Thursday, March 19, 2009

ஹைக்கூ கவிதைகள்...ஹைக்கூ கவிதைகள்...

கோதவரியைக் கடக்கும் ரயில்
தண்ணீர் பாட்டிலில் 
அலைகள்


டியூப் லைட்டை முட்டி முட்டி 
காதலிக்கும் விட்டில் பூச்சிகள்
பார்க்கும் பல்லி

 
அப்பர் பெர்த் பயணம்
அணக்காத விளக்கு
கொலுசு கால்கள்


கிருஷ்ண ஜெயந்தி கோலம்
பூட்டிய கிரில் 
கேட்


கொசுக் கடி
தூங்கும் அம்மா
பால் சப்பும் குழந்தை


மழைத் தூறல்
குடையுடன் வெளிவரும் 
காசி யாத்திரை மாப்பிள்ளை

திரில்லர் கதை படிக்க:-


சுமதியின் ராசி பலன் - திகில் கதை



42 comments:

  1. //கிருஷ்ண ஜெயந்தி கோலம்

    பூட்டிய கிரில்
    கேட்//

    தலைவா.. எல்லாமே நன்று என்றாலும் இது கலக்கல் ரகம்.. அந்த பாட்டில் அலையும் நன்றாக இருந்தது..

    ஹைக்கூவின் இலக்கணமான நிகழ்கால காட்சிகள்,பார்த்த, பார்க்கக்கூடிய காட்சிகள் என அனைத்தும் கண்முன்..

    ReplyDelete
  2. //கோதவரியைக் கடக்கும் ரயில்
    தண்ணீர் பாட்டிலில்
    அலைகள்//

    //அப்பர் பெர்த் பயணம்
    அணக்காத விளக்கு
    கொலுசு கால்கள்//

    இது ரெண்டும் சூப்பர் :)

    ReplyDelete
  3. ந்ன்றி தலைவா! அடிக்கடி வாஙக.நீங்கெல்லாம்
    வந்து சொன்னாதான் என்கேரேஜிங்கா இருக்கு.

    ReplyDelete
  4. வாங்க கிஷோர். ரொம்ப நன்றி.

    ReplyDelete
  5. //டியூப் லைட்டை முட்டி முட்டி
    காதலிக்கும் விட்டில் பூச்சிகள்
    பார்க்கும் பல்லி//

    சூப்பர் சார்.ஜாலியா இருக்கு விட்டில் பூச்சிகள்
    நடக்கப் போவது தெரியாமல்

    ReplyDelete
  6. நன்றி ஆதித்யா!

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. நல்ல கவிதைகள். நல்ல வாசிப்பு அனுபவத்தை உங்கள் இணையம் தருகிறது. உங்கள் பதிவுகளை தமிழ்மணம் சூடான இடுகைகளில் காண முடியவில்லையே. வாசகர்கள் வருகை குறைவா அல்லது தமிழ்மண நிர்வாகத்தின் சதியா?

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. மேலே இருக்கிற பின்னூட்டம் நான் போட்டது இல்லை.

    - பரிசல்காரனுக்காக வெயிலான்

    ReplyDelete
  11. அண்ணே பரிசலின் பதிவு ஹேக் செய்யபடுள்ளது. இப்போதான் இதைக் கண்டு பிடித்தோம். அதை எழுதியது அவர் அல்ல. தயவு செய்து அந்த பின்னூட்டத்தை அழித்து விடுங்கள்.

    ReplyDelete
  12. பரிசல்காரன் பின்னூட்டம் அதர் ஆப்ஷனில் உள்ளது. அவர் அதர் ஆப்ஷனில் பின்னூட்டம் போடுவதில்லை என்று நினைக்கிறேன். கொஞ்சம் உறுதிப்படுத்திக்கொள்ளமுடியுமா ப்ளீஸ்...

    ReplyDelete
  13. அன்பு ரவிசங்கர்..

    மேலே உள்ள கமெண்ட் நான் போடவில்லை. இப்படி கீழ்த்தரமான முறையில் கருத்துச் சொல்லி பழக்கமில்லை எனக்கு!

    இன்று மதியம் முதலே நான் வலைப் பக்கமே வரவில்லை. கம்பெனியில் ஆண்டுவிழா என்பதால் ஃபோனையும் ஆஃப் செய்துவைத்திருந்தேன். ஆன் செய்ததுமே அத்தனை நண்பர்களின் ஃபோனும்தான் இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தியது.

    மேலே உள்ள பரிசல்காரனை க்ளிக் செய்தால் என் வலைப்பூவிற்குச் செல்கிறது. என் ப்ரொஃபைலுக்குச் செல்லவில்லை. எப்படி இது???

    ரவி.. என்னைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்...

    யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்றுதான்

    ReplyDelete
  14. நன்றி பரிசல்காரன்,

    உங்கள் பெயரை அந்த ஹேக்னானி(ஹேக் + அனானி)சிதைத்தற்கு வருந்துகிறேன்.அவரைப் பிடிப்போம்.

    எனக்கும் ஒரு அனானி தொடர்ந்து தகாத வார்த்தைகள் கூறி பின்னூட்டம் இடுகிறார்.
    அவரை பொறி வைத்து பிடிப்பதற்கு ஆவன செய்துக் கொண்டிருக்கிறேன்.



    ஆனால் ஒரு உள்ளுணர்வு சொல்லிக் கொண்டேயிருந்தது “இவர்(பரிசல்) இப்படிப் பட்ட ஆள் இல்லையே.ஏன் இந்த திடீர் கோபம்?” என்று.

    நன்றி.

    ReplyDelete
  15. நன்றி செந்தழல் ரவி. தாமதமாக பின்னூட்டத்தை
    moderate செய்ததற்கு மன்னிக்கவும்.

    //அவர் அதர் ஆப்ஷனில் பின்னூட்டம் போடுவதில்லை என்று நினைக்கிறேன்.கொஞ்சம் உறுதிப்படுத்திக்கொள்ளமுடியுமா ப்ளீஸ்...//

    நான் என்ன செய்ய வேண்டும்? comment as(select profile) இல் போய் பார்க்க வேண்டுமா?

    என்னுடைய பின்னூட்டத்தில் அவர் (பரிசல்)
    கிளிக் செய்தால் முதலில் அவர் profileலுக்குச்செல்லுகிறது.

    அடுத்து அவர் வலைக்கும் போக முடிகிறது.

    ReplyDelete
  16. நன்றி எம்.எம்.அப்துல்லா!

    ReplyDelete
  17. நன்றி வெயிலான்.

    ReplyDelete
  18. நன்றி அனானிமஸ்!~...

    //உங்கள் பதிவுகளை தமிழ்மணம் சூடான இடுகைகளில் காண முடியவில்லையே. வாசகர்கள் வருகை குறைவா அல்லது தமிழ்மண நிர்வாகத்தின் சதியா//

    வாசகர்கள் வருகை குறைவுதான். ஆனால்
    வருகிற வாசகர்கள் எல்லோரும் பின்னூட்டம் போடுவதில்லை.

    தமிழ்மணம் இது மாதிரி செய்வதில்லை என்று
    நம்புகிறேன்.

    ReplyDelete
  19. ரவி,

    நேற்று பரிசல்காரன் பெயரில் வேறு யாரோ போட்ட பின்னூட்டம் தரக் குறைவு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நீங்கள் அதை உண்மை என்று எண்ணி, அவருக்கு பதில் சொல்கிறேன் என்று என் பதிவில் பரிசல் போட்ட பின்னூட்டத்திற்கு விளக்கம் கேட்டதையும் பார்க்க முடிந்தது. இப்போது அவைகளை நீங்கள் நீக்கிவிட்டாலும் என் 'ஹைக்கூ' களின் மேல் உங்களுக்கு இருக்கும் அபிப்ராயத்தையும் உணர முடிந்தது. நன்றி.

    அனுஜன்யா

    ReplyDelete
  20. நன்றி அனுஜன்யா!

    இந்த பதிவில் உள்ள ஹைகூக்களைப் பற்றி உங்கள் கருத்துக்கு ஆவலாக உள்ளேன்.ஏன்?
    ரொம்ப கஷ்டப்பட்டு ஹைகூவின் infrastructureக் கொண்டுவந்துள்ளேன்.

    நாம்(என்னையும் சேர்த்துதான்)
    எழுதுவதெல்லாம் ஹைகூவில் சேருமா?
    I do not think it will confirm to hyku formula.

    கடைந்து எடுத்தால் நான்கு தேறும்.சுஜாதா சொல்வது போல் பொய்கூக்கள்.

    நன்றி

    ReplyDelete
  21. எதுவும் சொல்லாத போகாதீங்க என்று நீங்கள் வேண்டி விரும்பி
    பணிவன்புடன் ,
    அக்கறையுடன்
    ஆசையுடன் ,
    வேண்டுகோளுடன் ,
    அர்ப்பணிப்புடன் ,
    ஆதரவுடன் ,
    உள்ளன்புடன் ,
    உறுதிப்பாட்டுடன்
    கேட்டுக்கொண்டதால் சொல்கிறேன்.

    இந்த அதர் ஆப்சன்ஸை அவாய்ட் பண்ண ஒரே வழி அனானி பின்னூட்டத்தை அனுமதிக்காமல் இருப்பதுதான்.

    ReplyDelete
  22. நன்றி நண்பா!

    ReplyDelete
  23. எல்லாமே நல்லாயிருக்கு. எழுத்தில் கொண்டுவரப்படும் புகைப்படங்கள் என்கிற ஹைகூ இலக்கணத்துக்குப் பொருந்தி வருகிறது. எல்லாமே சலனப்படுத்துது என்பதில், இவைகளின் வெற்றி இருக்கிறது. நல்லாயிருக்கு.

    ReplyDelete
  24. நன்றி ச.முத்துவேல்

    ReplyDelete
  25. //கிருஷ்ண ஜெயந்தி கோலம்

    பூட்டிய கிரில்
    கேட்
    //

    நெஜமாவே எனக்கு மட்டும் மட்டும் புரியலை ரவிஷங்கர். ப்ளீஸ் எனனனு சொல்லுங்க, ஆவலா இருக்கேன்.

    அந்த அப்பர் பர்த் ரொம்ப அருமை. நீங்க தான் எனக்கு ஹைக்கூவுக்கு இன்சிபிரேஷன். (வச்சான்யா ஆப்பு) :))

    ReplyDelete
  26. அம்பி நமஸ்காரம்.ரொம்ப நன்றி.என் அழைப்பை
    மதித்து திக் விஜயம் செய்ததற்கு.

    //கிருஷ்ண ஜெயந்தி கோலம்//

    கிருஷ்ணர் வெண்ணெய் சாப்பிட வருவதற்கு குட்டி கால் கோலம் போடுவதுண்டு.கோலம் போட்டுட்டு கிரில் கேட்ட பூட்டிட்டா மாமி!
    (அந்த பிளாட்ல சேப்டி கம்மி)

    கிருஷ்ணர் எப்படி வருவார்?

    ReplyDelete
  27. அனைத்து ஹைக்கூக்களும் பிடித்திருக்கின்றன. என் விருப்பம்,

    //கோதவரியைக் கடக்கும் ரயில்
    தண்ணீர் பாட்டிலில்
    அலைகள்//

    //கிருஷ்ண ஜெயந்தி கோலம்
    பூட்டிய கிரில்
    கேட்//

    - ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  28. //கிருஷ்ண ஜெயந்தி கோலம்

    பூட்டிய கிரில்
    கேட்//
    சூப்பர் சார்...’கொலுசு கால்களும்’ நல்லா இருக்கு...

    ReplyDelete
  29. நன்றி தமிழ் பறவை.

    ReplyDelete
  30. நன்றி முதல் வருகைக்கு. கருத்துக்கு.அடிக்கடி
    வரவும்.

    ReplyDelete
  31. ழகிருஷ்ண ஜெயந்தி கோலம்

    பூட்டிய கிரில்
    கேட்

    அருமையான ஹைக்கு

    ReplyDelete
  32. நன்றி ஆ.முத்துராமலிங்கம் முதல் வருகைக்கு
    மற்றும் கருத்துக்கு.

    ReplyDelete
  33. //
    கோதவரியைக் கடக்கும் ரயில்
    தண்ணீர் பாட்டிலில்
    அலைகள்


    கிருஷ்ண ஜெயந்தி கோலம்
    பூட்டிய கிரில்
    கேட்

    //

    Catchy. Esp the first one

    ReplyDelete
  34. அருமையான கவிதைகள்! ஆனால் தயவுசெய்து மண்ணியுங்கள், இரண்டைத்தவிர மற்றவைகள் ஹைகூ போல தெரியவில்லை.

    தொடர்ந்து எழுதுங்கள், படிக்க ஆவலுடன் உள்ளேன்.

    ReplyDelete
  35. வாங்க சுகுமார்.கருத்துக்கு நன்றி.இப்போ பங்களூரு? அப்போ அமெரிக்கா? கடைசிதான் ஹைகூக்கு ஓத்து வரவில்லை என்று நினைக்கிறேன். அது இப்படி இருக்க வேண்டும்.

    மழைத் தூறல்
    காசி யாத்திரை
    எல்லோர் கைகளிலும் குடைகள்

    நன்றி

    ReplyDelete
  36. //கிருஷ்ண ஜெயந்தி கோலம்
    பூட்டிய கிரில்
    கேட்// இது எனக்குப் பிடித்திருந்தது. கடைசி பின்னூட்டத்தில் மாற்றி எழுதிய காசி யாத்திரையும்!

    ReplyDelete
  37. வாங்க ஷக்தி பிரபா! கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  38. வாங்க கெக்கே பிக்குணி! கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  39. தங்களின் அய்க்கூக்கள் அருமையாக உள்ளன. ஆனால் சிலவற்றுக்கு தலைப்பு சூட்டியிருக்கிறீர்கள். அவ்வாறு செய்யக்கூடாது என்று எனக்குச் சொன்னார்கள்.

    ReplyDelete
  40. வாங்க குடந்தைஅன்புமணி! கருத்துக்கு நன்றி.

    //ஆனால் சிலவற்றுக்கு தலைப்பு சூட்டியிருக்கிறீர்கள். அவ்வாறு செய்யக்கூடாது//

    நீங்கள் சொல்வது 100% சரி.என்னுடைய பழைய
    தொகுப்பைப் படித்து விட்டு சொல்லுகிறீர்கள்.
    அப்போது விளையாட்டாக எழுதிய பொய்கூக்கள்.
    மேல் உள்ளதற்க்கு தலைப்பு இல்லை.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!