மாதிரி எழுதுகிறேன். எழுதி எழுதி பழகினால வந்து விடும்.
அதன் விதிகள்:
தினசரிவாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightningஅனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப் படுத்துவதுதான் ஹைகூ.ஒரு நேரடி அனுபவம்.
பதிவர்களே நன்றாக கவனிக்க:-
இதில் உருவகம்/உவமை/மிகை/வருணனை/பிரசாரம்/போதனை இருக்கக் கூடாது.சமூகச் சாடல்கள் இருக்கக் கூடாது.காட்சிகளை விளக்கக்கூடாது. அனுபவத்தின் பின் விளைவுகளைப் பற்றிச்சொல்லக் கூடாது.சுட்டிக் காட்டக் கூடாது.
அட.... அப்ப என்னத்ததான் சொல்றது?
ஒரு மின்னல் போல் காட்டி மறையும் ஒரு “சடக்’ என்ற அனுபவ உணர்ச்சி மூன்று வரிகளில் வெளிப்படுவது.
Haiku doesn't tell a story - it takes a still photograph of a flash of lightning, in all its beauty, terror and suddenness. It takes the time to notice a dead bird but doesn't speculate on cause and effect.
நான் எழுதியது
மூச்சிறைக்க ஏறிய
காலி ரயில் பெட்டியில்
பிணங்கள்
காலி ரயில் பெட்டியில்
பிணங்கள்
(ரொம்ப வருடம் முன்பு தாம்பரம் ஸ்டேஷனில் கிளம்பிவிட்ட வண்டியில் காலியான “vendors compartment" மூச்சிறைக்க ஓடி ஏறினேன். உள்ளே மூன்று ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ஸிடெண்ட் பிணங்கள்.வேறு யாரும் இல்லை. போஸ்மர்ட்டத்திற்க்கு போகிறது.அந்த வய்தில் அந்த திகில் நிமிடங்கள் snapshot)
குழாயடிச் சண்டை
கொட்டும் வார்த்தைகள்
வழியும் குடம்
நான் எழுந்தபோது
நாங்களும் எழுந்தோம்
பார்பர் ஷாப் கண்ணாடி
மணமக்களை வாழ்த்தி
வீசிய பூக்கள்
புரோகிதர் குடுமியில்
நடு நீசியில்
ரயிலில் நின்றது
RPF பூட்ஸ் சத்தம்
தீடீர் மின்னலில்
ம்ரத்தில் தெரிந்த
தேன் கூடு
பத்திரமாக அனுப்பி
ஜன்னலை மூடினேன்
பதிவு காணவில்லை
(பதிவு போட்டு த.மணத்தில் இணைக்க, பதிவின் தலைபை கிளிக் செய்தால் “அனுப்பு”.“அனுப்பு” வை கிளிக் செய்தால் ”ஜன்னலை மூடு”.server down ஆகி
பதிவு காணவில்லை.)
நான் படித்தது
கடிக்கும் கொசு
தாயை எழுப்பும்
சின்னக் கொலுசு
மழை ஒய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழை
விபத்துக்குள்ளாகி நிற்கும்
பேருந்து முழுக்க
புளியம்பூக்கள்
உறுமும் இடியும்
நதியின் அடியில்
சிதறும் மீன்கள்
காட்டிலிருந்து வரும்
மாட்டின் கொம்பில்
முல்லைக் கொடி
பதிவர்களே கலக்குங்கள்
இன்னும் படிக்க:-
/சமூகச் சாடல்கள் இருக்கக் கூடாது/
ReplyDeleteநீங்க சொல்றதெல்லாம் சுஜாதாவோட definitions.
நீங்க சுஜாதா தவிர வேற யாரையாச்சும் படிச்சிருக்கீங்களா?
ரவி ஆதித்யா அவர்களே,
ReplyDeleteநான் எழுதிய ஓர் ஹைக்கூவும் வேறு எங்கோ படித்த சில ஹைக்கூக்களும் கீழே:
நன்றி!
சினிமா விரும்பி
' பசுமைப் புரட்சி '
மரம் வெட்டும் தொழிலாளி ஒதுங்கினான் லாரி நிழலில்.
முதலாளி சொன்னார் “இந்தாப்பா கூலி , கடைசி மரத்துக்கு”
சினிமா விரும்பி
http://cinemavirumbi.tamilblogs.com
(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது)
எங்கோ படித்த சில கவிதைகள் (ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை)
ஈ மயில்!
இணையத்தில் சந்தித்த மயிலே!
உன் பெயர் எழுதி அனுப்பு ஒரு மெயிலே!
ஜாதி
வட்டத் தொட்டியில் குட்டை ஆலமரம்;
வாரிய வீடுகளிலும் ஜாதி குணங்கள்!
தாராளமயமாக்கல்
அதிர்ந்து போனாள் ஆயா!
அரைக்கீரை விற்கிறான் அம்பானி!
மீனை அரிந்தபோது
ReplyDeleteவயிற்றில்
குழந்தையின் கண்.
அறிவுமதி.
இலங்கைச் சூழல் பற்றிய தொகுப்பான ”வலி”யில் படித்த கவிதை.ஹைகுவா இல்லையா.தெரியாது.எழுதியிருக்கும் வரிகளும் சரியாக நினைவுபடுத்தி எழுதிவிட்டேனா தெரியவில்லை.
ஆனாலும் இக்கவிதை வலிக்கிறது அல்லவா.ஒரு பகிர்வுக்காக இதை, இங்கே எழுதுகிறேன்.
உங்கள் பதிவும், அதன் நோக்கமும் நன்றாக உள்ளது.
ராமர்களின் பாதஸ்பரிசங்கட்காய்
ReplyDeleteராப்பகலாய்க் காத்திருக்கிறார்கள்
மிதிவெடி அகலிகைகள்.
(2000ஆம் ஆண்டு காலப் பகுதியில் எழுதப்பட்டது)
அடடே! ரொம்ப அழகா இருக்கே ஹைக்கூக்கள்!
ReplyDeleteசொத்துசுகம் இழந்தவன்
ReplyDeleteசெய்தித்தாளில் வாசிக்கிறான்
ஸ்லம்டாக் மில்லியனர்.
அண்மையில், கொடுக்கப்பட்ட படத்துக்கு நான் எழுதிய ஒரு ஹைகூ.
என் புதுவை நண்பர் (தமிழ் நெஞ்சனா, தமிழ்மணியா என்று நினைவில்லை! இருவரில் ஒருவர்) எழுதிய - நினைவிலுள்ள - ஒரு'துளிப்பா'(ஐக்கூ):
ReplyDeleteகொடி கொடுத்தார்
குண்டூசி தந்தார்
சட்டை?
சுந்தர்,
ReplyDeleteஎன்ன இப்படி சொல்லிட்டீங்க!நிறைய படித்திருக்கிறேன்.கல்லூரி பருவத்திலிருந்து ஒரு ஈடுபாடு.ஆனால் எழுதினேன்.பொய்க்கூ.
பிடிபடவில்லை.
இப்போது நெட்டில் கொட்டிக்கிடக்கிறது.கண்ணன்
என்பவர் கட்டுரை இருக்கிறது.மரத்தடி,தமிழ் புனல்.. என்று பல பல.
ஒரிஜனல் விதிகளின் படி எழுத முடியுமா? 5,7,5
என்ற ஒரு எழுத்து(beat?)விதி இருக்கிறது.
(Most haiku in English consist of three unrhymed lines of seventeen or fewer syllables, with the middle line longest, though today's poets use a variety of line lengths and arrangements.)
இதிலும் ஹைபூன்,ஹோக்கு,சென்ரீயூ என்ற வடிவங்கள் வேறு. முக்கால்வாசி பருவங்களைப் பற்றி இருக்கிற்து.சில புரிவது கஷ்டம்.
walking alone
the way oak leaves
refuse to fall
sun dogs . . .
the transparency
of ice
இது புரிகிறது
outdoor theatre
watching the crow
watching the play
//நீங்க சொல்றதெல்லாம் சுஜாதாவோட definitions.//
ஏன் இந்த மைண்ட் செட் சார்?பழைய கணையாழி,வேறு இலக்கிய இதழ்களில் இவரும்
பொய்க்கூ விதிகள் எழுதினார்.
இப்போதுதான் ஒரு புத்தகம்(உயிர்மை)
வந்தள்ளது.மெய்க்கூ விதிகள்.அது நல்லா இருக்கு.அது தீண்டாப்படாதது இல்லை.நீங்கள்
படித்து விட்டீர்களா?
//சமூகச் சாடல்கள் இருக்கக் கூடாது//
அந்த புத்தகம் படிக்கவும்.
நான் எல்லாவற்றையும் படித்து,இப்படி இருக்க வேண்டும் என்று பதித்தேன்.அது சுஜாதா நடையில் தோன்றியிருக்கலாம்.
விதி பற்றி எழுத நெட்டில் எடுத்தது.
One of the widespread beliefs in North America is that haiku should be based upon one's own direct experience, that it must derive from one's own observations,
Haiku doesn't tell a story - it takes a still photograph of a flash of lightning, in all its beauty, terror and suddenness. It takes the time to notice a dead bird but doesn't speculate on cause and effect. It celebrates a kiss, a smile or a fragrance, by simply allowing it to have its moment, usually when it is least expected...
சுந்தர்,
கவிதைகளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லயே?
உங்கள்(மதன்) பதிவிலும் என்னுடைய பழைய
ஹைக்கூப் பற்றிக் கேட்டிருந்தேன்.பதில் கிடைக்காமல் ஏமாந்தேன்.
வருகை மற்றும் கருத்துக்கு நன்றி.
வாங்க சினிமா விரும்பி! வருகை மற்றும் கருத்துக்கு நன்றி.
ReplyDeleteநண்பரே உங்கள் கவிதைகளிலும் “சமுதாய சாடல்” “காமெடி””சுட்டி காட்டுதல்” இருக்கிறது.
ஹைக்கூ விதிகளுக்கு உட்படவில்லை என்பதை வருத்தத்துடன் சொல்கிறேன்.தயவு செய்து விதிகளை சரி பார்க்கவும்.
நன்றி.
ச.முத்துவேல்.வருகை மற்றும் கருத்துக்கு நன்றி.
ReplyDeleteநன்றாக இருக்கிற்து.ஹைக்கூவா?
வலசு - வேலணை.வருகை மற்றும் கருத்துக்கு நன்றி.
ReplyDelete//ராமர்களின் பாதஸ்பரிசங்கட்காய்
ராப்பகலாய்க் காத்திருக்கிறார்கள்
மிதிவெடி அகலிகைகள்//
புது கவிதை.நன்றாக இருக்கிற்து.ஹைக்கூ இல்லை என்று படுகிற்து.
ஷீ-நிசி,
ReplyDeleteவருகை மற்றும் கருத்துக்கு நன்றி.
இப்னு ஹம்துன்!
ReplyDeleteவருகை மற்றும் கருத்துக்கு நன்றி.
//சொத்துசுகம் இழந்தவன்
செய்தித்தாளில் வாசிக்கிறான்
ஸ்லம்டாக் மில்லியனர்.//
ஹைக்கூ இல்லை நண்பா.
சிக்கிமுக்கி!
ReplyDeleteவருகை மற்றும் கருத்துக்கு நன்றி.
//ஒரு'துளிப்பா'(ஐக்கூ):
கொடி கொடுத்தார்
குண்டூசி தந்தார்
சட்டை?//
புது கவிதையா சூப்பரா இருக்கு.ஹைக்கூ இல்லை.சமுதாயத்தை திட்டிச் சுட்டிக்காட்டிகிறீகள். என்று படுகிற்து.
எல்லாம் அருமையாக இருக்கிறது !
ReplyDeleteநான் முன்பு சில எழுதினேன்,
அக்டோபர் 2ல் கதவிடுக்கின்வழி,
கள்ளுக் கடைக்குள் சென்றார் காந்திஜி
ரூபாய் நோட்டில் சிரித்தபடியே !
வெள்ளைமாவில் புள்ளியும் பூவுமின்றி
மார்கழியில் தன் கோலத்தை போட்டால் விதவைத் தாய் !
தந்தம் அறுந்த வெள்ளை யானை
சோகேசிலும் அப்படியே நின்றது !
மழைவரும் முன் மெல்லிய காற்றில்
அசைந்தது மயில்தோகை விசிறி !
இன்னும் சில நினவுக்கு சட்டென்று வரவில்லை
மணக்கோலத்தில் மகள்
ReplyDeleteபெற்ற 'கடன்'
கண்ணீருடன் தந்தை !
குழம்பிய வண்ணக் குட்டை
ReplyDeleteதொட்டு வரைந்ததில் மீன் !
தமிழில் (மற்றும் பல மொழிகளிலும்) புதுக்கவிதை இயக்கம் ஆரம்பித்ததே இந்த விதிகளை மீறத்தான். இப்போது மீண்டும் மீண்டும் இப்படி இருக்கக்கூடாது, அப்படி இருக்கக்கூடாது எனப் புதுப் புது விதிகளை ஹைகூ என்ற பெயரில் வைத்தால்...?
ReplyDeleteஜென்னிற்கும் அவர்களது ஹைகூவிற்குமான தொடர்பு உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
நீங்களே சொன்ன மாதிரி அவங்களே இப்பல்லாம் இந்த 5, 7, 5 மாதிரியான விஷயங்களை விட்டுட்டாங்க. நாம மட்டும் ஏன் ஒரு flash மட்டும்தான் இருக்கணும், சமூகச் சாடல் கூடாதுன்னு நிறைய சட்டகங்களை வச்சுக்கிட்டு மன்றாடணும்.
அது ஹைகூவோ அல்லது வேற என்னவோ... கவிதைகளில் முக்கியமானது economy. இப்ப இந்தக் கவிதையைப் பாருங்க :
ReplyDelete/குழாயடிச் சண்டை
கொட்டும் கெட்ட வார்த்தைகள்
வழியும் குடம்/
அதுதான் குழாயடிச் சண்டைன்னு சொல்லியாச்சே... அப்புறம் எதுக்கு ‘கெட்ட' என்ற சொல்?
நீங்க கவிதைகளை இந்த மாதிரி சட்டகங்களாச் சுருக்கறீங்க... கவிதையின் தொழில் நுட்பமும் உண்டு என்றாலும், மன எழுச்சி சார்ந்த ஒரு விஷயமும்கூடத்தானே... அதை உங்கள் ஹைகூக்கள் / அதைப் பற்றிய பதிவுகள், பின்னூட்டங்கள் நிராகரிக்கின்றன. உங்கள் பதிவுகளில் எனக்குப் பிரதானமாய்த் தெரியும் சிக்கல் இதுதான்.
ReplyDeleteநன்றி கோவி.கண்ணன். ஒண்ணுக்கு மூணா போட்டு புல்லரிக்க விட்டீங்க.
ReplyDeleteநீங்க மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜக்ட்ஸ் ஆச்சே!
இதுலயும் கலக்கிரீங்க.கவிதைகள் நல்லா இருக்கு.ஆனால் புது கவிதை டைப்பில் இருக்கு சார்!
நான் ரசித்தது.
//அக்டோபர் 2ல் கதவிடுக்கின்வழி,
கள்ளுக் கடைக்குள் சென்றார் காந்திஜி
ரூபாய் நோட்டில் சிரித்தபடியே !
தந்தம் அறுந்த வெள்ளை யானை
சோகேசிலும் அப்படியே நின்றது //
சுந்தர்,
ReplyDelete//அப்படி இருக்கக்கூடாது எனப் புதுப் புது விதிகளை ஹைகூ என்ற பெயரில் வைத்தால்...?
//நீங்க கவிதைகளை இந்த மாதிரி சட்டகங்களாச் சுருக்கறீங்க... //
நா எங்க வச்சேன் சார்? படித்து தெரிந்து கொண்டதில் ஜப்பான் ஹைக்கூக்களில் season பற்றி நிச்சயமாக வருகிறது.அடுத்து நேரடிக்காட்சிப் படுத்துதல்.அப்புறம் ”அதுவாகவே ஆகி”விடுதல்.
அடுத்து அந்த 5,7,5(இது கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது.)
//Basho developed the haiku form so that each haiku became a little burst of awakening. It is this that is the essence of haiku, not its number of syllables.//
Some haiku are explicitly about moments of kensho, and words like "awakening" are the clue://
அமெரிக்கா,பிரான்ஸ் நாட்டவர்கள்தான் எங்கள்
கவிதையின் அழகுணர்ச்சியை மீறி விட்டார்கள்.
விதிகள் இருப்பதால்தான் எங்கள் வாழ்வின் எல்லா
செயல்களிலும் அழகுணர்ச்சி மிளிர்கிறது.அது போலத்தான் “ஹைக்கூவும்” என சொல்கிறார்கள்.
இது உண்மை.இதற்க்கு என்ன சொல்கிறீர்கள்?
நீங்களே ஒரு பின்னூட்டத்தில்(என் கவிதைகளை) இது “பொய்க்கூ” என்று சொன்னீர்கள்.இந்த சொல் உங்களிடமிருந்துதான்
எனக்கு வந்தது.”ஓகோ நான் விதியை மீறி விட்டேனோ” என்ற் எண்ணம் தோன்றியது.
இது சற்று சமுதாயம் பற்றி வருகிறது.உரத்த குரல் இல்லை.
Poverty's child -
he starts to grind the rice,
and gazes at the moon.
இதே சாயலில் மு.மேத்தாவின் ஒரு புதுகவிதை:-
கண்கள் நட்சத்திரங்களை
வருடினாலும்
கைகள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்
(பெண் சுதந்திரம் பற்றி?)
மேல் பின்னூட்டங்களில் உள்ள கவிதைகளை எதில் வகைப் படுத்தலாம்?
நன்றி.
//அதுதான் குழாயடிச் சண்டைன்னு சொல்லியாச்சே... அப்புறம் எதுக்கு ‘கெட்ட' என்ற சொல்?//
ReplyDeleteகரெக்ட்.எடுத்து விடுகிறேன்.
அடடா
ReplyDeleteஅருமை!
நன்றி!
ரவி, இத ஹைக்கூன்னு ஒத்துகுங்கன்னு எல்லாம் மிரட்ட மாட்டேன். :)
உங்க பதிவை பாத்ததும் தோணியது. மறுபடியும் நன்றி.
ஹைக்கூ பத்தி எழுதி இருக்கீங்க, இந்த பதிவுலயும் அடிதடி நடக்குமா? நடந்தா சொல்லி விடுங்க, பாக்க வரேன். :p
நன்றி அம்பி!
ReplyDelete//ஹைக்கூ பத்தி எழுதி இருக்கீங்க, இந்த பதிவுலயும் அடிதடி நடக்குமா? நடந்தா சொல்லி விடுங்க, பாக்க வரேன்//
கிளம்பிட்டாங்கய்யா.... இதெல்லாம் சும்மா ஒரு
கருத்து விவாதம்.
நான் பொய்க்கூன்னு சொன்னது (அதுவும் சுஜாதா பாணியில் சொல்வதென்றால் எனச் சேர்த்திருந்திருப்பேன்), சும்மா ஜாலிக்கு. ஹைகூவோ பொய்க்கூவோ கவிதையா இருந்தா சரி :)
ReplyDelete/அமெரிக்கா,பிரான்ஸ் நாட்டவர்கள்தான் எங்கள்
கவிதையின் அழகுணர்ச்சியை மீறி விட்டார்கள்.
விதிகள் இருப்பதால்தான் எங்கள் வாழ்வின் எல்லா
செயல்களிலும் அழகுணர்ச்சி மிளிர்கிறது.அது போலத்தான் “ஹைக்கூவும்” என சொல்கிறார்கள்./
பாருங்க, இதே மாதிரி யாப்பிலக்கணம்தான் முக்கியம்னு இங்கயும் ஒரு அரை நூற்றாண்டு முன்னாடி வரைக்கும் சொல்லிகிட்டிருந்தாங்க. அதனால அவ்வளவு தூரம் ஜப்பானுக்கெல்லாம் போக வேண்டியதில்லை :)
இதுதாங்க நான் சொல்ல வர்ரது... ஒரு broad outline இருக்கலாம், ஆனால் இப்படி இப்படி இருந்தால்தான் ஹைகூ என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அவர்கள் எழுதியது அவர்களது (ஜென் தொடர்பை அதற்குத்தான் சுட்டியிருந்தேன்) ஹைகூ.
ReplyDeleteநாவல், சிறுகதை என அத்தனை வடிவங்களும் மாறிக் கொண்டே வருகின்றன. ஹைகூவில் மட்டும் இப்படிப் பிடிவாத விதிகள் இருப்பது என்னளவில் ஒப்பவில்லை. அவ்வளவே.
ஒகே.. சுந்தர். நன்றி.
ReplyDeleteதங்களின் கூற்றுப்படி முயற்சிகள் செய்கிறேன். நன்றி!
ReplyDeleteமுயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்! நன்றி.
ReplyDeleteஅழகாக இருக்கின்றன. நான் ரசித்தவை,
ReplyDelete//குழாயடிச் சண்டை
கொட்டும் வார்த்தைகள்
வழியும் குடம்//
//பார்பர் ஷாப் கண்ணாடி
நான் எழுந்தபோது
நாங்களும் எழுந்தோம்//
-ப்ரியமுடன்
சேரல்
வாங்க சேரல்! கருத்துக்கு நன்றி.
ReplyDeleteஹைக்கூ பற்றி சில விஷயங்களை இந்த பதிவில் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்தலுக்கு நன்றிங்க. இது உங்க ஹைக்கூ மரபை சார்ந்து இருக்கிறதா என்று கொஞ்சம் சொல்லுங்க...
ReplyDeleteநன்றியுள்ளது நாய்
காக்கைக்கே
படையல் சோறு...
வாங்க ஸ்ரீராம்.முதல் வருகைக்கு நன்றி.
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
முதல் ஹைக்கூவா?.முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
நண்பா ஹைக்கூக்கு பொருந்தி வரல.புது கவிதைக்கு நல்லா இருக்கு.
//நன்றியுள்ளது நாய்//
ஒரு போதனை இருக்கு.சமூக கிண்டல் இருக்கு.காட்சிப் படுத்துதல் முக்கியம்.அடுத்த இரண்டு வரிகளில் காட்சி இருக்கிறது.
Finetuned பண்ணினது
அப்பா வரவுக்காக
மொட்டை மாடியில்
பிண்டம்
(பிண்டத்திற்குப் பதிலாக ”படையல் சோறு”
சேர்த்துக் கொள்ளலாம்)
அப்பா சாப்பிடாமல்
நாய் சாப்பிட்ட
படையல் சோறு
இரண்டு காட்சியும் visualise செய்யுங்கள்.
நன்றி
\\பார்பர் ஷாப் கண்ணாடி
ReplyDeleteநான் எழுந்தபோது
நாங்களும் எழுந்தோம்\\
நான் மிகவும் இரசித்தேன்.
ரவிஷங்கர்,
ReplyDeleteகவிதைகள் நன்று..குழாயடி நன்றாக இருந்தது..
மற்றபடி சுந்தர் போலவே கவிதைகளுக்குப் பிடிவாத விதிகள் என்பதில் எனக்கும் உடன்பாடில்லைதான்...ஆனால் கருத்துகள் வித்தியாசப்படுமல்லாவா...சில வடிவமைப்புகள் சிலருக்குப் பிடிக்கும் அவ்வளவுதானே..
நட்புடன் ஜமால்! வருகைக்கு நன்றி.
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
பாசமலர்.கருத்துக்கு நன்றி.
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரையில் போதனை/மிகை/தத்துவம்/வருணனை தவிர்க்கிறேன்.அதற்க்கு வேறு கவிதைகள் எழுதலாம்.
அந்த கண காட்சிப் படுத்தலை கடைப்பிடிக்கிறேன்.
100% சதவீதம் அவர்கள் டைப் இன்னும் வரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
ரவிஷங்கர்,
ReplyDelete\\பார்பர் ஷாப் கண்ணாடி
நான் எழுந்தபோது
நாங்களும் எழுந்தோம்\\
நீங்கள் எழுதிய விதிகளின்படியே பார்த்தாலும் கூட கீழ்க் கண்டதுதானே சரியானது (சுவையும் அதிகம் ) ?!
>>>>>
நான் எழுந்தபோது
நாங்களும் எழுந்தோம்
பார்பர் ஷாப் கண்ணாடி<<<<<
நன்றி!
சினிமா விரும்பி
ஒரு போதனை இருக்கு.சமூக கிண்டல் இருக்கு.காட்சிப் படுத்துதல் முக்கியம்.அடுத்த இரண்டு வரிகளில் காட்சி இருக்கிறது.//
ReplyDeleteஆமாங்க...
// Finetuned பண்ணினது
அப்பா வரவுக்காக
மொட்டை மாடியில்
பிண்டம்
(பிண்டத்திற்குப் பதிலாக ”படையல் சோறு”
சேர்த்துக் கொள்ளலாம்)
அப்பா சாப்பிடாமல்
நாய் சாப்பிட்ட
படையல் சோறு
இரண்டு காட்சியும் visualise செய்யுங்கள்.//
நன்றாக அமைந்திருக்கிறது...
நன்றி சினிமா விரும்பி.
ReplyDelete//நீங்கள் எழுதிய விதிகளின்படியே பார்த்தாலும் கூட கீழ்க் கண்டதுதானே சரியானது (சுவையும் அதிகம்)//
100% சதவிகிதம் சரி.சுவை கூடுகிறது.ஒரு சஸ்பென்ஸும் இருக்கிறது.மாற்றி விடுகிறேன்.
நன்றி ஸ்ரீராம்.
ReplyDelete//நான் எழுந்தபோது
ReplyDeleteநாங்களும் எழுந்தோம்
பார்பர் ஷாப் கண்ணாடி
//
அட :)
வாங்க எம்.எம்.அப்துல்லா.வருகைக்கு நன்றி.
ReplyDeleteகருத்துக்கு நன்றி.அடிக்கடி வாங்க.ஏதாவது வந்து
சொல்லிட்ட்டு போங்க.
நன்றி.
/சொத்துசுகம் இழந்தவன்
ReplyDeleteசெய்தித்தாளில் வாசிக்கிறான்
ஸ்லம்டாக் மில்லியனர்.//
ஹைக்கூ இல்லை நண்பா.
அப்படியா!
ஒரு அழுக்குப் பிச்சைக்காரன் செய்திதாள் வாசிக்கும் காட்சி கண்ணில் பட்டது. அந்தப் பக்கத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' பற்றிய செய்தி. இந்தக் காட்சியைத்தான் கவிதைப்படுத்தினேன். இதில் என்ன விதிமீறல் என்று சொல்லுங்க நண்பா.
பிச்சைக்காரன்
பேப்பர் படிக்கிறான்
ஸ்லம் டாக் மில்லியனர்
என்று எழுதினால் ஒத்துக்கொள்வீர்களா :-)))
வணக்கம் ரவி.. ஹைக்கூ பத்தி நிறைய விவாதம் நடந்துருக்கு.. செய்திப்பூர்வமா உபயோகமா இருந்துது.. நன்றி.. இந்த லிங்க்ல இருக்கறதப் பத்தி நீங்க என்ன நெனக்கறிங்கங்கறத சொல்லுங்களேன்.. நான் ஹைக்கூனு எல்லாம் சொல்லல.. But still உங்க கருத்த கேக்கனும்னு தோணுச்சு..!
ReplyDeletehttp://azhagiyalkadhaigal.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ரவி சார்! ஹைக்கூ பற்றிய உங்க ஆராய்ச்சியை பாராட்டி, டாக்டர்(முனைவர்) பட்டம் வழங்குகிறேன், ஏற்றுக் கொள்கிறேன்.
ReplyDeleteமனசிகிச்சை தரும்
ஸ்டெத் இல்லாத டாக்டர்,
முனைவர் ரவி!
இந்த பொய்க்கூ எப்படி?