Thursday, March 12, 2009

சுமதியின் ராசி பலன் - திகில் கதை
சுமதி அந்த மின்சார ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ரொம்ப நேரம் ஆயிற்று.ஒரு ரயிலையும் காணும். மணி மாலை ஆறு. எண்ணாயிற்று.கூட்டம் வேறு சேர்ந்துக் கொண்டிருந்தது.பசி வேறு எடுக்க ஆரம்பித்தது.  பொழுது போகவில்லை. அங்கும் இங்கும் உலாத்தினாள். அப்போதுதான் அவள் கண்ணில் பட்டது அது.தினமும் பார்ப்பதுதான். 


எடை பார்க்கும் இயந்திரம். ”உங்கள் எடை, அதிர்ஷ்டம் துல்லியமாக கணிக்கும்... வருக... வருக.இரண்டு கலர் பல்புகள் “மினுக்..மினுக்... என்று மாறி மாறி எரிந்து வா...வா என்று அழைத்தது. ஒரு ரோபோ மாதிரி இருந்தது.


இதில் ஒரு முறை கூட ஏறி எடைப் பார்த்ததில்லை. எடை பார்ப்பவர்களை பார்த்ததுண்டு. துல்லியமாக எடை பார்க்க வேண்டும் என்று சிலர் ஜட்டியை மட்டும் விட்டு மீதி எல்லாவெற்றையும் கழட்டி துல்லியமாக பிசிறுத் தட்டாமல் எடைப் பார்ப்பார்கள். எதோ எக்ஸ்ரே எடுப்பது போல்.சிரிப்பு வரும்.


சுமதிக்கு அன்றைய எடையை விட அன்றைய அதிர்ஷ்டம்தான் முக்கியமாகப் பட்டது. அந்த கலர் பல்புகள் அவளை கண் சிமிட்டி அழைத்துக் கொண்டிருந்தது சுமதிக்கு பொதுவாகவே ராசிபலன்,புத்தாண்டு பலன்,இன்று நாள் எப்படி போன்ற வற்றில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஆனால் இன்றைக்கு இனம் புரியாத ஆர்வம் ஒன்று அரித்துக் கொண்டே இருந்தது.


நேரம் ஆக ஆக் இன்றைய அதிர்ஷ்டம் தெரியவிட்டால் ம்ண்டை வெடித்து விடும் போல் ஒரு படபட்ப்பு வந்து விட்டது.எடுத்தே விடுவது என்று முடிவு செய்து அதன் அருகே சென்றாள்.இன்றைக்கு எனக்கு என்ன ராசி பலன்?  தன லாபம்? எதிர்பாராத வெளியூர் பயணம்?


நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே கனமான காய்கறிப் பையையும், ஆபிசில் கொடுத்த பிரேம் போட்ட மஹா லட்சுமிப் படத்தையும் கிழே வைத்து விட்டு எடை மெஷினில் ஏறினாள்.விர்ர்ர்ர்ர்ர் என்று சத்தம் போட்டு சுத்தி சக்கரம் நின்றது.காசைப் போட்டாள். படக் என்ற சத்தம் வந்து எடை டிக்கெட் பிரிண்ட் ஆகி கவுண்டரில் வந்து விழுந்தது. 


கை விட்டு எடுக்கப் போனாள் .. அப்போது ...காது பொளந்து போவது போல் ஒரு வெடி குண்டு சத்தம்.உடம்பு அதிர்ந்து வெல வெலத்தது.அடுத்த ..”பட பட பட வென ....துப்பாக்கி சுடும் சத்தமும்... பயணிகள் கத்தும் சத்தமும், ஒலமும்..அதிர்ச்சியில் உறைந்து பின் பக்கம் பார்த்தாள். யாரோ ஒரு சிறுவன் உடம்பெல்லாம் ரத்த சகதியாகி, கை ஒன்று தனியாகி தொங்கியபடி, ஒலமிட்டபடி இவள் அருகில் சொத்தென்று விழுந்தான் . மிரண்டுப் போய் முகத்தில் சவ களைத்தட்ட “அய்யோ கடவுளே” என்றபடி அந்த எடை கார்டை பார்க்கமல் தன் ஹாண்ட் பேக்கில் போட்டுக் கொண்டு எல்லாவெற்றையும் தூக்கிக் கொண்டு ஒட முடியாமல் ‘தத்தாக்கா பித்தாக்கா” மூச்சு வாங்க எதிரில் தெரிந்த படிக்கட்டை நோக்கி ஓடினாள்.


வழியில் ஒருவர் மிதிப் பட்டு இறந்துக் கிடந்தார். “பதுங்குங்க.... ஒளிஞ்சுகுங்க.... தீவிரவாதி சுடறான்.....” ஒரு ரயில்வே போலீஸ் கத்திக்கொண்டே எதிர் திசையில் ஓடினார். அவர் பின்னால் அடிப் பட்ட ஒருவரை நான்கு பேர் தூக்கிக் கொண்டு ஒடினார்கள்.


கேட்டவுடன் உடம்பு ஒரு குலுக்கு குலுக்கியது.துப்பாகி சுடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.. ஆண்,பெண்,முதியவர்கள்,பிச்சைக் கர்ரர்கள்,சிறுவர்கள் பிளாட்பார சிறு வியாபாரிகள் விழுந்தடித்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்தப் படிஅங்கும் இங்கும் சிதறி ஒடினார்கள். பல பேர் உடலில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.


படிக்கெட்டில் ஏறி மேல் தளத்தில் வந்து பக்கத்தில் இருந்த இரும்பு தடுப்பிற்குள் நுழைந்து மொட்டை மாடி போல் இருந்த இடத்தில் படுத்துக் கொண்டாள். அவள் மாதிரி நிறைய பேர் தரையோடு ஒட்டியபடி படுத்துக் கிடந்தார்கள்.வலது பக்கத்திலும் ஆண் ,பெண் ,முதியவர்கள் என தரையோடு ஒட்டிப் படுத்திருந்தார்கள்.இவள் அருகில் ஒரு குரங்காட்டியும் பக்கத்தில் சங்கலியில்
கட்டிய குரங்கும் படுத்திருந்தது.   அது அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.


தலையை கவிழ்த்துக் கொண்டாள். மூச்சு முட்டி வேர்த்து விறு விறுத்துப் தெப்பலாக நனைந்துப் போனாள்.பல இடங்களில் சிராய்த்து எரிந்தது. புடவை முழங்கால் வரை தூக்கி காலின் கிழ் காய்கறிப் பை சிதறிக் கிடந்தது.ஒரிரு தக்காளிகள் ந்சுங்கி கால் விரல்களில் பிசுபிசுத்தது. தீவிரவாதி எல்லோரையும் சுட்டு விடுவானா? சுடும் போது வலிக்குமா? துடி துடித்துச் சாவேனா?காலில் விழுந்து கெஞ்சித் தப்பிக்கலாமா? 


எனக்கு இன்றைய ராசி பலன் என்ன? உயிரோடு திரும்புவோமா?


தன் குழந்தைகள் ஞாபகம் வந்தது. அழுகை முட்டியது. சத்தம் வராமல் கேவினாள். செல் போன்னை எடுத்தாள். பக்கத்தில் உள்ளவர்கள் ஜாடைக் காட்டி உள்ளே வைக்கச் சொன்னார்கள்.Slient mode ல் வைத்தாள்.அப்படியே முனகியபடியே படுத்து இரண்டரை மணி நேரம் ஓடி விட்டது.இடையிடையே வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. 


எனக்கு இன்றைய ராசி பலன் என்ன? 

மெதுவாக பேச்சுக் குரல்கள் கேட்க ஆரம்பித்தது. தலையை தூக்கிப் பார்த்தாள். மணி பத்து. லவுட்ஸ்பீக்கரில் ”பயணிகள் கவனிக்க மேற்கு கேட் வழியாக போய்விடுங்கள். அங்கு போலீஸ் பாது காப்பு உள்ளது. இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டு விட்டோம்.”


படபடப்பு சற்று குறைந்தது.எழுந்தாள்.உடம்பு கனத்தது. மனது திகிலுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

எனக்கு இன்றைய ராசிபலன் என்ன?  


செல் போனில் விபரத்தை கணவனிடம் சொன்னாள்.அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. சில பயணிகள் கூடி பேசி ஒரு பிரைவேட் டாக்ஸியில் வேண்டிய இடங்களில் இறங்கி சுமதியும் வீடு வந்து சேரும் போது மணி இரவு 12.45 பிரேம் போட்டமஹா லஷ்மிப் படத்தை மார்போடு அணைத்தபடிதான் பிரயாணம் செய்தாள்.வீடு வரும் வரை உடம்பில் நடுக்கம் இருந்தது. 


எனக்கு நேற்றைய பலன் என்ன?  


வீட்டில் எல்லோரும் தூங்கி விட்டார்கள். இவளுக்குத் தூக்கம் வரவில்லை.அந்த ஸ்டேஷன் நிலவரத்தைப் பார்க்க வேண்டும்.ம்ணி காலை மூன்று மணி. எழுந்து டீவியைப் போட்டாள்.அந்த தீவிரவாதியைப் பார்த்து அதிர்ந்தாள். அட... பாவி..

நீயா...?

தான் எடை எடுக்கும் முன் இவன் தான் எடை மெஷினில் ஏறி எடை எடுத்தான். அப்போது அந்த துப்பாக்கி தெரியவில்லை.அந்த அதிர்ஷ்ட வாசகம் ஆங்கிலத்தில் இருந்ததால் இவளிடம் உருது கலந்த இந்தியில் அர்த்தம் கேட்டான். அவள் காடை வாங்கிப் பார்த்தாள் அதில்

" Have      a       nice    and  joyful   day  " என்று இருந்ததை மொழி பெயர்த்துச் சொன்னாள். சிரித்தப்படி மிகுந்த நன்றி என்று பதிலளித்தான்.


அவசரமாக தன் பேக்கை எடுத்தாள்.கை நடுங்க தன் எடை அட்டையை எடுத்தாள். எடை 60kg என்று போட்டிருந்தது. மறு பக்கம் திருப்பலாமா? மார்பு படபடக்க ஆரம்பித்தது.  பார்க்க வேண்டாம்...பார்க்கமலேயே அதை துண்டு துண்டாக கிழித்து ஜன்னல் வழியாக வெளியே விட்டெறிந்தாள்.

                                   முற்றும்

34 comments:

 1. நன்றி ரமேஷ் வைத்யா. கதைப் பிடித்திருந்ததா?
  இல்லையா? ஒன்றுமே சொல்லாமல் “me the first" ன்னு ஒரு சஸ்பென்ஸ்ல விட்டுட்டீங்களே
  சார்!

  ReplyDelete
 2. தூள் தல.சுமதிக்கு என்ன “அதிர்ஷ்ட பலன்”ன்னு
  சொல்லாமலேயே முடிச்சிட்டீங்களே.

  ReplyDelete
 3. இடை இடையே வார்த்தைகள் மிஸ்ஸிங். என்ன பிரச்சனை? அதன் காரணமாக ஒரு நல்ல கதையை ரசிக்க முடியாமல் போய் விட்டது.

  ReplyDelete
 4. நன்றி வணங்கா முடி.

  //இடை இடையே வார்த்தைகள் மிஸ்ஸிங்.//

  சில பாராக்களில் வார்த்தைகள் காலி இடம் விட்டு அடுத்த வரிக்குத்தான் வந்திருக்கிறது. மிஸ் ஆகவில்லை.இதைத்தான் சொல்லுகிறீர்கள் என்று
  நினைக்கிறேன்.

  ReplyDelete
 5. நன்றி நாமக்கல் சிபி.

  ReplyDelete
 6. நல்லா இருக்கு..இது போல நிஜம்மாகவே இது போன்ற தீவிரவாதிகள் நிலை எப்படியிருந்திருக்கும்?

  ReplyDelete
 7. கதை ஓகே, ஆனா, திகில் கதை எண்டு தலைப்பு போட்டிருக்கிறீங்களே, அது தான் ஏன் எண்டு விளங்கேல்ல!!!

  - Sri

  ReplyDelete
 8. வசனங்கள் இப்பிடித் துண்டு துண்டா கதைக்கு மேல விழுந்திருக்கு, வாசகர்கள் பொறுமையானவர்களா இருந்தா எல்லாத்தயும் பொறுக்கி வாசிக்கலாம், உதாரணமா இந்த வசனத்தை எடுத்துக் கொள்ளுங்க,
  "தன் குழந்தைகள் ஞாபகம் வந்தது. அழுகை முட்டியது. சத்தம் வராமல் கேவினாள். செல் போன்னை எடுத்தாள். "

  இதை இப்பிடியும் எழுதலாம்,

  குழந்தைகளின் ஞாபகம் வர முட்டிய அழுகையை அடக்கிச் சத்தம் வராமல் கேவிக்கொண்டே செல்போனை எடுத்தாள்.

  யாரோ ஒரு எழுத்தாளர் மாதிரி எழுத முயற்சி செய்திருக்கிறீங்க போல இருக்கு. அந்த எழுத்தாளர் சிறு வசனங்களை நறுக்குத் தெறித்தாற் போல எழுதுவார். உங்கள் எழுத்தில் அந்த நடை கை கூடவில்லை. ஆனாலும் நல்ல முயற்சி.

  -Sri

  ReplyDelete
 9. உங்கள் கருத்துக்கு நன்றி அனானி அவர்களே.

  // திகில் கதை எண்டு தலைப்பு போட்டிருக்கிறீங்களே//

  இது எங்கோ(ஆங்கில பத்திரிக்கை என்று ஞாபகம்) படித்த ஒரு சகோதரியின் அனுபவம் கொஞ்சம் + கற்பனை நிறைய.

  (அடுத்து இந்திர காந்தி கொலையுண்ட போது
  என் உறவினர் ஒருவர் டெல்லியில் இப்படித்தான்
  மாட்டிக்கொண்டு 7 மணி நேரம் தவித்தார்.அவர் வீடு சீக்கியர்கள் வசிக்கும் காலனி.)

  சகோதரி அவர்கள் தப்பித்து,அந்த திகில் மூன்று மணி நேர தாக்கத்தில் பாதிக்கப்பட்டு ஒரு மாதம் மருத்தவம்னையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாராம்.தன் குழந்தை/கணவர் ஒரு வாரம் அடையாளம் தெரியவில்லையாம்.

  அதுதான் “திகில்” என்று போட்டேன்.

  ReplyDelete
 10. உங்கள் கருத்துக்கு நன்றி அனானி அவர்களே.

  //வசனங்கள் இப்பிடித் துண்டு துண்டா கதைக்கு மேல விழுந்திருக்கு//

  மாற்றிக் கொள்கிறேன்.

  //யாரோ ஒரு எழுத்தாளர் மாதிரி எழுத முயற்சி செய்திருக்கிறீங்க போல இருக்கு//

  எனக்கு அது மாதிரி தெரியவில்லை.இருந்தால்
  ஒரு தற்ச்செயலாகத்தான் இருக்கும்.

  திருத்திக் கொள்கிறேன்.

  நன்றி!

  ReplyDelete
 11. //ஒரிரு தக்காளிகள் ந்சுங்கி கால் விரல்களில் பிசுபிசுத்தது. //

  அந்த நிமிடங்களில் அதெல்லாம் தெரிந்திருக்குமா அல்லது ஒரு பொருட்டாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

  குரங்காட்டியையும் குரங்கையும் சொன்னது இதற்கு எதிராக போய்விட்டது. நல்ல கதை நடை.

  ReplyDelete
 12. உங்கள் கருத்துக்கு நன்றி விஜய் சாரதி.

  ReplyDelete
 13. நல்லாருந்தது ரவிஷங்கர். சுமதிக்கு என்ன ராசி பலன் வந்திருந்ததுன்னு எனக்கு மட்டும் சொல்லுங்களேன்.

  ReplyDelete
 14. வாங்க வித்யா மேடம். முதல்(?) வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி!

  //சுமதிக்கு என்ன ராசி பலன் வந்திருந்ததுன்னு எனக்கு மட்டும்//

  பாத்தீங்களா உங்கள ஒரு nail biting சஸ்பென்ஸல கொண்டு வந்து நிறுத்தி இது மாதிரி கேட்க வச்சுருக்கேன்.அதுதான் எழுத்தாளரோட
  வெற்றி.அதத்தான் மாஞ்சு மாஞ்சு எழுதி/படிச்சு கத்துக் கிட்டேன்.

  நான் மூன்று முடிவு தீர்மானித்தேன். அது:-

  1.அட்டையில் பின் பக்கம் blank
  2.பின் பக்கம் ராசி பலனில் “நீங்கள் இன்று ஒரு
  மி”
  (”மி” எழுத்துக்குப் பிறகு எதுவும் சரியாக பிரிண்ட ஆக வில்லை)
  3.பார்க்காமல் கிழித்துப் போட்டு விட்டாள்.

  மூன்றாவது முடிவுதான் வைத்தேன்.

  அடிக்கடி வாங்க.எதாவது சொல்லுங்க! ஆமா
  உங்க “சம்பங்கி” கத என்னாச்சு.

  ReplyDelete
 15. ரொம்ப நல்லாருக்கு. என்ன ராசி பலன்னு நடு நடுவுல கேட்டுட்டு, கடைசில சொல்லாமலே முடிசிருக்கறது ரொம்ப அருமை. சுவாரசியமா இருந்தது. திகில் கதைன்னு பேர் வைக்காம இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

  ReplyDelete
 16. வாங்க விக்னேஷ்வரி முதல் வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி!

  ReplyDelete
 17. வெளியிட தேவையில்லை:

  கதை எழுதும்போது அதில் மறைப்பு இருக்கக்கூடாது. வெய்ட் எடுக்கும் முன்னே தீவிரவாதி வெய்ட் எடுத்தான்னு பின்னாடி சொல்லக்கூடாது. அது... ஒரு மாதிரி நேர்மை இல்லை. கதை போக்கிலேயே சொல்லி இருக்கலாம். என்ன சொன்னாள் என்பதை கூட பின்னால சொல்லலாம். தப்பு இல்லை.
  அப்புறம் கொஞ்சம் எழுத்துப்பிழைகள். தவிர்க்கப்பாருங்க. தேவையானா ஒரு முறைக்கு ரெண்டு முறை படிச்சு பாக்கலாம்.
  இங்கேயே மேலே ஒண்ணு இருக்கு பாருங்க! // போகதீங்க!//

  ReplyDelete
 18. வாங்க திவா. முதல் வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி!

  //எழுத்துப்பிழைகள். தவிர்க்கப்பாருங்க//

  “போகதீங்க” திருத்தி “போகாதீங்க”.நன்றி திவா.

  மற்றவை திருத்திக்கொள்கிறேன்.

  // ஒரு மாதிரி நேர்மை இல்லை. கதை போக்கிலேயே சொல்லி இருக்கலாம்//

  வேறுபடுகிறேன்.இதை கதை சொல்லும் சூட்சுமம் (technique)என்று சொல்லலாம்.

  (இதைப் பற்றி மேல் விவாதம் வேண்டாம்)

  அவன் வந்ததை ஒரு கோடிட்டு காட்டி
  விட்டிருக்கலாம்.

  //தேவையானா ஒரு முறைக்கு ரெண்டு முறை படிச்சு பாக்கலாம்.//

  படித்துப் பார்த்துதான் வெளியிடுவேன்.ஆனால் பிழைகள் தவிர்ப்பது இயலாது என்று நினைக்கிறேன் திவா. ஏன்? தமிழ் இலக்கண அறிவு.

  ReplyDelete
 19. //"தன் குழந்தைகள் ஞாபகம் வந்தது. அழுகை முட்டியது. சத்தம் வராமல் கேவினாள். செல் போன்னை எடுத்தாள். " //

  இப்படி விட்டுவிட்டு எழுதுவது தான் திகில் கதையுடன் படக் படக் என்று நெஞ்சு துடிக்க ஒன்ற முடிகிறது என்பது என் அபிப்பிராயம். எனக்குப் பிடித்திருந்தது.

  கதை(!!!?) :( வருத்தமாய் இருந்தது. நிகழ்வு....களின் நிதர்சனங்கள்.

  ஒரே ஒரு வருத்தம். கடைசி வரை சுமதிக்கு என்ன பலன் என்று தெரியாமையே போய்டுச்சே!

  ReplyDelete
 20. வாங்க ஷ்க்திப்ரபா. வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி!

  //கடைசி வரை சுமதிக்கு என்ன பலன் என்று தெரியாமையே போய்டுச்சே!//

  பந்துக்கள் வருகை(?)

  ReplyDelete
 21. தல..நாங்க எல்லாம் முந்திரி கொட்ட மாதிரி முழு படத்த பாக்கறதுக்கு முன்னாடியே அவசரப்பட்டு கிளைமாக்ஸ்'a பாக்கறவங்க.. எங்க கிட்ட போயி இப்டி சஸ்பென்ஸ் வெச்சுடிங்களே..

  ReplyDelete
 22. நன்றி சுரேஷ் குமார்.ஏன் அவசரப் பட்டு கிளைமாக்ஸப் பார்க்கறீங்க.

  ReplyDelete
 23. ரவிஷங்கர் அவர்களே,

  நான் யோசித்த ஒரு முடிவு!

  வெயிட் கார்டைத் திருப்பினாள். குட்டிக் குட்டி எழுத்தில் நுணுக்கி நுணுக்கி எழுதி இருந்தது!

  ' மேற்கே பயணம் தவிர்க்கவும், அபாயம் நேரிடலாம்!

  நன்றி!

  சினிமா விரும்பி

  ReplyDelete
 24. சினிமா விரும்பி கருத்துக்கு நன்றி.

  முடிவு நல்லா இருக்கு.

  கதை எப்படி? சொல்லுங்க சார்!

  ReplyDelete
 25. ரவிஷங்கர் அவர்களே,

  கதையில் Offbeat கற்பனை வளம், நல்ல நடை இருக்கின்றன. லேசா, மிக மிக லேசா , அமரர் சுஜாதாவின் சாயல்! இதில் தவறேதும் இல்லை!

  நன்றி!

  சினிமா விரும்பி

  ReplyDelete
 26. pesama chinimaukku katha aluthunga good future irrukku.

  ReplyDelete
 27. Lalitha said...

  // pesama chinimaukku katha aluthunga good future irrukku.//


  நன்றி லலிதா.சினிமாவெல்லாம் இஷ்டம் இல்லை அல்லது ஆர்வம் இல்லை.

  ReplyDelete
 28. super ma. story'a romba pudichiruku...........

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!