அல்லது”நொந்து நூடுல்ஸ்மனநிலை”போன்ற உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் ராகம் .கேள்வி ஞானம்தான்.தவறு இருந்தால் திருத்தலாம்.
இந்த ராகத்தை சினிமா பாட்டில் எடுத்தாளாத இசைஅமைப்பாளரே இல்லை என்று சொல்லலாம்.போட்டு பின்னி எடுத்து விட்டார்கள்.காதல் தோல்வி தாடி பாடலுக்கு வசதியானது.
சோக ரசத்தில்தான் நிறைய பாடல்கள்.டூயட் ரொம்ப இல்லை.குஷி மூடில்(கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)-ரஹ்மான்.
கிளாசிகல் சிவரஞ்சினி முதலில் கேட்போம்.
மாலா சந்திரசேகர் என்பவர் புல்லாங்குழலில் வாசித்துள்ளார். 1.39 வரைதான் சிவரஞ்சனி ராகம்.அடுத்து வருவது காபி,சிந்து பைரவி.
குறை ஒன்றும் இல்லை
அடுத்து ஒரு ஹிந்தி பாடலை கேட்டு விட்டு பின் ராஜாவுக்குப் போவோம்.
இந்தப் பாட்டும் சிவரஞ்சனி ராகம்தான்.”உருகுதல்” மன நிலை?
படம்:மெகபூபா - ஆர்.டி. பர்மன் - கிஷோர்.
கனவு கன்னி தமிழச்சி ஹேமமாலினி
கனவு கண்ணன் ராஜேஷ்கன்னா
என்ன ஒரு மெலடி. கிஷோர் கிஷோர்தான்! இசை அட்டகாசம்.
இந்தப்பாட்டை எனது பால்ய நண்பர் அனந்தகிருஷ்ணன் என்கிற சேட்டுக்கு டெடிகேட் செய்கிறேன்.
நம்ம மேஸ்ட்ரோ இந்த சிவரஞ்சனியை எப்படி ஹாண்டில் செய்துள்ளார்?
இவரின் சிறப்பு ராகத்தின் ஸ்வரங்களை நேரடியாக காட்டாமல் இங்கேயும் அங்கேயும் ஒத்துவார்.
அவர் கிடார் வச்சிட்டு உருகுற பாட்டு ராகத்தை “குத்து” பாட்டிற்குப் போட்டிருக்கிறார் மேஸ்ட்ரோ.
(உற்றுக் கேட்டால் கிழ் சொன்ன பாடல்கள் இசைக்கோர்ப்பு/மெட்டு எல்லாவற்றிலும் ஒரு பொதுத்தன்மை இருக்கும். காரணம் சிவரஞ்சனி ராகம்.அடுத்து எல்லா பாட்டையும் புழிந்து எடுத்தால் மிஞ்சுவது “ஏக்கம்/சோகம்/உருக்கம்” ரசம்தான்.இதை ராஜாவாலும் மாற்ற முடியாது.. ராஜா அதை வித்தியாசமாகக் கொடுத்துள்ளார்.அவ்வளவுதான்)
பாடல்கள் எல்லாம் “குயில் பாட்டு வந்ததென்ன மானே”சாயல் அடிக்கும்) அதுவும் சி.ரஞ்சனிதான்.
குத்து:
அப்பானி திய்யானி (ஜகதேவ வீருடு அதிலோக சுந்தரி)
சோகம்:
குயில் பாட்டு ஓ...-என் ராசாவின் மனசிலே
(மேல் இரண்டு பாட்டின் தாளக்கட்டையும் கவனியுங்கள்)
காதல்:
வா..வா...அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்
ஆரம்ப(கிடார்+சிந்த்+வயலின்) இசைத்தீற்றலிலே சிவரஞ்சனியை காட்டுவது மேஸ்ட்ரோவின் மேதமை.அதுவும் ஸ்டைலாக.
ஏக்கம்:
நீதானே நாள்தோறும் - பாட்டு வாததியார்
காதல் (வித்தியாசமான உணர்வு)
வள்ளி வள்ளி என - தெய்வ வாக்கு
அற்புதமான மெட்டு
மகிழ்ச்சி
பாட்டுச் சொல்லி - அழகி
சாதனா சர்க்கம் அற்புதம்.
விரகதாபம்(டீசண்ட் குத்து?)
யம்மா ...யம்மா..-தொடரும்
இதில் ராகம் வித்தியாசமாக காட்டப்பட்டிருக்கிறது.
என்ன ஒரு stylish orchestration! Hats off Maestro! இதில் வரும் இசைக் கருவிகள் நாதம் வித்தியாசமானது.மேஜிக் போல் இசைக்கிறார்.
2.13 -2.30 “புதிர் போடும் கிளியே கிளியே...”3.46 - 4.03 ”ஒரு போதும் ராமன் இஙகே ”அட்டகாசம். சிவரஞ்சனியில் உருகுகிறார் SPB. தல பின்னிட்டீங்க! ”கிளியே” இஙகே ” என்ற வரிகளின்போது ராஜாவும் SPBயும் ரன்னிங் ரேஸ்.
ஸ்வர்ணலதா பாடி இருக்கலாமோ?
அடிக்கடி கேட்டு பழகிக்கொண்டால் நீங்களும் இந்த ராகத்தை அடையாளம் காணலாம்.ரொம்ப எளிமைதான். கிளாசிகலும் கேட்டுப் பழகுங்கள்.
ஏகப்பட்ட விஷயங்கள். முதல் ஆச்சிர்யம், மேரே நைனா பாடலும் சிவரஞ்சனி ராகத்தை ஒட்டி வருவது. வா வா அன்பே அன்பே, வள்ளி வள்ளி என வந்தாள், குயில் பாட்டு, பாட்டுச்சொல்லி பாடச்சொல்லி இதெல்லாம் ஒரே ராகத்தை ஒட்டி அமைந்த பாடல்களா? ரொம்ப வித்தியாசமான பாடல்கள்.
ReplyDeleteஎன்ன தான் நீங்க சொன்னாலும் இசைப்பயிற்சி இல்லாமல், ராகங்களை கண்டு பிடிக்கறது கஷ்டம். கண்டிப்பா உங்களுக்கு இதுக்கு பேக்கிரவுண்டு இருக்கணும் இல்லாட்டி ஜீன் ல இருக்கணும். எங்க வாத்தியார் சொன்னதன் படி, ஒரு ராகத்தின் ஆரோஹணம் அவரோஹணத்தை பெர்முட்டேஷன் & காம்பினேஷன் போட்டு உருவாக்குறது தான் மெட்டு. அப்போ ஒவ்வொரு ராகத்தோட ஆரோஹணம் அவரோஹணம் தெரிஞ்சிருந்தா தானே இதெல்லாம் கண்டு பிடிக்க முடியும்? கண்ணும் கண்ணும் பாட்டு சிவரஞ்சனியா? ரொம்ப ஆச்சிரியமா இருக்கு. இவ்ளோ தகவலுக்கு ரொம்ப நன்றி!
SUPER
ReplyDeleteநல்ல பகிர்வு நன்றி
ReplyDeleteBlogger அநன்யா மஹாதேவன்
ReplyDelete//முதல் ஆச்சிர்யம், மேரே நைனா பாடலும் சிவரஞ்சனி ராகத்தை ஒட்டி வருவது.//
ஹிந்தி பாடல்கள் நிறைய இருக்கு.
மேரா நாம் ஜோக்கர் புலம்பல் பாட்டு.
Jaane Kahan Gaye woh din
http://www.youtube.com/watch?v=E_6j2jnVt5k&feature=related
// என்ன தான் நீங்க சொன்னாலும் இசைப்பயிற்சி இல்லாமல், ராகங்களை கண்டு பிடிக்கறது கஷ்டம். கண்டிப்பா உங்களுக்கு இதுக்கு பேக்கிரவுண்டு இருக்கணும் //
கேள்வி ஞானம்தான்.கேட்டு கேட்டு உள் வாங்கினதுதான்.பண்டித ஞானம் இல்லை. ஆரோ/அவோ ஒரு புண்ணாக்கும் தெரியாது.
ரோட் சைட் மெக்கானிக்.
ஆ.மொபைல் என்ஜினியர் இல்லை.
நன்றி.
நன்றி எஸ்.மகராஜன்
ReplyDelete:-))
ReplyDeleteதன்னடக்கம் தான் தெரியறது.
ஹிந்திப்பாடல்கள் எல்லாம் ஹிந்துஸ்தானி ராகங்களை அடிப்படையாகக் கொண்டவைன்னு தான் நான் நினைச்சுண்டு இருந்தேன்.
ஒரு வாட்டி ஏ.ஆர்.ஆர் கிட்டே போய் என்ன உங்க பாட்டெல்லாம் ஒரே ராகமா இருக்குன்னு கேட்டப்போ, நான் என்ன பண்ண முடியும் இருக்கறது ஏழு ஸ்வரங்கள் தானேன்னு சொன்னதா ஏதோ பத்திரிக்கையில படிச்சேன். அப்போ சிரிப்பு தான் வந்தது. எப்படி ராகத்தை பேஸ் பண்ணி பாட்டு பண்றாங்கன்னு எனக்கு ரொம்ப ஆச்சிர்யமா இருக்கும்.
quite a lot of info.. very interesting and informative.
யப்பா..!!!! எம்புட்டு விஷயம் இருக்கு..கலக்கல் தொகுப்பு தல ;)
ReplyDeleteBlogger எட்வின் said...
ReplyDelete// நல்ல பகிர்வு நன்றி//
நன்றி எட்வின்.
Blogger அநன்யா மஹாதேவன் said...
ReplyDelete// ஹிந்திப்பாடல்கள் எல்லாம் ஹிந்துஸ்தானி ராகங்களை அடிப்படையாகக் கொண்டவைன்னு தான் நான் நினைச்சுண்டு இருந்தேன்//
இது கூட ஹிந்துஸ்தானிதான்.
ராஜா எல்லா ராகங்களையும் தொட்டுவிட்டார்.”இதழில் கதை எழுதும் நேரம்” லலிதா ராகமாம்.எனக்கு இதைப் பற்றித்
ஒன்றும்தெரியாது.
நன்றி.
Blogger கோபிநாத் said...
ReplyDelete// யப்பா..!!!! எம்புட்டு விஷயம் இருக்கு..கலக்கல் தொகுப்பு தல ;)/
நன்றி.
lot of informative news
ReplyDeleteஅருமையான தொகுப்பு.
ReplyDeleteசிவரஞ்சனி சோக நிவாரணி இல்லையோ... :)) சிவரஞ்சனி சோகமும் குதூகலமும் இணைஞ்சது,
அப்டி பார்த்தால், அடி ஆத்தாடி இளமனசு ரெக்க கட்டி பறக்குது சரிதானா... அதுவும் சிவரஞ்சனிதான் :)
பூ வண்ணம் போல நெஞ்சம்...
நீ தானே நாள்தோறும் நான் பாடும் காவியம்..
இந்த மூன்று பாட்டும் என் all time favourites.:)
அப்புறம் புகழோ புகழ் 'தேரே மேரே பீச் மே கைசா ஹை யே பந்தன்' அது...
ReplyDeleteஎனக்கு பிடிச்ச ... ரிம் ஜிம் கே கீத் மேகா gகாயே ஹாயே பீகி பீகி.... அது
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே...........
ReplyDeleteஒ ப்ரியா ப்ரியா.............
அடி ஆத்தாடி இளம் மனசொண்ணு.......
All இளையராஜா
அவள் ஒரு மேனகை, என் அபிமான தாரகை......
சங்கர் கணேஷ்
ஜானே கஹான் வஹே ஓதின்........ (மேரா நாம் ஜோகர் - லக்ஷ்மிகாந்த் பியாரேலால்)
இதை தவிர ராஜாவின் மலையமாருதம் கையாண்டல் மற்றுமொரு அசத்தல்! ஒரு நாலு மாணிக்கங்களை நம் ராகதேவன் இளையராஜா கொடுத்திர்க்கிறார்! ஒரு ஓடை நதியாகிறது என்ற படத்திலிருந்த ஒரு பாடலை இரு வாரங்களுக்கு முன் கேட்டவுடன் பாரத ரத்தினா ஏன் இவருக்கு கொடுக்க கூடாது என்று நினைத்தேன்! இளையராஜா ஒரு ஞானி, ஒரு மாபெரும் ஆற்றல் படைத்த இசை சேவகன்! இந்த்யாவின் முத்து, தமிழகத்தின் அழியா சொத்து!!!
நல்ல தொகுப்பு.....நல்ல பாடல்கள்
ReplyDeleteநல்ல தொகுப்பு.....நல்ல பாடல்கள்
ReplyDeleteBlogger LK said...
ReplyDelete// lot of informative news//
நன்றி
Blogger Vidhoosh(விதூஷ்) said...
ReplyDelete// அருமையான தொகுப்பு//
நன்றி
// சிவரஞ்சனி சோக நிவாரணி இல்லையோ... :)) சிவரஞ்சனி சோகமும் குதூகலமும் இணைஞ்சது//
சோகம் நிறைய சாயல்.பதிவு சொன்ன மாதிரி அதன் மைய உணர்ச்சி சோகம்/ஏக்கம்/நோகல்.
குதூகலம் இல்லை.
//அப்டி பார்த்தால், அடி ஆத்தாடி இளமனசு ரெக்க கட்டி பறக்குது சரிதானா... அதுவும் சிவரஞ்சனிதான் :)//
ஆமாம்.”பொன்மானே கோபம் ஏனோ”
“தென்றல் காற்றே” ”வா வா அன்பே”
”சோலை புஷ்ப’”ஓ ப்ரியா”இன்னும் இருக்கு.நான் எடுத்தது ஒவ்வொரு உணர்ச்சியிலும் ஒன்று என்ற கணக்கில்.
//பூ வண்ணம் போல நெஞ்சம்...//
சலீல் செளத்ரி.நல்ல மெலடி.
Blogger Vidhoosh(விதூஷ்) said...
ReplyDelete// அப்புறம் புகழோ புகழ் 'தேரே மேரே பீச் மே கைசா ஹை யே பந்தன்' ரிம் ஜிம் கே கீத் மேகா gகாயே ஹாயே பீகி பீகி.... //
ஹிந்தியில் நிறை கையாளுவார்கள்.
நன்றி.
Blogger NO said...
ReplyDeleteபெரிய லிஸ்டே இருக்கு.நன்றி
//இதை தவிர ராஜாவின் மலையமாருதம் கையாண்டல் மற்றுமொரு அசத்தல்! ஒரு நாலு மாணிக்கங்களை நம் ராகதேவன் இளையராஜா கொடுத்திர்க்கிறார்!//
இவர் வித்தியாசமாக கொடுப்பார்.அதான் அருமை.
நான் குறிப்பிட்ட ”யம்மா யம்மா” வித்தியாசமான சிவரஞ்சனி.
// இளையராஜா ஒரு ஞானி, ஒரு மாபெரும் ஆற்றல் படைத்த இசை சேவகன்! இந்த்யாவின் முத்து, தமிழகத்தின் அழியா சொத்து!!!//
சத்தியமா சார்!
Blogger பாச மலர் / Paasa Malar said...
ReplyDelete// நல்ல தொகுப்பு.....நல்ல பாடல்கள்//
நன்றி பாச மலர்.
nice informative article again Ravi .. thanks a lot for sharing .
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு
ReplyDeleteஇந்த மாதிரி மாயாமாளவகௌளை பற்றி எழுத முடியுமா Please
Blogger Heam said...
ReplyDelete//nice informative article again Ravi .. thanks a lot for sharing //
நன்றி.
Blogger Annaraj said...
ReplyDelete//ரொம்ப நல்லா இருக்கு
இந்த மாதிரி மாயாமாளவகௌளை பற்றி எழுத முடியுமா Please//
வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.
எனக்கு கேள்வி ஞானம்தான்.மாயா ஆழ்ந்துக் கேட்டுவிட்டுதான் எழுத முயற்சிக்கனும்.டிரைப் பண்ணுகிறேன்.
டெடிகேட் செய்ததிற்கு நன்றி. முன்பு மாதிரி நிறைய பேச வேண்டும் ஒரு நாள். நேரம் கூடி வர வேண்டும். “டெடிகேட்” தமிழ் வார்த்தை எனன?
ReplyDelete“டெடிகேட்” = சமர்பணம்
ReplyDeleteசேட்டு..! “மேரே நைனா”பாட்டு மறக்க முடியுமா?
ReplyDelete//Blogger radhu said...
“டெடிகேட்” = சமர்பணம்//
சமர்ப்பணம் வடமொழி சொல்.
அர்பணிக்கிறேன்?
This comment has been removed by the author.
ReplyDeleteநானும் கேள்வி ஞானம்தான் ஆன உங்க அளவுக்கு இல்ல.
ReplyDeleteமாயா எதிர்பார்க்கிறேன்.
Study for Violin-How to Name it - மாயாவா ??
Blogger Annaraj said...
ReplyDelete// நானும் கேள்வி ஞானம்தான் ஆன உங்க அளவுக்கு இல்ல//
எல்லா விதமான இசையும் தொடர்ந்து கேளுங்கள்.கொஞ்சம் அலுப்பு தட்டும்.விடாமல் கேட்கனும்.
// மாயா எதிர்பார்க்கிறேன்.//
முயற்சிக்கிறேன்.
// Study for Violin-How to Name it - மாயாவா ??//
ஆமாம்.ஆனால் தலைப்பு சேம்பர் வெல்கம்ஸ் தியாகராஜா? இந்த ஆல்பத்தில் நிறைய தலைப்பு குழப்பம் உண்டு.
தலைவரே கலக்கல் தொகுப்பு,,,,
ReplyDeleteஇந்திப் பாடல் அவ்வளவாகக்கேட்பதில்லை..ஆனாலும் இப்பாடல் பிடிட்திருந்தது....
//அப்பானி திய்யானி (ஜகதேவ வீருடு அதிலோக சுந்தரி)//
இதுவும் சிவரஞ்சனியா... எனக்குப் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை...
இது வட இந்தியாவையும் உலுக்கின மெட்டாச்சே...(தக் தக் கர்னே லகா)
யம்மா யம்மா பாடல் இன்னும் சில் முறை கேட்டால்தான் சூட்சுமம் பிடிபடும்..அறிமுகத்திற்கு நன்றி சார்...
தமிழ்ப்பறவை said...
ReplyDelete//தலைவரே கலக்கல் தொகுப்பு,,,,
இந்திப்பாடல்அவ்வளவாகக்கேட்பதில்லை..ஆனாலும் இப்பாடல் பிடிட்திருந்தது....//
அருமையானப் பாட்டு.
பாட்டுக்காகதான் இந்தப் படம் பார்த்தேன்.அப்போது தெரிந்த ஒரு இந்தி சொல்ல் “கியா”
// இது வட இந்தியாவையும் உலுக்கின மெட்டாச்சே...(தக் தக் கர்னே லகா)//
ஆனந்த் மிலிந்த் சுட்டது.
//ம்மா யம்மா பாடல் இன்னும் சில் முறை கேட்டால்தான் சூட்சுமம் பிடிபடும்..அறிமுகத்திற்கு நன்றி சார்...//
நான் சொன்ன வரிகளைப் பற்றிச் சொல்லுங்கள். நன்றி
sivaranjani ராகம் பற்றிய அருமையான ஜனரஞ்சகமான தகவல்
ReplyDelete