Saturday, May 22, 2010

செம்மொழி மாநாடு-தீம் சாங்க்- ஏ.ஆர்.ரஹ்மான்


செம்மொழி மாநாடு மைய நோக்கு (தீம் சாங்க்) பாட்டு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு சவால் சுவாசிக்க புது காற்று.40% வெற்றிப்பெற்று விட்டார் என்றுசொல்லலாம்.
இன்னும் கூட ஹோம் வொர்க் செய்திருந்தால் 100/100 வாங்கி இருக்கலாம்.


தமிழ்த்தாய் வாழ்த்தான ”நீராருங் கடலுடுத்த நில மடந்தை”போல ரொம்பவும் எளிதாக  இரண்டு பேரை வைத்துப் (டிஎம்எஸ்-சுசிலா?) பாடிய காலம் வேறு. இந்த காலம் வேறு. இந்தப் பாட்டில்  30 பேர் பாடி உள்ளதாக(நன்றி:” தி ஹிண்டு” ) சொல்கிறது.

உண்மையாக சவால்தான்.”மொளி” எங்கும் வந்துவிடக்கூடாது.திறமையாக கையாண்டிருக்கிறார்.ஆனால் சில இடங்களில் “”மொளி”  வருகிறது.

”நீராருங் கடலுடுத்த” பாட்டின் ராகம் மோகனம். ரஹ்மானும் இதேயே “பிறப்பொக்கும்” பாட்டிலும் பயன்படுத்தி உள்ளார் என்று நினைக்கிறேன்.(யூகம்தான்.தவறு இருந்தால் திருத்தலாம்). வேறு ஒரு ராகமும் வருகிறது.

கலைஞர்  தொலைக்காட்சியின் signature musicக்கும் மோகனம்?

மோகனம்  உலகெங்கிலும் உள்ள ராகம் என்று சொல்லுவார்கள்.எளிதாக மனதில் படியும்.catchy tune?மோகனமானது.

கலைஞர்  எழுதிய வரிகள் என்ற டென்ஷன் +உச்சரிப்பு+கருவி சத்தம் மிகாமை+மனதில் படிய எளிய மெட்டு+வீரத்தொனி+தமிழ் நாட்டின் மணம்+தமிழ் நாட்டு இசைக் கருவிகள்+30 பேர் சங்கிலித் தொடர் குரல்+ரஹ்மான் டச் என்று வித விதமான டென்ஷன் ரஹ்மானுக்கு.

பாடல் 5.50 நிமிடம் ஓடுகிறது.முதலில் டி.எம்.செளந்திரராஜன் “பிறப்பொக்கும்”எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர்“ தன் குரலில் ஆரம்பிக்க ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என ரஹ்மான் தொடர்கிறார்(கத்துகிறார்)
.பின்னார் கதம்பமாக குரல்கள் தொடுத்துக்கொண்டேப் போய்(நடு நடுவே இசைக் கதம்பம் வேறு)கத்தல் (கதறல்?) (ரஹ்மான டச்?)போல் கத்திக்கொண்டே முடிகிறது.
 
பல்லவி முடிந்து 0.42 ல் அற்புதமான இனிமையான  மெலிதான இசை பின்னணியில் “தீதும் நன்றும் பிறர்” என்று பாடும் ஹரிஹரன் குரல் அருமை.தொடரும் இசையும் குரல்களும் அருமை.

ஸ்ரீனிவாஸ்,பி.சுசிலா,சின்மயி,டி.எல்.மகராஜன்,ரஹ்மான், விஜய் யேசுதாஸ் என குரல்களை அடையாளம் காண முடிகிறது.2.55 - 3.29 வரை ரஹமான் ”செம்மொழியாம” என்று மேல் சுரத்தில் பாட பின்னணியில் பெண்களின் (ஜெயஸ்ரீ,செளமியா,நித்யஸ்ரீ)மோகன ஹம்மிங் அதைத் தொடரும் தவில்/நாகஸ்வரம் .இன்னும் கூட நீட்டி இருக்கலாம்.நடுவே drum pad  தட்டல் எதற்கு?

3.39 - 4.00 வரை தமிழ் தெரியாத மேல் நாட்டவர் பாடுவது போல் குரல்கள்.படு ஹிம்சை.மேற்கத்திய இசையை வித்தியாசமாகக் கொடுக்கலாமே?கடித்துக்கொதற வேண்டுமா?

பிறகு 4.11 -ல் ஒரு ஆலாபனையுடன் ஆரம்பித்து “அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து” என்று ஒருவர் ஆரம்பித்து பாடுகிறார்.அட்டகாசம்! யார் இவர்?(டி.எம்.கிருஷ்ணா?)இதுவரை கேட்டறியாத வித்தியாசமான குரல்.சூப்பர் ரஹ்மான்! பிறகு 4.41  வரை அருமையான பின்னணி இசை குரல்கள்.

இவ்வளவு நன்றாக வரும் பாட்டு  பல்டி அடித்து  crash  landed at 4.41.

காரணம்......4.41முதல் ஒரு அபஸ்வர பெண்(கள்) குரல்மேற்கத்திய சாயலில்  பாட்டைப் பாடாய் படுத்தி செம்மொழியைக் குத்திக்கொல்கிறது.அந்த பெண் குரல் ஹம்மிங்கை(இம்சையை) ஏன் இடையே கொண்டு வந்தார் ரஹ்மான்.

 இது ஸ்ருதி ஹாசன்? சுத்தமாக் சுருதியே இல்லை.அடம் பிடித்து விழுந்து விழுந்து கத்துகிறார்.

பாட்டின் இடையே வரும் ஹை பிட்ச் கத்தல்களையும் குறைத்திருக்கலாம்.

ஆரம்பத்திலும் ஒரு பெண் சுருதியே  இல்லாமல் பாடுகிறார்.

அந்த 30 பேர்.(நன்றி: The Hindu)
The singers include A.R. Rahman, Yuvan Shankar Raja, T.M. Soundararajan, P. Suseela, Aruna Sairam, Bombay Jayashri Ramnath, Karthik, Harini, Chinmayi, Hariharan, Swetha Mohan, G.V. Prakash, Benny Dayal, Srinivas, Vijay Yesudas, T.L. Maharajan, Nithyasree Mahadevan, S. Sowyma, M.Y Abdul Gani, M. Khaja Mohideen, S. Sabu Mohideen, P.L. Krishnan, Naresh Ayyar, Gunasekar, Sruti Hassan, Chinna Ponnu, Suseela Raman, Blaze, Kash and Rehana.

இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய:((நன்றி: The Hindu)

செம்மொழியாம தமிழ் மொழியாம்


 பாட்டின் வரிகள்:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர்
 யாதும் ஊரே  யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென

உரைத்து வாழ்ந்தோம் -
உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
  
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும் அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான  தமிழ் மொழியாம்
 செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்

 கம்பநாட்டாழ்வாரும் கவியரசி அவ்வவை நல்லாளும்
 எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்திற்க்கும்
வித்தாக விளங்கும் மொழி

செம்மொழியான  தமிழ் மொழியாம்
 செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம்மொழி நம் மொழி – அதுவே
செம்மொழி – செம்மொழி – நம் தமிழ் மொழியாம்
 தமிழ்மொழியாம

செம்மொழியான  தமிழ் மொழியாம்
 செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்
செம்மொழியான  தமிழ் மொழியாம்

வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே…

12 comments:

 1. நன்றாக கூர்ந்து கவனித்து எழுதி உள்ளீர்கள்

  ReplyDelete
 2. //3.39 - 4.00 வரை தமிழ் தெரியாத மேல் நாட்டவர் பாடுவது போல் குரல்கள்.// why blood? same blood! blunder!! எப்படி இவ்ளோ உச்சரிப்பு பிழையை அனுமதிச்சாங்க? அந்த பீஸ் தேவை இருக்கலை! நல்லாவும் இல்லை!

  அந்த க்ராஷ் லேண்டிங் உபயம் = ஸ்ருதி ஹாஸன். கொடுமை! மீண்டும் இங்கே சேம் ப்ளட்!

  ReplyDelete
 3. க்ரூப் கோரஸ் & நித்யஸ்ரீ, பாம்பே ஜெயஸ்ரீ கமகங்கள் அருமையோ அருமை! நாட்டுப்புற இசைக்கோப்பு ரொம்ப நல்லா இருக்கு!

  ReplyDelete
 4. Blogger பாலாஜி said...

  //நன்றாக கூர்ந்து கவனித்து எழுதி உள்ளீர்கள்//

  நிறைய கேட்டுப் பழகிக் கொண்டால் நிறைய விஷயங்கள் பிடிப்படும்.

  நன்றி பாலாஜி.

  ReplyDelete
 5. Blogger அநன்யா மஹாதேவன் said...

  // அந்த க்ராஷ் லேண்டிங் உபயம் = ஸ்ருதி ஹாஸன். கொடுமை! மீண்டும் இங்கே சேம் ப்ளட்!//

  நன்றி பதிவில் சேர்த்துவிட்டேன்.
  மறுபடியும் ஒரு முறைக் கேட்டு உறுதி செய்தேன்.

  நன்றி.
  //க்ரூப் கோரஸ் & நித்யஸ்ரீ, பாம்பே ஜெயஸ்ரீ//

  செளமியாவும் இருக்கிறார்.
  மறந்துவிட்டது. இப்போது சேர்த்து விட்டேன்.

  ReplyDelete
 6. ரவி!
  பாடல் இசைக் கோப்புக் குறித்த சரியான அவதானிப்பு.
  ரகுமானின் வந்தே மாதரம் சாயலும் வருகிறது.
  சுருதிப்பிழை ஸ்ருதி, உச்சரிப்புப் பிழையும் தாராளமாகவே.
  தற்காலம் சுட்டப்போய் தடுக்கி விழுந்துள்ளதாகவே தெரிகிறது.

  நீங்கள் குறிப்பிட்டுள்ள
  அந்தப் புதுக்குரல் அற்புதம்

  ReplyDelete
 7. Blogger மலைநாடான் said...
  .
  // ரகுமானின் வந்தே மாதரம் சாயலும் வருகிறது.//

  100% சரி.இந்தக் கத்தல் டெக்னிக்கை எப்போது விடப்போகிறார்.

  // சுருதிப்பிழை ஸ்ருதி, உச்சரிப்புப் பிழையும் தாராளமாகவே.
  தற்காலம் சுட்டப்போய் தடுக்கி விழுந்துள்ளதாகவே தெரிகிறது//
  குழுவாகப் பாடும்போது கூட யாரோ “செம்மொளி” என்று உச்சரிக்கிறார்.


  // நீங்கள் குறிப்பிட்டுள்ள
  அந்தப் புதுக்குரல் அற்புதம்//

  நன்றி அன்பரே.

  ReplyDelete
 8. நியாயமான விமர்சணம்

  பாராட்ட வேண்டிய அம்சங்களை பாராட்டி, தட்ட வேண்டியதை தட்டியுள்ளீர்கள்

  கம்பரும் அவ்வையும் வரும் பகுதி பிறகு சேர்க்கப்பட்டதாக அறிகிறேன்

  அது தான் 3:30 முதல் 4:00 வரை ஜெர்க் அடிக்கிறதோ

  ReplyDelete
 9. தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதம் போன்ற எளிதான ட்யூன்கள் என்றால் பள்ளிகளில் பாடுவதற்கு இலகுவாக இருக்கும்

  இந்த பாட்டை பள்ளிக்குழந்தைகள் பாடுவது எளிதா

  --

  மற்றப்படி (சிவாஜி) சஹானா தவிர கடந்த சில வருடங்களில் வந்த ரகுமான் பாடல்கள் எதையும் winamp loopல் கேட்பதில்லை. கடந்த சில வருடங்களாக வந்த ரகுமான் பாடல்களை விட இந்த பாடல் சிறப்பாக வந்துள்ளது என்பது என் கருத்து

  --

  ReplyDelete
 10. Blogger புருனோ Bruno said...

  // நியாயமான விமர்சணம்//

  இதற்காக நிறைய மெனக்கெட வேண்டி இருக்கிறது.

  வீட்டில் உள்ளவர்களத் தொல்லைப்
  படுத்தாமல் விடிகாலை 2.00-4.00 பல தடவை கேட்டு குறிப்பெடுத்து எழுதினது.(நடுவே அலுப்பும் வருகிறது)

  ஆனால் உங்கள் கருத்து ஊக்கத்தைத் தருகிறது.

  // கம்பரும் அவ்வையும் வரும் பகுதி பிறகு சேர்க்கப்பட்டதாக அறிகிறேன்//

  எனக்கு இது புது தகவல்.

  //அது தான் 3:30 முதல் 4:00 வரை ஜெர்க் அடிக்கிறதோ//

  இருக்கலாம்.இந்த ஜெர்க்கை ஒரு small home work செய்து தவிர்த்திருக்கலாம்.அடுத்து கலைஞர் டென்ஷன்?

  நன்றி.

  ReplyDelete
 11. Blogger புருனோ Bruno said...

  //இந்த பாட்டை பள்ளிக்
  குழந்தைகள் பாடுவது எளிதா//

  எளிது கிடையாது.DDல் 90ல் வரும் தேசிய ஒருமைப்பாட்டு பாட்டைப்போல் (“சுரு ஹமாரா”)(சரியா?)அடிக்கடி டீவி/ரேடியோவில்
  ஒலி/ஒளிபரப்ப வேண்டும்.

  // மற்றப்படி (சிவாஜி) சஹானா தவிர கடந்த சில வருடங்களில் வந்த ரகுமான் பாடல்கள் எதையும் winamp loopல் கேட்பதில்லை.//

  ஏன்? winamp தரம் இல்லையா?

  // கடந்த சில வருடங்களாக வந்த ரகுமான் பாடல்களை விட இந்த பாடல் சிறப்பாக வந்துள்ளது என்பது என் கருத்து//

  ஆமாம்.இன்னும் சிறப்பாக செய்யலாம்.ஹோம்வொர்க் செய்யாமல் அவசரப்பட்டு flat notes மற்றும் ஹை பிட்ச் குரல் இசைத்துவிடுகிறார்.சாயல் வந்துவிடுகிறது.அழகு இல்லாமல் உணர்ச்சியற்று ஆகிவிடுகிறது.

  வரிகளை நிறைய வளைத்து நெளித்து அழகுப்படுத்திக் கொடுக்க வேண்டும்.மேற்கத்திய இசையும் இதில் ஒரு மாதிரி ஆகி விட்டது.

  அதையும் வளைத்து நெளித்து அழகுப்படுத்திக் கொடுத்திருக்கலாம்.

  மாத்தி யோசிங்க ரஹ்மான்!

  நன்றி புருனோ.

  ReplyDelete
 12. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்.' -'யாவரும் கேலீர்' என்று தமிழையே கேலிக் கூத்து விட்டார்கள்.செம்மொழியான தமிழ் மொழி?தமிழ் என்னும் மிக அழகான மொழிக்கே இழுக்கு!!

  மற்றபடி, டி.எம்.கிருஷ்ணா மிகப் பிரபலமான கர்நாடக இசைப் பாடகர்.மிக இனிமையான குரல் வளம் கொண்ட இவரும் ராஜா ரசிகர்தான்!

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!