Thursday, April 2, 2009

லிப்டில் அவன்- ஆறு டீன் ஏஜ் பெண்கள்


         கவிதை


ஏழாவது மாடியில் நின்று
திறந்த லிப்டில் - ஆறு
டீன் ஏஜ் பெண்கள்
அவன் ஏறினான்
ஆறு,ஐந்து,நான்கு,மூன்று
இரண்டு,ஒன்று,தரைத்தளம்
திறந்த லிப்டிலிருந்து excuse me
சொல்லி வாய்மூடி சிரித்து 
வெளியேறி நடந்தார்கள்
லிப்ட் கதவை மூடி
தான் செல்ல வேண்டிய 
எட்டாவது மாடிக்கு
பட்டனை அழுத்தினான்


படிக்க:-

கவுண்டமணி-செந்தில்-எலெக்‌ஷன் டைம்




27 comments:

  1. கொடுத்து வச்ச மாகராசன்.

    அது சரி இதுக்கு பேரு என்னது கவிதையா!சொல்லவேயில்ல

    ReplyDelete
  2. //கொடுத்து வச்ச மாகராசன். //
    :))
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. படம் அழக்காக உள்ளது அத நான் சுட்டகிரே...ன்

    ReplyDelete
  4. விஷ்ணு வாங்க.கருத்து மற்றும் வருகைக்கு நன்றி.

    //கொடுத்து வச்ச மாகராசன்//
    ஆமாம் சார் “அவன்”தான்.

    //இதுக்கு பேரு என்னது கவிதையா!//

    ஆமாங்க.

    ReplyDelete
  5. அறிவே தெய்வம்!கருத்து மற்றும் வருகைக்கு நன்றி.

    ////கொடுத்து வச்ச மாகராசன்//

    அவந்தானே?

    ReplyDelete
  6. ஆ.முத்துராமலிங்கம்.கருத்துக்கு நன்றி.

    //படம் அழகாக உள்ளது அத நான் சுட்டகிரே...ன்//

    சுட்டுக்குங்க. ஆனா கிராபிக்ஸ் பண்ணி நீங்க நடுவுல நின்னுடாதீங்க

    ReplyDelete
  7. தலைவா... நம்ம பதிவுல உங்களுக்கு ஒரு மேட்டர் இருக்கு.. வாங்க, வாங்குங்க..

    ReplyDelete
  8. மன்னிக்கவும், இது கவிதையாகவேயில்லை. ஏழாவது மாடியிலிருந்து எட்டாவது மாடிக்கு ஏறிச் செல்லாமல் திறந்திருந்த லிஃப்டில் பெண்களுக்காக ஒருவன் பயணிப்பது என்பது எப்போதும் நடக்கக்கூடிய விஷயம்தான். ஆனால், பிரச்சனை இது சாதாரணமான விஷயம் என்பதால் அல்ல, நீங்கள் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு நிறம் கொடுத்திருந்தாலும், இது கவிதையாக ஆகவேயில்லை!

    ReplyDelete
  9. படிகளில் ஏறிச் செல்லாமல் என வாசிக்கவும் :)

    ReplyDelete
  10. கருத்துக்கு நன்றி.அவன் திடீர் என்று இவர்களை பார்த்தவுடன் ஒரு பரவச நிலை.அப்படியே
    ”ஆறு,ஐந்து,நான்கு,மூன்றுஇரண்டு,ஒன்று,தரைத்தளம் திறந்த லிப்டிலிருந்து excuse me" வரை ஒரு
    புஷ்பக விமானம் போல் தெரிகிறது.


    முகுந்த் நாகராஜன் டைப்பில்(சர் ரியலிசம்)எழுத
    முயற்ச்சித்தேன்.சரிவரவில்லையோ?.

    ReplyDelete
  11. //அவன் ஏறினான்//
    இதுதான் கவிதையின் சூட்சும வரி.
    அமைப்பியல்வாதம்ல...பிரிச்சு...
    மேய்வோம்ல..

    ReplyDelete
  12. உண்மையிலேயே நல்ல கவிதை!!! நல்ல ரசனையாளர்!!!

    கமெண்ட் மாட்ரேஷன் மாத்தவேணாம்.. கமெண்ட் ஃபார்ம் மட்டும் மாத்திவிடவும்!! எனக்கு லோட் ஆக லேட் ஆகும்... எனது ஃப்ரொபைலில் எழுத முடியவில்லை..

    ஆதவா!!!

    (கொஞ்சம் பிஸீ தல.!)

    ReplyDelete
  13. ஞாபகம் வருதே... கருத்துக்கு நன்றி.

    ////அவன் ஏறினான்//
    இதுதான் கவிதையின் சூட்சும வரி.
    அமைப்பியல்வாதம்ல...பிரிச்சு...
    மேய்வோம்ல//
    கொஞ்சம் புரியற மாதிரி பிரிச்சு மேய்ங்க!

    அண்ணே உங்க பெயர் அழுத்தினா நேர ஸ்ரீவைகுண்டத்திற்க்கே போகுதே!

    “ஓம் நமோ நாராயணா!”

    ReplyDelete
  14. நன்றி சென்ஷி!

    ReplyDelete
  15. ஆதவா நன்றி!

    // கமெண்ட் ஃபார்ம் மட்டும் மாத்திவிடவும்!!//

    Pop up window மாற்றி விட்டேன்.இன்னொருத்தர் வந்து “comment below post" மாற்று என்பார்.

    Feed back கொடுக்கவும்.

    ReplyDelete
  16. உள்ளே இருந்த அவன் லிப்ட் ஆபரேட்டர் தானே...

    ReplyDelete
  17. //உள்ளே இருந்த அவன் லிப்ட் ஆபரேட்டர் தானே//

    இல்ல தல.லிப்ட் ஆபரேட்டர்க்கு வழக்கமான வேலதானே.அதுல சுவராஸ்யம் இல்ல.


    நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  18. கார்த்திApril 6, 2009 at 12:05 PM

    படு மொக்கையா இருக்கு..

    ReplyDelete
  19. கார்த்திக்,

    வருகை கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  20. கலக்கிட்டீங்க. நான் பதிய ஒரு இளம்பிராய நிகழ்வை ஞாபகப் படித்திட்டீங்க :) நன்றி

    ReplyDelete
  21. ஆறு டீன் ஏஜ் பெண்க‌ள்.

    அவ‌ன் ஏறினான்
    என்ப‌த‌ற்கு அடுத்த‌வரி,
    ஆறு
    ஐந்து
    நான்கு
    ......இப்படியாக 1 வரை

    ""த‌ங்கைய‌தில் நெருப்பு வைத்து
    அக்காளை ஏறினார் ""இது காள‌மேக‌ப்புல‌வ‌ரின் சிவன் பற்றிய‌ சிலேடை பாட‌ல்

    த‌ங்கை=1த‌ன்+கை,2த‌ங்கை
    அக்காளை= 1அந்த‌+காளை,2அக்காவை
    ஏறினார்=1ஏறிஅமர்ந்தார்,2ஹி...ஹி

    ReplyDelete
  22. kavithainnu sollikara mathiri onnumE illainga :(

    adhaan parunga 22 responses :)))

    ReplyDelete
  23. kadarkarayil kudhirai
    aera aasai pattan
    kudhiraikku pasi
    pul thindradhu
    annandhu vaanathai paarthan
    pena eduthan
    sarriyalisa kavidhai eludhinan
    kaathavarayan

    ReplyDelete
  24. ஞாபகம் வருதே,

    அபச்சாரம்...அபச்சாரம். பிரம்மஹத்தி தோஷம் வந்துடப் போறதுண்ணா.காதப்-பொத்திண்டுட்டேன்

    ஸ்ரீரங்கத்து(அவா) சுஜாதா குறும்பு?

    ReplyDelete
  25. ஷக்திபிரபா,

    //kavithainnu sollikara mathiri onnumE illainga//

    ஆமாம்.

    ReplyDelete
  26. அனானி கருத்துக்கு நன்றி.


    இந்த கவிதையை எங்கோ படித்த மாதிரி இருக்கு.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!