வாழ்க்கையில் பல சுகங்களில் மொட்டை மாடி ஒரு சுகம்.மேலே நின்று கொண்டு எல்லோரையும் கடவுள் மாதிரி ”கவனி”க்கலாம்.ஒவ்வொறு தடவையும் படிகளில் ஏறும் போதும் ஒரு பரவசம். மாடிக்கு வந்தவுடன் சடாரென்று ஒரு வெட்ட வெளிச் சுதந்திரம்.சந்தோஷ அகண்ட வெளி.பல கோணங்களில் கிழ் உலகை பராக்குப் பார்க்கலாம்..
சுதந்திர பறவைகள்(free bird) என்று சொல்வதுண்டு.ஏன் அது உலகத்தை விட்டு மேலே தனியாக சுதந்திரமாக இருப்பதால்..அது மாதிரி மொட்டை மாடியும்?
வீட்டின் மேலே எதுவும் கட்டாமல் மொட்டையாக விட்டு விட்டால் அது மொட்டை மாடி என்பது ஒரு வசீகரமான சொல் வழக்கு.மொட்டை மாடிக்கென சில சாமுத்திரிகா லட்சணங்கள் உண்டு.எங்களது ஒரு மூணு போர்ஷன் மொட்டை மாடி.ஒருமிடில் கிளாஸ்த்தனமான மொட்டைமாடி. முக்கியமாக “நைட் ஷோ”வுக்கு ஏதுவானது. வீட்டின் உள்ளே போகமலேயே படிக்குள் எகிறி குதித்து,சன் ஷேடு தாவி மாடி போய் விடலாம்.
ஒரு தடவை என் பெரியக்காவையும் நைட் ஷோவுக்கு(புவனா ஒரு கேள்வி குறி)அழைத்துக் கொண்டு போய் விட்டு எகிறி குதிக்கத் தெரியாமல் நானும் என் அண்ணாவும் அவளுடைய பின் பக்கத்தில் கை வைத்து அவளை ஏற்ற , அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டி, சிரிப்பு வந்து அவள் எங்கள் மீது விழுந்து,நாங்களும் தொபுகடீர் என்று விழுந்து சிராய்த்துக் கொண்டோம்.
”இந்த கட்டைல போற கம்மனாட்டிகளுக்கு என்ன சினிமா வேண்டியிருக்கு?’
அம்மாவின் நடு தூக்கம் கலைந்த ஒரு எரிச்சல்.
மொட்டை மாடிக்கு அடுத்து அதற்கு கதவு என்ற ஒன்று உண்டு.எங்கள் வீட்டு மொட்டை மாடிக் கதவு “தொங்கிக்”கொண்டிருக்கும் கதவு.மொட்டை மாடி கதவு “படார்.. படார்” அடித்துக் கொள்ளும். சணல் போட்டுக் கட்டி வைத்தோம், கொஞ்சம் மெதுவாக “படார்..படார்” அடித்துக் கொண்டது.அதற்க்கென ஒரு கனமான செங்கல் உள்ளது. அதை ஒரு மாதிரி அட்டம் கொடுக்க வேண்டும். இல்லா விட்டால் , காற்றில் கதவோடு அதுவும் நகர்ந்து அடித்துக் கொள்ளும்(ல்லும்).இந்த டெக்னிக் பழகுவதற்கு கொஞ்ச காலம் ஆகும்.அந்த செங்கல் அடிக்கடி காணாமல் போகும்
மழை காலத்தில் பேய அடி அடிக்கும். அதுவும் நடு நிசி புயல் அடிக்கும் காலங்களில் ஒரு திகில் படம் மாதிரி அடித்துக் கொள்ளும்..
மாடியிலிருந்து பார்க்கும் பிண ஊர்வலங்களில் மல்லாக்காக படுத்திருக்கும் பிணங்கள் தொண்ணூரு டிகிரியில் நம்மளயே பார்பது மாதிரி இருக்கும். பிணம் தவிர சாமி ஊர்வல தரிசனம் பல கோணங்களில் பார்த்து அம்மா பரவசமடைவாள்.எங்கோ தொலை தூரத்தில் தெரியும் நீல நிற கடலும், அதில் மிதக்கும் குச்சி குச்சியான கப்பல்களும், லைட் அவுசும்,ஒரு பக்கத்தில் அடர்த்தியான தென்ன மரங்களும் அந்த தூரக் காட்சிகள் ஒரு கனவு மாதிரி இருக்கும்.
காக்கைக்கு சாதம் வைப்பத்தற்கு மொட்டை மாதிரி ஒரு இடம் அமையாது. அதே காக்கைகள் அவ்வபோது கொண்டு போடும் எலும்புத்துண்டுகள் பயமுறுத்தும். போஸ்டு மேன் எந்த தெருவில் இருக்கிறான,பஸ் புறப்பட்ட நிலவரம், காய்கறிக்காரன் திசை இவற்றை ஒரு ஏரியல் வியூவில் அறியலாம்.
ராத்திரி நேர மொட்டை மாடி ஒரு தனி உலகம். அதுவும் நடு நீசி மொட்டை மாடி? ஒரு தடவை மொட்டை மாடியில் படுக்கும் போது நடு நீசியில் விழிப்பு வந்து,வானில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களும், அமைதியான நிலவும் ,மிதக்கும் மேகங்களும்.எங்கோ ஓரத்தில் “பொய்ங்” என்று கத்திக் கொண்டு பயணிக்கும் விமானமும், அதன் மினுமினுக்கும் இறக்கை விளக்குகளும்...... ஆச்சிரியமும் பயமும் கலந்து, லுங்கியால் முகத்தை மூடி பில்டர் செய்து பார்த்தபடி......அன்று இரவு கழிந்தது.
மொட்டை மாடி ஏறும் எங்கள் வீட்டினர் ஒவ்வொறுவருக்கும் ஒரு பாணி உண்டு. சின்னக்கா பாவடையை தூக்கிக் கொண்டு விறு விறு என்று ஏறுவாள்.கைப்பிடி சுவரை தொடவே மாட்டாள். ஒரு ரிதம் இருக்கும்.ரெண்டாவது அக்கா தடுக்கி தடுக்கி ஒரு மாதிரி ஏறுவாள்.அம்மா ஏறும் போது பென்குயின் ஏறுவது மாதிரி இருக்கும். மாடிப்படிக் கட்டினவனை திட்டிக் கொண்டே ஏறுவாள்.
12வது படியில் ஒரு சின்ன ஒதுக்குப் புறம்.அதில் தலைகாணியுடன் பழைய புடவைச் சுற்றப்பட்டு ஒரு மூலையில்.அமுதசுரபி அல்லது கலைமகள் தரையில். அதன் மேல் ஒரு டம்ளர்.
சுழற்ச்சி முறையில் அங்கு ”பெண்டுகளை” பார்க்கலாம். சில சமயத்தில் மூன்று நானகு பெண்டுகளுக்கு ஒரே சமயத்தில் வாய்த்துவிடும். அரட்டை சத்தம் மாளாது.இது இயற்கை (அந்த காலத்துப்)பெண்களுக்கு கொடுத்த அடுத்த சுதந்திரம்.
முதல் அக்காவை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை இதே மொட்டைமாடியிலிருந்தே பார்த்து விட்டு “பிடிச்சருக்கு” என்றாள்.இதே அக்கா அப்பாவோ அம்மாவிடமோ திட்டு வாங்கிக்கொண்டு விசிக்கும் இடம் இதே மொட்டை மாடி.அதே அக்காக்கள் கிசு கிசுவென ரகசியம் பேசும் இடமும் இதுதான். அக்காக்கள் தலைக் குளித்து விட்டு அந்த வெட்ட வெளியில் தலை விரித்து தலை துவட்டுவதும் அங்கேதான்.
வடமும் வத்தல்களும் மொட்டை மாடியில் காய வைத்தால் தான் காயுமோ?.
பல வருடங்களுக்குப் பிறகு அங்கு போனேன். அந்த தெருவில எல்லா வீடுகளும் இடிக்கப்பட்டு விட்டது. “Iswarya Balamabica Apartments" என்று பெரிய போர்டு.200பிளாட்டுக்கள்.
ஏதாவது ஒரு பிளாட்டில் நுழைந்து நாங்கள் வாழ்ந்த மொட்டை மாடிக்கதையைச் சொல்ல விட்டால் மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது.
நினைவுகள்! நல்லா இருக்கு. கிராமத்துத் திண்ணைகள் போல, நகரத்து மொட்டை மாடிகளுக்கும் தனித்துவம் உண்டு.
ReplyDeleteஅனுஜன்யா
மொட்டை மாடி நினைவுகள் ரசித்துச் சொல்லியிருக்கும் விதம் நல்லாருக்கு...
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteIt took me to my own house ! எங்கள் வீட்டு மொட்டை மாடி, ஒவ்வொரு படியும் ஒரு கதை சொல்லும். அதன் ஒவ்வொரு மூலையும் ஒரு ரகசியம் வைத்திருக்கும். nostalgic.
ReplyDeleteஉங்க 'நான் கடவுள்' பதிவு எங்க இருக்கு?
ReplyDeleteகருத்துக்கு நன்றி ஷக்திப்ப்ரியா!
ReplyDelete'நான் கடவுள்' பதிவு ”சினிமா” label கீழ இருக்கு.
அனுஜன்யா,
ReplyDeleteகருத்துக்கு நன்றி.மொட்டை மாடி,ஸ்கூல் பற்றி ஒவ்வொருவருக்கும் பக்கம் பக்கமா அனுபவங்கள் இருக்கும்.
பாசமலர்,
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
இயற்கை,
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
தல,
ReplyDeleteமொட்டை மாடின்னா! நான் பொறக்கவே இல்லேயே தல.open terrace?
ஹ்ம்ம்ம். மொட்டை மாடி அதெல்லாம் பொன்மாலைப் பொழுது காலம்.
ReplyDeleteமொட்டை மாடிக் காதல்களும் சிறு வயதில்
பார்த்திருக்கீறேன்:)
பிடித்தவர் வரும்போது எதிர்த்த வீட்டுப் பெண் எங்க வீட்டு மாடிக்கு வந்துவிடும்.
அவர் சாலையில் நிற்க இவள் மதில் சுவரைப் பிடித்தபடி சங்கேஎதம் பேசுவாள்:0)
நானும் போறேன் மொட்டை மாடிக்க்கு.மிளகய்ய் வத்ஹ்தல் எடுத்து வைக்கணும்.
நன்றி வல்லிசிம்ஹன்!
ReplyDeleteநான் எழுதினது கொஞ்சம்தான்.இன்னும் நிறைய இருக்கு.பாலசந்தர் படத்தில் மொட்டை மாடி சீன்
பார்க்கலாம்.
டச்சிங்கா இருக்கு நண்பா.. நல்ல பதிவு
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி கார்த்திகைப் பாண்டியன்.
ReplyDeleteகருத்துக்கும் நன்றி!
நல்லா இருந்தது மொட்டைமாடி அனுபவங்கள்.
ReplyDeleteசிறுகதை அல்லது கட்டுரை...?!
வாங்க தமிழ் பறவை.கருத்துக்கு நன்றி.ரொம்ப நாள் இடைவெளி.எல்லாம் முடிஞ்சுதா?
ReplyDeleteஎனக்கும் மிகவும் பிடித்தமான இக்கதையும் மொட்டைமாடிக்
ReplyDeleteகவிதையும் வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)
கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.
http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_23.html
நன்று வாழ்த்துக்கள்:)
ReplyDelete