ஆனால் அதை வைத்துப் பண்ணிய குழந்தைத்தனமான வன்முறைகள்.தீபாவளி மாதிரி கொண்டாட்டம்தான்.இது ஹோலியின் cheapest version மாதிரி இப்போது
தெரிகிறது. விக்கல் ஸ்டாப் டெக்னிக்?
விக்கல் வந்தால் ஏப்ரல் பூல் டைப்பில் அதிர்ச்சியாக ஏதாவது சொல்லி விக்கலை
நிறுத்துவதுண்டு.ஆனால் ..விக்கலுக்குப் பதிலாக மூச்சை நிறுத்திவிடக் கூடாது.
காசு சேர்த்து Bril Ink பாட்டில் வாங்குவது. ஒரு வாரம் பேனாவில் தெளித்துப் trial பார்ப்பது.தூரத்திலிருந்தே திறமையாகதெளிக்க கற்றுக் கொள்வது.அடுத்து உருளைக் கிழ்ங்கை இரண்டாக பிளந்து அதில் AF என்று செதுக்கி, அதில் இங்க் தோய்த்து முதுகில் சாப்பா குத்துவது. அடுத்து மாட்டு வண்டி கருப்பு மை(கீல்) அச்சாணியில் இருக்கும். இதை சட்டையில் தேய்ப்பது.இந்த கறை போக 50 வருடம் ஆகும்.
இங்க் அடித்து அவன் திரும்பவதற்க்குள் “ஏப்ரல் பூல்” கத்தி சொல்லி விட்டால் பெரிய ஆள்.கைவசம் ஒரு மாற்று சட்டை எடுத்து வருவோம்.
இந்த ‘இங்க் அடி” டெக்னிக் ஒரு தடவை வேறு ஒரு விஷயத்திற்கு உதவியது.
ஒரு மாணவன் தான் அணிந்துக் கொண்டு வரும் சட்டை(வெள்ளை) சிங்கப்பூரில் தைத்தது என்றும் இது மாதிரி மூன்று இருப்பதாகச் சொன்னான்.நம்ப வில்லை
காலர் உள் பட்டையில் (கேம்ஸ் பிரியடில்) இங்க் அடித்து மடித்து வைத்து மறு நாள் அவனைக் கேட்டோம்.
“இது புதுசா(2வது சர்ட்டா?)?” ஆமாம் என்றான். காலரைப் பிரித்துக் காட்டினோம்.
அசடு வழிந்தான். ஏன் அந்த வீண் டாம்பீகம் அந்த பருவத்தில்?புரியவில்லை. அப்போது சிங்கப்பூர் ஹாங்காங்தான் பாரின்.
இந்த இங்க் அடிப்பது பிரபஞ்சத்தில் தமிழ் நாட்டில் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.
அடுத்து ரொம்ப ஓவராக செய்து ,supply exceeded demand ஆனதால் திகட்டிப்போன லூட்டிகள்.எல்லோருக்கும் தெரிந்து போவதால் செய்பவர்தான் ஏப்ரல் பூல்.
1.பின்னாடி உன் தாத்தாடா
2.பின்னாடி ஹெச் எம் வரார்டா
3.இந்த மாதிரி நிறைய ”பின்னாடி” ஏப்ரல் பூல்கள்
4. நாளைக்கு உலகம் அழியப் போகுது
5.கதவு பின்னாடி மறைந்து நின்று “பே” என்பது
(இது எல்லா நாளிலும் செய்வார்கள்)
6.உன் தலையில் பல்லி,ஓணான்,காண்டா மிருகம் etc., etc.,
7. ஸ்கூல் மணியை அடிப்பது
8.டேய்...குமாரு பொம்பளயா மாறிட்டான்.
9.இன்னும் பல
ஒரு ஏப்ரல் பூல் தினத்தில் என் பாட்டியிடம் “நாளைக்கு உலகம் அழியப் போறது” என்று சொன்னவுடன் அதை நம்பி நார் முடி முந்தானையில் காசு முடிந்துக் கொண்டு ‘ஸ்வாமிக்கு விளக்கு” ஏற்றினார்.
அந்த காட்சி இன்னும் மனதை விட்டு அகலவில்லை.
இன்று இந்த இங்க் தெளிப்பிலிருந்து ...SMS,you tube,cell phone call,email, குமுதம்,ஆ.விகிடன் என்று வந்து விட்டோம். ஏப்ரல் பூல் பிராங்க் சாப்ட்வேர் வந்து விட்டது.
இன்று வரை என் மனதில் ரொமப ஆசையோடு ஒட்டிக் கொண்டிருக்கும் ஸ்கூலில் என்னை ஏப்ரல் பூல் ஆக்கிய வாசம்:-
”டேய்.....பின்னாடி உன் லவ்வர்டா !”
முட்டாளாக திரும்பி பார்க்காமல் ரொம்ப ஆர்வத்துடன் திரும்பிப் பார்த்தேன். பின்னால் என் லவ்வர் இல்லை.
படிக்க:-
சாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு - சிறுகதை
ரவிசங்கர் சிறு வயது சேட்டைகளை
ReplyDeleteஅசைபோட வைத்து விட்டீங்க.
//இந்த கறை போக 50 வருடம் ஆகும்.//
வார்த்தைகளில் சிரிப்பூட்டுகின்றீரகள்
ஏமாற்றுதின என் நினைவில் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகன்றேன்,
அப்போது நான் நாண்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் (படித்ததே அவ்வளவுதான்)
என் சக மாணவி ஒருவள் ஊற்று நீரில்
கொஞ்சம் பனைமர பூக்களையும் சில தும்புகளையும் போட்டு கொண்டு வந்து (அது பார்ப்பதற்கு பதனீர் போலவே இருந்தது)
ஆங்கில வாத்தியாரிடம் 'இந்தாங்க சார் பதனீர்
இன்னிக்குதான் சார் எங்க பனையில மொதமொத
பயினி இறக்கினாங்க '
என்று கூறி கொடுத்து விட்டால் அவரும் வாங்கி பதனி என்றே குடித்தும் விட்டார் அவ்வளவுதான் வகுப்பிலிருந்த நாங்கள் அனைவரும் சிரித்து விட்டோம். அவர் அப்போதுதான் தான் ஏமாந்ததை
உணர்ந்தார் அவரும் சிரித்துக் கொண்டார்.
ஆ.முத்துராமலிங்கம்,கருத்துக்கு நன்றி.
ReplyDeleteஇப்படித்தான் சில பதிவுகள் நம் சிறு வயது நினைவை கிளறி விடுகிறது.
உங்கள சின்ன வயது கிராம பள்ளி அனுபவம்
நல்லா இருக்கு.
நான் பக்க சென்னைவாசி.
//இந்த இங்க் அடிப்பது பிரபஞ்சத்தில் தமிழ் நாட்டில் மட்டும்தான் என்று நினைக்கிறேன்//
ReplyDeleteஇந்த வரிகள் நல்ல இருக்கு.
கடைசி வரிகள் கூட.
அனானி நன்றி.
ReplyDeleteஅருமையான நினைவோடைகள் தல.. உருளைகிழங்கில் AF என கட் செய்து வண்டி மையில் தடவி சட்டையில் அடிப்பதும் நடக்கும்..
ReplyDeleteபதிவு.. கலக்கல்
தல! தேங்க்ஸ் தல.நீங்க கூட ஒரு பதிவு போடலாமே!
ReplyDeleteஏப்ரல் பூல் பற்றிய தங்களின் பதிவு பலருக்கும் அவர்களது மலரும் நினைவுகளை உண்டாக்கியிருக்கும்.
ReplyDeleteசார்! நல்லா இருக்கு.
ReplyDeleteநன்றி ஆதித்யா!
ReplyDelete*** சினிமாவில் சீரியஸான காமெடி ***
ReplyDeleteஎன்ற பதிவுக்கு என்னுடைய கருத்துக்கள்
//***அந்த காலத்துப் படங்களில் சில சீன்கள் பார்க்கும் போது மக்கள் இவ்வளவு முட்டாள்களா என்று தோன்றுகிறது. ***//
முட்டாள்கள் என்பது கொஞ்சம் அதிகம், ரசனை என்பது ஒவ்வொறு காலகட்டதிலும் மாறிகொண்டேயிருக்கும் என்பதால் முட்டாள்கள் என்று சொல்வது அபத்தம், இது தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல ஆங்கில திரைபடத்திலும்கூட இதுபோல் உண்டு
இன்றுநாம் ரசித்து சிலாகிக்கும் விசயம் பின்னாளில் கேளிக்குள்ளாகலாம், அன்று தொழில்நுட்பம் நம்மிடம் மிக குறைவே இருந்தாலும் அவர்களால் தரமான படங்கள் கொடுக்கமுடிந்தது என்பதை மறுக்கயிலாது, ஆனால் இன்று தமிழ் சினிமா தமிழ்மக்களுக்காக எடுப்பதில்லை பிற மக்களுக்காகவும் எடுக்கிறார்கள் ஏன் என்றால் அந்த அளவுக்கு ஆங்கில வசனங்கள்
உதாரணம் வாரணம் ஆயிரம் அந்த படத்தில் அவர்கள் விட்டில்கூட ஆங்கிலம்தான் பேசுகிறார்கள் படத்தில் முக்கால்வாசி ஆங்கிலம்தான் தமிழகத்தில் ஏதோ ஒரு குடும்பம் இப்படி இருக்கலாம் அதற்காக அப்படியே சினிமாவிலும் அப்படியே காட்டவேண்டும் என்பது அவசியமில்லை, ஜின்ஸ் பண்ட், ஆங்கிலம் வசனங்கள் இருப்பதுதான் இன்றைய தமிழ் சினிமா. நான் ஆங்கில மொழிக்கு எதிராவன் அல்ல ஆங்கிலத்துக்கு தகுந்த தமிழ் வார்த்தை தமிழில் இல்லாதபோது பயன்படுத்தலாம் தப்பில்லை, ஏன் என்றால் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கை தாண்டி மக்களின் வாழ்கையுடன் கலந்திருக்கிறது, ஏதோ சென்னை மக்கள் அதிகம் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் என்பதற்காக படத்திலும் அப்படியே காட்டுவது மொழிக்கு உகந்தது அல்ல, தோடா நாட்ட திருத்தவந்துடாருனு கிண்டல் பண்ணலாம் ஆனால் கொஞ்சம் சிந்திச்சி பார்க்கனும் நம்ம மொழிய நாமலே மதிக்கலனா வேறயாரு மதிக்கபோறாங்க,தமிழுக்கு எப்படி மதிப்புகொடுப்பது என்பதுக்கு ஒரு தனி இடுக்கையேயிடலாம் உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால்
நமக்கு ஆங்கிலம் நன்றாக தெரிந்தாலும்கூட நாம் வாங்கும் விண்ணப்பம், பாராம்(form) போன்றவற்றில் தமிழ் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள்.இங்கு இடுக்கையிட வாய்பளித்துக்கும், இதை பொருமையுடன் படித்த இனைய வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொண்டு
வாழ்க தமிழ் வளர்க தமிழ் என்று முடித்துகொள்கிறேன்
குடந்தைஅன்புமணி கருத்துக்கு நன்றி.
ReplyDeleteநன்றி Vella.அந்த இடுகையை தவறுதலாக
ReplyDeleteஅழித்து விட்டேன். அதனால்தான் உங்களுக்கு இடுகை கிடைக்காமல் இதில் போடடீர்கள்.
வருகை மற்றும் கருத்துக்கு நன்றி.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅய்யா! உங்கள் தொலைபேசி அழைப்பின் மூலமாக விஷயம் அறிந்தேன். மேலே லக்கிலுக் என்ற பெயரில் வந்த பின்னூட்டம் நான் போட்டதில்லை. அதர் ஆப்ஷன் மூலமாக எந்த கம்முனாட்டியோ என் பெயரை கெடுக்க போட்டிருக்கிறான். இந்தப் பின்னூட்டம் போடுவது தான் ஒரிஜினல் லக்கிலுக் என்று என் தலையின் மீது நானே சத்தியம் செய்து சொல்கிறேன்.
ReplyDeleteநன்றி லக்கி லுக்!
ReplyDeleteஇங்க் மட்டுமில்லை.அந்த காலத்துல 5 பைசா மணியார்டர்,ஏய் உன் சட்டை கிழிஞ்சிருக்கு,உன் கையில என்ன இரத்தம் என்பது போலவும் முட்டாளாக்கும் தந்திரங்கள் செய்வோம்.
ReplyDeleteஹைக்கூ கவிதைகள் நச்
கண்மணி கருத்துக்கு நன்றி.
ReplyDeleteஇது மாதிரி நிறைய இருக்கு.சொல்லிக்கொண்டே
போகலாம்.
//அந்த காலத்துல 5 பைசா மணியார்டர்//
இது என்னது புரியவில்லை.
romba nalla irukku
ReplyDeleteநன்றி SUMA.
ReplyDelete"ஐயோ அங்க பாருடா! சைக்கிள் வீல் சுத்துது " அப்படீன்னு போலி படபடப்புடன் சொல்லி ஏப்ரல் பூல் செய்ததும் நினைப்புக்கு வருகிறது.
ReplyDeleteநிறைவான பதிவு.
வாங்க அசோசியேட்.கருத்துக்கு நன்றி.வருகைக்கு
ReplyDeleteநன்றி.