Tuesday, December 29, 2009

ஹைடி(Heidi) கார்டூன்...ஹைய்யோடி!





பல லட்சம் குழந்தைகள் மற்றும் பெரிய குழந்தைகளால்(!) பல தேச டீவிகளில்/சினிமாக்களில் பல வருடங்களாக ரசிக்கப்பட்டு வரும் ஒரு கார்டூன் ஹைடி(Heidi).நம்மூரிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் ரசிக்கப்படுவதுண்டு.இது சுவிஸ் நாட்டு பெண் எழுதிய கதைதான்.







இதில் குட்டியாக வரும் ஐந்து வயது சுட்டிப் பெண் பெயர்தான் ஹைடி(Heidi).Adelheid என்கிற Heidi.இவள் ஒரு அனாதை.இவள் தாத்தாதான் வளர்க்கிறார்.இவர் மிகவும் கண்டிப்பானவர்.இவள் வசிக்கும் இடம் ஸ்விட்ச்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் பனி படர்ந்தமலைஅருகில்.இவளுக்குஒருஆட்டுக்குட்டி,நாய்,பறவை,பீட்டர் என்கிற ஆட்டிடையன் நண்பர்கள்.

இவளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி வேறு உண்டு. அடுத்து இவள் பெரிய ரவுடி போல் விசில் அடிப்பாள்.

ஒரு எபிசோடில் ஹைடி-கிளாரவின் ஆழமான நட்பின் பொருட்டு அங்கு நடக்கும் குழந்தைத்தனமான உரையாடல்கள் நன்றாக இருக்கும்.அவள் நகரத்தில் உள்ள கிளாராவின் வீட்டிற்குப்போய நிறைய விஷமம் செய்து ஹைடி கிளாராவைக் கெடுக்கிறாள் என்பதாக அங்குள்ள சர்வண்ட் லேடியால் அடிக்கடி திட்டு வாங்குவாள்.


நிறைய எழுதலாம் ஆனால் பெரிய பதிவாகிவிடும்.இவள் சாயலில் உள்ளவள்தான் அமுல் பட்டரில் வரும் ஒரு குட்டிப்பெண்.


இதில் என்னைக் கவர்வது: 

இசை.  சொப்பு வாய் திறந்து பேசும் பேச்சு. கண்களில் தெரியும் மிரட்சி.கண்களில் பிரமிப்பு மின்ன வாய்பிளந்து ஆடும் உஞ்சல்.ஆட்டுக்குட்டி பின் தொடர்ந்தபடி நடக்கும் சுட்டி நடை. மேகத்தில் பறப்பது. ஒரு சிரிப்பு.அழுவது மற்றும் பயப்படுவது.


டோரா போல் எளிய தமிழ் இல்லாமல் எழுத்துத் தமிழில் பேசுவது நெருடல்.”அவளுக்கு ரொம்ப மனத் தாங்கல்” “ உடைகளை சீர் செய்து கொண்டு வா” “”ஆபத்து நீங்கி விட்டது “.



முகத்தில் குறுகுறுவென்று புன்னகையுடன் இதை ரொம்ப ரசிப்பதுண்டு.



இங்கு சென்று ஹைடியின் அராபிக் வெர்ஷன் பாருங்கள்:. சூப்பர்.

ஹைடி-அராபிக்



  

6 comments:

  1. நான் இப்போதுதான் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. நன்றி ஸ்ரீ.

    ஸ்ரீ இங்குச் சென்று ஹைடியின் அராபிக் வெர்ஷன் பாருங்கள்.

    ReplyDelete
  3. தமிழ்ப்பறவை said...
    :-)

    தமிழ்ப்பறவை இங்குச் சென்று ஹைடியின் அராபிக் வெர்ஷன் பாருங்கள்.

    ReplyDelete
  4. எனக்கும் ரொம்ப புடிச்ச கார்ட்டூன் இது..

    அராபிக் வெர்ஷன் link work ஆகல...

    அதே மாதிரி nile இளவரசி கார்ட்டூன் கூட நல்லாயிருக்கும்...

    ReplyDelete
  5. December 29, 2009 8:16 PM
    ஸ்வர்ணரேக்கா said...

    //எனக்கும் ரொம்ப புடிச்ச கார்ட்டூன் இது..//
    // அராபிக் வெர்ஷன் link work ஆகல...//

    யூ டூப் போய் Heidi arabic போடுங்கள் வரும்.

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!