Sunday, April 5, 2009

கை நழுவியது அரிய வாய்ப்பு -கவிதை

குளியல் அறையில்

நெடு நேரம் தேடியதில்

சப்பிப் போட்ட புளிப்பு முட்டாய் 

சில்லுப் போல சின்ன

சோப்புத் துண்டுதான் கிடைத்தது

அதுவும் வெளுத்துக் 

காய்ந்துதான் போயிருந்தது

அதை நழுவி விடாமல் 

இறுகிப்பிடித்து தேய்த்துக்

குளித்தேன்

புதிதாக வாங்கி வந்த

புத்துணர்ச்சி தரும் சோப்

உரித்த கோழி போல்

கையில் இருந்தது

வழுக்கி விழுந்து விட்டது 

டாயலட் கம்மோடில்

தூக்கி எறிந்திருக்கலாம்

அதன் உள் அட்டையும்

வெளி அட்டையும் 

ஒரு முறையேனும்

முகர்ந்துப் பார்த்துவிட்டு

படிக்க:-

கவுண்டமணி-செந்தில்-எலெக்‌ஷன் டைம்



8 comments:

  1. நல்ல கவிதைங்க...

    நான் குளியலைறையப் பத்தி இப்பத்தான் எழுதினேன்!!!

    கவிதை நடையும் நல்லா இருக்கு.. இன்னும் முன்னேற்றம் வேணும்!!

    படிக்கும் பொழுது ஏற்படும் புன்னகையை மட்டும் மறக்க முடியவில்லை!!! இந்த சிறு விசயத்தையும் கவிதையாக்கிய உங்களைப் பாராட்டுகிறேன்!!

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  3. நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete
  4. கார்த்திApril 6, 2009 at 12:07 PM

    //எதுவும் சொல்லாத போகாதீங்க!//

    இதுவும் படு மொக்கையா இருக்கு.

    ReplyDelete
  5. கார்த்தி,

    நன்றி.

    ReplyDelete
  6. உங்களுக்கு O Henry, சுஜாதா பாணி கடைசி வரித் திருப்பங்கள் ரொம்பப் பிடிக்குமென்று நினைக்கிறேன் :)

    ஆனால், வித்தியாசமான பாடுபொருள் என்ற அளவில் எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களிடம் உள்ள speciality இதுதான் - அதிகம் பேசப்படாத அல்லது முக்கியத்துவம் பெறாத விஷயங்களைக் கவிதையாக்குகிறீர்கள்.

    ReplyDelete
  7. சுந்தர் நன்றி.

    //உங்களுக்கு O Henry, சுஜாதா பாணி கடைசி வரித் திருப்பங்கள் ரொம்பப் பிடிக்குமென்று நினைக்கிறேன்//

    சாதாரணமகவே அரைவாசிக்
    கவிதைகள் கடைசி வரித் திருப்பங்கள்
    இருக்கிறது. அது ஒரு வகையில் ஒரு சுவாரஸ்யம்.அவ்வளவுதான்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!