Thursday, May 13, 2010

வாரணம் ஆயிரம் போட்ட மாலை


அந்த ஐந்து நட்சித்திர ஓட்டலில் நுழைந்து தன் வண்டியை மிகவும் சந்தோஷத்துடன்  பார்க் செய்தான் குமார். அப்போதுதான் பக்கவாட்டில் அந்த யானையைப் பார்த்தான்.பார்க்க சகிக்கவில்லை.சே...!


யானைக்கு மக்கிப் போன பித்தளை முக அங்கியை புளி போட்டுத் தேய்த்து கழுவி அதன் முகத்தில் மாட்டியிருந்தான் மாவுத்தன்.சாயம் போன சிவப்பு கம்பளமா அல்லது சாதாரண ஷாமியான துணியா புரியவில்லை.முதுகில் ஏற்றலும் குறைச்சலுமாக தொங்கிக்கொண்டிருந்தது.

கழுத்தில் துருபிடித்த சங்கிலியால் இணைத்த மணி.கண்ணில் வழக்கத்திற்கு மீறிய புளிச்சை.தந்தமும் பழுப்பாகி மொக்கை.உடம்பில் நான்கு இடங்களில் புண் ஏற்பட்டு சிழ் கோர்ப்பு.அதை க்கள் மொய்த்துக் கொண்டிருந்தது.உடம்பு தொள தொளத்துத் தொங்கிப்போயிருந்தது
வழக்கமான லத்தி நாற்றம்.

பார்க்க பார்க்க அலுக்காத வஸ்துவில் ஒன்றா இது?

யானை ஐடியா உதித்தபொழுது சத்தியமாக இந்த மாதிரி யானையை கற்பனை செய்யவில்லை குமார்.அட்வான்ஸ் கொடுக்க ரூபாய் நோட்டுக்களை ண்ணும்போது கூட திரிச்சூர் பூரம் விழாவின் யானையின் அணிவகுப்பு தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு படத்தில் “நடராஜா....நடராஜா...என்ற பாட்டில் சைடு கண்ணால் பார்த்துக்கொண்டு துள்ளிக்கொண்டு வரும்.

இந்த யானைக்கு சுத்தமாக எந்த லட்சணமும் இல்லையே?

ஏமாற்றம் தாங்க முடியவில்லை.பெண்டாட்டி அமைவது போல யானை அமைவதற்கு கூட அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.மானம் போய்விடும் கம்பெனியில்.எவ்வளவு பெரிய எம்.என்.சி.

அகில உலக தலைமை அதிகாரி  ஸ்டாலின் வால்கேர் முதன் முறையாக இந்தியாவிற்கு அதுவும் சென்னைக்கு வருகிறார். ஸ்டாலின் வால்கேர் சென்னை வரவேற்பை மறக்கக் கூடாது. தமிழ்நாடு பண்பாடுப்படி மாலை போட்டு சிறப்பு வரவேற்பு கொடுக்கத்தான் இந்த யானை. எவ்வளவு தடவை அந்த காட்சியை ஒத்திகை பார்த்திருக்கிறான். சே...

இந்த மாலை போட்டு வரவேற்கும்  ஐடியா ரொம்ப ரகசியமாக தீட்டப்பட்டது. அவர் வரும் வரை யானையை ஒளித்து வைத்து இருக்க வேண்டும்.கண்டிப்பாக பிளிறக்கூடாது.லத்திப் போட கூடாது.திடீரென்று முன் நிறுத்தி ஆள் உயர மாலையை போட்டுப் புல்லரிக்க வைக்க வேண்டும் இதுதான் மில்லியன் டாலர் ஐடியா.

இந்த மில்லியன் டாலர் ஐடியா இப்பொழுது பைசா ப்ரயோஜனமில்லாமல் போய்விடுமாமதம் பிடிததது குமாருக்கு.

மாவுத்தன் அருகில் சென்றான்.

"என்னய்யா யானை இது...எங்க CEOவுக்கு மால போட்டு ஆசிர்வாதம் பண்ணும்போது நுரைத் தள்ளி,எச்சில் பட்டு,யானைக்கால் வந்துடும் போல இருக்கு”

"இன்ன சார் இப்படி பேசற.லாஸ்ட் டைமு பிரிட்டிஷ் துரைசானி வந்தப்போ இதுதான் ஆசிர்வாதம் செஞ்சுது. துரைசானி நம்ம தமிழ்நாடு சிஸ்டெம் தெரிஞ்சு அது கைல நூறு டாலர் பணம் வச்சாங்க.கல்யாணி எவ்வளவு பேரை தொட்டு ஆசிர்வாதம் பண்ணியிருக்கு தெரியுமா. அவங்கெல்லாம் ஓகோன்னு இருக்காங்க.

"பாரதியார் போய்ட்டாரே "சொன்னான்.மாவுத்தனுக்கு புரியவில்லை.

"வர போற தொர இது கைல டாலர் வப்பார... வச்சார்ன டபுள் ஆசிர்வாதம் பண்ணும்”

"வைப்பாறு... .புடிச்சுப்போச்சுன்ன அமெரிக்கா வெள்ளை மாளிகைக்கே அழைச்சிட்டுப்போய் அங்க செக்யுரிட்டிய போட்டிருவரு. அங்க இருக்கிற் வெள்ள யானையோட டூயட் பாடலாம்.

சார்..இன்ன பேசற சார்..!யானையை தடவிக் குடுத்தான்.
யானை எதுவும் புரியாமல் இரண்டு பேரையும் பார்த்துக்கொண்டிருந்தது.

அவருக்கு கொடுத்து வைக்கவில்லை.குமார் நொந்துக்கொண்டே போனான்.

வாட்சைப் பார்த்தான்.ஐயோ! டைம் ஆகி விட்டது.வாசலுக்கு ஓடினான். தன்னுடைய இரண்டு ஆபீஸ்காரர்களை யானையின் பக்கத்தில் இருக்க செய்தான்.ரிசப்ஷனில் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஸ்டாலின் வால்கேர் கொடுத்து வைத்தவர்தான்.ஆள் உயர மாலை மணக்க மணக்க கம்பிரமாக ஒரு ஓரம் இருந்தது.ஆனால் யானை?

இருபது நிமிடங்களுக்கு பிறகு ஸ்டாலின் வால்கேர் பள பள காரில் வர அவர் பின்னால் த்து கார்கள்.எல்லோரும் ஸ்டாலின் வால்கேரை புடை சுழ்ந்துக்கொண்டு ரிச்ப்ஷனுக்குள் நுழைந்தார்கள். 

ஸ்டாலின் வால்கேர் வாட்ட சாட்டமாக நல்ல உயரத்துடன் இருந்தார். மாலையைப் போட்டால் மாப்பிள்ளைதான். 

கை காட்டினேன் யானையை கொண்டு வரச் சொல்லி. ரமேஷ் கலவரத்துடன் ஓடி வந்து காதில் சொன்னான்.அதிர்ச்சியானேன். ஓடி போய் பார்த்தேன்.நிஜம்தான். 

"யானை இறந்து விட்டது"

மற்ற அதிகாரிகளிடம் சொன்னேன்.எல்லோரும் அரண்டு போய் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து விழித்துக்கொண்டு இருந்தார்கள்.என்ன செய்வது?

மாலைப் போட்டு ஆசிர்வதிக்க வேண்டுமே?

“What happened….? Anything wrong...?” ஸ்டாலின் வால்கேர் .

எல்லா விஷயத்தையும் சொன்னேன்.யானை இருந்த இடத்திற்கு வந்தார்.முகத்தில் சொல்ல முடியாத சோகம்.

வாங்கி வைத்திருந்த மாலையை யானைக்குப் போட்டார்.


                     
                முற்றும்

19 comments:

  1. நல்லா இருந்தது. ஆனா கதையில என்னவோ மிஸ் ஆன மாதிரி தெரியுது.

    ReplyDelete
  2. நன்றி தமிழ் பறவை வேகமான பதிலுக்கு,அதில் எல்லாமே Mr.தான்
    அதில் மிஸ் யாரு தெரியுமா? Miss Kalyani, the elephant.நீங்கள் ஏன்
    உங்கள் “பட” போஸை (ration card pose)மாற்றிவிட்டிர்கள். முதலில் ஒரு
    ஜன்னலில் சாய்ந்துக்கொண்டு(mani ratnam, moodlighting movie style) அதில் ஒரு கவிதை இருந்தது.

    ReplyDelete
  3. வேகமான பதிலா...? மதியமே ரீடர்ல படிச்சிட்டேன் எல்லாம். இப்போ கமெண்ட் போடத்தான் தாமதமாச்சு.
    //அதில் மிஸ் யாரு தெரியுமா? Miss Kalyani, the elephஅன்ட்.//
    ஆஹா இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா...?
    //உங்கள் “பட” போஸை (ration card pose)மாற்றிவிட்டிர்கள். முதலில் ஒரு
    ஜன்னலில் சாய்ந்துக்கொண்டு(mani ratnam, moodlighting movie style) அதில் ஒரு கவிதை இருந்தது. //
    தம்மாத்துண்டு படத்துல எனக்கே தெரியாம கவிதையா...?இல்லை முகம் பார்த்து பயந்து பழசையே போடச் சொல்றீங்களா...?
    சரி நேயர் விருப்பம். இரவுக்குள் மாற்றி விடுகிறேன்.
    நன்றி ரவி சார்...

    ReplyDelete
  4. கதை படிக்க சுவாரசியமாத்தான் இருக்கு :)

    எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன. முடிந்தால் சரி செய்யவும்.

    ReplyDelete
  5. நன்றி.
    திருத்திக்கொள்கிறேன்.

    ReplyDelete
  6. nandru. negizhavaikkum mudivu. un expected contrast.

    ungal azhaipukku nandri.

    ReplyDelete
  7. அன்புள்ள ஆங்கில மகன்!

    முதல் வருகையாக
    என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  8. நல்லா இருக்கு ரவி. நான் எதிர்பார்க்காத முடிவு. சுவாரஸ்யம். இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், ஒரு பக்கக் கதையிலிருந்து சிறுகதை அந்தஸ்து பெற்றிருக்கும்.

    அனுஜன்யா

    ReplyDelete
  9. தமிழன் கறுப்பி,
    முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. ரவி சார் தங்கள் பக்கத்தின் செய்தியோடையில் ஏதோ பிழை இருக்கிறதோ என்னவொ..? தங்கள் பக்கம் எனது ப்ளாக்கர் டாஷ்போர்டில் புதுப்பிக்கப் படமாட்டேன் என்கிறது. (ஆர்.எஸ்.எஸ் ஃபீட் ஐச் சோதிக்கவும்)

    ReplyDelete
  11. ரவி சார்...
    //டாஷ்போர்டில் புதுப்பிக்கப் படமாட்டேன் என்கிறது. (ஆர்.எஸ்.எஸ் ஃபீட் ஐச் சோதிக்கவும்)//
    நான் சொல்ல வந்தது என்னவெனில், நான் உங்கள் வலைப்பூவில் ஃபாலோயர் ஆக இருப்பதால், நீங்கள் எப்பதிவு போட்டாலும், உங்கள் வலைப்பக்கம் வந்து பார்க்கும்முன்பே, உங்கள் பதிவு எனது ப்ளாக்கர் டாஷ்போர்டில் தெரிந்துவிடும். கூகிள் ரீடரிலும் வந்துவிடும். எனது வலைப்பூவில் உங்கள் பதிவின் இணைப்பை வைத்திருப்பதனால் அதிலேயே உங்களின் பக்கம் அப்டேட் செய்யப்பட்டுவிடும்.
    தற்போது நீங்கள் என் வலைப்பூவில் சென்று பார்த்தால், உங்கள் வலைப்பூ பெயரின் கீழே ,பழைய பதிவான 'முதல் முத்தம் யார் கொடுத்தது \5 வாரங்களுக்கு முன்' என்றுதான் காணப்படுகிறது. இதனால் நீங்கள் புதுப்பதிவு போட்டாலும் எனக்குத் தெரியவராது(எனக்கு மட்டுமல்ல உங்களின் எல்லா ஃபாலொயர்களுக்குமென நினைக்கிறேன்).
    இப்படி இருந்தால் 'தமிழ்மணத்தில்' உங்கள் பதிவை இணைப்பதில் கூட சிக்கல் இருக்கலாமென நினைக்கிறேன்.எனக்கும் இது போன்ற டெக்னிகல் விஷயங்கள் அவ்வளவாகத் தெரியாது.தெரிந்தவரை சொல்கிறேன்.
    அத‌ற்குமுன் முத‌லில் ஒரு சோத‌னைப் ப‌திவு போட்டு 'த‌மிழ்ம‌ண‌த்'தில் வ‌ருகிறாதா என‌ப் பாருங்க‌ள். இருந்தால் விட்டுவிடுங்க‌ள்.
    இல்லையேல், த‌ங்க‌ள் ப்ளாக்க‌ர் அக்க‌வுண்டுக்குச் சென்று,
    1.click on 'settings'
    2.topside u may see 9 tabs named 'basic,publishing...etc.,'
    3.click on 'site feed' option.
    4'you may see 'Post Feed Redirect URL' and 'Post Feed Footer'
    5. within anyone of box, check ur feed url, like http://raviaditya.blogspot.com/feeds/posts/default
    ...

    6. if it was there, then check whre it is,...
    a) if it is in 'post feed redirect url', cut the feed url and paste it in 'post feed footer'...

    b) if it is in 'post feed footer', do the reverse what i said in 6.a)...
    c) if u cant find any feed url there, or find the boxes empty,
    copy the feed url, which i gave in point no. 5 .
    7. then save settings...thats all...
    the above method was not proved one except me.. i did the above method by 'trial and error method' in my blog.
    and morething...
    ப‌திவு புதுப்பிக்க‌ப் படாத‌து உங்க‌ளுக்கு ஒன்றும் பிர‌ச்சினையில்லை. இது உங்க‌ள் வ‌லைப்பூவை அடிக்க‌டி வ‌ருப‌வ‌ர்க‌ளுக்குத்தான் பிர‌ச்சினை. அப்ப‌டியில்லைஎன்றாலும் வ‌ருவோம். இப்ப‌டிப் ப‌ண்ணினால் இன்னும் எளிதாக‌ இருக்குமென்ப‌து என் எண்ண‌ம்.
    இன்னும் சுருக்க‌மாக‌ச் சொன்னால் நீங்க‌ள் புத்த‌க‌ம் அச்சிட்டுவிடுவீர்க‌ள். உங்க‌ள் இட‌ம் தேடி வ‌ருப‌வ‌ர்க‌ள் ப‌டிக்க‌லாம். என்னை மாதிரி சோம்பேறிக‌ள் ' அடடா.. இன்னும் ர‌விசார் புத்த‌க‌ம் வீடு தேடி வ‌ர‌லையே.. ஒரு எட்டு சைக்கிள் எடுத்துப்போய் பார்த்தாலென்ன‌..அஹ்.. இப்போதான் சாப்பிட்டோம். தூங்கி எழுந்து அப்புற‌ம் போய்க்கலாம்' ந்னு விட்டு விடுவோம். ந‌ஷ்ட‌ம் எங்க‌ளுக்குத்தான்.
    மேலே சொன்ன‌முறைக‌ள் தெளிவில்லையெனில், த‌ங்க‌ள் மெயில் ஐ.டியிலிந்து என‌து மின்ன‌ஞ்ச‌லுக்கு ஒரு சோத‌னை மெயில் அனுப்ப‌வும்.
    'ஸ்கிரீன்ஷாட்டில்' விள‌க்க‌ வ‌ச‌தியாயிருக்கும்.. அதில் அழ‌காக‌ இட‌ம் சுட்டிப் பொருள் விள‌க்க‌லாம்.
    thamizhparavai@gmail.com

    ReplyDelete
  12. வெள்ளையருடைய ஸ்டைல் அருமை... இறந்தவருக்கு உரிய கவுரவம் தரப்படவேண்டும் அது மனிதன், மிருகம் எல்லாரும் மதிப்புகுருயவைதான்.

    கதை நல்ல நடை. யானையைக் குறித்து கவலையடைந்தேன்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. நன்று ஜிஜி.

    ReplyDelete
  14. நாவல் நடை உங்கள் சிறுகதையில்..ஆரம்பமும் எழுதும் நேர்த்தியும் வெகு பிரமாதம்..ஆனால் ஏதோ ஒரு குறை....திடீரென்று முடிக்க வேண்டுமே என்று முடித்தது போல இருந்தது....நாவல் எழுதியுள்ளீர்களா..?

    ReplyDelete
  15. Blogger Sowmya said...

    // நாவல் நடை உங்கள் சிறுகதையில்..ஆரம்பமும் எழுதும் நேர்த்தியும் வெகு பிரமாதம்..//
    நன்றி

    //ஆனால் ஏதோ ஒரு குறை....திடீரென்று முடிக்க வேண்டுமே என்று முடித்தது போல இருந்தது...//

    அப்படியா?

    //.நாவல் எழுதியுள்ளீர்களா..?//

    இல்லை.நன்றி செளமியா.

    ReplyDelete
  16. நன்றி அனானி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!