காத்திருக்கையில் பெண்
நுரைத்து எழும்பி வருகிறது
அலைகள்
கனுக்கால் நனைய
காத்திருக்கும் போதெல்லாம்
பெண்ணாக உணர்கிறேன்
தூங்கிவிட்ட புல்லாங்குழல்கள்
தனக்குப் பிடித்த ஹிந்தி மெட்டை
சாம்பிள் புல்லாங்குழலில்
வாசித்தபடி
புல்லாங்குழல் விற்பவன்
வீடு திரும்புகிறான்
ஒன்று கூட விற்கப்படாத
புல்லாங்குழல்கள்
தூங்கிவிட்ட குழந்தைகளாய்
சாய்ந்திருக்கிறது
அவன் இடது தோளில்
ஒரே காதலி
சற்று சோகமாத்தான் இருக்கிறது
ஸ்பாம் மெயிலில் வந்து
அடிக்கடி காதலிக்கும்
சிந்தியா அகஸ்டினும்
இப்பொழுதெல்லாம் வருவதில்லை
Subscribe to:
Post Comments (Atom)
ஹைக்கூவா?
ReplyDeleteபீச்சு புல்லாங்குழல் டாப்பு டக்கரு! ரசனையா இருக்கு..
பீச்சு புல்லாங்குழல் கவிதைதான் எனக்கும் பிடித்தது....
ReplyDeleteஸ்பாம் மெயில் கூட ஓகே...
இன்னொரு முறை வாசித்ததில் முதலாவதும் தேறிவிடுகிறது...
நல்ல அனுபவம் தந்த கவிதைகள்...
Blogger அதிஷா said...
ReplyDelete// ஹைக்கூவா?//
சுத்தமாக இல்லை.
//பீச்சு புல்லாங்குழல் டாப்பு டக்கரு! ரசனையா இருக்கு..//
நன்றி
நன்றி தமிழ்ப்பறவை.
ReplyDelete//தனக்குப் பிடித்த ஹிந்தி மெட்டை
ReplyDeleteசாம்பிள் புல்லாங்குழலில்
வாசித்தபடி
புல்லாங்குழல் விற்பவன்
வீடு திரும்புகிறான்//
எனக்கு தெரிஞ்சு புல்லாங்குழல் விக்கிறவங்க எல்லாம் இந்திகாரன்களா இருக்காங்க. ஒரு வேளை அவங்கள பத்தின கவிதையோ இது.....!
// எனக்கு தெரிஞ்சு புல்லாங்குழல் விக்கிறவங்க எல்லாம் இந்திகாரன்களா இருக்காங்க. //
ReplyDeleteஆமாம்.அவங்கதான் bansuri புல்லாங்குழல் விக்கிறாங்க.
ராஜா(சிவரஞ்சனி) பதிவு படிச்சீங்களா?
//ஒன்று கூட விற்கப்படாத
ReplyDeleteபுல்லாங்குழல்கள்
தூங்கிவிட்ட குழந்தைகளாய்
சாய்ந்திருக்கிறது
அவன் இடது தோளில்//
கவித்துவத்தின் உச்சம்.
வெல் டன்.
நன்றி ஜிஜி.
ReplyDeletearumai
ReplyDelete