Monday, April 20, 2009

குதிரைகள்.. பாகம் -2 - மாயஜால கதை





இனி பாகம் - 2

”எவ்வளவு சன்மானம்?” கேட்டான் ஒருவன்.


3000 பொற்காசுகள்.... பிறகு...ஊர்வசி, தேவதை..சூர்யகாந்தி 
கரம் பிடித்து.... சொர்க்கம்தான் ” சொன்னான் தமுக்கடிப்பவன்,.
எல்லோர் இளைஞர்கள் கனவிலும் சூர்யகாந்தி கையில் 
தாம்பளம் ஏந்தி இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க 
நடந்து வந்தாள்.

ஆனால் அடுத்த நிமிடம்அடிவயிற்றில் திகிலும்பிடித்தது.
குதிரையை எங்கு போய் தேடுவது?என்ன நடக்குமோ?.திரும்ப 
வருவோமா?ஏதாவது சாபத்தால் கல்லாய் மாறி விட்டால்?

அது ஒரு ஏழை தொழிலாளியின் வீடு.அவருக்கு. மூன்று 
மகன்கள்.மூத்தவன் மட்டி.சோம்பேறி.முட்டாள்.
இரண்டாமவன் வெட்டி.கொஞ்சம் புத்திசாலி,ஆனால் 
வெட்டியாக ஊர் சுற்றுவான். மீதி வேளையில் சாப்பிடுவான், 
தூங்குவான்.கடைக்குட்டிப் பெயர் சுட்டி.புத்திசாலி.வெட்டு 
என்றால் கட்டிக்கொண்டு வருவான். முன்யோசனை,தைரியம் 
உடையவன்.அழகன். இவர்களுக்கு உண்மையான பெயர்கள் 
இவைகள் அல்ல. இவர்களின் குணாசியத்தால் ஊரார் 
வைத்தப்பெயர்கள்..







காலையில் எழுந்தான் மட்டி.தொடையையும், தோள்களையும் தட்டியபடி அரண்மனைக்குப் போனான்..அவையில் போய்
நின்றான். எல்லோரும் சிரித்தார்கள். மன்னரும் சிரிப்பை 
அடக்க முடியாமல் அடக்கி

“குதிரைகள் எங்கு போகின்றன... என்ன செய்கின்றன... 
மர்மத்தை எப்படிக் கண்டுபிடிப்பாய்?”

“குதிரையின் கால்களை ஒடித்து விடுவேன்...பிறகு மெல்ல 
ஓடும்.பின் ஓடிக் கண்டுபிடித்து விடுவேன்.”

அவையில் “கொல்”என்ற சிரிப்பு.மன்னனுக்கு சிரிப்பால வயிறு வலித்தது.

’கண்டுப்பிடிக்க விட்டால். என்ன தண்டனைத் தெரியுமா?.உப்பும் மிளகாய் பொடியும் தடவிய சவுக்கால் 200 கசையடிகள்....”.

”மன்னா ...எப்படியும் கண்டுப்பிடித்துவிடுவேன் ....
திருமணத்திற்க்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யுங்கள்”

அவையில் மறுபடியும் சிரிப்பு.

”போ... போ....போய் தேடு. உன் தலை விதியை மாற்ற முடியாது”.

தொடையையும், தோள்களையும் தட்டியபடி வெளியேறினான். 

மறு நாள் விடிகாலையில் உடம்பு முழுவதும் எண்ணெய் 
தடவிக் கொண்டு குதிரை லாயத்தின் வாசலில் காத்திருந்தான்
மட்டி..

வானத்தில் விடியலில் சில நட்சத்திரங்கள் தோன்றின.உடனே 
குதிரைகள் கனைத்தன்.ஆக்ரோஷமாக கால்களால் நிலத்தைக் 
கீறின.சில குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கியபடி ஒரு 
வினோத ஊளையிட்டது.மட்டி மிரண்டான். கட்டுக்கள் 
அறுந்தது.லாய தடுப்பு இரும்புகளின் சங்கலிகள் தானகவே 
அவிழ்ந்தது.புழுதி பறக்க ஒட்டத்தைத் தொடங்கின.

மட்டியும் அவற்றின் பின் தலைத் தெறிக்க ஓடினான்.புழுதி 
உடம்பு முழுவதும் அப்பிக்கொண்டது. கண்களிலும் தூசி 
ஏற ஆரம்பித்து திசை தெரியவில்லை.வேறு திசையில் 
ஒடிக்கொண்டிருந்தான்.

அடிக்கடி தடுக்கி விழுந்தான் .முட்டிகளில் ரத்தம்.வியர்வை 
கொட்டியது.மூச்சு வாங்க ஆரம்பித்தது..ஓட முடியவில்லை.
நின்றபடி மேல் மூச்சு கிழ் மூச்சு வாங்கினான். உடம்பு எலும்புக் 
கூடு ஆகிவிட்ட மாதிரி இருந்தது. குதிரைகளைக் காணவில்லை 
எல்லாம் வெகுதூரம் ஓடி விட்டது. தண்ணி... தண்ணி... என்று 
கத்திக் கொண்டே கிழே விழுந்தான்..

”என்னாச்சு.. உனக்கு ஏன்... தம்பி இப்படி ஒடுற... தண்ணிதானே 
நான் தரேன்..”

ஒரு அசிரீரி குரல் வானத்திலிருந்து.

திரும்பிப் பார்த்தான். அங்கே ஒரு 102 வயது தொண்டு கிழவி 
கையில் ஒரடி நீள கட்டைச்சீப்புடன்.பெரிய பாறையின் மேல் 
நின்றிருந்தாள்.

தொடரும்.........



மறக்காம ஓட்டுப் போடுங்க


17 comments:

  1. சுடச்சுட படிச்சுட்டேன்னு நினைக்குறேன் :-)))

    விறுவிறுப்பா இருக்குது.

    எனக்கும் நான் முன்னாடி படிச்ச ஒரு கதைய எழுதலாமான்னு தோண வைக்குது!

    ReplyDelete
  2. நன்றி சென்ஷி.

    //எனக்கும் நான் முன்னாடி படிச்ச ஒரு கதைய எழுதலாமான்னு தோண வைக்குது!//

    எழுதுவதற்க்கு முன்னான் கொஞ்சம் homework செய்க.

    ReplyDelete
  3. viruviruppa irukku.

    ReplyDelete
  4. //எழுதுவதற்க்கு முன்னான் கொஞ்சம் homework செய்க.//

    :-))

    கண்டிப்பாக.. ஆனால் அது அவ்வளவு எளிதாயிருக்கும்ன்னு தோணலை :-)

    ReplyDelete
  5. சென்ஷி,

    //எழுதுவதற்க்கு முன்னாள் கொஞ்சம் homework செய்க.//

    ஏன் சொன்னேன் என்றால், தொடர்கதைக்கு ஒவ்வொறு வாரமும் அவுட லைன் கிடைக்கும்.அதை வைத்துக் கொண்டு கதை உடலாம்.

    ReplyDelete
  6. விறுவிறுப்பா இருக்கு ரவிசங்கர் சார்..
    அடுத்த பதிவிற்கு இப்பவே ஆர்வத்தை தூண்டி விட்டீரகள்.

    ReplyDelete
  7. ம்... ம்... 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி', பூலோக ரம்பை', 'குலேபகாவலி'... எல்லாம் நினைவுக்கு வருது ரவி.

    ஃபேண்டஸி கதைகள்தான் ஒரு தளத்துல மாஜிக்கல் ரியலிஸ கதைகளா மாறுது.

    தொடருங்க. தொடர்கிறோம்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  8. நன்றி பைத்தியக்காரன்.

    ReplyDelete
  9. ஆ.முத்துராமலிங்கம் said...

    //விறுவிறுப்பா இருக்கு ரவிசங்கர் சார்..அடுத்த பதிவிற்கு இப்பவே ஆர்வ//

    ரொம்ப நன்றி.அதனால்தான் 3வது பாகம் தேதி கூடப் போட்டுவிட்டேன்.

    ReplyDelete
  10. கொஞ்சம் பெரிய பதிவா போடுங்க..
    சுவாரசியம் தாங்க முடியல..

    கதை படிக்க ஆரம்பிக்கறதுக்குள்ள முடிஞ்சுருது..

    ReplyDelete
  11. நன்றி பட்டிக்காட்டான்.

    //கொஞ்சம் பெரிய பதிவா போடுங்க..
    சுவாரசியம் தாங்க முடியல.//.

    போடுகிறேன்.

    எப்போவோ படித்தது அண்ணே.சொந்த கற்பனை 80% + ஒரிஜினல் 20%.அதனால நிறைய கதை வுடனும்.

    ReplyDelete
  12. இன்னும் கொஞ்சம் பெருசா போடுங்க சார்.. (கதையும், படமும்)...
    கதை நல்லாப் போகுது... அம்புலிமாமாவின் ஞாபகங்கள் நெஞ்சைக் கீறுது...
    ஒவ்வொரு பகுதியின் நீளத்தையும் அதிகப் படுத்துங்கள் சார்...

    ReplyDelete
  13. கதை சூப்பர் தல.

    நல்லா விறுவிறுப்பா இருக்கு.

    ReplyDelete
  14. தமிழ்ப்பறவை said...

    நன்றி.இது முதல் தொடர்கதை அனுபவம் என்பதால் சில ஏற்றம் இறக்கம்.

    நீங்கள் கொடுக்கும் ஊக்கம் பொறுப்பை
    அதிகம் ஆக்குகிறது.

    ReplyDelete
  15. R.Gopi said...
    //கதை சூப்பர் தல.//

    நன்றி head.

    ReplyDelete
  16. கொஞ்சம் லேட்டா வந்துட்டேனோ...:(

    ReplyDelete
  17. கயல்விழி நடனம் said...

    //கொஞ்சம் லேட்டா வந்துட்டேனோ//

    வந்த நோ பிராப்டளம். ஒவ்வொரு எபிசோட்லயும் முந்திய எபிசோட் இருக்கே.

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!