Friday, April 10, 2009

BPO வில் ஒரு நைட்ஷிப்ட்....

கதை எழுதி அதன் முடிவு என்ன என்று கேட்டுருந்தேன்.ஆர்வத்துடன் கலந்துக்கொண்ட லட்சக்கணக்கான(நர்சிம்,அதிஷா,தமிழ்ப்பறவை,அறிவிலி,
பட்டிக்காட்டான்,அனானி-1,அனானி-2)பதிவர்களுக்கு நன்றி.


கதையின் முடிவு ஓரிஜனல் கதையின் கிழே கடைசியில் உள்ளது. படிக்க.

ஓரிஜனல் கதை:
பத்திரிக்கையில் அந்த நடிகையின் போட்டோவைப் பார்த்தான் தாமு. நீச்சல் உடையில் .நீர் துளிகள் அங்கும் இங்குமாக படர்ந்திருந்தது.தள தளவென புஷ்டியாக இருந்தாள். நீச்சல் உடையின் மேல் கிழ் மறைப்பு முடிச்சுக்கள் துருத்திக் கொண்டு அலட்சியமாக இருந்தது. எச்சிலை மென்று விழுங்கினான்.

தாமு ஒரு டிராவெல்ஸ் கம்பெனி கார் டிரைவர்.ஒரு BPO கம்பெனிக்கு வேன் ஒட்டுகிறான். பிக்-அப் மற்றும் டிராப்.இவன் டிரிப்பில் 4 பெண்கள் 3 ஆண்கள் வருவார்கள். இதில் வரும் ஒரு பெண் ஸ்டெல்லா. இதே நடிகையின் முகச் சாயல்.அதே வாளிப்பான உடல்.ஸ்டெல்லாதான் கடைசி ட்ராப்.இவள் வீடு புற நகர் பகுதி.கொஞ்ச நேரம் பேசி விட்டு வேன் சீட்டில் குந்திக் கொண்டு உலகம் மறந்து தூங்கி விடுவாள். தாமு ரியர் வீயூ கண்ணாடி வழியாக வண்டியை ஒட்டிக் கொண்டே ,காமம் பொங்கப் பார்த்துப் பெருமூச்சு விடுவான். வீடு வந்ததும் அவன் தான் அவளை எழுப்புவான்.

சே!என்ன வாழ்க்கை.தானும் அந்தப் பெண்ணும் ஒரே வாழ்க்கை வாழ்வதாகப் பட்டது. உலகம் தூங்கும் போது இருவரும் விழித்துக் கொண்டு,விழித்திருக்கும் போது தூங்கிக்கொண்டு.ஒய்வு நேரத்தில்,கார் கதவை திறந்து வைத்து, பனியனுடன் மல்லாக்காக ”ஆ”வென வாய் திறந்து உடம்பு சூட்டுடன் படுத்தவாறே,FM கேட்டுக் கொண்டு.... அன்றும் அப்படித்தான் FMல் ஒரு பெண் “ரகசிய ராத்திரிகள்” நேயர்களுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தாள்.

குடும்ப சுழ்நிலை.தங்கை,தம்பி,குடிகார அப்பா, கடன்.திருமணம் செய்யவும் வழியில்லை..இந்த மாதிரி தினமும் பார்த்து உஷ்ணத்தில் பெருமூச்சு விட்டுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவது வெறுப்பாக இருந்தது.மாவா பாக்கெட்டை பிரித்து வாயில் கொட்டிக் கொண்டான்.ஜிவ்வென்று தலையில் ஏதொ ஏறி மார்பு சற்று அடைத்தது.

ஸ்டெல்லாவும் நம் மாதிரிதானே.அவளும் உடம்பு சூடோடுதானே இருப்பாள்? திடீரென்று உள்ளே ஒரு சாத்தான் எழுந்தது. கடைசி டிராப்பானதால் அவளை மிரட்டி ஒதுக்குபுறமாக உள்ள அந்த பூட்டிய வீட்டின் பின்னே அழைத்துப்போய்.அனுபவிக்க வேண்டியதுதான். உடன்பட்டால் உச்சம். இல்லையேல் மிரட்டல்.கொலை.எதையும் சந்திக்க தயார்.மீண்டும் அந்த நடிகையின் முடிச்சுக்களைப் பார்த்தான். 

BPO டூட்டி முடிந்துஎல்லோரும் வெளியே வர ஆரம்பித்தார்கள்.தாமு ட்ரிப் ஆண் பெண்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து ஏறிக்கொண்டார்கள்.கடைசியாக ஸ்டெல்லா படிகளில் இறங்கிக்கொண்டிருந்தாள்.இன்றும் அவளை லாங்க் ஷாட்டில் பார்க்கிறான்.குலுங்கி குலுங்கி ஒரு தேவதைப் போல் இறங்கியது மாதிரி பட்டது.இப்போது காமத்துடன் காதலும் சேர்ந்து அலைக்கழித்து அவளை முழுங்கிவிடுவது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

எல்லோரும் ஏறினார்கள்.மணி இரவு 12.05.வண்டியை எடுத்தான்.தெருவெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது.ஓனிக்ஸ் குப்பை வண்டிகள் சுறு சுறுப்பாக இருந்தது. 

இன்றும் அவளுடைய வழக்கமான ஓர சீட்டில் ஏறினவுடன் குந்திக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டாள்.அவ்வப்போது ரீயர் வியூ கண்ணாடி வழியாக ரசித்துக்கொண்டுதான் ஓட்டிக் கொண்டிருந்தான். 

கொஞ்ச நேரம் கழித்து இரண்டு பேர் “பை” சொல்லி இறங்கிக்கொண்டார்கள். மணி 12.28. 

இன்னும் கொஞ்ச தூரத்தில் மூன்று பேர் இறங்கினார்கள். மணி 1.00.  கதவு அறைந்து சாத்தியும் அவள் அசையவில்லை.

அடுத்த திருப்பத்தில் ஒரு பையன் இறங்கிக்கொண்டான். மணி 1.15பின்னால் ஒரு முறைப் பார்த்தான். துப்பட்டா விலகியது தெரியாமல் தூக்கத்தில் இருந்தாள்.

கைநடுக்கத்துடன் மாவாவை எடுத்து வண்டியை ஓட்டியவாக்க்கிலேயே எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.போதையில் உடம்பு ஒரு மாதிரி விறுவிறுத்தது. தண்ணீரி குடித்தான். கண்ணாடியில் முகத்தைப் பார்த்து வியர்வையை துடைத்துக் கொண்டான். செல்லை slient modeல் வைத்தான்.டாஷ் போடைத் திறந்து கத்தியை எடுத்து வைத்துக் கொண்டான்.

அவள் இருக்கும் புற நகருக்கு போகாமல் வேறு ஒரு பாதையில் வண்டியை திருப்பினான். இங்கிருந்தும் வேறு BPO கம்பெனி ஆட்கள் போவதைப் பார்த்திருக்கிறான்.மணி 1.25.ஹெட்லெட்டை அணைத்தான். அவன் நண்பன் வாட்ச்மேனாக இருக்கும் பூட்டியவீட்டைத்(ஓனர் அமெரிக்கா போய் விட்டார்)  தேடியபடி  மெதுவாக ஓட்டினான்.  சே!முன்னதாக அவனுக்குச் சொல்லியிருக்கலாம்.

அப்போது .........
 ____________________________________________________________________________________
முடிவு என்ன?  சொல்ல முடியுமா? (முடிவு கிழே பார்க்கவும்)
___________________________________________________________________________ 

அப்போது.........

எதிரே ஒரு டயோட்டா குவாலிஸ் ஹெட் லைட்டை முகத்தில் கூசும்படி அணைப்பது போடுவது என்று மெதுவாக கிட்டத்தில் வந்தது. பயந்தபடிப் பார்த்தான் தாமு.

அட! டிரைவர் சீட்டில் ஆத்ம நண்பன் வேணு.இவனும் BPOவுக்கு கார் ஓட்டுபவன். 

“இன்னடா...தாமு செல் அட்ச எடுக்க மாட்டேன்ற.எவ்வளவு நேரம்....ஆமா.. ஏன் இந்த ஸைடுல வண்டி போவுது?”

“ஒரு கடிசி ட்ராப்.அங்க ரோடு சரியில்ல..ஆமா..எதுக்கு செல் அட்ச. இன்னா அவுசரம்?

“உன்னோட தங்கச்சிக்கு வேல கிடச்சிடுத்து” வேணு தாமுவின் கையை குலுக்கினான்.

“அந்த ஜிராக்ஸ் கட்லதானே?”

“இல்லடா....BPOல.நா ஓட்டற BPOல சொல்லி வச்சுருந்தேன்.கிளிக் ஆயிடிச்சு”

”அதுக்கா!” ஆச்சரியத்தில் வாய் பிளந்தான்.” இங்கிலீஸ் வராதே.அதுக்கு எப்படி?”

”கொட்டிகிறத்துக்கு ஒண்டிதான் வீடு உனுக்கு.  ஒரு புண்ணாக்கும் தெரியாது.தங்கச்சி சூப்பர் பிரெயினு. மாசம் ரூவா8000 சம்பளம்.ஆனா”

”எட்டாயிரமா...? சரி.....ஆனான்னா?”

“முதல் ஒரு வருசம் நைட்ஷிப்டுதான்.நைட் 12.30 மணி ஆகும்.  வீடு டொக்ல இருக்கறதலா அநேகமா கடைசி ட்ராப்பாத்தான் இருக்கும். ” வேணு சர்ர்ரென்று கிளம்பினான்.

ஒன்றும் பேசாமல் தாமு ஒரு மிடக்குத் தண்ணீர் குடித்தான்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பறந்து போய், ஸ்டெல்லா வீட்டின் முன் நிறுத்தி, “...சிஸ்டர்....வீடு வந்திடிச்சி..எறங்குமா” என்றான்.

                                                                முற்றும்

24 comments:

  1. நான்தான் முதல்ல..

    கதை நன்றாக இருந்தது..

    ReplyDelete
  2. அது என்னமோ தெரியல முடிவு தெரியாத கதைய படிச்சா மண்டைக்குள்ள குடஞ்சுட்டே இருக்குது..

    நல்லவேள நீங்க சீக்கிரம் குடச்சலா நிறுத்திட்டிங்க..

    ReplyDelete
  3. அதிஷா சொன்னது போல "நீங்களும் தங்கை வைத்துதான் முடிவை பின்னியிருக்கின்றீர்"சரிதானே...!சோ. அதிசாவுக்கு ஒரு வகையில் வெற்றிதானே ரவி...(அதுதான் என்னோட நினைப்பு..)

    இது என்னாட முடிவு 1:

    அவன் நண்பன் வாட்ச்மேனாக இருக்கும் பூட்டியவீட்டைத்(ஓனர் அமெரிக்கா போய் விட்டார்) தேடியபடி மெதுவாக ஓட்டினான். சே!முன்னதாக அவனுக்குச் சொல்லியிருக்கலாம். அப்போது அந்த ஏரியா ரோந்து பணியில் இருக்கும்
    போலீஸார் அவனைத் திருடன் என நினைத்துப் பிடிக்க, அங்கே காரில் இருந்து ஸ்டெல்லா இறங்கி வருகிறாள்..

    போலீஸ் சந்தேகத்தோடு பார்க்க, "இந்தாம்மா இவன் உனக்கு என்னா வேணும்?" எனக் கேட்க, "அண்ணன் மாதிரி ஸார்"
    என சொல்கிறாள். தாமுவின் மனம் வெடித்துச் சிதறுகிறது.....

    இது என்னாட முடிவு 2:


    அவன் நண்பன் வாட்ச்மேனாக இருக்கும் பூட்டியவீட்டைத்(ஓனர் அமெரிக்கா போய் விட்டார்) தேடியபடி மெதுவாக ஓட்டினான். சே!முன்னதாக அவனுக்குச் சொல்லியிருக்கலாம் என்று புலம்பியபடி, நண்பனை எதிர் நோக்கி மேட்டரைச் சொல்ல,"டே! ஒரு பொண்ணோட வாழ்க்கையக் கெடுக்கத் துணை போற அளவுக்கு நான் கெட்டவன் இல்லை..இதற்கு நான் அனுமதிக்கவே மாட்டேன் எனக் கூறி வாட்ச்மேனான நண்பனோட வாக்குவாதம் முத்தி கடைசியில் தாமுவின் கையில் இருந்த கத்தியப்பிடுங்கி அவனையே குத்திக் கொல்கிறான்.."

    இதைக் காரின் பின்னால் இருந்து பார்த்து விட்ட ஸ்டெல்லா பக்கம் திரும்பி, " நான் பாத்துக்குறேன்மா, நீ பயப்படாம‌
    போம்மா"என்கிறான் தாமுவின் நண்பனான‌ வாட்ச்மேன்.

    இது என்னாட முடிவு 3:

    மேற்சொன்ன இரண்டாவது முடிவில் கொலையை ஸ்டெல்லா செய்வதைப் போலவும், பழியை வாட்ச்மேன் ஏற்பது போல முடித்து, வாட்ச்மேனுக்கு ஒரு பிளாஸ்பேக் வைக்கலாம்.


    எப்படி நம்ம முடிவு (கள்).

    ReplyDelete
  4. நல்ல முடிவு. ஒரு வழியா மனகுழப்பம் தீர்ந்தது.

    ReplyDelete
  5. பட்டிக்காட்டான்,

    கருத்துக்கு நன்றி!

    //அது என்னமோ தெரியல முடிவு தெரியாத கதைய படிச்சா மண்டைக்குள்ள குடஞ்சுட்டே இருக்குது//

    ஒண்ணு தெரியுமா. உங்களுக்காகத்தான் அவசரமா ஓடி வந்து முடிவைப் பதிவிட்டேன்.

    ReplyDelete
  6. வாங்க டக்ளஸ்.கருத்துக்கு நன்றி!

    முடிவு வரத்துக்கு முன்னே படிச்சிருக்கீங்க.ஒரு பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்தக் கூடாதா?

    நிறைய பேர் படிக்கிறாங்க ஆனா பின்னூட்டம் போட மாட்டேறாங்க.

    ஏன்?

    அது ஆண்டவனுக்குதான் தெரியும்.

    ReplyDelete
  7. டக்ளஸ்,

    ”முடிவு முன்னாபாய்”ன்னு பட்டம் குடுக்கலாம்னு பாக்கிறேன்.

    //அதிசாவுக்கு ஒரு வகையில் வெற்றிதானே ரவி//
    ரிமோட் கேரக்டரை வளையத்திற்க்குள்
    கொண்டு வந்து நிறுத்தியதற்க்கு.

    //என்னாட முடிவு 1://
    Guess பண்ணிவிடுவார்கள் என்று வைக்கவில்லை.
    //என்னாட முடிவு 2://
    தாமு அவனை வலிய தேடிப் போறான்னா அவன்..
    எப்படிப்பட்டவன்........?

    போலீஸ் ரத்தம் வரக் கூடாதுன்னு முடிவு பண்ணினேன்.

    நன்றி டக்ளஸ்

    ReplyDelete
  8. விஷ்ணு,

    கருத்துக்கு நன்றி!

    முடிவு வரத்துக்கு முன்னே படிச்சிருக்கீங்க.ஒரு பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்தக் கூடாதா?

    நன்றி.

    ReplyDelete
  9. நான் சொன்னது கரெக்ட்தான். நான் ஹிண்ட் ஆ சொன்னேன். அத நீங்க டெவலப் பண்ணிருக்கீங்க...

    ReplyDelete
  10. ///நிறைய பேர் படிக்கிறாங்க ஆனா பின்னூட்டம் போட மாட்டேறாங்க.///


    நான் படிக்கவில்லை... படிச்சா பின்னூட்டம் நிச்சயம் போடுவேன்!!

    ReplyDelete
  11. செல்லை slient modeல் வைத்தான்.

    இப்படி ஒரு mode இருக்கா என்ன???

    குதர்க்கமாக
    ஆதவா!!
    -------------------------
    //சிஸ்டர்..///

    இப்படி யோசிப்பதாக இருந்தால் பலவிஷயங்களளப் பற்றி யோசிக்கலாம்

    மகுடேசுவரனின் ஒரு கவிதையில் கற்பழிக்கப்பட்டவள் கற்பழித்தவனைப் பார்த்து, உன் தங்கையைப் போல இருந்ததா ? என்பாள்.. அது ஏளனம், அவமானம் அல்லது ஏதாவது ஒன்றின் உச்சம்.

    யாரும் குடும்பத்தை நினைப்பதில்லை எனவும் சொல்லிக் கொள்ளவேண்டியதுதான்.!!

    நல்லா இருக்குங்க கதை!! நைட் ... த்ரில்... பெண்.... விலகிய ஆடை... கற்பழிப்பு எண்ணம்.... என்ன என்ன என்று மனதுக்குள் திக் திக்... நல்ல முடிவு!!!

    ReplyDelete
  12. ஆதவா,
    //நான் படிக்கவில்லை... படிச்சா பின்னூட்டம் நிச்சயம் போடுவேன்//

    தெரியும் ஆதவா! நன்றி.

    ReplyDelete
  13. ஆதவா,

    //இப்படி ஒரு mode இருக்கா என்ன//
    இருக்கு சார்.

    //நல்லா இருக்குங்க கதை!//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. தமிழ்ப்பறவை said...

    //நான் சொன்னது கரெக்ட்தான். நான் ஹிண்ட் ஆ சொன்னேன். அத நீங்க டெவலப் பண்ணிருக்கீங்க//

    நல்ல கதையா இருக்கே?நீங்க அதிஷாவின் பி.ஊட்த்தில் inspire ஆகியிருக்கலாம்.

    நான்க்தை எழுதும் போதே
    முடிவையும் எழுதிஆச்சு.

    நான் வைத்த frame workஎன்ன?

    ரத்தம்,போலீஸ்,சண்டை கிடையாது.
    நல்ல முடிவு.ஸ்டெல்லா BPOவில் ஆரம்பித்த தூக்கம் வீடு வந்து எழும் வரை ஒன்றும் தெரியக் கூடாது.
    இதுதான்.

    ReplyDelete
  15. நல்லா சொல்லி இருக்கீங்க.
    நல்லவேளை நான் முடிவ சொன்னப்புறம் படிச்சேன்.

    ReplyDelete
  16. எனக்காக கதையை முன்னாடியே முடிச்சதுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  17. தீப்பெட்டி வாங்க. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  18. பட்டிக்காட்டான்.

    நன்றி.

    ReplyDelete
  19. நல்ல முடிவு.

    உங்கள் பதிவுகலைப் படிக்கிறார்கள் என்றாவது உங்கலுக்கு தெரிந்து இருக்கிறது. என் விசயத்தில் அதுகூட இல்லை

    ReplyDelete
  20. கருத்துக்கி நன்றி சுகுமார்.

    ReplyDelete
  21. கதை சூப்பர்... வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  22. என் அழைப்பை மதித்து வருகை தந்ததற்க்கு நன்றி குகன்.

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  23. வண்டிப் போய் கொண்டு இருந்தது. பதட்டத்தில் இருந்த தாமு, ஸ்டெல்லா எழுந்ததை கவனிக்கவில்லை. வண்டியை பூட்டிய வீட்டுக்கு அருகில் செல்லும் பொழுது, "தாமு" என்று
    ஸ்டெல்லா அழகாய் கூப்பிடுவதுக் கேட்டு அதிர்ச்சியுடன் வண்டியை நிறுத்தினான்.

    "தாமு, உங்களுடன் பேச வேண்டும்" என்றாள் ஸ்டெல்லா.

    எச்சிலை கூட்டி விழுங்கியவன், " சொ.. சொல்லுங்க மேடம்" என்றான்.

    "தாமு, உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்களும் என்னை விரும்புறீங்கன்னு நினைக்கிறேன்.
    நா ரொம்ப சாதாரண குடும்பம் தான். எனக்கு அம்மா மட்டும்தான். உங்க குடும்பம்?"

    தாமு மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டான். சே என்ன காரியம் செய்ய இருந்தேன்.
    லட்டு மாதிரி பொண்ணு, கை நிறைய சம்பளம், லைப்ல செட்டில் ஆயிடலாம் என்ற நினைப்பே
    இனித்தது.

    வண்டியை மெயின் ரோடு பக்கமாய் திருப்பியவாறு, தன்னை பற்றி, தன் குடும்பத்தைப் பற்றி எதிர்கால கனவு என்று பேசிக் கொண்டு இருந்தான் தாமு.

    வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தியதும். ஸ்டெல்லா கேட்டை திறந்து உள்ளே நுழைவதற்கு
    முன்பு, அவனைப் பார்த்து சிரித்தாள்.

    "பெண்ணோட உடம்பில் எப்போதும் ஒரு ஜாக்கிரதை உணர்வு இருக்கும். பாதை மாறியதுமே உன்னோட எண்ணம் புரிஞ்சிடுச்சு. நான் லவ் பண்ணுகிறேன்னு கதை விட்டதும், நீ ஜொள்ளு விட்டு, கல்யாணம் வரைக்கும் போயிட்டே. (எஸ் எம் எஸ்ஸில் பிரண்டுக்கு விஷயத்தை
    சொல்லி போலீஸ்ஸை கூப்பிடலாம் என்றால் கே.ரவிசங்கர் கூடாதுன்னுட்டார்).

    போலீஸ் கேசுன்னு உன் லைப்பை கெடுக்க விரும்பலை. ஒழுங்கா உருப்பட பாரு. இப்ப நாம
    பேசியதை எல்லாம் இந்த செல்போன்ல ரெகார்ட் செஞ்யிருக்கேன். திரும்ப வம்புக்கு வந்தா நாறிடுவே! ஜாக்கிரதை" என்று சொல்லிவிட்டு, திரும்பியும் பார்க்காமல் உள்ளே சென்றாள்
    ஸ்டெல்லா.

    ReplyDelete
  24. ramachandranusha(உஷா),

    முதல் வருகைக்கு நன்றி.மேடம் கதையப் பத்தி கருத்துச் சொல்லலயே?
    எப்படி இருக்கு?

    உங்க கை துறு துறுத்து.. சும்மா மடை திறந்த வெள்ளம் போல ஒரு flow.விசிறி காம்பால் தாமுவை பின்னி விட்டீர்கள் எழுத்தாளராச்சே.
    எவ்வளவு கத விட்ருக்குகோம்?எனக்குத் தெரியாதா?

    நல்லா இருக்கு இந்த ”கல்கி”முடிவு.
    சும்மா ஜோக் மேடம்.தவறா நினைக்க வேண்டாம்.ஏன்னா நாமெல்லாம் எல்லா பத்திரிக்கையின் சைக்காலஜி தெரிந்தவர்கள்.

    கல்கிக்கு எழுதும்போதெல்லாம் கடைசியில்””அவன் கடைசியில் பாடம் கற்றுக் கொண்டான்”என்ற ரீதியில் முடிப்போம்.உற்றுப் பார்த்தால் கற்பனை சிறகுகள் ஒடிக்கப்பட்டு உதிர்ந்து கிடக்கும்.

    நர்சிம் சொன்ன “ அந்த நீச்சல் உடை நடிகை எதிரில் வந்தாள்” நான் எதிர்பார்க்கத ஒன்று.


    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!