Sunday, April 12, 2009

கே.பாலசந்தர் மீண்டும் டிராமா

கே.பாலசந்தர் மீண்டும் டிராமா உலகத்திற்க்கு 40 வருடம் கழித்து வருகிறார்.”பெளர்ணமி” என்ற பெயரில் ஒரு புது அரங்க நாடகம் (stage drama) போடப் போகிறார். இதில் ரேணுகா,
கார்த்திக்,ரவிகாந்த் நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இவர் ரொம்ப காலம் கழித்து “பொய்” என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். படம் எடுபடவில்லை. பாலசந்தர் அந்த காலத்தில் எம்ஜியார், சிவாஜிக்கு ஒரு மாற்றாக தெரிந்தார்.இவரே படத்தில் கதாநாயகன்.இவர் படம் பார்த்தால் ரசனையுள்ள ஆள் என்று அர்த்தம் அந்த காலத்தில்.காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.புது புது ஐடியாக்கள்.off beat themes. ஆங்கில படங்களைத் தழுவியதும் உண்டு. அனந்து என்பவர் இவருக்கு முதுகெலும்பு.கலெக்‌ஷனைப் பற்றிக்
கவலைப்பட மாட்டார். dare devil attitude. சில அசட்டுத்தனமான மெலோடிராமக்களும் உண்டு.

டைட்டில்களின் முடிவில் கதை, வசனம், டைரக்‌ஷன்,என்று ஸ்டைலாக ஆங்கிலத்தில். அப்போது இசை நின்று அமைதியாகிவிடும். 

Story
Dialogue
Direction
K.Balachander

பிறகு தமிழில்

கதை
வசனம்
டைரக்‌ஷன் 
கே.பாலசந்தர்

விசில் பறக்கும்.

இந்த ஸ்டைல் நாலு வரிகள் எவ்வளவு இளைஞர்களை சினிமாவுக்கு இழுத்தது தெரியுமா? இவரின் படங்களை புரிந்தும் புரியாமலும் பார்த்த வெறி ரசிகன் நான்.இப்போதும் இவரின் மறக்கமுடியாத படங்கள் இருக்கிறது. 

இப்போது? 

இவருடைய இந்த டிராமா முயற்ச்சி வெற்றி பெறுமா? பெறாது. என் கருத்து.சினிமாவே ஓடவில்லை.என் சின்ன வயதில் இவருடைய நாடகங்களையும் பார்த்திருக்கிறேன்.கூட்டமான கூட்டம்.சர்வர் சுந்தரம்,எதிர் நீச்சல்,மேஜர் சந்திரகாந்த்.கடைசியில் உட்கார்ந்தால் செத்தோம். தலைகள் மறைக்கும்.காதில் ஒன்றுமே கேட்காது. ‘louder please" ஆங்கிலத்தில் கூச்சல் போடுவார்கள்.எனக்கு ஒன்றும் புரியாது.என்னை அந்த வயதில் ஏன் அழைத்துக் கொண்டுப் போனார்கள்? வீட்டில் என்னை தனியாக விட முடியாது.

அப்போது இருந்த தலைமுறை வேறு.பொழுது போக்குகள் கம்மி.DVD,CD,Cassette, இண்டர்நெட் அதனால் திருட்டு DVD,CD,Cassetteமுக்கியமாக TV  கிடையாது.சபா உறுப்பினர்கள் தவிர பொதுமக்களும் இருந்தார்கள்.ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு சுலபமாக போய் வரலாம்.ட்ராபிக் கம்மி. பெண்கள் வேலைக்கு செல்வது குறைவு.கூட்டுக் குடித்தனம்.

இப்போது? TVயில் சீரியல்கள் என்ற பெயரில் டிராமக்கள் வ்ண்டி வண்டியாக கொட்டப்படுகிறது. இதையும் மீறி இவர் என்ன சொல்லிவிடப் போகிறார்.அடுத்து காலம் மாறி விட்டது. தலை முறையும் மாறி விட்டது. ரசனை மற்றும் ஐடியாக்களும் மாறி விட்டது. இவர் தலைமுறையினர் வயது 50க்கு மேல் இருப்பார்கள்.

இப்போது நடக்கும் நாடங்களுக்கு எவ்வளவு பேர் போகிறார்கள்.போகிறவர்கள் அந்த சபாவின் உறுப்பினர்கள்.பொது மக்கள் வருகிறார்களா?. வலையில் நாடகத்தைப் பற்றி ஒரு விமர்சனம் கிடையாது.

மிகவும் முக்கியமான விஷயம் நாடகத்தில் ரத்தமும் சதையுமாக நடிகர்கள் தினமும் தோன்ற வேண்டும்.வெளி ஊரில் நடந்தால் லீவு எடுக்க வேண்டும்.அந்த காலத்தில் டிராமா நடிகை நடிகர்கள் அரசு அலுவலகத்தில் வேலை செய்தார்கள்.5மணி முடிந்து சபாவுக்கு வந்து விடலாம்.இப்போது?டிராமாவை நம்பி வேலையை விட முடியாது.அடுத்து அதை நம்பி பிழைப்பு நடத்த முடியாது.டிராமாவை விட சீரியல், சினிமாவில் காசு பார்க்கலாம்.

எனக்கும்தான் ஆசை.ஆனால் மற்ற யதார்த்தங்கள் தடையாய் இருக்கிறது.
  

12 comments:

 1. :-))

  இன்னமும் சினிமா, டிவி சீரியலை விட அதிகம் மேடை நாடகம் ரசிக்கும் நடுத்தரவர்க்கத்தினர் சென்னையில் அதிகம் பேரை நான் சந்தித்ததுண்டு. அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பாலச்சந்தர் அவர்களால் இயலும் என்றுதான் நினைக்கிறேன்.

  என்ன செய்வார் என்று கே.பி. யிடம் நாம் எதிர்பார்ப்பதை விட ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையில் அரங்கினுள் நுழைபவர்கள் அதிகம்.

  வலையில் நாடகம் பற்றிய விமர்சனம் என்ற பெயரில் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள். கிரேசி, சேகரின் துணுக்குத் தோரணங்களையா.. அவர்களை விட சிறப்பாக நமது பதிவர்கள் சிலர் எழுதிக்குவிக்கிறார்கள். :-)

  பாலச்சந்தர் தனது இரண்டாம் கட்ட நாடக மேடையிலும் வெற்றிக்கொடி நாட்ட ஒரு ரசிகனாய் எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. கருத்துக்கு நன்றி சென்ஷி!

  //வலையில் நாடகம் பற்றிய விமர்சனம்....... கிரேசி, சேகரின் துணுக்குத் தோரணங்களையா.. )

  சில சீரியஸ் நாடகங்களும் வருகிறது.மக்கள்(வலை)அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.

  //வெற்றிக்கொடி நாட்ட ஒரு ரசிகனாய் எனது வாழ்த்துக்கள்//

  எனக்கும்தான் ஆசை.ஆனால் அதற்கு எதிரான யதார்த்தங்களை பதிவில் சொல்லியுள்ளேன்.

  அந்த காலத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் நாடகத்திற்க்கு கூட்டம்வராது.ஏன்?டீவியில் படம்.

  படம் போடக்கூடாது என்று நாடகக்காரர்கள் கொடிப்பிடித்ததும் உண்டு.

  நன்றி

  ReplyDelete
 3. கடந்த வெள்ளிக்கிழமை கே.பாலசந்தரின் மனதில் உறுதி வேண்டும் பார்க்க நேர்ந்தது... எத்தனையோ முறை பார்த்திருந்தாலும் இந்த முறை அதில் வரும் கதாபாத்திரங்கள் மனதை உலுக்கியதென்னவோ மறுக்க இயலாத உண்மை. அன்றாட யதார்த்ததை எப்படி இவர் திரையில் கொண்டு வந்தார் என்ற பிரமிப்பு அதையும் மீறி...

  எங்கள் ஊரில் 'இருவர் II' மேடை நாடகத்திற்கு ஊடகங்கள் வழங்குகின்ற ஆதரவுகளும் விளம்பரங்களும் வரவேற்கத்தக்கது. அதுப் போல நீங்களும் அதுப் பற்றி எழுதி அழிந்து வரும் அந்தக் கலையை ஊக்குவிக்கலாமே!!

  http://aranggetram.blogspot.com/2009/03/2.html

  http://www.nst.com.my/Current_News/NST/Monday/Features/20090301191957/Article/indexF_html

  http://kanaigal.blogspot.com/2009/02/11_19.html

  ReplyDelete
 4. மேடை நாடகங்கள் கண்டிப்பாக இருக்கத்தான் வேண்டும்.. நான் கூட தில்லி சங்கத்தில் நடந்த நாடகத்துக்கு வலையில் என் பதிவில் விமர்சனம் எழுதினேன்.
  சீரியல் சினிமா போல இல்லையே மேடை நாடகம்.. தில்லி போன்ற நகரங்களில் நாடகங்கள் எல்லா மொழியிலும் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றன.. அது அழிக்கூடாது என்பதற்காகவே பாலச்சந்தர் அதில் இறங்கியதை வரவேற்கிறேன்..

  ReplyDelete
 5. இனியவள் புனிதா கருத்துக்கு நன்றி.
  நீங்கள் கொடுத்த வலைத் தொடுப்புகளில் போய் பார்த்தேன்.
  நன்றாக இருந்தது.

  //கடுமையான வாகன நெரிசலின் காரணமாக சற்று தாமதமாக ஏறக்குறைய இரவு 8.45-லிருந்துதான் பார்க்க நேர்ந்தது.//

  பாருங்க யதார்த்தம்.அடுத்த யதார்த்தம்
  ஒரு டிக்கெட் 300/-.50/-க்கு பைனாகுலர் வைத்துதான் பார்க்க
  வேண்டும்.புற நகர் பகுதியிலிருந்து வருபவர்கள்? cost of transport?


  பத்திரிக்கையை பாருங்கள். நமக்குப் பிடித்த அ.ராதா.ர,இந்துமதி,
  ப.கோ.பிரபாகர்,ரா.குமார் இவர்கள் எங்கே?தலைமுறை மாறுகிறது.


  நாம் பாடு பட்டு வளர்க்க நினைத்தாலும் மற்ற யதார்த்தங்கள் இருக்கிற்து தடையாய்.

  ReplyDelete
 6. முத்துலெட்சுமி-கயல்விழி,
  கருத்துக்கு நன்றி.படிக்க மேல் உள்ள பின்னூட்டத்தை.

  //மேடை நாடகங்கள் கண்டிப்பாக இருக்கத்தான் வேண்டும்.//
  ஆசைப்படுவது வேறு.யதார்த்தம் வேறு. எங்கள் தாத்தா தெருக் கூத்து அழியக் கூடாது.எல்லா தெருமுனைகளிலும் நடக்க வேண்டும் என்றார்.எனக்கும் ஆசைதான்.எப்படி நடக்கும்?


  //தில்லி போன்ற நகரங்களில் நாடகங்கள் எல்லா மொழியிலும் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றன..//

  அது தில்லி வாழும் மற்ற மாநில மொழிக்காரர்களுக்காக.அவர்களும் ஆர்வத்தோடு வருவார்கள்.இங்கு?

  மிகவும் முக்கியமான விஷய்ம் நாடகத்தில் ரத்தமும் சதையுமாக நடிகர்கள் தோன்ற வேண்டும்.அந்த காலத்தில் டிராமா நடிகை நடிகர்கள் அரசு அலுவலகத்தில் வேலை செய்தார்கள்.5மணிக்கு ஓடி விடலாம்.
  இப்போது?டிராமாவை நம்பி வேலையை விட முடியாது.அடுத்து
  அதை நம்பி பிழைப்பு நடத்த முடியாது.

  //பாலச்சந்தர் அதில் இறங்கியதை வரவேற்கிறேன்//
  நாம் பாடு பட்டு வளர்க்க நினைத்தாலும் மற்ற யதார்த்தங்கள் இருக்கிற்து தடையாய்

  ReplyDelete
 7. எனக்கு மேடை நாடகத்த பத்தி அவ்ளோவா தெரியாது..
  நான் பார்த்ததே இல்ல..
  அதனால வருகை பதிவு மட்டும்..

  ReplyDelete
 8. விரிவாக பதிவிடுகிறேன்

  ReplyDelete
 9. பாலச்சந்தர் அவரின் படங்களில் பெண்களை பெரும்பாலும் மிகவும் தன்னம்டிக்கை உடையவர்களாக சித்தரித்திருப்பார். அது எனக்கு மிக பிடிக்கும் ஒன்று...அவர் தற்போது பாரதிராஜாவுடன்ஒரு படத்திலும் நடித்து வருகிறார் . படத்தின் பெயர் "ரெட்டச் சுழி"...

  ReplyDelete
 10. நன்றி பட்டிக்காட்டான்.

  ReplyDelete
 11. //அவர் தற்போது பாரதிராஜாவுடன்ஒரு படத்திலும் நடித்து வருகிறார் . படத்தின் பெயர் "ரெட்டச் சுழி"...//

  நானும் பார்த்தேன்.

  //தன்னம்பிக்கை உடையவர்களாக சித்தரித்திருப்பார். அது எனக்கு//

  ஆமாம்.நன்றி டக்ளஸ்.

  ReplyDelete
 12. T.V.Radhakrishnan said...
  //விரிவாக பதிவிடுகிறேன்//

  நன்றி சார்!

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!