Monday, March 16, 2009

அபார்ட்மெண்டில் செல்ல நாய் -தொல்லை

தனி விடுகளில் செல்ல நாய் வளர்ப்பதற்க்கும் அபார்ட்மெண்டில்  வளர்ப்பதற்க்கும் வித்தியாசம் இருக்கு.அபார்ட்மெண்டில் - வளர்ப்பவர்களுக்கும் மற்றும் வசிப்பவர்க்ளுக்கும் ,ஏன் நாய்க்கும் தொல்லைகள் ஜாஸ்தி. சில் அபர்ர்மெண்ட்களில் ரூல்ஸ் இருக்கு வளர்க்கக் கூடாது என்று. இருந்தாலும் பிடிவாதம் பிடித்து வளர்த்து தொல்லை தருகிறார்கள். திருந்தவே மாட்டார்களா?

 கோர்ட் வ்ரைக் கூடப் போய் இருக்கிறார்கள்.

நான் கண் கூடாக பார்த்தக் கொடுமைகள்:- 

நாயை பிளாட்டின் மொட்டை மாடியில் வாக்கிங் அழைத்துப் போய் “ஆய்” “மூச்சா” போக வைப்பது. அது அங்கிருக்கும் துணிகளை கடிப்பது.வத்தல் வடாம் மேல் போவது.வீட்டை திறந்தவுடன் துள்ளி குதித்து திறந்த வீட்டுக்குள் ஒடுவது.அந்த வீட்டில் இருப்பவர் அலறுவது.”மோந்து பார்க்கும்...கடிக்காதுங்க...” என்று சொல்லிவிட்டு “ ஏய்... பிங்கி... don"t be naughty"" என்று செல்லமாக க்டிந்துக் கொள்வது.  ஒவ்வொறு முறையும் எதிர் வீட்டுக்காரர் பயந்து பயந்து கதவை திறந்து வெளியே போக  வேண்டும். வயதானவர்களுக்கு நாய்னஅலர்ஜிதான்.

லிப்டில் அதுவும் வந்து மற்றவரிகளின் கை கால்களை நக்கி கலவரப் படுத்துவது. நாயை தனியாக போட்டு பூட்டி வைத்து விட்டு ஷாப்பிங் போவது. ஓயாமல் குறைத்து தொல்லைதான். வாக்கிங்கில் தெரு நாயகள் துரத்தி வந்து செல்ல நாயை குதறுவது. நாய் கூட இருக்கும் போது பேசுவதை தவிர்ப்பார்கள். பேசவிடாமல் நக்க ஆரம்பிக்கும். வளர்ப்பவர்கள் அதை சரியாக பராமரிப்பது கிடையாது.

கவிதை படிக்க:-

இவள் என் மனைவி - ஒரு கவிதை

3 comments:

  1. திரு ரவிசங்கர் ஜி,


    உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி இருக்கேன்.

    http://vediceye.blogspot.com/2009/03/blog-post_17.html

    உங்களுக்கு விருது வழங்கி நான் கெளரவம் பெருகிறேன்....!

    ReplyDelete
  2. நன்றி ஸ்வாமிஜி.உங்கள் பதிவில் பார்க்கவும் என் பதிலை.

    ReplyDelete
  3. ரொம்ப பட்டிருப்பீங்க போல...அபார்ட்மென்ட்கள்ல, பக்கத்து வீடுகள்ல, ஹவுஸ் ஓனர் வீட்லன்னு இந்த நாய்ங்க தொந்தரவு இல்லாத இடமே இல்ல. அதுலயும் புதுசா குடிவரவங்கள இந்த நாய்ங்க படுத்தர பாடு இருக்கே....

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!