Thursday, March 12, 2009

இவள் என் மனைவி - ஒரு கவிதை

ப்ளவுஸ் பட்டன்களை 
ஒவ்வொன்றாகப் போட்டு விட்டு
இழுத்துச் சரி பார்க்கிறான்
புதுப் புடவையை விரல்களால்
லாவகமாக அளைந்து அளைந்து
விசிறி போல் மடித்து
எடுத்தக் கொசுவத்தை 
பொம்மையின் இடுப்பில் 
சொருகி நீவி விடுகிறான்
மடிப்புக்கள் அழகாக விழுந்து
அவளுக்குப் பொருந்திவர
திருப்தியாகிப் புன்னகைக்கிறான் 
கடை சேல்ஸ்மேன் இளைஞன்
கடைக்கு வந்த நான்கு வயது
சுட்டிப் பெண்  வெட்கத்தில்
கன்னம் சிவந்து சிரிக்கிறாள்
இவங்க என் மனைவி மாதிரி
சொல்லிவிட்டு சுட்டிப் பெண்
கன்னத்தில் கிள்ளுகிறான் 
கணவன் அதோ என்று சொல்லி 
ஷோ கேஸில் இருக்கும்
ஆண் பொம்மை இளைஞனைக்
காட்டி வெளிவரும் போது
புன்னகைகிறாள் இரு கைக் கூப்பி
கண்ணாடிப் பெட்டிக்குள் நின்றபடி
அந்த புடவைப் பெண்

மேல் உள்ள கவிதை கிழே உள்ள கவிதையை
திருத்தி எழுதினது

சொடுக்குக:-

6 comments:

  1. நல்லா இருக்கு நண்பா.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. ம்ம்.. நல்லா வந்திருக்குங்க

    ReplyDelete
  3. ந்ன்றி கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
  4. நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர். “மாத்தி எழுதியிருக்கலாமோ”ன்னு சொன்னீங்க.ஒரிஜனலா
    இதுதான் இருந்தது.

    ReplyDelete
  5. இது இன்னும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  6. நன்றி ஷக்திப் பிரபா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!