்தது.சுட்டியும் பின் நடந்தான்.உள்ளே ஒரு வட்டமான பெரிய அறை இருந்தது.
அங்கும் குதிரைகள் கலைந்து கலைந்து வரிசை அமைத்து கனைத்தபடி இருந்தது.ஒருமூத்த குதிரை “வருக...வருக என எங்கள் ராஜகுமாரனை வரவேற்கிறோம்" என்றது.
“சுட்டி...அதோ தெரியும் அந்த தேக்கால் செய்தப் பெட்டிக்குள் உள்ள தங்க வாளை எடு”
“நான் எழுப்பிய கேள்விக்கு இது வரை நீங்கள் யாரும் பதில் கூறவில்லை”
“என்ன கேள்வி?”
“உங்கள் தங்கை”
“அந்த தங்க வாளால் எங்கள் தலையை வெட்டினால் எல்லா பூர்வகதையும் தெரிந்து விடும்”
“வெட்டுவதா?’
தொடரும்.............
வந்துட்டேன் :-))
ReplyDeleteநன்றி சென்ஷி.
ReplyDeleteகருத்து ஒன்றும் சொல்லவில்லையே.
என்னுடைய “அந்த சந்தில் திரும்பினான்” உங்களுக்கான பதிலைப்
பார்த்தீர்களா?
நல்ல விறுவிறுப்பான இடத்தில் தான் தொடரும் போட்டுவிடுகிறீர்கள்;-))
ReplyDeleteஅடுத்த பாகத்திற்காக காத்திருப்பு தொடர்கிறது.
நேற்றே பார்த்துவிட்டேன். உங்கள் சர்ரியலிச கவிதைக்கான உந்துதலை :-))
வாழ்த்துக்கள்!!
mm , good
ReplyDeleteநன்றி மதிபாலா.
ReplyDeleteஅய்யோ ஆர்வம் கூடுதுங்க.
ReplyDeleteநல்ல விருவிருப்பு,
அடுத்த பதிவுக்கு அப்பவே காத்திருக்கேன்.
ஆ.முத்துராமலிங்கம் said...
ReplyDelete//அய்யோ ஆர்வம் கூடுதுங்க.
நல்ல விருவிருப்பு,
அடுத்த பதிவுக்கு அப்பவே காத்திருக்கேன்//
காத்திருங்கள். அதில்தானே சுகம்.
சாமி...என்ன இது ஒரே வெட்டு குத்தால்ல இருக்கு... சீக்கிரம் கதையோட முடிவ சொல்லுங்க பா..
ReplyDeleteஅழகா இருக்கு ரவி...சீக்கிரம் அடுத்த பகுதியோட வாங்க...
விறுவிறுப்பு கூடிக்கொண்டே செல்கிறது..
ReplyDeleteஅடுத்த தொடரில் கதையை முடித்துவிடுவீர்களா..?
கயல்விழி நடனம் said...
ReplyDelete//சீக்கிரம் அடுத்த பகுதியோட வாங்க//
நன்றி.வந்துட்டாப் போச்சு.
பட்டிக்காட்டான்.. said...
ReplyDelete//அடுத்த தொடரில் கதையை முடித்துவிடுவீர்களா.//
நான் “கத” உடரதப் பொருத்தது.முடிந்து விடும் என்று நினைக்கிறேன்.
நன்றி.