Sunday, March 1, 2009

டாப் 10 -பத்து?- பத்து கேள்விகள்-பத்து?

பத்து அல்லது Top -10 ,முதல் பத்து பதிவுகள் ,சுஜாதவின் டாப் -10 தேவைகள் என்று நிறைய “பத்துக்கள்” வருகின்றன.என் பதிவும் எந்த பத்திலும் இல்லை 17ழிலும் இல்லை.பத்தில் வந்தவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தாகிவிட்டது. 

அடுத்து எனக்குத் தெரிந்த “பத்துக்களை” சொல்லியே ஆக வேண்டும்.இல்லையென்றால் தலைவலி வந்து தலையில் “பத்து(ற்று)” போடவேண்டி வரும்.

பழமொழி:தேர் பத்து,திருநாள் பத்து, அறத்துப் பத்து, அவுசாரி பத்து( எல்லாம் பத்து நாள்தான் பதினொறாவது நாள் நார்மல் ஆகிவிடும்)

பணம் பத்தும் செய்யும்.பசி வந்தால் பத்தும் பறந்திடும்.பத்து வயசிலே பங்காளி.

மகள் வாழ்கிற வாழ்க்கைக்கு மாசம் பத்து கட்டு விளக்குமாறா?

ராப்பத்து, பகல் பத்து.(கோவில் விழா)
பத்து அவதாரங்கள்(தசாவதாரம்), பத்து தேய்த்தல்.பத்து கட்டளைகள்(ten commandments).

பத்து போடுதல்.டாப் டென்(பத்து) என் நண்பன் பத்து(பத்மநாபன்)
பத்து மாதம் சுமத்தல். பத்து மாத பந்தம்.

கடிகாரம் விற்கும் கடைகளில்,கடிகாரத்தை சின்ன முள், பெரிய முள் 'V' shapeல் 10-10 (பத்து  மணி பத்து நிமிடம்)என்று காட்டியபடி வைத்துருப்பார்கள்.




1 comment:

  1. செம்ம கடி மாமு....

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!