Saturday, December 12, 2009

இளையராஜாவின் தவம்-காற்றில் எந்தன்

This song is meditation of Maestro Ilayaraja என்று சொல்லலாம்.  ஜானி திரைப்படத்தில் “காற்றில் எந்தன் கீதம் காணாத”.ரிலீஸ் வருடம் 15-08-1980.பாடியவர் எஸ்.ஜானகி இந்தப் பாட்டை எழுதியவர் கங்கை அமரன்.டைரக்‌ஷன் மகேந்திரன்.இது ஒரு romantic crime thriller.


கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின்(தியாகராஜார்,முத்துசாமி தீட்சிதர்,சியாமா சாஸ்திரி) கீர்த்தனைகள்(பாட்டுக்கள்) என்பது  மாதிரி  ராஜாவின் இசையின் உச்சக்கட்ட கீர்த்தனை.மேற்கத்திய இநதிய இசைக்கலநத ஒரு இசைமேஜிக்.தனக்காகப் போட்டுக்
கொண்டதோ?


உலகம் அடங்கிப்போய் நடுநிசியில் இதைக் கேட்டுப்பாருங்கள்.முதலில் வரும் இசைத் தீற்றல்கள் சிலிர்க்க வைக்கும்.கேட்கும் போது நாமும் தியானத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு.பாட்டில் ஒரு அமைதி/ஏக்கம் கவ்விக்கொண்டிருக்கும்.

படையப்பா படத்தில் ரம்யா ரஜனியின் கல்யாண கேசட்டை பைத்தியம் பிடித்தாற் போல் தனியாக ரூமில் போட்டு போட்டு பார்ப்பது போல் நான் இந்தப்பாட்டை பல ஆயிரம் முறைக் கேட்டிருக்கிறேன் இந்த 29 வருடத்தில்.ஆனால் ஒரு ரசனையோடு but ஒரு இடைவெளி விட்டு விட்டுத்தான்.

எனக்குத் தெரிந்து இந்த பிரபஞ்சத்தில் இது மாதிரி பிரமிக்கத்தக்க orchestration பாட்டின்Prelude,First and Second interludeல் போட்டது கிடையாது.It is awesome,stunning and soul stirring.It is highly magical also.சரஸ்வதி கடாட்சம்.பாட்டின் உணர்ச்சிகளை உள் வாங்கிய பின்னணி இசைக்கோர்ப்புகள்.

பாமர ரசனை,பண்டித ரசனை,சும்மா ரசனை,சாதா ரசனை எல்லாவற்றிற்கும் ஒத்துப்போகும் பாட்டு.அறிவு பூர்வமாகவும் சரி உணர்வு பூர்வமாகவும் சரி இது ஒரு soul stirring song தான். பண்டித ரசனையை தவிர மற்ற  ரசனைக்காரர்கள் சற்று உன்னிப்பாக கவனித்தால் மேஸ்ட்ரோவின் மெடிடேஷன் புரியும்.


இந்த பாட்டு கீரவாணி என்ற ராகத்தில் (கேள்வி ஞானம்தான்)
போடப்பட்டிருக்கிறதாம்..இதன் கிழ் ஸ்தாயிகள்(minor melody?) மேற்கத்திய இசைஒத்துப்போகும் என்று சொல்கிறார்கள்.ரொம்ப ஆழமான ராகம்.தன்னத்தானே நொந்துக்கொள்ளும் உணர்வு(பாவத்தில்) இந்த ராகத்தில் வெளிப்படுமாம.மேல் விவரம் விக்கிப்பீடியாவில்,

இந்த நொந்துக்கொள்ளும் ராகத்தில்தான் “கீரவாணி” என்ற பாட்டைப் போட்டிருக்கிறார் மேஸ்ட்ரோ. படம்: பாடும் பறவைகள். இதில் வயலினில் சிலம்பாட்டம் ஆடுவார் மேஸ்ட்ரோ.இன்னும் நிறைய பாட்டுக்கள் உள்ளன.இது கல்யாணிக்குப் பிறகு ராஜாவின் குதூகலம்(delight) என்று சொல்லலாம்.

காட்சி: சற்று லாஜிக் உதைத்தாலும் சினிமாவாச்சே பொறுத்துக்
கொள்ளலாம்..பிரபல பாடகியின் இசைகச்சேரிக்கு ஒரு கிரிமினல் குற்றவாளி(இவன் இவளின் ரசிகன் கம் காதலன்)எப்படியும் வருவான் என்று போலீஸ் பிடிக்கக் காத்திருக்கிறது.மழை கொட்டோ கொட்டன கொட்டுகிறது. ஆனாலும் அவன் கட்டாயம் வருவான் என்று இவள் பாடுகிறாள். ஒரு பக்கம் வரக்கூடாது இன்னோருப் பக்கம் வர வேண்டும் என்ற மன நிலை.வேறு யாரும் இல்லை கூட்டத்தில்.இவன் ஒருத்தனுக்காகப் பாட்டு பாடுகிறாள்.

கங்கைஅமரன்,மகேந்திரன்,அசோக்குமார் எல்லோருமே பாட்டிற்கு உணர்வு சேர்த்திருக்கிறார்கள்.இதில் துணை நடிகையாக வரும் பிரேமியும் கவிதைதான்.ஜானகி 31 அடி பாய்ந்தால் ஸ்ரீதேவி 32.5அடி பாய்ந்து இருக்கிறார் தன் முகபாவங்களில்.

Master Blaster  மேஸ்ட்ரோவிற்கு செம்ம....செம்ம...  team work.

இனி தியானம்.........!

தியானம்: 4.24 நிமிடங்கள்.இந்த 4.24 நிமிடங்களில் வேறு ஒரு கிரகத்திற்கு கொண்டுபோவார்.

சின்னச் சின்ன கம்பி ஊசி மழைத் தூறலாக (புது இசைக்கருவிஅல்லது கிடார்?) இசைத் தீற்றல்கள் leadல் ஆரம்பிக்க 0.05 ல் ஜானகி ஒரு கிடார் “திடுக்”கில் உள்ளே வந்து  மனதை வருடும் கீரவாணி ஹம்மிங்கை ஆரம்பித்து 0.27ல் மேல் சுருதிக்குப் போய்  0.32 ல் “காற்றில் எந்தன் கீதம் ” என்று பல்லவி ஆரம்பித்து பிறகு நிறுத்தி “காணாத ஒன்றைத் தேடுதே” என்று ஆரம்பிக்க 0.41ல் தபலாவின் தாளக் கட்டுகள் தாலாட்ட ,0.43ல் மீண்டும் ஒரு “காற்றில்”இறகு பறப்பது போல் ஒரு மெல்லிய உச்சரிப்பு.  பின்னணியில் கம்பி ஊசி மழைத் தீற்றலகள்  ஜோடியாக 1.12 வரை ஏகாந்தமான heavenly ecstasy!

1.12ல் மீண்டும் அந்த கம்பி ஊசி மழைத் தீற்றலகள் லீடுக்கு வர கருமேகங்கள் சுழ்வது போல் இடையில் ஒரு புல்லாங்குழல். இதைத்தொடர்வது மிதமான இசை.1.37  to 1.45l மயில் தோகை விரிப்பதுப் போல் வித விதமான வர்ண இசைக்கோர்ப்புகள்.  1.46ல் முதல் 1.57 வரைஅலை அலையான அமானுஷ்யமான வயிலின் ஓலங்கள் முடிய ஜானகியின் ஏக்க தொனியோடு கங்கை அமரனின் அற்புதமான வரிகளில் முதல் சரணம்.இசையின் உச்சம்.

 2.38 முதல் 3.08 வரை தியானத்தின் அடுத்த கட்டம்.2.47 to 3.16 வரை இசை தேவதைகளின்,ரீங்காரங்கள், புன்னகைகள்,பாலே நடனங்கள்,தியானங்கள் (அதுவும் 2.47 to 2.58  பிறகு 3.01 to 3.07 ராஜாவின் அசாத்திய மேதமை..stunning) etc., etc., முடிய மீண்டும் ஜானகி தன் மதுரமான குரலில் இரண்டாவது சரணம்.
 
 பின்னணி இசை (அதுவும் 2.47 to 2.58  பிறகு 3.01 to 3.07 )ஒரு மெலடியிலிருந்து இன்னோரு மெலடிக்கு ஸ்கேட்டிங் போல்  வழக்கிக்கொண்டு போகிறது. இந்த transition  பிரமிக்க வைக்கிறது.

இதில் பங்குகொண்ட எல்லா இசைக்கலைஞர்களுக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்கள்.வருடம் 29 ஆனாலும் இன்னும் இந்த பாட்டு freshஆக இருக்கிறது.ஒபேரா,சிம்போனி என்றால் மேலை நாட்டில் எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டுவார்கள்.

 இசை இருக்கும் வரை இந்தப் பாடல் இருக்கும்.
 பாடல் கேட்க:



Link: காற்றில் எந்தன் கீதம்

40 comments:

  1. இந்த‌ பாட்டில் இவ்வ‌ள‌வு விச‌ய‌ங்க‌ளா
    ந‌ல்ல‌ எழுத்து.

    ReplyDelete
  2. //இந்த‌ பாட்டில் இவ்வ‌ள‌வு விச‌ய‌ங்க‌ளா
    ந‌ல்ல‌ எழுத்து.//

    வருகைக்கு நன்றி.இது மட்டும் இல்ல கரிசல்காரன் இளையாராஜா எல்லாப் பாட்டிலும் விஷயம் இருக்கு. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  3. தங்கள் கருத்து நன்றாக உள்ளது 

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி. பாலாஜி நான்
    உணர்ந்தார்போல் நீங்கள் உணர்ந்தீர்களா? சொல்லுங்களேன்.

    ReplyDelete
  5. நல்ல பாட்டுதான்.அந்த படத்தின் எல்லா பாடல்களும் எனக்குப் பிடித்தவை.

    ReplyDelete
  6. ஆமாம ஸ்ரீ.ஆனால் இந்தப் பாட்டு உச்சம்.

    ReplyDelete
  7. ராஜாவின் மகுடத்தில் மின்னும் மரகதங்களில் இந்தப் பாடலும் ஒன்று. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். அதிலும் எஸ்.ஜானகியின் ஆரம்ப ஹம்மிங் கை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

    ராஜா என்றைக்கும் ராஜா தான்

    ReplyDelete
  8. இசைஞானியை நாம் மறந்து விட்டோம். அதனால் இசைஞானிக்கு எந்த இழப்பும் இல்லை. உங்களை போன்ற, என்னை போன்ற பித்தர்களுக்கு தான் ஈடு செய்ய முடியாத இழப்பு..

    ReplyDelete
  9. nalla paadal ... உங்களிடம் jaya tv யில் ஒளிபரப்பான இளையராஜா live in concert cd கிடைக்குமா ....

    ReplyDelete
  10. same song sung by Asha Bosley
    Movie: Aur Piyar Kahani
    Song: Naina
    Music: Mastro
    Dirctor: Balu Mahendra
    Cast: Heera & Ramesh Aravind

    ReplyDelete
  11. அணு அணுவாக ரசித்திருக்கிறீர்கள்.. தகுந்த பாடல்தான்.!

    ReplyDelete
  12. தல யப்பா...எம்புட்டு விஷயம்...கலக்கிட்ங்க ;))

    ReplyDelete
  13. நல்லாயிருக்கு! இந்தப் பாடல்ல ஜானகியோட அந்த குழந்தைத்தனம் இல்லாத மாதிரி எனக்குத் தோன்றும். அதனாலேயே ரொம்பப் பிடிக்கும்.

    ReplyDelete
  14. இப்படி எல்லாம் இளையராஜாவை ரசிப்பார்களா? சில சமயம் நான் தான் சிறந்த ரசிகன் என்ற எண்ணம் எனக்கு தோன்றுவது உண்டு.
    நீங்கள் ரசனையின் புதியதொரு பரிமாணத்தை காட்டயுளீர்கள்.

    வாழ்க இளையராஜாவின் தொண்டு. அவர் நீடூழி வாழ்க.

    ReplyDelete
  15. மிக அருமையான பாடல்.

    அதை நீங்கள் விவரித்த விதம் அருமை.

    //1.12ல் மீண்டும் அந்த கம்பி ஊசி மழைத் தீற்றலகள் லீடுக்கு வர கருமேகங்கள் சுழ்வது போல் இடையில் ஒரு புல்லாங்குழல். //

    வாவ் !!!

    ReplyDelete
  16. இது ஒரு சூப்பர்ப் பாட்டு. என்னவளே அடி என்னவளே பாட்டுல கூட கீரவாணி ராகம் வரும்னு கேள்விப்பட்டு இருக்கேன்.

    ReplyDelete
  17. வந்தியத்தேவன் said...

    //ராஜாவின் மகுடத்தில் மின்னும் மரகதங்களில் இந்தப் பாடலும் ஒன்று. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். அதிலும் எஸ்.ஜானகியின் ஆரம்ப ஹம்மிங் கை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை//

    உண்மைதான். வேறு ஒரு கிரகத்திற்கு கொண்டுபோகும் இசை.

    நன்றி.

    ReplyDelete
  18. tamiluthayam said...

    //இசைஞானியை நாம் மறந்து விட்டோம்.//

    நண்பரே!யார் மறந்தது?மறக்க முடியுமா?இன்னும் இருக்கிறாரே. நன்றி.

    ReplyDelete
  19. shabi said...

    //nalla paadal ... உங்களிடம் jaya tv யில் ஒளிபரப்பான இளையராஜா live in concert cd கிடைக்குமா//

    வருகைக்கு நன்றி. என்னிடம் இல்லை.யூ டியூப்பில் பார்த்ததோடு சரி.

    ReplyDelete
  20. தலைவரே.... கலக்கல் ரசனை... அருமையான பாட்டு...இப்படில்லாம் ரசிக்க முடியுமா..??

    ராஜா படம் அதை விட அருமை...அந்தப் படத்தைப் பார்க்கையிலேயே எனக்கு வாத்திய ஒலிகள் கேட்கின்றன...
    வாரம் ஒரு முறையாவது பாடல் ரசனை வெளியிடுங்கள்...

    ReplyDelete
  21. Rasu said...

    //same song sung by Asha Bosley//

    கேட்டிருக்கிறேன்.ஒரிஜனல் போல் இல்லை.

    ஆதிமூலகிருஷ்ணன் said...

    //அணு அணுவாக ரசித்திருக்கிறீர்கள்.. தகுந்த பாடல்தான்.//

    நன்றி ஆதி

    கோபிநாத் said...
    // தல யப்பா...எம்புட்டு விஷயம்...கலக்கிட்ங்க ;))

    நன்றி கோபிநாத்.

    புருனோ Bruno said...

    //மிக அருமையான பாடல்//

    நன்றி புருனோ.

    ReplyDelete
  22. தமிழ்ப்பறவை said...

    //தலைவரே.... கலக்கல் ரசனை... அருமையான பாட்டு...இப்படில்லாம் ரசிக்க முடியுமா..??//

    கல்லூரி ஆண்டு விழாவில் ஒரு ரூமில் கேட்டோம் முதன் முதலாக(கேசட்).ஆடிப்போய் திருதிரு
    வென்று விழித்தோம்.ஒண்ணும் புரியவில்லை.அப்போது பாமர ரசனைக்கு மேல் ரெண்டு கிரேடு தள்ளி இருந்தோம்.
    // ராஜா படம் அதை விட அருமை...அந்தப் படத்தைப் பார்க்கையிலேயே எனக்கு வாத்திய ஒலிகள் கேட்கின்றன...//

    இது சூப்பர்.கரெக்ட்.(எனக்கும் பிடித்திருந்தது)

    // வாரம் ஒரு முறையாவது பாடல் ரசனை வெளியிடுங்கள்...//

    கூடிய சீக்கிரம் வயலினில் ரங்கோலி....(yes..! I love that idot...!)அல்லது புல்லாங்குழலின் romance with வயலின்.

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. ஷங்கி said...

    // நல்லாயிருக்கு! இந்தப் பாடல்ல ஜானகியோட அந்த குழந்தைத்தனம் இல்லாத மாதிரி எனக்குத் தோன்றும்//

    ஆமாம் ஜானகி மேல் ஸ்தாயில் போகும் போது சில(பல?) சமயம் குழந்தைத்தனம்அல்லது கீச் வரும். நன்றி.

    Venki said...

    // இப்படி எல்லாம் இளையராஜாவை ரசிப்பார்களா? சில சமயம் நான் தான் சிறந்த ரசிகன் என்ற எண்ணம் எனக்கு தோன்றுவது உண்டு//

    ஆகா! வெங்கி என்ன இப்படிச் சொல்றீங்க.ராஜாவுக்கு
    ஆறு வேளை பூஜை செய்து மணி அடிக்கும் ரசிகர்கள்
    நெட்டில்(உலகத்திலும் உண்டு) உண்டு.

    ஒருத்தரு R&D பண்றாரு.பிரமித்து விடுவீர்கள்.

    பார்க்க:

    geniusraja.blogspot.com

    ReplyDelete
  25. after seeing this raja picture, im having more feelings to write a new post abt this picture oly...
    but busy... now also in office :-(

    nice selection..

    regarding ur new post, titles r so good... agmark ravi muththirai...
    waiting for that...

    ReplyDelete
  26. பின்னூட்டம் போட்ட பதிவர்களே:

    இநத பதிவில் சிவப்பு எழுத்தில் இருப்பது உங்களுடைய பின்னூட்டம் போட்ட பிறகு எழுதப்பட்டது.முதலில் போடும்போது டைப் அடிக்க மறந்தது.

    ReplyDelete
  27. //m having more feelings to write a new post abt this picture oly...//

    அசத்துங்க!காத்திருக்கிறேன்.

    இந்த படம் www.ilayarajaonline.com எடுத்தது.

    நன்றி.

    ReplyDelete
  28. December 13, 2009 1:54 AM
    சின்ன அம்மிணி said...

    //இது ஒரு சூப்பர்ப் பாட்டு. என்னவளே அடி என்னவளே பாட்டுல கூட கீரவாணி ராகம் வரும்னு கேள்விப்பட்டு இருக்கேன்//

    ”என்னவளே” சூப்பர் பாட்டு.”காதலின் சுவை கொண்டு போவதும்” என்று உன்னி மேல் ஸ்தாயில் பாடும் இடம் அருமை.கேதாரம் என்று நினைக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  29. பாடும் பறவைகள் படத்தில் வரும் “கீரவாணி” பாட்டில் ஒரு சூப்பர் (எதில்தான் இல்லை?) விஷயம் செய்திருப்பார் நம்மாள்!

    பல்லவியில் “நினைவிலும்”, “கனவிலும்”, “பாட வா நீ” என்று ஒவ்வொரு வார்தைக்குப் பின்னாலும் கீபோர்டில் நாலு ஸ்வரங்கள் போடுவார்! அதில் கூர்ந்து கவனித்தால் “நினைவிலும்”, “கனவிலும்” வார்த்தைகளுக்குப் பிறகு மூன்றரை ஸ்வரங்கள்தான் இருக்கும்! கிட்டத்தட்ட அரை மாத்திரைக்கு விட்டு வாசிக்கவேண்டியிருக்கும்!

    இதைப் போன்று பல பாடல்களில் தான் யார் என்று நிரூபித்திருக்கிறார் சாமி!

    சாம்பிளுக்கு இதை படியுங்கள்!

    http://therinjukko.blogspot.com/2009/06/blog-post_05.html

    ReplyDelete
  30. ரவிஷா!

    கருத்துக்கு நன்றி. மறப்பதற்கு முன் இதைக் கேட்டு விடுகிறேன்.தெரிந்தால் சொல்லுங்களேன் please!

    “காற்றில் எந்தன்” பாட்டின் preludeல் வரும் instrument என்ன அது?

    கவுண்ட் 2.47 to 2.58 பிறகு 3.01 to 3.07 )ஒரு மெலடியிலிருந்து இன்னோரு மெலடிக்கு ஸ்கேட்டிங்.
    இந்த கவுண்டில் பியானோ,கீ போர்ட் தெரிகிற்து.வேறு ஏதாவது?

    //பல்லவியில் “நினைவிலும்”, “கனவிலும்”, “பாட வா நீ” என்று ஒவ்வொரு வார்தைக்குப் பின்னாலும் கீபோர்டில் நாலு ஸ்வரங்கள் போடுவார்! //

    Drill down analysis சூப்பர் தல.இது மாதிரி (நம்மள மாதிரி ஆட்கள்) நெட்ல ஆயிரக்கணக்கல இருக்காங்க.எப்படி ராஜா எல்லாவற்றிருக்கும் நோட்ஸ் எழுதறாரு?

    எனக்குப் பிடித்தது என்னென்ன இவ்வளவு சித்து வேலைகள் செய்தும் அசட்டுத்தனம் இல்லாமல்
    இசையில் இனிமையும், சித்துவேலையையும் மெயின் மெலடியையும் ஒரு சேர மெயிண்டெய்ன் செய்கிறார். கிங் ஆஃப் கண்ட்ரோல்.
    சரஸ்வதி கடாட்சம் தல!


    உங்க வலையிலும் கமெண்ட் போட்டுருக்கேன்.

    ReplyDelete
  31. Prelude-இல் வரும் வாத்தியம், கிடாருடன் banjo! நீங்கள் குறிப்பிடும் interval-இல் வரும் வாத்தியங்கள், எனக்குத் தெரிந்து: guitar, synthesized violin, tabla,and santoor

    ReplyDelete
  32. ரொம்ப நன்றி ரவிஷா.இதை “நிலா அது வானத்துமேல” பாட்டில் கூட யூஸ் பண்ணியிருக்கிறார்
    என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  33. இந்தப் பாடலை நானும் பலமுறைகள் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்வது போல தவம்தான் செய்திருக்கிறார். காலங்கள் கடந்தும் அதில் நம்மையும் ஆழ்த்துகிறார். "இளையராஜாவின் இசையில் எங்கு தொட்டாலும் ஒரு பிரம்மாண்டம் ஒளிந்திருக்கும்" என்று சுஜாதா சொல்லியதாக ஞாபகம்.

    /-- ஒபேரா,சிம்போனி என்றால் மேலை நாட்டில் எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டுவார்கள். --/
    மேலை நாட்டு இசையை அப்படியே காப்பி அடித்து ஒப்பேத்தும் சிலரைத்தான் இப்போ இருக்கவங்க எழுந்து நின்னு பாராட்டுறாங்க.

    நல்லா எழுதி இருக்கீங்க ரவி...

    ReplyDelete
  34. நன்றி கிருஷ்ண பிரபு. அடுத்து “காதல் கவிதைகள் எழுதிடும் நேரம்” பாட்டு பற்றிய ஒரு write up கூடிய விரைவில்.

    ReplyDelete
  35. Dear Sir,

    For atleast, 20 years, I thought (!!!) I am the
    only creature on earth, who goes indepth to the Maestro's rhythms.. Many friends of mine used to tell me, Dei, why are you wasting time?. Nobody on earth will see or worry about these interludes.

    My answer used to be simple, I like it, I will hear it.

    After reading your post, I am very happy, I found 1 more creature on earth, who has similar "Rasanai" like me.. :-)

    I would like to add some more points..
    1) Usually, the music at the song start, between first stanza and second stanza will be different.

    There are many tunes of Raja, 1 such is from
    movie Puthu Paatu - Nethu oruthara oruthara, link is below.

    http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR2959%27

    Speciality of this song - from song start to end, same music.. No changes.

    2) Song start will have 1 music, stanzas will have same music, but between the two stanzas, music will be different.. or slightly different from the first one..

    Sample from movie Bharathan - Punnagaiyal Minsaram

    http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR0418%27

    Speciality of this song - whenever jigu jigu jamjam line comes, the drums will be the same.

    3) Entire song, same music -
    Movie Paatukku Naan Adimai, train sound, salt paper rubbing effect..

    http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR2603%27

    Way back 90's, I used to go to dabba theaters in Ayanavaram / Purasawalkam, to see these movies.. Puthu Pattu, Bharathan, Paatukku Naan Adimai - I have enjoyed in theaters, with myself humming the music.. I still remember, my neighbour seat guys used to see me, look this guy, extreme crazyness.. Already movie is eating head, this stupid fellow is also creating nonsense :-)

    Raja Raja than.. Unmatched, Unbeatable..
    Sadly, oflate he does not provide these kind of music.. But the current generation does not hear melody, it's more going towards kuthu songs..

    Sudharsan

    ReplyDelete
  36. Very good article about an immortal song!

    ReplyDelete
  37. மிஸ்டர் சுதர்ஸன் வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.உங்களின் excitement தெரிகிறது.

    //After reading your post, I am very happy, I found 1 more creature on earth, who has similar "Rasanai" like me.. :-)//

    Oh..God!not only you and me. There are tons of tons "souls" in this world mad after Maestro.I am little கடுகு.There is one guy running music lab to research Isaijnani songs.

    நீங்கள் குறிப்பிடும் பாட்டெல்லாம் கேட்டிருக்கிறேன்.

    இதை கேளுங்கள்:

    படம்:(மலையாளம்) kochu kochu santhoshangal
    2001. இதில் வரும் தபலா அண்ட் டிரம்ஸ் எத்தனை விதமான permutation & combinationல் போட்டிருக்கிறார்.பாட்டின் க்ளைமாக்ஸ் தாளம் stunning.பாட்டின் பெயர்:Ghana Shyama


    கேட்க:http://www.musicplug.in/songs.php?movieid=1308&langid=15&movietypeid=

    ReplyDelete
  38. நன்றி சந்திரமோகன்.

    ReplyDelete
  39. Hi Ravi,

    I have read your articles and never had the guts to post a comment. I simply love Raja and regretted not being able to understand his music but only to enjoy.

    I heard the begining of this song during college days and walked like a zombie for a day until I got a chance to listen to the whole song the next day. Having no money I could not see the film until after 3 years of it's release.

    My room mate at the hostel could whistle the whole song and whenever he did we both had tears at the end.(everytime).

    He used to say " Intha pattu manasa ennovao pannuthillai"?. I always nodded my head because I had no words.

    I thank you sincerely for explaining the greatness of Raja.

    Regards,

    Ram

    ReplyDelete
  40. Thanks Ram.I have added audio player to play the song.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!