பல பல வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு பத்திரிக்கையில் படித்து இன்னும் என் மனதை விட்டு அகலாத ஒரு சிறு கதை. இது கிரைம் த்ரில்லர்.
பின்னால்தான் தெரிந்தது இது ஒரு ஆங்கில குறும்படத்திலிருந்து சுட்ட கதை என்று.
கதை இதுதான்.......(என் பழைய நினைவிலிருந்து வருவதால் கொஞ்சம் பில்ட் அப் இருக்கலாம்.)
திருமணம் முடிந்த கையோடு தேன் நிலவு கிளம்புகிறார்கள் ஒரு இளம் தம்பதியர்.முதல் இரவு அங்குதான் என்று பிடிவாதமாக இருக்கிறார் புது கணவன்.ஆயிரம் கனவுகள் கற்பனைகளோடு ஒரு வட இந்திய குளிர் மலை பிரதேசத்திற்குச் செல்கிறார்கள்.
அவர்கள் தங்கி இருப்பது ஒரு காட்டேஜ்.இரவு நேரம். ”என்னுள்ளே என்னுள்ளே “ என்று கனவுகள் மெய்யாகும்போது ஜன்னலில் இருந்து ஒருவன் குதிக்கிறான். புது மனைவியை கட்டிப்பிடித்து வாயை மூடுகிறான். மனைவி (அவங்க ஒரு விளையாட்டு வீராங்கனை?)ஒரு திமிரு திமிறி அவனைத் தள்ள அவன் விழுகிறான்.விழும்போது கட்டிலில் இருக்கும் ஒரு அலங்கார இரும்பு குமிழ் ஒன்று பின் மண்டையில் பலமாக அடிபட விழுகிறான். துடிக்கிறான். பிறகு இறக்கிறான்.
இருவரும் வெலவெலத்துப் போகிறார்கள்.(போலீசைக் கூப்பிட்டால் கொலை குற்றம் விழும்)இறந்தவனின் டெட் பாடியை டிஸ்போஸ் செய்யத் தொடங்குகிறார்கள். மணி 12.35.ஒரு கோணியில் போட்டு காரில் வைத்து மலை உச்சிக்குக் கொண்டுபோய் அவனை உருட்டி விடுகிறார்கள். அவனை யாராலும் கண்டுப்பிடிக்க முடியாது. எல்லா தடயங்களையும் மறைத்து சுத்தமாக வேலைகளை முடிக்கிறார்கள்.
தேன் நிலவில் ஒரே ரத்தம்.
மறு நாள் மதியம் பிளைட் பிடித்து ஊர் போய் சேருகிறார்கள்.
மறுநாள் அந்த மலை பிரதேச இந்தி/ஆங்கில தினசரிகளில் கொட்டை எழுத்தில் போட்டோவுடன் வாசகங்கள் அலறுகின்றன.
“ இவன் ஒரு அதி பயங்கர தீவரவாதி. நேற்று சிறையிலிருந்துத் தப்பிவிட்டான்.இவனை உயிருடனோ பிணமாகப் பிடித்துக்கொடுத்தால் சன்மானம் 25 லட்ச ரூபாய்”
Subscribe to:
Post Comments (Atom)
Hum.. Bad luck.!
ReplyDeleteநன்றி ஆதி
ReplyDeleteஏன் இந்த அப்டேட் என் டாஷ்போர்டுக்கு வரலைன்னு தெரியலை. ரெண்டு புது போஸ்டு மிஸ் பண்ணி இருக்கேன்.
ReplyDeleteகதை ஜோர்!நினைவுகள்ல இருந்து எடுத்தாலும் நல்லா இருக்கு.
Blogger அநன்யா மஹாதேவன் said...
ReplyDelete//ஏன் இந்த அப்டேட் என் டாஷ்போர்டுக்கு வரலைன்னு தெரியலை//
தெரியல அனன்யா.
//கதை ஜோர்!நினைவுகள்ல இருந்து எடுத்தாலும் நல்லா இருக்கு.//
நன்றி.