
நான் நுழையும் போதெல்லாம்
ஏதாவது ஒரு பிணம்
என்னைக் கடந்து விடுகிறது
லயோலா காலேஜ் சுரங்கப்பாதையில்
டொக்கு விழுந்த கிழட்டுப் பிணங்கள்
சொர்க்கமா நரகமா வாய் பிளந்து
மோட்டு வளையைப் பார்த்தபடி
வாய்க்கரிசியை விரயம் செய்தபடி
ரொம்ப அபூவர்மாக கடக்கும்
டீன் ஏஜ் பெண் பிணங்கள்
முக அழகைப் பார்ப்பதுண்டு
சைட் அடிக்க ஆசை
அடிப்பதில்லை
பயம்தான் காரணம்
பித்ருக்களுக்கு ஏதாவது செய்தி உண்டா
கேட்கும் சில பிணங்கள்
உலகமே தெரியாமல்
பூமஞ்சத்தில் தூங்கும் பிணங்கள்
போவோர் வருவோரை நாட்டாமைப் போல்
உட்கார்ந்தப்படியே பார்க்கும்
பிணங்கள்
சில பிணங்கள் மூக்குக் கண்ணாடியைக் கூட
அவிழ்ப்பதில்லை
அப்படியே கிளம்பிவிடுகிறது
செல்லில் பாட்டுக் கேட்டுக்கொண்டே
இப்படி பிணங்களை ரசிக்கையில்
ஒரு நாள் ஒரு மிடில் ஏஜட் பிணம்
செம்மையாக முறைத்தது
முகம் சிவந்துவிட்டது
அன்றையிலிருந்து
ஹாரன் அடிப்பதில்லை
பூக்களைக் கூட மிதிக்காமல் ஓட்டுகிறேன்
பிணங்களைப் பார்த்தால்
stand at ease லிருந்து attentionக்கு
வந்துவிடுகிறேன்
புத்திப்போட்டுக்கொள்கிறேன்
”உச்சு”கொட்டுகிறேன்
ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
இதுதான் லாஸ்ட் என்கிறேன்
இனிமே யாருமே சாகக் கூடாது
வாவ்......
ReplyDeleteதலைவரே....எ.கொ.சா.இது.
சென்னையில் பிணங்களின் ஊர்வலம் ....
ReplyDeleteமனதில் இனம் புரியா கவலைகளை விதைத்து செல்லும் ...
Blogger கும்க்கி said...
ReplyDelete//வாவ்......//
நல்லா இருக்கா?
// தலைவரே....எ.கொ.சா.இது.//
நல்லா இல்லையா?
Blogger கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDelete// சென்னையில் பிணங்களின் ஊர்வலம் ....
மனதில் இனம் புரியா கவலைகளை விதைத்து செல்லும் ...//
கருத்துக்கு நன்றி.
அன்றையிலிருந்து
ReplyDeleteஹாரன் அடிப்பதில்லை
பூக்களைக் கூட மிதிக்காமல் ஓட்டுகிறேன்
நல்ல கவிதைங்க. :)
ReplyDeleteநன்றி மால்குடி
ReplyDeleteநன்றி விதூஷ்
ReplyDeleteGood.super.
ReplyDeleteMay 24, 2010 12:09 PM
ReplyDeleteBlogger ஸ்ரீ said...
// Good.super.//
நன்றி ஸ்ரீ
நல்லா இருந்ததுங்க :)
ReplyDeleteBlogger TKB காந்தி said...
ReplyDelete// நல்லா இருந்ததுங்க :)//
ரொம்ப நன்றி.
kalaakkal...agmaark ungka brand kavithai ithu... rasithaensir...
ReplyDelete