Monday, April 27, 2009

குதிரைகள்-இறுதி பாகம்-மாய ஜால கதை
குதிரைகள்..பாகம் -1-
இனி...... குதிரைகள் - இறுதி பாகம்


”ஆம்..எங்கள் தலையை வெட்டினால் நாங்கள் ராஜகுமாரர்களாகி விடுவோம்.நாங்கள் மனிதர்களாவது உன் கையில்தான் உள்ளது.”

“சற்று விளக்குங்கள்”

“நாங்கள் குதிரைகள் அல்ல.இந்த தேச மன்னன் பாரி பாண்டியனின் ஏழு மகன்கள்.அண்ணன் தம்பிகள்.ஒரு சாபத்தால் குதிரைகளாகி விட்டோம்.எங்களின் தங்கைதான் உனக்காகக் காத்திருக்கும் சூரியகாந்தி.”

“யார் சாபத்திற்குள்ளானீர்கள்?”

“ஒரு சமயம் வேட்டையாடுவதற்கு புற நகர் காட்டிற்கு சென்றோம்.இளைப்பாறுவதற்கு ஒரிடத்திற்க்கு சென்றோம்.அங்குதான் அந்த கிழவியைப் பார்த்தோம்.எங்களை நன்றாக உபசரித்தாள்.ஆனால் அவளையே கேலி செய்து பேசினோம். அது எங்களின் வாய் கொழுப்பு.அவள் கோபம் கொண்டு எங்களை சபித்து குதிரைகளாக்கி விட்டாள்.”

கொஞ்சம் இடைவெளி விட்டு பேச ஆரம்பித்தது.

”அவள் ஒரு மந்திரக்காரி.சூன்யம் தெரிந்தவள். கெஞ்சினோம்.கதறினோம்.அவள் மசியவில்லை.இந்த புல்லையும் கொள்ளையுமா தின்பது..கடைசியில் எல்லோரும் அவள் காலில் வ்ழுந்தோம்.கிழவி கொஞ்சம் மசிந்தாள்.”

”நீங்கள் புல்லையும் கொள்ளையும் திங்க வேண்டாம்.நான் உங்களுக்கு மனிதர்கள் போல் அறுசுவை உணவு படைத்துப் போடுகிறேன்.உங்களுக்குப் பிடித்த தேனில் ஊறிய பலா பழம் மற்றும் நான்கு காய்கறிகளில் சமைத்த உணவு தினமும் இங்கு இருக்கும் மர வேலைப்படு செய்த குடுவைகளில் வைக்கிறேன்.தினமும் அரணமனையிலிருந்து வந்து சாப்பிட்டு விட்டு மாலையில் போய் விடுங்கள்.நாங்கள் எங்கள் விதியை நொந்துக் கொண்டு தலையாட்டினோம்.

ஆனால் ஒவ்வொரு நிமிடமும் எங்கள் உள்ளுணர்வு நாங்கள் மனிதர்கள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தது.”


”உங்கள் தந்தைக்கு தெரியுமா நீங்கள்தான் குதிரைகளாகிவிட்டீர்கள் என்று?”


”தெரியும்.அவரும் எங்களுக்காக எல்லாவற்றையும் செய்து பார்த்தார். பாதி ராஜ்ஜியத்தையே கிழவிக்கு கொடுக்கச் சம்மதித்தார்.ஆனால் கிழவி ஒப்புக்கொள்ளவில்லை. சாபத்தை எடுக்கவில்லை.உன் சொந்த முயற்சியால் எடு என்றாள். அப்பாவும் மனம் உடைந்து போனார்.இது ஏதோ மூதாதையர் செய்த பாவம் என்று எண்ணி வருந்தினார்.நாங்களும் யாராவது காப்பாற்ற வருவார்களா என்று தினமும் கடவுளைக் கேட்போம்.ஏமாந்து போவோம்.அடுத்து எங்களை காப்பாற்ற வரும் மனிதர்களை இந்த கிழவி ஏமாற்றி விரட்டி விடுவாள்.நீதான் எங்கள் ரட்சகன்.ஆபத் பாந்தவன்.உன் கையிலதான் எல்லாம் இருக்கிறது.”

“என்ன செய்ய வேண்டும்.”

“ எங்கள் தலைகளை வெட்டி எங்கள் நடு முதுகில் வைக்க வேண்டும்.தலைகள் கிழே விழுந்தவுடன் நாங்கள் ராஜகுமரார்களாகி விடுவோம்.”

“ஓ... இதுதான் அந்த கிழவி சொன்ன சொந்த முயற்சியா?”

“ஆமாம் சுட்டி..எங்கள் அப்பா காலில் விழுந்து அந்த கிழவியிடம்...கேட்டிறிந்தார்.” 

சுட்டி எல்லாம் மனதில் வாங்கிக்கொண்டு சிறிது நேரம் 
யோசித்தான்.

“நான் தலையை இங்கு வெட்டப் போவதில்லை.”

“ஐய்யோ...என்ன சுட்டி... இப்படிச் சொல்லி விட்டாய்..என்ன 
காரணம்”

“இங்கு நாம் எதையுமே செய்யக் கூடாது.சூன்யகாரி கிழவி பதிலுக்கு ஏதாவது செய்து ம்மை நாசம் செய்து விடுவாள்.நீங்கள் புசிக்கப் போகும் உணவு வகைகளில் சிலவற்றை
நான் இந்த குடுவையில் எடுத்து வைத்துக் கொள்கிறேன். மன்னரிடம் காண்பித்து நிருபிக்க வேண்டும் மீதி உணவை உங்களோடு நான் பகிர்ந்து மாலைவரை 
ஓய்வெடுக்கிறேன்..மாலை உங்களுடன் பிரயாணம் செய்து 
அரண்மனையை அடைந்து மன்னரிடம் பேசிவிட்டு விடிகாலையில் தலைகளை 
வெட்டுகிறேன்.”

“சுட்டி நீ ரொம்ப புத்திசாலி..நல்ல யோசனை..”

மாலை குதிரைகள் புறப்பட்டன.அவனும் ஒரு குதிரையின் மேல் ஏறிக் கொண்டான்.அரண்மனையை நெருங்கும்போது மன்னர் மேல் மாடத்திலிருந்து பார்த்தார். என்றுமில்லாத ஒரு மகிழ்ச்சி மனதில் கொள்ளை கொண்டது.

அவசரமாக அவையை கூட்டினார்.சுட்டியை வர வழித்தார்.எல்லோரும் ஆர்வமாக இருந்தார்கள்.குடுவையை காட்டினான்.அதில் தேனில் ஊறிய பலா பழம் மற்றும் நான்கு காய்கறிகளில் சமைத்த உணவு இருந்தது. மன்னன் நம்பினார்.எல்லோருக்கும் அவன் மேல் நம்பிக்கை வந்தது.”

“இதை எடுத்துக்கொண்டு போய் குதிரைகளுக்கு கொடுங்கள்” கட்டளையிட்டார் மன்னர்.

“வேண்டாம்.. மன்னா..வேண்டாம்...காரணத்தை நாளை காலையில் சொல்கிறேன். இன்றிரவு என்னை குதிரை லாயத்தில் தங்க அனுமதியுங்கள். லாயத்தை விடிகாலையில்தான் திறக்க வேண்டும்.உங்கள் புதல்வர்கள் “தந்தையே” என்று அழைப்பார்கள். அப்போதுதான் நீங்கள் எழ வேண்டும்.அப்போது லாயத்தைத் திறக்கலாம்.என்னை நம்புங்கள்.”

மன்னர் ரொம்ப குழம்பிப் போனார்.ஒரு பக்கம் சந்தோஷமும் மறு புறம் அவநம்பிக்கையும் மனதில் குடியேறியது. அமைச்சர் மன்னரின் ஆறுதல் கூறி காதில் ஏதோ சொன்னார்.மன்னர் மனம் நிம்மதியடைந்தது. லாயத்திற்க்கு பலத்த காவல் போட்டார்.

சுட்டி குடுவையை கட்டிக்க்கொண்டு தூங்குகையில் நடு இரவில் திடுக்கிட்டு எழுந்தான்.
குதிரைகள் அந்த குடுவையில் உள்ள உணவைச் சாப்பிட முயன்றது.

“நிறுத்துங்கள்...சாப்பிடாதீர்கள். இது விஷம்.”

குதிரைகள் அதிர்ந்தன்.அவன் பேச்சைக் கேட்டு சாப்பிடாமல் விட்டன.அவன் தூங்க ஆரம்பித்தான். 

விடிகாலை வானில் ஒரு நட்சத்திரம் உதயமாகியது. குதிரைகள் முடி சிலிர்க்க ஆரம்பித்தது. சுட்டி இதயம் அடித்துக்கொண்டது. ஐய்யோ குதிரைகள் கிளம்பி விடக் கூடாதே.மின்னல் வேகத்தில் தங்க வாளை எடுத்தான்.ஒவ்வொன்றின் தலையையும் வெட்டி அதனதன் நடு முதுகில் வைத்தான். குருதி கொட்ட ஆரம்பித்தது.ஏழு ராஜகுமாரர்களும் தங்களுடைய சுய ரூபத்தை அடைந்து சுட்டியை கட்டிக்கொண்டார்கள்.

“நன்றி...நன்றி...சுட்டி...வா போகலாம்.....”அரண்மனைக்கு விரைய ஆரம்பித்தார்கள்”

“பொறுங்கள்... ஒரு வேலை பாக்கியிருக்கிறது.அதை நீங்கள்தான் செய்ய வேண்டும்.ஓடும் குருதியில் இந்த குடுவையில் உள்ள உணவை தூக்கிப் போடுங்கள்”

அந்த குடுவையை எடுத்தான்.

உணவை எடுத்துப் போட்டார்கள்.”அய்யோ...அம்மா...அய்யோ... உடம்பெல்லாம் எரிகிறது செத்தேன்..செத்தேன்....”சூன்யகாரியின் குரல் நாராசாரமாக 
ஒலித்தது.கிழவி எரியும் நெருப்பினூடே தெரிந்து உருகி 
மறைந்தாள். லாயம் சுத்தம் ஆயிற்று.பொழுது புலர்ந்தது.அன்றைய பொழுது மக்களுக்கு ரொம்பவும் வித்தியாசமாக மனதில் பட்டது.

”சுட்டி....நீ எப்படி கண்டுப்பிடித்தாய்....அந்த குடுவையில் விஷம் இருக்கிறதென்று?”

”நாம் திரும்பும் வழியில் அந்த கிழவி ஒரு பாறையின் மேல் நின்று பார்த்து விட்டாள்.அவளுக்கு ரொம்ப அதிர்ச்சியாகப் போய் விட்டது.அவள் மனதிற்குள் கருவியது என் உள்ளுணர்வு உணர்ந்துக்கொண்டது. உடனே வெளியுணர்வு மூலமும் உறுதிப் பட்டது.”

“எப்படி..?”

”அந்த குடுவை திடீரென்று கொதித்தது.சிறிது புகை வந்தது.உங்களுக்கு சொல்ல கூடாதென்று வேண்டுமென்றே தவிர்த்தேன்.அடுத்து உங்களுக்குக் கொடுக்கக் கூடாது என்றும் அப்போதே முடிவெடுத்தேன்.”.

சுட்டியின் சிந்தனைத் திறனை வியந்து வாயடைத்துப் போனார்கள் அரசகுமாரர்கள்.அவ்னைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்தார்கள்.
வெளியே வந்து வரிசையாக நின்றார்கள்.ஒரு சேர “தந்தையே” என்று அழைத்தார்கள்.குடும்பம் சேர்ந்தது. மகிழ்ச்சி கரைப் புரண்டோடியது.

பாரி பாண்டியன் நாடு விழா கோலம் பூண்டது.தேவலோக ஊர்வசியை ஒத்த பேரழகி சூரிய காந்தி ஓவ்வொரு அங்கமும் மின்னலடிக்க கையில் மணமாலை ஏந்தி சுட்டி என்கிற சுந்தரவதனனுக்கு மாலையிட்டாள்.அவர்கள் மேல் பூமழை பொழிந்தது.

                                                      சுபம் 


மறக்காம ஓட்டுப் போடுங்க

படிக்க ஒரு சிறுகதை:- 

                               


31 comments:

 1. அப்பாடா...ஒரு வழியா கதை முடிஞ்சு போச்சு..!
  அருமை ரவி ஸார்..

  ReplyDelete
 2. லாஸ்ட் பார்ட்டுக்கு நாந்தான் பர்ஸ்ட்டா..?

  ReplyDelete
 3. நன்றி டக்ளஸ்

  ReplyDelete
 4. டக்ளஸ்....... said...

  //லாஸ்ட் பார்ட்டுக்கு நாந்தான் பர்ஸ்ட்டா..?//

  ஆமாம்.இல்லேன்னா அனானியா நான் வந்து பர்ஸ்ட்டு ஆயிடுவேன்.

  ReplyDelete
 5. //“மட்டி நீ ரொம்ப புத்திசாலி..நல்ல யோசனை..//
  சுட்டியா மட்டியா?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 6. dondu(#11168674346665545885) s

  வாங்க!வாங்க!வாங்க! ராகவன். மூத்த குடிமகனுக்கு அரை சதவீதம் கூடுதல் வட்டி போல் மூத்த பதிவருக்கு கூடுதலான ”வாங்க”வரவேற்பு.


  //“மட்டி நீ ரொம்ப புத்திசாலி..நல்ல யோசனை..சுட்டியா மட்டியா?//

  ’சுட்டி”க் காட்டியதற்கு நன்றி.மட்டியை சுட்டியாக்கி விட்டேன்.

  சார்! கதையப் பத்தி ஏதாவது சொல்லலாமே!

  ReplyDelete
 7. கைய கொடுங்க ரவி, ரொம்ப அழகா கொண்டு போய் கடைசில உங்க பாணில டிவிஸ்ட்டோட முடிச்சிருக்கீங்க.

  ஆனா, எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு.

  சுட்டி எப்படி அந்தக் குடுவைல இருக்கிற உணவுகள் விஷம் கலந்ததுனு கண்டுப்பிடிச்சான்? பதிலுக்கு அவன் குதிரை வடிவத்துல இருந்த ராஜகுமாரர்களுக்கு என்ன உணவை கொடுத்தான்? எங்கேந்து, யார் மூலமா அதை சேகரிச்சான்? அப்புறம் இத்தன நாளா விஷ உணவை சாப்பிட்ட்டும் குதிரைங்க(ராஜகுமாரர்கள்) எப்படி உயிரோட இருந்தாங்க?

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

  ReplyDelete
 8. பைத்தியக்காரன்,

  //கைய கொடுங்க ரவி, ரொம்ப அழகா கொண்டு//

  கருத்துக்கு நன்றி. மனம் மகழ்ச்சி கொள்கிறது.

  //சுட்டி எப்படி அந்தக் குடுவைல இருக்கிற உணவுகள் விஷம் கலந்ததுனு கண்டுப்பிடிச்சான்? //

  என் பையனுக்கு இந்த கதையை நேற்றுச் சொல்லி முடித்தேன்.அவன் “
  அந்த கிழவி என்ன ஆனாள்” என்று கேட்டான்.

  நான் திரு திருவென விழித்தேன்.
  உடனே இட்டுக் கட்டி ஒன்று விட்டேன்.கிழவிஇறந்ததும்தான் அவன் தூங்கினான்.அதைத்தான் லாஜிக் யோசிக்காமல் எழுதிவிட்டேன்.

  இப்போது திருத்திவிட்டேன்.சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

  //பதிலுக்கு அவன் குதிரை வடிவத்துல இருந்த ராஜகுமாரர்களுக்கு என்ன உணவை கொடுத்தான்? எங்கேந்து, யார் மூலமா அதை சேகரிச்சான்//

  சில வரிகளை மாற்றி விட்டேன்.அதனால் ஒரு குடுவைதான் வரும்.

  //அப்புறம் இத்தன நாளா விஷ உணவை சாப்பிட்ட்டும் குதிரைங்க(ராஜகுமாரர்கள்) எப்படி உயிரோட இருந்தாங்க?//

  அங்கிருக்கும் வரை நல்ல உணவுதான் சாப்பிட்டார்கள்.கடைசியில்தான்...

  ReplyDelete
 9. ரொம்ப நல்லா இருந்தது ரவி..

  ReplyDelete
 10. கயல்விழி நடனம் said..

  //ரொம்ப நல்லா இருந்தது ரவி//

  ரொம்ப நன்றி.

  ReplyDelete
 11. ஆஹா! ஆஹா!..
  கலக்கல் ரவிசங்கர்.
  கதையை சுவாரசியம் குன்றாமல்
  கொண்டுவந்து முடித்துவிட்டீர்கள்.
  அருமை. வாழ்த்துகள்

  ReplyDelete
 12. ஆ.முத்துராமலிங்கம் said...

  //ஆஹா! ஆஹா!..
  கலக்கல் ரவிசங்கர்.
  கதையை சுவாரசியம் குன்றாமல்
  கொண்டுவந்து முடித்துவிட்டீர்கள்.
  அருமை. வாழ்த்துகள்//


  நன்றி சார்!

  ReplyDelete
 13. எல்லோரும் இவ்வளவு பாராட்டுறாங்கன்னா, கதையில் உள்ளே வேற எதுவும் விஷயம் இருக்கா சார்..?
  சர்ரியலிசம், மேஜிக் ரியலிசம் மாதிரி ஏதாவது இசம் இருக்கா/.. எனக்கு அதெல்லாம் தெரியாது. சுட்டிக்காட்டினால் தெரிந்துகொள்வேன் சார்.

  என்னைப் பொறுத்தவரை நல்ல(சிறுவர்) கதை அவ்வளவே...
  சமூகக் கதைகள் போடுங்க சார்..

  ReplyDelete
 14. //சர்ரியலிசம், மேஜிக் ரியலிசம் மாதிரி ஏதாவது இசம் இருக்கா/.. எனக்கு அதெல்லாம் தெரியாது. சுட்டிக்காட்டினால் தெரிந்துகொள்வேன் சார்//

  ஒரு புண்ணாக்கும் இல்லை.ஒரு மாயா ஜால கதை.

  //என்னைப் பொறுத்தவரை நல்ல(சிறுவர்) கதை//

  ஆமாம். பெரியவர்களும் ரசிக்கலாம்.தப்பில்லை.இதை எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டும். விறுவிறுப்பு கொண்டு வர வேண்டும்.

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 15. :-)

  நல்லா முடிச்சுருக்கீங்க... ஏன் தலைவா இதை இமேஜிசம் சேர்த்தா யாராச்சும் கோச்சுக்குவாங்களா :-))

  ReplyDelete
 16. //ஒரு புண்ணாக்கும் இல்லை.ஒரு மாயா ஜால கதை.//

  அப்போ இருந்த, இருக்குற இசமெல்லாம் புண்ணாக்குன்னுதானே சொல்றீங்க ரவி! :-)) (சொ செ சூ)

  ReplyDelete
 17. சென்ஷி said,

  //ஏன் தலைவா இதை இமேஜிசம் சேர்த்தா யாராச்சும் கோச்சுக்குவாங்களா//

  அண்ணா... உட்டுடுங்கோண்ணா..
  நீங்க எதுல வேண structure பண்ணிக்கோங்கோண்ணா...

  ReplyDelete
 18. //
  அண்ணா... உட்டுடுங்கோண்ணா..
  நீங்க எதுல வேண structure பண்ணிக்கோங்கோண்ணா..//

  நோ நோ.. இன்னிக்கு இதைப்பத்தி நாம ஒரு முடிவுக்கு வந்திடலாமே.. எனக்கும் வேற வேலை இல்ல!

  வெளிநாடுகள்ல இலக்கியமாக்கப்படுற மாயாஜாலக்கதைகளை நீங்க இசம்ங்கற புண்ணாக்கோட கம்பேர் பண்ணாததோட காரணம் என்ன?

  (இது ஒரு மொக்கை கேள்வி. ரொம்ப சீரியசா யோசிக்கறா மாதிரி இருந்தா பதிலே சொல்ல வேணாம் :-) )

  ReplyDelete
 19. சென்ஷி said...

  //அப்போ இருந்த, இருக்குற இசமெல்லாம் புண்ணாக்குன்னுதானே சொல்றீங்க ரவி! :-)) (சொ செ சூ)//

  சொல்லல.

  //(சொ செ சூ)//
  ?????????

  தமிழ் மணம் சர்வர் அவுட்டா? எப்படி வந்தீங்க?

  ReplyDelete
 20. சொ செ சூ - சொந்த செலவில் சூனியம்..

  ReplyDelete
 21. நல்ல இருக்கு, ஆனா கடைசி பாகத்துல என்னவோ ஒன்னு குறையுற மாதிரி இருக்கு..
  என்னனு சொல்ல தெரியல..

  ReplyDelete
 22. பட்டிக்காட்டான்.. said...

  //நல்ல இருக்கு, ஆனா கடைசி பாகத்துல என்னவோ ஒன்னு குறையுற மாதிரி இருக்கு.என்னனு சொல்ல தெரியல.//

  தெரியலயே.கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 23. "தல" அட்டகாசம் கைய குடுங்க (இப்படி சொல்லலேன்னா கூட), நல்லா இருந்ததுன்னு சொல்லலாம்னு வந்தேன். ஆனாலும்,............ மனசு கேக்கல .......

  தூள்.............. நோ

  பிரமாதம் - இல்ல

  ஆ ஹா - சொல்லலாமா??!!! வேண்டாம்

  ஒ ஹோ ---- சொல்லிடுவோம் .....

  ஒகே "தல" .......... நல்லா இருக்கு......... இருந்தது...........

  ReplyDelete
 24. R.Gopi said.,

  //ஒகே "தல" .......... நல்லா இருக்கு.........இருந்தது.......//

  நன்றி கோபி.

  ReplyDelete
 25. NALLA VIRUVIRUPPU.SUPER FANTASY STORY.HATS OFF!

  ReplyDelete
 26. நன்றி அனானி.

  ReplyDelete
 27. என்ன சார்.. ஒரு வாரத்துக்கு மேலாச்சு பதிவு போட்டு...

  ReplyDelete
 28. தமிழ்ப்பறவை said...

  //என்ன சார்.. ஒரு வாரத்துக்கு மேலாச்சு பதிவு போட்டு.//

  எது எழுதுவது? அடுத்த சப்ஜெக்ட் மன்சுல தோணல. அதான் கொஞ்சம் ரெஸ்ட்.

  ReplyDelete
 29. ரொம்ப நல்லாயிருந்தது சார் இந்த மாயாஜாலக் கதை... பால்ய காலத்தில் விரும்பி படித்த கதைகளை நினைவுப்படுத்தியது... ஆனாலும் சுட்டி ஒன்றும் அத்தனை புத்திசாலியாய் தெரியவில்லையே சார்... அவன் புத்திசாலித்தனத்தை காண்பிக்க இன்னும் சில வழிகள் யோசித்திருக்கலாம்ல?

  ReplyDelete
 30. //ரொம்ப நல்லாயிருந்தது சார் இந்த மாயாஜாலக் கதை..//

  வாங்க ரீனா.ரொம்ப தேங்க்ஸ்.
  எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

  //ஆனாலும் சுட்டி ஒன்றும் அத்தனை புத்திசாலியாய் தெரியவில்லையே சார்... அவன் புத்திசாலித்தனத்தை காண்பிக்க இன்னும் சில வழிகள் யோசித்திருக்கலாம்ல?//

  நல்ல அப்சர்வேஷன் ரீனா .நீங்க தெ.ராமன்,அப்பாஜி,மரியாதை ராமன் ஸ்டைல் புத்திசாலித்தனம் எதிர்பார்த்தீங்களோ?

  மத்த ரெண்டு பேர் கோட்டை விட்ட
  விஷயங்களில் இவன் shrewd ஆக இருக்கிறான் என்று எடுத்துக்
  கொள்ளலாம்.

  ரீனா பதில் ஓகேவா?

  ReplyDelete
 31. ஆமாம் நாம் படிக்கும் அந்த பழைய மாயாஜால கதை நாயகர்களின் அசாதாரண புத்திசாலித்தனத்தை எதிர்ப்பார்த்திருப்பேன் போலும்:))) பதில் ஒகே சார்

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!