வேற யாரும் இந்த கதய சொல்லக்கூடாது.நான் விக்னேஸ்வரிதான் இந்த கதய சொல்லுவேன்.எந்த விசயமும் விட்டுப்போவாது.இண்ட்ரெஸ்டிங்கா சொல்லுவேன்.
ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பா இருந்தாங்க.அந்த ஊர் ஏழு கெணறுன்னு வச்சுக்குவோம்.சிட்டிலதான் இருக்கு.நார்த் மெட்ராஸ்.வொர்க்கர்ஸ் ஏரியான்னு சொல்லுவாங்க.வள்ளலார் கூட அங்கதான் அடிக்கடி ரவுண்டிங் வந்தார்னு சொல்லுவாங்க.
இங்க பேசற லாங்குவேஜ்ஜூ மெட்ராஸ் லாங்குவேஜ்ஜூ.ஒரு தடவ “கத்தொந்துக்குது பாரு”ன்னு சித்திப் பொண்ணு ரம்யா கைல சொன்னப்போ திருதிருன்னு முழிச்சா.அவ கொயம்புத்தூர்காரி.”கதவு தொறந்திருக்குன்னு” விளக்கி சொன்னப்போ விழுந்து விழுந்து சிரிச்சா.
அவ ஊருக்கு கிளம்பசொல “நீ வரசொல....குமுதினியும் இட்டாந்துரு”ன்னு கலாச்சிட்டுப் போனா.
அவங்களுக்கு விக்னேஸ்வரின்னு ஒரு பொண்ணு அவ கூட பொறந்த ரெண்டு தங்கச்சி ரெண்டு அண்ணன்.சண்முகம் கவர்மெண்ட் காலேஜ்ல கிராசுவேசன் முடிச்சவ.(அது கம்ம நாயக்கருங்க மேனஜமெண்ட்.நாங்களும் கம்ம நாயக்கருங்க)
கிராசுவேசன் முடிச்ச வுடனே கிரேட் பேசன்ஸ் ரெடிமேட் கடைல சூப்பருவைசரா ஆயிட்டா.
அவ ஒரு நாளு யோசிச்சா.பொறக்கனும்,தவழனும்,நடக்கனும் அப்பால ஸ்கூலுக்குப் போவனும்.அதுக்குப்பிறவு காலேஜ் போவனும்.அது முடிஞ்சி வேல.அப்பால கல்யாணம்,
கொளந்தன்னு லைப்பு.டிபரெண்டா ஒண்ணும் இல்ல.
மறுபடியும் யோசிச்சா.ரொம்ப பெசலான யோசன.வாழப்போற 70 வருசத்த அஞ்சஞ்சு வருசமா பிரிச்சுக்கிட்டா.14 பார்ட்டா ஆயிடிச்சி. ஒவ்வொரு அஞ்சு வருசத்துக்கும் ஒரு ஆளா வாழனும்.
ஆனா இதுல பொறக்கனும்,தவழனும்,நடக்கனும் அப்பால ஸ்கூலுக்குப் போவனும்ன்ரது கெடையாது.டேரக்டா பிடிச்ச பெர்சனா மாறி வாழனும்.
முதல் அஞ்சு வருசம் Customer Relations Manager, ICICI Bankங்கல வாழ்ந்தா.அவ பிரெண்டுகெல்லாம் லோன் கொடுத்தா.ஸ்டைல தப்பர்வேர்ல டிபன் எடுத்துட்டுப் போன.ரெண்டு செல்போனு.அடுத்த அஞ்சு வருஷம் நடிகை நயந்தாராவா ஜட்டி பிரா டிரஸ் போட்டு “பச்சக்குன்னு” ஸ்விம்மிங் பூல் தண்ணீர் தெறிக்க எழுந்து நடந்தா.கோவால ரூம் போட்டு சல்மான்கான
என்ஜாய் பண்ணினா.அஞ்சு வருசம் முடிஞ்சுப்போச்சு
அதுக்கு அடுத்த பார்டல ஏகே பார்டிசெவன் கன்னு வாங்கி தமிழ்நாட்ல இருக்கிற பிராடுங்ககெல்லாத்தையும் சுட்டு தள்ளினா.ஐய்யோ அம்மான்னு எல்லாம் சவுண்டு வுட்டு செத்து போச்சு.எவ்வளவு பேரு. நாலர வருசம் ஆயி தமிழ்நாடு கிளினா ஆச்சு. ஒரு பார்டல பூக்காரியா இருந்து படிச்சு ஐஏஎஸ் எழுதி
முன்னேற்னா.சுனாமியப்போ எல்லாரையும் காப்பாத்தினா. குழந்தைகளா தத்து எடுத்துகிட்ட.
ஒரு அஞ்சு வருசம் டீச்சரா இருந்தா. அடுத்து திருநங்கையா இருந்தா.ஜெயலலிதா மேடம்.ஒரு பார்டல ரஞ்சிதாவுக்கு லாயார இருந்து பத்திரிக்கை டிவியெல்லாம் கிழிச்சு தொங்கவிட்டா.ஒரு தடவை ஏர்டெல் சூப்பர் சிங்கர்ல பர்ஸ்ட் வந்து விஜய் ஆண்டனி மியூசிக்ல பாடினா.
இப்படியே மொத்தம் 45(9*5) வருசம் ஓடிப்போச்சி. யோசனய நிறுத்தி்ன எடைல அவளுக்கு அதான் நம்ம விக்னேஸ்வரிக்கு ஒரு லவ் செட்டாயிடுச்சி.ஆனா வீட்ல ஒத்துகிடல.அந்த பையன் இருபத்திநாலு மன தெலுங்கு செட்டியாரு.இவங்க கம்ம நாயக்கருங்க.செட் ஆவாதுன்னுட்டாங்க.
ரெண்டுபேரும் வீட்ட விட்டு ஓடி மேரேஜ் பண்ணீட்டாங்க.அதே நார்த் மெட்ராஸ்ல கர்ணா முதலியார் தெருவுலதான் குடுத்தனம்.
அவ யோசிச்சதுல அஞ்சுபார்ட் இன்னும் பெண்டிங்கலதான் இருக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!