Thursday, April 9, 2009

எனக்குப் பிடித்த கவிதைகள் (ஆத்மாநாம்)

ஆத்மாநாம் என்பவர் சிறந்த கவிதைகள் எழுதியவர். தன்னுடைய 33ஆம் வயதில்
இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து விட்டார். பிரிந்த வருடம் 1984 என்று நினைக்கிறேன். இவர் இறந்து நான்கு வருடம் கழித்துத்தான் இவர் கவிதைகள் எனக்கு அறிமுகம் ஆயிற்று. இன்னும் சில புரியாத கவிதைகள் இருக்கிறது. ஒரு நாள் சத்தியமாகப் புரியும்.

தரிசனம்

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்
ஆயினும்
மனதினிலே ஒரு நிம்மதி

உலக மகா யுத்தம்

ஒரு கூரை மேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த காக்கை பறந்தது
காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில்
அணில் பறநதது
காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஓன்றும்
ஆகவில்லை

செடி

சாக்கடை நீரில் வளர்ந்த
ஒரு எலுமிச்சைச் செடி
போல் நான்
அளிக்கும் கனிகள்
பெரிதாகவும் புளிப்புடனும்
தானிருக்கும்
கொஞ்சம் சர்க்கரையை
சேர்த்து அருந்தினால்
நல்ல பானகம் அல்லவோ

அழைப்பு

இரண்டாம் மாடியில் 
ஓற்றைச் சன்னல் அருகில்
நான் என்னோடு
உணவருந்திக்கொண்டு
அருகில் வேப்பமரக்கிளை
மீதிருந்த காகம் அழைத்தது
பித்ருக்களோ தேவர்களோ
என எண்ணி
ஒரு சிறு கவளச் சாதத்தை
வெளியே வைத்தேன்
சாதம் சாதமாக
காகம் பறந்து விட்டது
யாருடைய பித்ருக்களோ
நானறியேன்.


படிக்க:-

கதையின் முடிவு என்ன? சொல்லுங்கள்!


18 comments:

  1. நல்ல கவிதைகள்

    ReplyDelete
  2. கவிதைகள் நல்லாயிருக்கு

    ReplyDelete
  3. இரண்டாவது கவிதை அருமை...பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  4. மற்ற கவிதைகளும் நன்றாக இருந்தாலும், அழைப்பு கவிதை சிறப்போ சிறப்பு. நானும் அவரின் சில கவிதைகளை வாசித்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. :-)

    அவரது அத்தனை கவிதைகளுமே தனிச்சுவையை கொண்டிருப்பவை. பகிர்வுக்கு நன்றிகள் பல

    ReplyDelete
  6. 1.ரமேஷ் வைத்யா

    2.கவின்

    நன்றி நண்பர்களே.அப்படியே நம்ம

    “கதையின் முடிவு என்ன? சொல்லுங்கள்!”

    படிச்சிட்டு சொல்லுங்களேன்.

    ReplyDelete
  7. 1.ஆ.முத்துராமலிங்கம்

    2.புதியவன்

    3.குடந்தைஅன்புமணி

    கருத்துக்கு நன்றி நண்பர்களே.

    அப்படியே நம்ம

    “கதையின் முடிவு என்ன? சொல்லுங்கள்!”

    படிச்சிட்டு சொல்லுங்களேன்.

    ReplyDelete
  8. வாங்க சென்ஷி,

    கருத்துக்கு நன்றி.

    அப்படியே நம்ம

    “கதையின் முடிவு என்ன? சொல்லுங்கள்!”

    படிச்சிட்டு சொல்லுங்களேன்

    ReplyDelete
  9. Hi this is Ubaid,

    Aathmanam piranthathu 1984 or 1974? please correct the year.

    ReplyDelete
  10. Ubaid,

    //Aathmanam piranthathu 1984 or 1974? please correct the year.//

    வருகைக்கி நன்றி.

    நான் எழுதியது ”பிரிந்த” வருடம் 1984.i.e. the day he departed
    ”பிறந்தது” இல்லை.

    ReplyDelete
  11. கவிதைகள் நன்று.

    ReplyDelete
  12. கவிதைகள் அருமை.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. திகழ்மிளிர் said...

    //அருமை//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. மாதேவி said...

    //கவிதைகள் நன்று//

    நன்றி மாதேவி.

    ReplyDelete
  15. பாஸ்கர் said...

    //கவிதைகள் அருமை.பகிர்வுக்கு நன்றி.//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  16. கவிதைகளுக்கு நன்றி.
    பார்க்கவும்:

    http://innapira.blogspot.com/2010/05/blog-post_7649.html

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!