Saturday, May 22, 2010

சினிமா ஹம்மிங தேவதைகள்

தமிழ் சினிமாவில் ”ஹம்மிங்”(வாயசைப்பு இசை?) என்பது பாடலின் தவிர்க்க இயலாத ஒரு அங்கம் ஆகிவிட்டது.அதுவும் ஒரு இசைக்கருவியாய் பாடலுக்கு அழகைக்கூட்டுகிறது.படங்களின் பின்னணிக்கும் பல வித ஹம்மிங் கொடுக்கப்படுகிறது.
  

பழைய காலத்துப் பாடல்களில் ”ஹம்மிங்” கம்மி. ஆனால் ஆலாபணை (ராகத்தை மேல்/கிழ் இழுத்துப் பாடுதல்) என்பது ஹம்மிங் மாதிரிதான்.காரணம் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு இசைக்கப்பட்டது.

அடுத்து பாடும் இடத்திலேயே மைக் பிடித்து ரிகார்ட் செய்தார்கள்.பின்னணி இசைப்பவர்கள் பாடுபவர்கள் பின்னலேயே ஓட வேண்டும்.பின்னாளில்தான் தியேட்டர் ரிகார்டிங் வந்தது.

மெல்லிசை திரைக்கு வந்த பிறகு .ரவுண்டு கட்டி ஹம்மினார்கள்.எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் அதிகம் என்று சொல்லலாம்.

இது சோகம்/காதல்/வீரம்/மகிழ்ச்சி/விரகதாபம்/காமம்/மழலை போன்ற முக்கியமான உணர்ச்சிகளைப் பிரதிபலிக்க பெரும்பாலும் படங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பெணகள்/ஆண்கள் குழுக்களாக பாட்டில் தோன்றும்போது கோரஸ் கொடுக்கிறார்கள்.இதைத் தவிர்த்து பேய்/சுடுகாடு/நடுகாடு/நடுஇரவு/ என்று விதவித ஹம்மிங்.

தமிழ்ப் படங்களில் ”வெள்ளை உடை ஆவி ஹம்மிங்” ரொம்ப விசேஷமானது.(நெஞ்சம் மறப்பதில்லை,துணிவே துணை/யார் நீ,அதே கண்கள்)

பயங்கரத்திற்கும் (horror) (குரல்?) கொடுப்பதுண்டு.சிவப்பு ரோஜாக்கள் படத்தில் தோட்டத்தில் இருந்து ஒரு பிணத்தின் கை எழும்போது வரும் ஆணின் முரட்டு ஹம்மிங் பயமுறுத்தும்.

இந்த ஹம்மிங் 95% சதவீதம் பெண் குரல்கள்தான்.காரணம்? மனதை கொள்ளைக்கொள்ளும் உணர்ச்சி பொங்கி வழிவதுதான். காதல்/ஒரு வித உருக்கம்/சோகம் போன்ற பல ரசங்களும் தெறிக்கும்.தேவதைகளின் மொழி இந்த ஹம்மிங்.

நிறைய ஆங்கில படங்களிலும் இது உண்டு.அது ஒரு மாதிரி வெள்ளைக்காரி ஹம்மிங்.டைட்டானிக் படத்தில் கூட நம்ம மேஸ்ட்ரோவின் சாயலுடன்  பின்னணியில்   தேவதைகளின் ஹம்மிங்கை வீடியோவில் பார்க்க.காதல் உணர்வுகள்?

காட்சியில் வீசும் காற்றின் ஒலியே மனதில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.”Hello..Jack !". பிறகு 0.35 ஆரம்பிக்கும் soul strirring  ஹம்மிங்!இளையராஜாவுக்கு முன் இருந்த இசை மேதைகள் ரொம்ப அழகாக இந்த ஹம்மிங்கைக் கொடுத்துள்ளார்கள்.எனக்குத் தெரிந்தவரை எல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங்கிற்கே அவதாரம் எடுத்தவர் என்று நினைக்கிறேன்.இவர் குரல் அப்படி வசீகரிக்கிறது.அடுத்து ஜானகி? இவர்களின் பழைய பாடல்களின் ஹம்மிங் மனதை வருடுகிறது.

பழைய பாடல்கள் நிறைய இருக்கிறது.சில வித்தியாசமானவற்றைப் பார்ப்போம்.உங்களுக்குப்பிடித்த பழைய/புது பாடல்கள் ஹம்மிங்கை பின்னூட்டத்தில் சொல்லலாம்.

சில பாடல்களில் கொஞ்சம்தான் ”ஹம்”மும்.பழைய பாடல்களில் இருக்கும் “பழசு” மற்றும் " வெகுளித்தனம் " மனதை கொள்ளையடிக்கிறது.


வழக்கமா இவரு ராஜாப் பத்தித்தானே எழுதுவாறு. இப்போ 1951க்கு போறாரு அப்படின்னு எண்ணம் வருது இல்ல. இவங்களை எல்லாம் கேட்டுவிட்டுதான் ராஜாவுக்குப் போனேங்க நானு.


கூவாத இன்ப குயில்  -(1951)- ஞானசெளந்தரி -எஸ்.வி.வெங்கடராமன்.எளிய  பி.பானுமதியின் ஹம்மிங். அடுத்து  நவீன இசையைக்  கேளுங்கள்.

மனமோகனாங்க அணங்கே   - (1951?)சகுந்தலை-எஸ்.வி.வெங்கடராமன்.முதல் 46 நொடிகள் இசைக்கோர்ப்பே ஒடுகிறது.1.54 ஹம்மிங்(ஆலாபனை)

அழைக்காதே (1957) மணாளனே மங்கையின் பாக்கியம் - ஆதி நாராயண ராவ்  அருமையான ஹிந்தோள ராக  குரூப் பெண்கள் ஹம்மிங்.

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே  -(1960) -அடுத்தவீட்டுப் பெண்-ஆதி நாராயண ராவ் - மேற்கத்திய சாயல் பாடல்.அருமையான கிடார் தீற்றல் ஆரம்பம்.P.B.ஸ்ரீனிவாஸின் மென்மையான ஹம்மிங்.அசத்தல்.

இதன் தாக்கத்தில்தான் ”ராஜராஜ சோழன் நான்” என்ற  பாடல் இளையராஜா  கம்போஸ் செய்ததாக சொல்லுவார்கள்.

 ஜி.ராமனாதன்
 


மாசிலா நிலவே  - (1957) - அம்பிகாபதி -ஜி.ராமனாதன் பானுமதியின் இனிமையான குரல்.நேரடித் தமிழ்ப்பாடல் என்பதால் குரலில் தெலுங்குவாடை இல்லை.அற்புதமான பாட்டு.முக்கியமாக இசைக்கருவிகளின் இரைச்சல் இல்லை.

இன்பம் பொங்கும் - (1959) -வீரபாண்டிய கட்டபொம்மன்-ஜி.ராமனாதன் பாட்டின் நடுவில் வரும் கண்ணியமான ஹம்மிங் அருமை.

நானே வருவேன்  -(1960) யார் நீ -எஸ்.வேதா-அட்டகாசமான ஆரம்ப இசை.வெள்ளை உடை”ஆவி” ஹம்மிங்.

அம்மம்மா... - (1966) - வல்லவன் ஒருவன் - எஸ்.வேதா
 எல்.ஆர்.ஈஸ்வரி குரல்/ஹம்மிங்  மனதை அள்ளுகிறது. ரொம்ப அபூர்வமான குரல்.அலட்சியமாகப் பாடுகிறார். Hats off L.R.Eswari.இவரைப் பற்றி ஒரு தனிப் பதிவே போட்டு இருக்கிறேன்.அற்புதமான இசை.

மேற்கத்திய இசைத் தாக்கம்(????) வேதாவுக்கு நிறைய  உண்டு.

எம் எஸ் வி
Kamal-Hassan-Honours-MS-Viswanathan kamal-stills-003.jpg

நாம ஒருவரை ஒருவர் - (1971)குமரிக்கோட்டம்-எம் எஸ் வி-  டிஎம்எஸ்-3.51ல் கொடுக்கும் ஹம்மிங் புதுசு/ஸ்டைல்.”நான் தொடர்ந்து போக” என்று டிஎம்எஸ் எடுக்கும் இடம் அருமை.அச்சு தமிழன் குரல்.இப்போது பாடும் இளைய தலைமுறை இந்தப் பாட்டை ஒரு நாளைக்கு பத்து தடவை கேட்க வேண்டும்.

 எல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங்கும் மயக்கும்.வித்தியாசமான கம்போசிங்.

கல்லெல்லாம மாணிக்க -(1962) ஆலயமணி -
விஸ்வநாதன்-ராமமூர்த்தி. இதில் முதலில் வரும் புல்லாங்குழல்/எல்.ஆர்.ஈஸ்வரியின ஹம்மிங் மனிதன் வாழ்நாளில் ஒரு நாளாவது கேட்க வேண்டும்.வசீகரம். லட்சணமான இசை.அருமையான பாடல் வரிகள்.


பவளக்கொடியிலே  -(1965) பணம் படைத்தவன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.
(இந்த ஹம்மிங்கும் மனிதன் வாழ்நாளில் ஒரு நாளாவது கேட்க வேண்டும்) 
Stunning!அருமையான பாடல் வரிகள்.

காற்றுக்கென்ன வேலி -(1977) அவர்கள்  - எம் எஸ் வி. Stunning  orchestration!
ஆரம்பமே ஹம்மிங்தான்.முதல் சரண இசை(interlude)  1.29 ல் நிறுத்தப்பட்டு 1.31ல் தொடரும் ஜதிகள் ஹம்மிங் பிறகு  அந்த ஹம்மிங்கில்  ஜானகி   தன் ஹம்மிங்கோடு சேருவது அருமை.
 
சிங்கார வேலனே தேவா (1964)  -- கொஞ்சும் சலங்கை -எஸ்.எம்.சுப்பையா நாயுடு.ஜானகியின் தேன் குரல்/தேன் குரலில் ஹம்மிங்.

கே.வி. மகாதேவன்

தட்டுத் தடுமாறி  (1962) - சாரதா -கே.வி. மகாதேவன்
 வித்தியாசமான விரக்தி ஹம்மிங்.சூப்பர்.கேட்கவேண்டியது.

வி.தக்க்ஷிணா மூர்த்திநந்தா என் நிலா- (1977)நந்தா என் நிலா - வி.தக்க்ஷிணா மூர்த்திஇந்தப் பாட்டு்க்கு நான் அடிமை.ஹம்மிங் கொஞ்சம்தான்.இதைப் பற்றி தனி பதிவே என் வலையில் இருக்கிறது.

ஜி.தேவராஜன்
deva


தேவ மைந்தன் போகின்றான்  -( 1971)-அன்னை வேளாங்கன்னி-ஜி.தேவராஜன்
ஏசுவின் கடைசிப் பயணம் பற்றியது.டிஎம்எஸ்ஸின் உருக்கமான பாட்டு.பின்னணி குரல்கள் பாட்டிற்கு உச்சக்கட்ட சோகத்தை சேர்கிறது.அட்டகாசம்.

ஸ்வாமி ஐயப்பன் படத்தில் “ஹரிவாரசனம்” பாட்டு இவருடையதுதான்.

"அந்தரங்கம்” என்ற கமல் நடித்த தமிழ்ப் படத்தில் கமலே இவர் இசையில் ”ஞாயிறு ஒளி மழையில்” என்ற பாட்டைப் பாடியுள்ளார்.


சங்கர் கணேஷ்( பேண்டில் இருப்பவர் சங்கர்)
மேகமே..மேகமே   -(1981)- பாலைவனச் சோலை -சங்கர் கணேஷ் வாணிஜெயராமனின் இனிமையான ஹம்மிங்.அருமையான ஹிந்துஸ்தானி மெட்டு. ஆனால் இது ஒரு ஹிந்தி கசல் பாடல்.

உன்னை நான் பார்த்தது - (1975) -பட்டிக்காட்டு ராஜா -சங்கர் கணேஷ் - வித்தியாசமான ”பப்பப...பப....ப்பா” மற்றும் ஹம்மிங்.அட்டகாசம்.

ஏ.எம்.ராஜாகாலையும் நீயே மாலையும் -(1960) -தேன் நிலவு -ஏ.எம்.ராஜா ஜானகியின் மயக்கும் ஹம்மிங். மயக்கும் ஹம்சாநந்தி ராக மெட்டு.ஏ.எம்.ராஜாவின் பெண்மை  பூசிய நளின குரல் சூப்பர்.


T.ராஜேந்தர்
 

 விழிகள் மேடையாம்  - (1981) கிளிஞ்சல்கள் -T.ராஜேந்தர் மெல்லிய (சிவரஞ்சனி ராகம்?) அழகான மெட்டு. 1981க்கு உரித்தான  மெல்லிசை ஹம்மிங்.இசையில் ராஜாவின் பாதிப்பு தெரியும்,இவருக்கு அப்போது நிறைய  ரசிகர்கள்.

எந்தன் பாடல்களில்-( 1984)- உறவைக் காத்த கிளி--T.ராஜேந்தர்-இது ஒரு கிளப் டான்ஸ் பாடல் ஹம்மிங்.

                                                   சந்திரபோஸ்ரவிவர்மன் எழுதாத - (1988) - வசந்தி-சந்திரபோஸ்
இனிமையான பாட்டு. மென்மையான சிக்கல் இல்லாத எதிர்பார்த்தபடி வரும் ஹம்மிங்.இனிமைதான் பாட்டின் ஆயுளை கூட்டும் என்பதை தீவரமாக கடைப்பிடிப்பவர் என்பது இவர் பாடல்களில் தெரியும்.

கம்போசிங்குகளில் நிறைய அமெச்சூர் நெடி.

  தோடி ராகம் பாடவா -(1991)

மாநகர காவல் -சந்திரபோஸ்- ராஜாவின் தாக்கம் பாட்டில்.சித்ரா/யேசுதாஸ் இனிமையான குரலில் அருமையான மெலடி.-3.00 -2.50ல் ஹம்மிங் பாட்டை அருமையாக அழகுப்படுத்துகிறது.

சந்தோஷம் காணாத  - (1988) - வசந்தி-சந்திரபோஸ்
வழக்கமான ஹம்மிங் என்றாலும் பாடல் அருமை.யேசுதாஸ் குரலில் மென்மையான மெலடி.

இளமை நாட்டிய சாலை - (1974) கல்யாணமாம் கல்யாணம் -விஜய் பாஸ்கர்.முதலில் ஜானகியின் உயிர்துடிப்பான ஹம்மிங் அசத்தல்.என்னால மறக்க முடியாத பாடல்.
     
ரவி வர்மாகே அந்தானி  - (தெலுங்கு) - ராமுடே ராவணுடைதி-இசை ஜி.கே.வெங்கடேஷ்.மீண்டும் ஜானகியின் அற்புதமான ஹம்மிங்.இளையராஜா ஜி.கே.வெங்கடேஷின் “உதவியாளராக” இருந்தவர்.

ஜி.கே.வெங்கடேஷ்               


ராஜா       ஆர்.டி.பர்மன்     ஜி.கே.வெங்கடேஷ்
Prathidwani-Sholay-Avar Enakke Sontham
வராக நதிக்கரை ஓரம் (1999)-  சங்கமம் -ரஹ்மான்
அருமையான ஹிந்துஸ்தானி கம்போசிங்.அட்டகாசமான ஹம்மிங்.சங்கர் மகாதேவன் பின்னிவிட்டார்.அபார தாளக்கட்டு.

                         ----------------------------------

விரைவில் ..........................இளையராஜா- Master of  heavenly hummings! ஒரு தனிப் பதிவு.சுட்டியைக் கிளிக் செய்து  ஒரு சாம்பிள் கேளுங்கள்!!
லிங்க் வந்தவுடன் Annakkili(Annakkili) கிளிக் செய்யவும்.


16 comments:

 1. உங்களுடைய பதிவை மிக விரும்பி படிப்பேன் நன்றாக இருந்தது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. என்ன சார்.. இவ்ளோ பெரிய லிஸ்ட்.. உங்க நியாபசக்தி அபாரம். எல்லா பாடல்களுமே எனக்கு மிகவும் பிடித்தவை. நல்ல பதிவு

  ReplyDelete
 3. தரமான தேடல்.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. Blogger பாலாஜி said...

  // உங்களுடைய பதிவை மிக விரும்பி படிப்பேன் நன்றாக இருந்தது
  வாழ்த்துக்கள்//

  சார்..பாலாஜி! பாட்டைக்கேட்டீங்களா?
  உங்களுடைய எண்ணங்களைச் சொன்னால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 5. Blogger அதிஷா said...

  // என்ன சார்.. இவ்ளோ பெரிய லிஸ்ட்.. உங்க நியாபசக்தி அபாரம். எல்லா பாடல்களுமே எனக்கு மிகவும் பிடித்தவை. நல்ல பதிவு//

  நன்றி.எல்லாம் வலை உபயம்.

  வலையைக் கண்டுப்பிடித்தவருக்கு
  தினமும் நன்றி சொல்வேன்.

  ReplyDelete
 6. நன்றி மால்குடி.

  ReplyDelete
 7. //தேவதைகளின் மொழி இந்த ஹம்மிங்.//

  அழகிய வரி. பாடல்களுக்கு அழகு சேர்ப்பது இந்த ஹம்மிங்க்தான்.

  ReplyDelete
 8. Blogger சின்ன அம்மிணி said...

  //அழகிய வரி. பாடல்களுக்கு அழகு சேர்ப்பது இந்த ஹம்மிங்க்தான்//

  நன்றி

  ReplyDelete
 9. ரொம்ப அழகான தொகுப்பு ரவிஷங்கர். ரொம்பவே ரசித்தேன். :)

  ReplyDelete
 10. Blogger Vidhoosh(விதூஷ்) said...

  //ரொம்ப அழகான தொகுப்பு ரவிஷங்கர். ரொம்பவே ரசித்தேன். :)//

  ரொம்ப நன்றிங்க.

  ReplyDelete
 11. ஹம் ஹம் ஹம் ஹம்
  உங்கள் பதிவு படித்த பாதிப்பு
  அருமையான ஹம்மிங் பதிவு

  ReplyDelete
 12. சார்
  மூன்றெழுத்து படத்தில் பொன்னுசாமி அவர்கள் ஒரு ஹம்மிங் கொடுப்பார் .மெல்லிசை மன்னர்களில் ஒருவரான ராமமூர்த்தி தனித்து இசை
  'காதலன் வந்தான் கண்வழி சென்றான் கண்களை மூடு பைங்கிளியே
  ஹும்,ஹும்

  ReplyDelete
 13. ஆமாம் சார். நினைவை விட்டு எங்கோ போய்விட்டது.எம் எஸ் வி பாணியில் பாட்டு. நினைவுபடுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 14. ரவி சார்
  மேலும் ஒரு பாடல் இன்று நினைவு வந்தது . 'காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ ' உத்தரவின்றி உள்ளே வா திரைபடத்தில் கண்ணிய பாடகி சுசீலா உடன் இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் (ML ) ஹம்மிங் கொடுத்து இருப்பார்

  ReplyDelete
 15. dear ravi sir

  குழந்தையும் தெய்வமும் திரை படத்தில் 'நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு என்னை உனருகெ கொண்டு வந்ததற்கு ' மெல்லிசை மன்னர் அல்லது ஜி கே வெங்கடேஷ் ஹம்மிங் என்று நினைவு

  உங்கள் கட்டுரை பல பாடல்களை நினைவு தூண்டுகிறது
  பிற வலை பூக்களில் உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ளலாமா . with your permission

  ReplyDelete
 16. பகிர்ந்துக் கொள்ளலாம்.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!