Monday, March 9, 2009

இவள் என் மனைவி - ஒரு கவிதை

ப்ளவுஸ் பட்டன்களை 
ஒவ்வொன்றாகப் போட்டு விட்டு
இழுத்துச் சரி பார்க்கிறான்
புதுப் புடவையில் விரல்களால்
லாவகமாக அளைந்து அளைந்து
விசிறி போல் மடித்து
எடுத்தக் கொசுவத்தை 
பொம்மையின் இடுப்பில் 
சொருகி நீவி விடுகிறான்
மடிப்புக்கள் அழகாக விழுந்து
அவளுக்குப் பொருந்திவர
திருப்தியாகிப் புன்னகைக்கிறான் 
கடை சேல்ஸ்மேன் இளைஞன்
கடைக்கு வந்த நான்கு வயது
சுட்டிப் பெண்  வெட்கத்தில்
கன்னம் சிவந்து சிரிக்கிறாள்
இவங்க என் மனைவி மாதிரி
சொல்லிவிட்டு சுட்டிப் பெண்
கன்னத்தில் கிள்ளுகிறான் 
கழுத்தில் தாலி இல்லை
இவனோ அட்டைக்கரி 
அவளோ சிவப்பு நிறம்
இவனோ ரொம்ப குள்ளம்
அவளோ ரொம்ப  உயரம் 
எப்படி மனைவியாக ஒப்பினாள்
யோசித்து வெளிவரும் போது
புன்னகைகிறாள் இரு கைக் கூப்பி
கண்ணாடிப் பெட்டிக்குள் நின்றபடி

8 comments:

  1. 'கன்னம் சிவந்து சிரிக்கிறாள்' - கவிதை அங்கேயே முடிந்து விட்டது. யோசித்துப் பாருங்களேன். நல்லா வந்திருக்கு.

    அனுஜன்யா

    ReplyDelete
  2. நன்றி அனுஜன்யா!நீங்கள் சொல்வது சரி.அப்ப்டியும் முடிக்கலாம்.

    அவன் தன் மனைவி (married to my profession) என்று சொன்னவுடன் அந்த நாலு வய்துப் பெண்ணின் “மின்னல் வேக வெகுளித்தனமான ஒப்பிடு” வரத்தான் க்விதையை இழுத்தேன்.

    ReplyDelete
  3. நன்கு சுவையாக இருக்கிறது உங்கள் கவிதை

    ReplyDelete
  4. நல்லா இருக்கு. கொஞ்சம் மாத்தி எழுதியிருக்கலாமோ!

    ReplyDelete
  5. நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர் !

    ReplyDelete
  6. நன்றி முரளி கண்ணன்! அடிக்கடி வாங்க!கருத்துச்
    சொல்லுங்க.

    ReplyDelete
  7. என்னைப் பொருத்தவரை உங்க முதல் வெர்ஷன் நல்லா இருக்கு. It has something poetically unsaid.

    ReplyDelete
  8. நன்றி ஷக்தி பிரபா. ஆமாம் நீங்கள் சொல்வது
    சரி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!