Thursday, April 2, 2009

கவுண்டமணி-செந்தில்-எலெக்‌ஷன் டைம்

கவுண்டமணி:" வாடா...மண்டையா..என்ன சோகமா இருக்க?”

செந்தில்: “இந்த கூட்டக் கண்டா பிடிக்கல”

கவுண்டமணி: “அப்ப... பொரியல் சாப்பிடு”

செந்தில்:”வெளயாடதீங்கண்ணே.நா சொலறது அரசியல் 
கூட்டு”

கவுண்டமணி:”ஓ.... தட் குரூப் ஸ்டாண்ட் அப் காமெடி....வாட் இஸ் தி மேட்டரு?"

செந்தில்:”யாருக்கும்.. ஓட்டு போடப் போறதில்ல”

கவுண்டமணி:”போடாத....நீயே வச்சுக்கட..எலெக்‌ஷன் 
ஏஜண்ட் தலயா.உன்னோட ஒரு ஓடலதான் பார்லிமெண்ட் 
நிக்கப் போகுது.”.

செந்தில்:”டமாஸ் பண்ணாதீங்கண்ணே... .”

கவுண்டமணி:”டமாஸ்ஸூம் பண்ணல டாஸ்மாக்கும்
பண்ணல”


செந்தில்: “இந்த தடவை இலைக்கு.....”

கவுண்டமணி:””என்னது இலைக்கா.....”

செந்தில்:”அதில்லெண்ணே....உங்கள மாதிரி பிரியாணி 
இலைக்கு கிழ வச்ச காச எடுத்துட்டு ஓட்டுப் போடவும் போறது இல்ல”

கவுண்டமணி:” கத்திப் பேசாதடா....எலெக்‌ஷன் டூட்டித் 
தலையா...”

செந்தில்:”வர வர யாரையும் பிடிக்கமாட்டேங்குது..போடாம 
வீட்லேயும் உட்காரப் பிடிக்கல..அதனால 25A(IDL) ல...”

கவுண்டமணி:””25A பஸ்ல எதுக்குப் போற..என்னடா சொல்ற”

செந்தில்:”குறும்ப விடுங்கண்ணே...உங்களுக்கு 
அவேர்னெஸ்ஸே இல்ல..”.

கவுண்டமணி:.”என்னது என்ன நெஸ் இல்ல...நீ என்ன 
எல்லாம் தெரிந்த ஞானியா?

செந்தில்:”அது ஒரு விதி. எந்த வேட்பாளரையும் பிடிக்கல 
அப்படின்னு எழுதி..கொடுக்கலாம்.” IDLன்னா ஐ டோண்ட் 
லைக்(I don't like)

கவுண்டமணி: ”அது என்ன "A", அடல்ஸ் ஒன்லியா?”

செந்தில்: ”எனிபடி,... அதாவது ”ஐ டோண்ட் லைக் எனிபடி”

கவுண்டமணி: ”சே!அடி பிண்ணிட்டாங்க...இருபது  
வருசத்துக்கு முன்னே நானே இந்த ஐடியாவை யோசிச்சேன்.
எனக்காகவே கொண்டுவந்த மாதிரி...புல்லரிக்குதுடா
இந்த ஐடியாவ கவர்மெண்ட்ல எண்ட்ரி பண்ணி 
வச்சுருக்கலாம்.சே....சரி..அந்தப் பாரம் வச்சு 
இருக்கியா? உன்ன எனக்கு பிடிக்கல...
கவர்மெண்டல எழுதி குடுக்கப் போறேன்..”

செந்தில்:””வெளயாடதீங்கண்ணே...யாருக்கும் வோட்டுப் 
போட பிடிக்கலன்னு எழுதி கொடுக்கலாம்..இது மாதிரி நிறைய 
பேர் எழுதிக்கொடுத்த எலக்‌ஷன நிறுத்திருவாங்க.முதல்ல 
கிராமத்து பஞ்சாயத்து தலைவர் எலக்‌ஷன்ல இத டெஸ்ட் 
பண்ணிப் பார்த்துட்டு அப்பறம்தான் அசெம்பளி,
பார்லிமெண்ட்ன்னு கொண்டு வருவாங்க.

கவுண்டமணி: “ சரி ஒரு கைப் பார்த்துருவோம்”

செந்தில் மனத்திற்குள் “அல்டாப் மாமாவுக்கு..டவுசர் கிழியப் 
போவுது”

கவுண்டமணி: “என்னடா... மனசுக்குள்ள டீப் திங்கிங்?”

செந்தில்:” இந்த விதிய நெனச்சேன்.. புல்லரிக்குது”.

கவுண்டமணி:”யாரோட விதி?”

செந்தில்:”அதாங்க ஐ டோண்ட் லைக்”

கிராமம். ஆலமர மேடை. ஜமுக்காளம். நாட்டாமை. செந்தில், க.மணி,வழக்கம் போல முகத்தில் ரோஸ் 
பவுடர் அப்பிக் கொண்டு புது வேஷ்டி சட்டை.மக்கள் கூட்டம்.

நாட்டாண்மை: “இந்த தடவை கிராமத்தலைவர் எலக்‌ஷனல மாணிக்கமும் அவர எதிர்த்து பொன்னுச்சாமியும் நிக்கிறாங்க. 
மாணிக்கத்தப் புடிச்சவங்க ஏணி சின்னத்தல போடுங்க.பொன்னுச்சாமிய புடிச்சவங்க படகு சின்னத்தலபோடுங்க.
யாருக்கு அதிக ஓட்டோஅவங்க கிராமத்தலைவர்.

கவுண்டமணி: “ஸ்டாப்...தி நாஸ்டி காமெடி....இந்த மொள்ள
மாரியும்,முடிச்சவிழ்க்கி ரெண்டு பேருமே மாறி மாறி வந்து 
நாறடிக்குறானுங்கோ. ஒரு ஃப்ரஸ்ஸா தலைவர் இல்லாம 
கிராமம் அழுகிப்போச்சுடா...பேமானிங்களா...”

நாட்டாண்மை: ”உனக்கு பிடிக்கலன்னா பொத்திக்கிட்டு போ...”.

கவுண்டமணி: ”அகேய்ன் ஸ்டாப்...தி நாஸ்டி காமெடி..எனக்கு ரெண்டு பேரையும் புடிக்கல என்னோடு எதிர்ப்ப 25A(IDL)
மூலமா தெரிவிக்கப் போறேன்.”
நாட்டாண்மை:” என்னது 25A இட்லியா.. வயலுக்கு புது பூச்சி 
மருந்தா?”

கவுண்டமணி:”டேய் ..மட்கார்டு தலையா...இந்த சொட்டைக்கு சொல்லுடா இவணுங்கெல்லாம் நாட்டு நடப்பு தெரியாம ஆலமரத்துக் கிழே தூங்கியே காலத்த ஓட்டறானுங்க.முதல் 
முதல்லா ஒரு “எதிர்ப்புப் புரட்சி” கொண்டு வரப்போறேன். 
எலகஷன் நிக்கப் போவுது“

செந்தில் நாட்டாமை காதில் ஏதோ சொல்லுகிறார்.முகம் 
சிவக்கிறது.மீசை துடிக்கிறது. மக்களுக்கும் 25A(IDL) விவரம் 
போகிறது.

நாட்டாண்மை எழுந்து நின்று,மக்களைப் பார்த்து கேட்கிறார்.” இந்த (க.மணியை காட்டி) இந்த டபுள் பேமானி.. துண்டு பீடிய ,வெட்டிபப்யல 25A இட்லிக்கு கிழ எவ்வளவு பேருக்குப் 
பிடிக்கல?.”

மக்கள் ஒவ்வொருவரும் “ஐ டோண்ட் லைக்” “ஐ டோண்ட் 
லைக்” கத்திக் கொண்டு கையில் அரிவாள்,கம்புகளோடு 
கவுண்டமணியை நெருங்குகிறார்கள்.

முற்றும்

14 comments:

  1. நல்லாருக்கு ரவிஷங்கர்..அதிலும் விதம் விதமான 'தலையா..'ரசித்தேன்...

    ReplyDelete
  2. Me...first..பாசமலர்.நான் பப்ளிஷ்தான் பண்ணியிருந்தேன்.த.மணத்தில இணைக்கும் முன்னமே உங்க கமெண்ட் வந்திருச்சு.

    நன்றி.

    ReplyDelete
  3. தல...49ஓவா? ஓக்கே...ஓக்கே...
    சூப்பர் தல!

    ReplyDelete
  4. அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க...!

    ReplyDelete
  5. அதிஷா!

    //அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க...!//

    நீங்க ரசிச்ச “சிரிப்பொலி”யா.நன்றி.

    ReplyDelete
  6. தல(உங்க பதிவு எஃபக்ட்ல தலயச் சேத்துக்கிட்டேன்) பின்னிட்டீங்க...
    சொல்ல வேண்டிய விஷயத்தை நல்லா விஷேசமாச் சொல்லி இருக்கீங்க..

    ReplyDelete
  7. நன்றி தமிழ்ப்பறவை. அந்த காலத்துல “பாஸ்”
    இப்போது “தல”. ஓகே தல!(?)

    ReplyDelete
  8. வாங்க ச்சின்னப் பையன். கருத்துக்கு
    (சங்கேதக்குறிக்கு?) நன்றி.

    அண்ணே தமிழ்ல நாலு வார்த்தை சொல்லுங்க!

    ReplyDelete
  9. மொக்க டா ரவி

    ReplyDelete
  10. அனானி,

    நன்றி.ஏண்டா குமாரு ஒரிஜனல் முகத்தோட வரக்கூடதா?

    ReplyDelete
  11. நல்ல விஷயத்தை நகைச்சுவையுடன் அனைவரையும் அடையும் வகையில் சொல்லிருக்கீங்க. நல்லாருக்கு ரவி ஷங்கர் சார்.

    ReplyDelete
  12. நன்றி விக்னேஷ்வரி.நம்ம மாயா ஜால கதையை படிச்சீங்களா?

    ReplyDelete
  13. அடங்கப்பா.. இது உலக ஓட்டுடா சாமி.. :-)

    ReplyDelete
  14. கார்த்திகைப் பாண்டியன் said...

    //அடங்கப்பா.. இது உலக ஓட்டுடா சாமி.. :-)//

    நன்றி கார்த்திகைப் பாண்டியன்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!