Saturday, May 1, 2010

லட்டை லவுட்டியவன் ....ரசித்த கதை

சின்ன வயதில் ஏதோ ஒரு பத்திரிக்கை ஒன்றில் படித்த ஒரு பக்க கதை.இன்னும் மனதில் நிற்கிறது.ஒரு வேளை அந்த வயதில் புரிந்த கதை.பிடித்துவிட்ட கதை. அதனால் மனதில் பதிந்திருக்கலாம்.

ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் .வீட்டில் அம்மா அப்பா சேர்த்து ஒன்பது பேர்.மூணு பெண் நாலு ஆண் குழந்தைகள். இன்னும் இரண்டு நாளில் தீபாவளி.அதற்காக வீட்டில் லட்டு செய்கிறார்கள். வீட்டு மெம்பர்களுக்கு  இரண்டு லட்டும்,  நண்பர் உறவினர்களுக்குமாக கொஞ்சமும்.மொத்தம் 30 லட்டு கணக்காக செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுகிறார்கள்.

தீபாவளி அன்றுதான் அதை சாப்பிடலாம். அதுவும் சாமிக்கு நிவேதனம் செய்துவிட்டுதான் சாப்பிடலாம்

தீபாவளி அன்று பார்த்தால் ஒரு லட்டு மிஸ்ஸிங்.யாரோ ஒருவர் ஆசையில் லட்டை லவட்டி விட்டார். யாரும் உண்மையைச் சொல்லவில்லை. கடைசியில் உண்மையைக் கண்டுபிடிக்கிறாள் அம்மா. லட்டை திருடி தின்றவன் மூனாவது மகன் ராஜா என்று.

எப்படி?

குப்பைக் கூடையில் எறியப்பட்ட அன்றைய டெய்லி ஷீட் காலண்டர் பேப்பர் பிசுக்கு வடிந்து கசக்கி எறியப்பட்டிருக்கிறது.ராஜாவுக்கு விடி  காலையில் எழுந்து டெயில் ஷீட்  காலண்டர் கிழிப்பது  வேலை. இது குடும்பத்தில் அலாட் செய்யப்பட்ட ரொட்டீன் வேலை.அவன் விடி  காலையில்எழுந்து லட்டை லவுட்டி சாப்பிட்டு விட்டு அதே விரலில் ஷீட்டையும் கிழித்து,பிசுக்கை துடைத்து குப்பைக் கூடையில் எறிந்துவிட்டான்.மாட்டிக்கொண்டான்.

நல்லா இருக்கா?

நீதி: தப்பு செய்பவன் தன்னை அறியாமல் ஒரு தடயத்தை விட்டுச்செல்வான்.இது லட்டு லவுட்டினாலும் பொருந்தும் என்பது உலக நீதி.

9 comments:

  1. உலகத்துல நான் மட்டும்தான் இந்த மாதிரி கதைலாம் யோசிப்பேனு நினைச்சேன்..

    ReplyDelete
  2. ராஜாவுக்கு திறமை பத்தல சார். :-)இந்தியாவின் தேசிய பெயரான ராஜாவை அவமானப்படுத்தியதற்கு எனது கண்டனங்கள்.வேற பேர் வச்சிருக்கலாம்...! :-)

    ReplyDelete
  3. திருடியவனுக்கு இதுதான் முதல் தடவையா இருந்திருக்கும் :)

    ReplyDelete
  4. நன்றி அதிஷா, அநன்யா.

    ReplyDelete
  5. Blogger ரெண்டு said...

    /// ராஜாவுக்கு திறமை பத்தல சார். :-)இந்தியாவின் தேசிய பெயரான ராஜாவை அவமானப்படுத்தியதற்கு எனது கண்டனங்கள்.வேற பேர் வச்சிருக்கலாம்...! :-)//

    ஆஹா! பேர் வைக்கும்போதும் பாத்து வைக்கனமோ?ஆனா அவரு தனிக்காட்டு ராஜா.

    ReplyDelete
  6. Blogger சின்ன அம்மிணி said...

    //திருடியவனுக்கு இதுதான் முதல் தடவையா இருந்திருக்கும்//

    மாஸ்டர் பிளான் பண்ணித் திருடினாலே
    ஏதாவது எவிட்ன்ஸ் விட்டுராங்க.பாவம் ராஜா!

    நன்றி.

    ReplyDelete
  7. இதுபோல நானும் நிறைய கதை வச்சிருக்கேன்...
    ஓட்டுப் போட்டாச்சு சார்...

    ReplyDelete
  8. Blogger தமிழ்ப்பறவை said...

    //இதுபோல நானும் நிறைய கதை வச்சிருக்கேன்...//

    உடனே எழுதுங்க.ஆனா சுவராஸ்யம எழுதுங்க.ரொமப நாளாச்சு

    //ஓட்டுப் போட்டாச்சு சார்//

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!