துர்காதான் வந்துக்கொண்டிருந்தாள்.முகத்தைத் துப்பட்டாவால் இறுக மூடியிருந்தாள். கூலிங்கிளாஸ் மட்டும் தெரிந்தது.ஸ்கூல் பெண் போல் முகம் குட்டியாகத் தென்பட்டது.
உலகத்திலேயே இவ்வளவு ரகசியமாக பயந்து பயந்து காதலிப்பது தங்களைத் தவிர வேறு யாருமில்லை. நினைப்பு மனதை வருத்தியது தாமுவுக்கு.அவனும் ஹெல்மெட் அணிந்திருந்தான்.வழக்கமான இடத்திற்குப்போனதும் அகற்றி விடுவான்.
ஒவ்வொரு சந்திப்பின்போதும் இப்படித்தான் நடக்கும்.
”வாழ்த்துக்கள்! நம்ம காதலுக்கு இன்னியோட நாலாவது அனிவர்சரி”
துர்கா எதுவும் பேசவில்லை.கண்களில் நீர் கோத்திருந்தது.
”என்னடா துர்கா... கோபமா?”
”இல்ல தாமு.அச்சீவ்மெண்டுதான்....யாருக்கும் தெரியாம லவ் பண்ணி நாலு வருஷம் முடிச்சது ”சோகமாக சிரித்தாள்.
”என்னடா செய்யறது! பயப்படற விஷயத்தில ரெண்டுபேரும் ஒண்ணா இருக்கோம்.இதானாலேயே ரெண்டு பேருக்கும் லவ் ஜாஸ்தி.நீ பரவாயில்ல. நா தைரியமா இருக்கனும்னு டிரை பண்றேன் முடியல.”
“அனிவர்சரி ஏற ஏற அதுவே அபசகுனம் மாதிரி ஓண்ணா சேருவமான்னு ஒரு நெகட்டீவ் பீலிங் வருது ”சரி விடு...ரொம்ப நேரமா வெயிட் பண்றீயா?”
பேச்சை மாற்றினாள். தாமு இவ்வாறு வருத்தப்படுவதை எப்போதும் ரசிக்க மாட்டாள் துர்கா.
“இப்படியே எவ்வளவு நாள் ஒட்டறது? வீட்ல சொல்லியே ஆக வேண்டும்” தாமு கோபப்பட்டான்.
”வீட நினச்சா உதறல் எடுக்குது.சத்தியமா அக்ரி ஆக மாட்டாங்க.ஏண்டா லவ் பண்ண ஆரம்பிச்சோம்னு தோணுது.தள்ளிப் போட்டதும் தப்பு”
“இங்கயும் அதே நெலமதான்.”
“மேஜிக் போல உஷ்ஷ்ஷ்ன்னு கையை ஆட்டி எல்லாரும் ஓகேயாகி..நம்ம மேரேஜ் முடிச்சு ஹாப்பி ஆயிடனும்....எப்படி இருக்கும்?”
“நல்லாத்தான் இருக்கும்” சிரித்தான். “இன்னும் எவ்வளவு நாள்தான் எந்த ஸ்டெப்பும் எடுககாம இப்படியே ஓட்ட போறோம். இந்த டாபிக்க எங்க அப்பாகிட்ட ஒபன் பண்ணலாம்னு இருக்கேன்.சும்மா மீட் பண்ணிட்டு ஒருத்தர ஒருத்தர் பாத்து ஏங்கிட்டு.... சே...கடுப்பா இருக்கு”
”கொஞ்சம் பொறு தாமு.அடுத்த வாரம் எங்கம்மா கிட்ட சொல்லாம்னு இருக்கேன்.அவங்கள கன்வீன்ஸ் பண்ணிட்டு அப்புறம்தான் என் அப்பா.டிசிஷன் எடுத்தே ஆகணும்.ஒருத்தர ஒருத்தர் எப்படி காதலிக்கிறோம்.இப்படி பூன போல துப்பட்டா மூடிகிட்டு லவ் பண்ணிட்டு இருந்தா தேறாது.”
சொன்ன வேகத்தில் குரலில் நடுக்கம் தெரிந்தது.தாமு மூடு அவுட் ஆனான்.
”வேண்டாம்டா துர்கா. நான் பாத்துக்கிறேன்”
”இல்ல தாமு. நா எங்கம்மா கிட்ட பேசறேன்”
“உங்கம்மா ஒகே இல்லைன்னா?”
“என்ன பண்றதுன்னு புரியல”முகம் சுருங்கியது.
“ஏதாவது பண்ணியே ஆகனும்”
மேலும் இந்த சோகப்பேச்சை தொடர தாமுவுக்கு இஷ்டமில்லை.
வேறு திசையில் திரும்பியது. தாமு என்றுமில்லாத நாளாக இன்று ரொம்ப காதலுடன் பேச ஆரம்பித்தான். துர்காவும் பதிலுக்கு பேசிக்கொண்டிருந்தாளே தவிர மனம் என்னவோ எப்படி அம்மாவிடம் சொல்வது என்று ஒத்திகைப் பார்த்தபடிதான் இருந்தது. இன்றைக்கு போய் இதை நான் இவனிடம் சொன்னேன் என்று நொந்துக்கொண்டாள்.பாவம் தாமு!
சந்திப்பு முடிந்து வீடு திரும்பினார்கள்.தாமுவை மிஸ் பண்ணக்கூடாது.வாசல் கேட் வரை ஒத்திகை நினைப்பு அவளே வாட்டி எடுத்தது.
இரண்டு நாள் கழித்து........
தாமுவின் செல் அடித்தது.துர்காதான்.ரொம்ப ரொம்ப அபூர்வமாகத்தான் செல்லுக்கு போன் செய்வாள். இன்று என்ன அவசரம்?
”சொல்லு துர்கா....நம்ம காதல் ஓகே ஆயிடிச்சா?”
”அத விட சீரியஸ் மேட்டர்...என்னோட எங்கர் சிஸ்டர் அமுதா விட்டை விட்டு அவனோட லவ்வரோட நேத்து நைட்டு ஓடிட்டா.அம்மா,அப்பா, பயங்கர அபசெட்.”
”உன் தங்கையா.... லவ்வா..நம்பவே முடியல”
“சரி...அப்பறம் பேசறேன்...” போனை வைத்துவிட்டாள்.
துர்கா மனம் உடைந்திருப்பாள்.எல்லாம் போச்சு.தாமு நொந்துப்போனான்.
அப்புறம் பேசுகிறேன் என்றவள் பேசவே இல்லை.
அடுத்த மூன்று மாதம் கழித்து துர்காவின் திருமணத்திற்கு சென்றான் தாமு.மண்டபத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்துக்கொண்டான்.
முஹூர்த்தம் முடிந்தது.
”கட்டாயம் சாப்பிட்டுதான் போகணும்.”
பெண் குரல் கேட்டு திரும்பிப்பார்த்தான் துர்கா தங்கை ஜாடையில்!அமுதாவா?
“ஓகே.. தாங்க்ஸ்....சாப்பிட்டுதான் போவேன்”
அமுதாதான என்பதை உறுதி செய்ய பக்கத்தில் இருந்தவரிடம் பேச்சு கொடுத்தான்.
“ஆமாங்க...! துர்கா தங்கச்சிதான்.வீட்டைவிட்டு ஓடி வேற ஜாதிகாரனோட ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிடிச்சி.இவங்க பேரன்ட்ஸ் எதுக்கோ பயந்துகிட்டு இதோட அக்காவுக்கும் இந்த கல்யாணத்த அர்ஜ்ண்டா நடத்திட்டாங்க. அதுவும் பயந்துகினு ஓகேன்னுடிச்சு.பத்து நாள் முன்னதான் அமுதாவும் அவ புருசனும் பேரண்ட்ஸ ஒரு மாதிரி சமாதானப்படுத்திட்டாங்க.அவங்கள ஏத்துகிட்டு தாங்கு தாங்குன்னு தாங்கறாங்க.”
அமுதாவை ஒரு முறைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது.எழுந்து நின்று திருமண மேடையைப் பார்த்தான்.
முற்றும்
Subscribe to:
Post Comments (Atom)
அருமையா வந்திருக்கு....வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையா வந்திருக்கு....வாழ்த்துக்கள்!
ReplyDelete>:)
ReplyDeleteநன்றி dheva.முதல் வருகைக்கும் நன்றி.
ReplyDeleteகருத்துக்கும் நன்றி.
நன்றி கேபிள் சங்கர்.
ReplyDeleteவழியான முடிவு...கதை ரொம்ப நல்லா இருக்குங்க...
ReplyDeleteBlogger கமலேஷ் said...
ReplyDelete// வழியான முடிவு...கதை ரொம்ப நல்லா இருக்குங்க...//
நன்றி கமலேஷ்.முதலில் இதற்கு ஒரு பாசீடீவ் முடிவு இருந்தது.அது கடைசி நிமிடத்தில் எடுத்து விட்டேன்.
முதல் வருகைக்கும் நன்றி.
நல்லா இருக்கு சார்...கச்சிதம்+வேகம்...
ReplyDeleteBlogger தமிழ்ப்பறவை said...
ReplyDelete// நல்லா இருக்கு சார்...கச்சிதம்+வேகம்...//
நன்றி தமிழ்ப்பறவை.
நல்லா இருக்குங்க
ReplyDeleteBlogger சின்ன அம்மிணி said...
ReplyDelete//நல்லா இருக்குங்க//
நன்றி.
நன்றி ஆதி.
ReplyDeleteநல்லா இருக்குங்க.
ReplyDeleteBlogger Aditya said...
ReplyDelete// நல்லா இருக்குங்க//
நன்றி.