விடிகாலையில்
எழுந்ததிலிருந்து
இரவு வரை
மூச்சு விடாமல்
தன்னந்தனியே
எல்லா வீட்டு
வேலைகளையும்
செய்யும் அம்மாவை
பிடிக்கவிட்டாலும்
பிடித்திருக்கிறது
சமயலறைக்குச் சென்று
ஏதாவது உதவி வேணுமா
என்று அடிக்கடி கேட்கும்
அப்பாவை
படிக்க:-
அண்ணாநகர் அவென்யூ பூக்கள் - கவிதை
அம்மாவை பிடிக்க வில்லை என்பதை விட, அம்மாவை விட அப்பாவை பிடிச்சிருக்குன்னு சொல்லி இருக்கலாம் நண்பா.. இது என் கருத்துதான்.. தப்பா எடுத்துக்காதீங்க..
ReplyDeleteகார்த்திகைப் பாண்டியன்,
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
//இது என் கருத்துதான்.. தப்பா எடுத்துக்காதீங்க.//
விமர்சனம்தாங்க நம்மள வளர்க்கும்.
//விடிகாலையில் எழுந்ததிலிருந்து, இரவு வரை மூச்சு விடாமல் தன்னந்தனியே எல்லா வீட்டு வேலைகளையும் செய்யும் அம்மாவை பிடிக்கவிட்டாலும் பிடித்திருக்கிறது. சமயலறைக்குச் சென்று ஏதாவது உதவி வேணுமா என்று அடிக்கடி கேட்கும் அப்பாவை.
ReplyDelete//
இதுக்கு பேரு உரை நடை.. கவிதைன்னு சொல்லாதீங்க ப்ளீஸ்!
பாண்டியன் சொன்னதத்தான் நானும் சொல்றேன்..
ReplyDelete//செய்யும் அம்மாவை
பிடிக்கவிட்டாலும்//
இதை தவிர்த்திருக்கலாம். மற்றபடி நீங்க சொல்ல வந்த கருத்து நன்று
//அம்மாவை பிடிக்க வில்லை என்பதை விட, அம்மாவை விட அப்பாவை பிடிச்சிருக்குன்னு சொல்லி இருக்கலாம் நண்பா.. இது என் கருத்துதான்..//
ReplyDeleteஇதுவே என் கருத்தும்
ஆனால் சிலருக்கு உங்கள் அனுபவம் இருக்கலாம், அது எனக்கு தெறியவில்லை
ரவி நானும் உங்க கட்சிதான். அப்பாவைப் பிடிக்கிறது அவர் ஏதும் செய்ய்வைல்லையெனினும் அப்படிக் கேட்டதே பெரிசில்லையா?
ReplyDeleteலேபில் போடும்போது கவனமாகப் போடுங்க. சமையல்னு போட்டதால, உங்க கவிதை சமையல் குறிப்புகள் வகையில இருக்கு தமிழ்மணத்துல.
அம்மாவை பிடிக்காவிட்டாலும் என்று எழுதியதற்கு பதில்
ReplyDelete"அம்மாவை விட" என்று எழுதியிருக்கலாம்...
உங்களுக்கு தெரியாததா ரவி ஸார்?
நன்றி அனானி.
ReplyDeleteபிரேம்குமார்,
ReplyDelete//பாண்டியன் சொன்னதத்தான் நானும் சொல்றேன்.//
//செய்யும் அம்மாவை
பிடிக்கவிட்டாலும்//
கருத்துக்கு நன்றி.ஒவ்வொருத்தர் புரிதலும் ஒவ்வொறு மாதிரி.
ஆ.முத்துராமலிங்கம்,
ReplyDeleteமனதில் சடெக்கென்று வந்தது.
கருத்துக்கு நன்றி.ஒவ்வொருத்தர் புரிதலும் ஒவ்வொறு மாதிரி.
விளக்காமல் விட்டால் பல கருத்துக்கள் மிளிரும்.
வடகரை வேலன் said..
ReplyDeleteவாஙக.ரொம்ப நாளாச்சு.கருத்துக்கு
நன்றி. அடிக்கடி வாங்க.
டக்ளஸ்....... said...
ReplyDeleteவாஙக. நன்றி
மனதில் சடெக்கென்று வந்தது.
கருத்துக்கு நன்றி.ஒவ்வொருத்தர் புரிதலும் ஒவ்வொறு மாதிரி.
விளக்காமல் விட்டால் பல கருத்துக்கள் மிளிரும்.
ஆமாம் நம்ம “அறியாத வயதில் லேகியம்” “அண்ணா நகர்” கவிதப் படிச்சீங்களா?
நல்லா இருக்குங்க
ReplyDeleteதொடர் வேலைகளைச் செய்து உடம்பை வருத்திக் கொள்ளும் அம்மாவை பிடிக்கவில்லை என பொருள் கொள்ள வேண்டும்.
ReplyDelete/விடிகாலையில்
எழுந்ததிலிருந்து
இரவு வரை/
/மூச்சு விடாமல்/
/தன்னந்தனியே/
/எல்லா வீட்டு
வேலைகளையும்/
பிடிக்காத அம்மாவை இப்படியா விவரிப்பார். இது பிடித்த அம்மாவைப் பற்றிய விவரணை தான்.நல்ல குடும்பம் கண்முன் வருகிறது.இதைப் பார்த்து வளரும் மகன்/மகள் நல்ல கணவனாகவும்/மனைவியாகவும் வார்க்கப்படக்கூடியவர்கள்.
ஞாபகம் வருதே,
ReplyDeleteகருத்துக்கு நன்றி!
ம்ஹூம். இதுவும் எனக்கு கவிதையாய் தெரியவில்லை. உரைநடையை ஒடித்து ஒடித்து எழுதினால் அது கவிதை ஆகிவிடுமா?
ReplyDeleteஇதுதான் கவிதை என்று நீங்கள் சொல்வீர்களேயானால் விரைவில் நானும் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டு விடலாம்.
லக்கிலுக்,
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
//உரைநடையை ஒடித்து ஒடித்து எழுதினால் அது கவிதை ஆகிவிடுமா?//
தல, புது கவிதை இப்படித்தான் தோற்றம் வரும்.என்ன பண்றது,மரபு கவிதை எழுத இலக்கணம்தெரியணும்.
//நானும் ஒரு கவிதைத் தொகுப்பு //
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், கலைஞர்
முன்னுரையுடன்.
லக்கிலுக்,
ReplyDeleteஇங்கே போய் பாருங்கள்.
http://senshe-kathalan.blogspot.com/2009/04/2.html
நன்றி.
சற்றே வித்தியாசமாய் இருக்கு ரவிஷங்கர்..
ReplyDelete