Sunday, April 5, 2009

ஹைக்கூ..ஹைக்கூ...

தினசரிவாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightningஅனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப் படுத்துவதுதான் ஹைகூ.ஒரு நேரடி அனுபவம்.

தூளியில்
ஒழுகும் சிறுநீர்
தூங்கும் அம்மா


கொசுவலைக்குள்
படுத்திருக்கும்
தர்பூசணித் துண்டுகள்


நடு நீசி ரயிலில்
அம்மா தாயே 
சிறுமி


திடீர் மின்னல்
பொந்தில் பெருச்சாளி
கண்கள்
`

ஹைக்கூ அல்ல.சும்மா ஒரு போடங்”கூ.”...

பார்பர் ஷாப்
காலண்டரில் நமீதா
செம்ம கட்டிங் மச்சான்

படிக்க:

கை நழுவியது அரிய வாய்ப்பு -கவிதை
 

7 comments:

  1. எல்லாமே அழகுதான்! ஆனால் எல்லாருக்கும்... அதாவது சகலருக்கும் பிடிப்பது கடைசியாகத்தான் இருக்கும்! சும்மாச்சுக்கும்...

    ReplyDelete
  2. //கொசுவலைக்குள்
    படுத்திருக்கும்
    தர்பூசணித் துண்டுகள்//

    கோடைக்காலம் ஆரம்பித்துவி்ட்டதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
  3. நன்றி அன்புமணி.

    இன்னோரு கவிதைப் பத்தி சொல்லலியே?

    ReplyDelete
  4. வரிகளை உடைத்துப் போட்டு, கடைசி வரியில் ஒரு டிவிஸ்ட் கொடுத்து அதை ஹைகூ என்கிறீர்கள். இவை உற்பத்தி செய்யப்பட்ட கவிதைகளைப் போல் தெரிகின்றன.

    ReplyDelete
  5. கருத்துக்கு நன்றி சுந்தர்.

    //வரிகளை உடைத்துப் போட்டு, கடைசி வரியில் ஒரு டிவிஸ்ட் கொடுத்து//

    மறுக்கிறேன்.தவறான புரிதல்.It is not a cooked one.எனக்கு இதெல்லாம் ஒரு மின்னல் நேர நேரடி அனுபவ தாக்கத்தில் எழுதியது.அவரவர் உள் வாங்குதலைப் பொறுத்து இருக்கிறது.

    //நடு நீசி ரயிலில்
    அம்மா தாயே
    சிறுமி//

    இது எனக்கு கல்கத்தா போகும்போது
    ஆழ்ந்த உறக்கதில் இருப்பவனை எழுப்பி இந்தியில் பிச்சைக் கேட்டாள்.திடுக்கிட்டு விழித்தேன்.
    அடுத்த அதிர்ச்சி,போட்ட காசை வாங்காமல் பாத்ரூம் பக்கம் கண்ணைக்காட்டி போகலாமா என்றாள்.
    விரட்டி விட்டேன்.

    ”கை நழுவிய அரிய வாய்ப்பு” இந்த
    கவிதையைப் பற்றி கருத்துச் சொல்லுங்களேன்.

    "

    ReplyDelete
  6. //அடுத்த அதிர்ச்சி,போட்ட காசை வாங்காமல் பாத்ரூம் பக்கம் கண்ணைக்காட்டி போகலாமா என்றாள்.
    விரட்டி விட்டேன்.

    ”கை நழுவிய அரிய வாய்ப்பு” //

    .....????!!!!! :-)

    ReplyDelete
  7. கொசுவலைக்குள்
    படுத்திருக்கும்
    தர்பூசணித் துண்டுகள்

    <<<<<<,

    இது பிடித்தது. miga nalla karpanai.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!