Monday, April 20, 2009

ஜானகி,சுசிலா,வாணிஜெயராம்...பேச்சு

தமிழ் திரைப் படங்களில் பல பாட்டுக்கள் பாடி ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர்கள் ஜானகி,சுசிலா,வாணி
ஜெயராம்...மூவர் குரலும் இனிமையானது. தேன். 
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டைப்பான குரல். 
மறக்க முடியாத பாடல்கள் பாடியுள்ளார்கள்.

இவ்வளவு இனிக்கும் இவர்களின் பாட்டுக் குரல், 
பேசும் போது அவ்வளவு நன்றாக இருக்காது. டீவி 
பேட்டிகளில் இவர்களின் பேச்சுக் குரல் இனிமையாக 
இல்லையே ஏன்? அதுவும் ஜானகியின் பேச்சுக் குரல்
கர்ண கடூரமாய் இருக்கும் ஏன்? அது தவிர ஜானகி, 
சுசிலா பேச்சில் ஆந்திர வாடை வீசும். (”MSVவீ சாரூஊ 
பாட்ட கேட்டு சபாஷ் அன்னாரு”) (”ஓர் வாட்டி ஹை 
பிட்ச்லோ ).வாணி ஜெயராம் & சித்ரா பேச்சுக் குரலும் 
சுமார்தான்.

(வயதாகிவிட்டது என்ற காரணம் இல்லை.இவர்களின் 
இளமைப் பருவ பேச்சுக்குரலும் அப்படித்தான்)

பாடும்போது(false voice) பொய் தொண்டையில் பாடு-
வார்களோ?

SPB யின் பேச்சு & பாட்டு இரண்டுமே நன்றாக இருக்கும்.
தெலுங்கில் மொழி மாற்ற படங்களுக்கு டப்பிங் குரல் 
கொடுக்கிறார்.

சினிமாவில் தமிழ் தெரியாத நடிகைகளுக்கு குரலாக 
அருமை + இனிமையான டப்பிங் குரல் கேட்டுள்ளோம். 
இந்த இனிமையான குரலுடைய டப்பிங் கலைஞர்களை 
பாடச்சொன்னால் எப்படி இருக்கும்?. 

இனிமையாக இருக்குமா? உல்டாவா?(நன்றாக இருக்காது?)

படிக்க கவிதை:-



10 comments:

  1. |பாடும்போது(false voice) பொய் தொண்டையில் பாடு-
    வார்களோ?|

    குறும்பு..!!
    ரொம்ப உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க!!

    ReplyDelete
  2. //பாடும்போது(false voice) பொய் தொண்டையில் பாடுவார்களோ?//

    ****************

    இவ்ளோ, உன்னிப்பாகவா கவனிச்சு இருக்கீங்க தல??

    இருந்தாலும், நீங்க சொன்னத அமல்படுத்தலாம்.

    ReplyDelete
  3. ஆ.முத்துராமலிங்கம் said...

    // குறும்பு..!!
    ரொம்ப உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க//

    கருத்துக்கு நன்றி.அண்ணே பாட்டுன்னா
    பல விஷயம் இருக்கு.இதெல்லாம் பாட்டு கேட்கிற அனுபவத்துல் சொல்லலாம்.ஓபன் திரோட்
    (open throat singing)வேற ஒன்னு
    இருக்கு.

    ReplyDelete
  4. வாஙக எடக்கு மடக்கு கோபி.கருத்துக்கு நன்றி.

    //இருந்தாலும், நீங்க சொன்னத அமல்படுத்தலாம்//

    இதத்தானே:-

    ‘இந்த இனிமையான குரலுடைய டப்பிங் கலைஞர்களை
    பாடச்சொன்னால் எப்படி இருக்கும்?.”

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. இதுக்கு தான் நான் பாட்டு கேக்கறது மற்றும் அவங்க பேட்டிய படிக்கறதோட நிறுத்திக்கறேன்..
    தொலைக்காட்சி பேட்டிய பார்க்கறதே இல்ல..

    ReplyDelete
  7. voice modulation பேச்சுக்கும் பாட்டுக்கும் வேறு வேறு அல்லவா..

    ReplyDelete
  8. பாச மலர் said...
    நன்றி.

    //voice modulation பேச்சுக்கும் பாட்டுக்கும் வேறு வேறு அல்லவா//

    ஒப்புக்கொள்கிறேன்.ஆனால் அடிப்படைக்குரல் ஒன்று இருக்கிறது.

    ReplyDelete
  9. மொழி படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் ப்ரித்விராஜ் உரையாடல் நினைவிற்கு வருகின்றது.

    "நல்லா பாடுறவங்க பேசும்போது குரல் நல்லா இருக்காதாம், லதா மங்கேஷ்கர் பேசி கேட்டு இருக்கியா?"

    "இல்லயே"

    "நானும் கேட்டதில்ல‌"

    ReplyDelete
  10. கிஷோர்,

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!