Thursday, April 9, 2009

பிடித்த கவிதை - கனிமொழி எழுதியது

எத்தனைமுறை விலக்கினாலும்
திரும்பத் திரும்பத் புரண்டு
மேலே கால் தூக்கிப்போடும்
குழந்தையாய் நினைவுகள்

_________________________________


எப்போதாவது
பிடித்திருக்கிறது
உனக்கும் எனக்குமான
உலகத்தில்
மற்றவர்களை

_________________________________


அலைகள்
பூக்கள்
குழந்தை
நண்பர்கள்
கவிதையும் கூட
அவ்வப்போது
அலுத்துப்போகிறது

_________________________________

படிக்க:

கதையின் முடிவு என்ன? சொல்லுங்கள்!


7 comments:

  1. வாங்க அன்புடன் அருணா.ரொம்ப நாளாச்சு.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  2. ந‌ல்லாயிருக்குங்க‌!உங்க‌ ர‌சனை ரொம்ப‌ நேர்த்தியா இருக்குங்க!வலைப்பூ மொத்தையும் வாசிக்கிறேன் ஒரு ரசிகையாய்!! ப‌டிச்ச‌ வ‌ரைக்கும் எல்லாமே பிடிச்சுதுங்க‌!

    ReplyDelete
  3. நன்றி கயல் விழி.என் அழைப்பை மதித்து கருத்துச்சொன்னதற்க்கு.
    நானும் வந்து கருத்துச்சொல்கிறேன்.

    ReplyDelete
  4. இந்த வரிகள் நன்றாகத்தான்; புரியும்படி உள்ளன.
    இது தான் "கனிமொழி கவிதைகளா?";
    இவை அவரின் எத்தனை கவிதைத் தொகுப்பில் திரட்டியவை.
    எனக்குப் பலரின் கவிதை எழுத்து வினோதம் புரிவதில்லை.
    அத்துடன் 200 பக்கத்தை எழுத்தால் நிறைத்திருப்பார்கள்.
    ஒன்றோ இரண்டோ வரிகள் தேறும் புரியும் என் போன்ற
    சாமானியனுக்கு!
    எங்களுக்குப் புரியக் கூடாதெனக் கங்கணம் கட்டி எழுதுகிறார்களோ!
    என ஐயுறுவேன்.
    பலதைப் படித்து....
    மனதில் பட்டதைக் கூறினேன்; மன்னிக்கவும்.

    ReplyDelete
  5. யோகன் பாரிஸ்(Johan-Paris),

    கருத்துக்கு நன்றி.புரியாத கவிதை இது
    பெரியவிவாதத்திற்கூரியது.

    ReplyDelete
  6. மூன்றும் அழகுதான். ஆனாலும் இரண்டாவதுதான் பேரழகு!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!