Monday, March 30, 2009

இரண்டு வார்த்தை கதைகள் -சுஜாதா-நான் - 2


சுஜாதா எப்பவோ இரண்டு வார்த்தைகளில் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.


சுஜாதா கொடுத்த உதாரணக் கதைகள் கிழே:-

1)தலைப்பு:  ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?

கதை:  முதலிரவில் கேள்வி

2)தலைப்பு:   சுவரில் ஆணியடிப்பவன் கேட்ட கடைசிக் கேள்வி

கதை:   கன்சீல்ட் ஒயரிங்க்ப்பா


நான் எழுதியது

1)தலைப்பு: மிகவும் சிக்கலான கேஸ்.பத்து  டாகடர்கள் பச்சை உடையில். டெல்லியிருந்து வந்த ஸ்பெஷலிஸ்டு ஆசன வாயின் வழியே ஸ்கோப்பை நுழைக்க நெருங்கிய பேஷண்டின் வயது......


கதை: மூன்று மாதம்

தலைப்பு:-
எக்ஸ்பிரஸ் ரயில் கூடுர்தாண்டியவுடன்தான் உறைத்தது பிரேமாவுக்கு.அடுப்பில் பால் பாத்திரம் வைத்தது.. 

கதை: என்ன செய்வது?

பழைய கதைகள் படிக்க:-   

28 comments:

  1. எப்படி இப்படி? வித்தியாசமாத்தான் இருக்கு!

    ReplyDelete
  2. நன்றி அன்பு மணி.

    ReplyDelete
  3. மறுபடியுமா? நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. தல நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. நன்றி அனானி.

    ReplyDelete
  6. நல்லாதானிருக்கு. ஆனா தலைப்பு ரொம்பவே நீளம்.

    ReplyDelete
  7. நன்றி வித்யா.

    //ஆனா தலைப்பு ரொம்பவே நீளம்//

    குறைச்சுட்டேன்.

    ReplyDelete
  8. ரொம்ப அழகாக இருக்கு அண்ணா

    ReplyDelete
  9. முதன் முதலாக உங்கள் தளத்திற்கு வருகை தந்தேன் அண்ணா..மிக அருமை...

    ReplyDelete
  10. முதல் வருகைக்கு கருத்துக்கு நன்றி அன்பு.கவிதை/ஹைக்கூ/கதைகளும் படிங்க.கருத்தச் சொல்லுங்க.

    ReplyDelete
  11. வந்தேன்......

    இரு வரிக் கதைகள் நானும் கேள்விப்பட்டதுண்டு!!! அதே போன்று முடியாத கதை ஒன்றூம் சுஜாதா கொடுத்திருந்ததாக ஞாபகம்.... ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் ஒரு லிங்க் இருக்கும்...

    உங்களுடைய கதை தலைப்பில் இருக்கு... தலைப்பு கதையில் இருக்கு!!!! ///

    அப்பறம்... உங்களது பின்னூட்ட முறை ரொம்ப சிரமம் எனக்கு... அவ்வளவு சீக்கிரம் லோட் ஆவாது!! :( முதல் பின்னூட்டத்திலேயே இப்படி சொல்றானேன்னு நினைக்காதீங்க... பின்னூட்ட முறையை வேறுமாதிரி மாத்தினா எனக்கு சவுகரியமா இருக்கும்!!!!

    அன்புடன்
    ஆதவா

    ReplyDelete
  12. என்னோட ப்ரொஃபைலில் எழுத முடியலை!!! ம்ம்ம்,,,ஹூ!!!

    ReplyDelete
  13. கதையைத் தொடுவதற்குள் தலைப்பிலேயே தடுமாறி விழுந்துவிட்டேன்.

    ReplyDelete
  14. கருத்துக்கு நன்றி தமிழ்ப்பறவை.
    ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நீளம்னு தெரியது. சின்னதாக்கிப் போட முயற்ச்சிக்கிறேன்.
    அதிஷாவோடத படிச்சீங்களா?

    ReplyDelete
  15. என் அழைப்பை மதித்து முதல் வருகை கருத்துக்கு நன்றி ஆதவா.

    ReplyDelete
  16. ஆதவா!

    என் அழைப்பை மதித்து முதல் வருகை கருத்துக்கு நன்றி.

    //உங்களுடைய கதை தலைப்பில் இருக்கு... தலைப்பு கதையில் இருக்கு//

    இந்த கமெண்ட எனக்குப் பிடிச்சிருக்கு.

    // பின்னூட்ட முறையை வேறுமாதிரி மாத்தினா எனக்கு சவுகரியமா இருக்கும்//

    நீங்கதான் முதன் முறையா சொல்றீங்க.ஆபாச/ அனானி கமெண்ட் வருவதால் comment moderation வைத்துள்ளேன்.

    தயவு செய்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் செய்கிறேன்.

    ReplyDelete
  17. நல்லா இருக்கு. ஹைகூ கதைகளோ? :)

    ReplyDelete
  18. வாங்க சுகுமார்.கருத்துக்கு நன்றி.

    //ஹைகூ கதைகளோ?//

    கமெண்ட் நல்லா இருக்கு.

    ReplyDelete
  19. உங்கள் கதைகளை விட அதிஷாவின் இரண்டு வார்த்தை கதைகள் அருமையாக இருக்கிறது. படித்தீர்களா?

    ReplyDelete
  20. அனானி கருத்துக்கு நன்றி.படித்து விட்டேன்,அங்கு
    பதிலும் போட்டுவிட்டேன்.அங்கேயே
    (பின்னூட்டத்தில்) கூட ஒரு இரண்டு வார்த்தைக்
    கதை எழுதியுள்ளேன். படித்தீர்களா?

    என் பழைய கதைகளை படித்தீர்களா?

    நான் தலைப்பை சுருக்க வேண்டும்.அடுத்து என் கதைகளுக்கும் பாராட்டு வ்ந்துள்ளது.

    ReplyDelete
  21. "தல"

    நல்லாத்தான் இருந்துச்சு...... அப்படியே என்னோட, இந்த சிலவரி சிறுகதைகளையும் இங்கே போய் வாசிச்சுட்டு சொல்லுங்க.......

    http://jokkiri.blogspot.com/2008/12/blog-post.html

    ReplyDelete
  22. நன்றி கோபி. வருகிறேன்.

    ReplyDelete
  23. அதிஷாவோடதும் படிச்சேன்.
    நீங்க குறிப்பிட்டிருந்த மூணுமே எனக்கும் பிடிச்சிருந்தது.நானும் ட்ரை பண்ணினேன்.என்னவோ முடிவுறா ஹைக்கூ போலவும், ஜூ.வி டயலாக் போலவும், கொஞ்சம் ஜோக் போலவும்,செய்தி விமர்சனம் போலவும் தோணுனதால விட்டுட்டேன்.
    உதாரணத்துக்கு:
    தலைப்பு: சரக்கு ரயில் தடம் புரண்டது.
    கதை: ”‘ரயிலுமா..?”- ‘குடி’மகன்..?!

    ReplyDelete
  24. //முடிவுறா ஹைக்கூ போலவும், ஜூ.வி டயலாக் போலவும், கொஞ்சம் ஜோக் போலவும்,செய்தி விமர்சனம்//

    இந்த விமர்சனம் நல்லா இருக்கு.

    //தலைப்பு: சரக்கு ரயில் தடம் புரண்டது.
    கதை: ”‘ரயிலுமா..?”- ‘குடி’மகன்..?!//
    முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

    கதை: “சரக்கு ஏத்தியாச்சுல்ல?”

    ReplyDelete
  25. நன்றி சார்... கதை மாதிரி நான் சொன்னதை நீங்க கதையா மாத்திட்டீங்க...

    ReplyDelete
  26. தமிழ் பறவை,

    நன்றி. உங்கள் பதிவில் எவ்வளவு நாள் அந்த பெண் குடத்தை வைத்துக் கொண்டு வழி மேல் விழி வைத்து காத்திருப்பாள்?

    ReplyDelete
  27. புதுப்(பழைய) பதிவு போட்டாச்சு.. எட்டிப் பார்த்துட்டுப் போங்க சார்...

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!