Wednesday, January 28, 2009

இரண்டு வார்த்தை கதைகள் - சுஜாதா - நான்

சுஜாதா எப்பவோ இரண்டு வார்த்தைகளில் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.

சுஜாதா கொடுத்த உதாரணக் கதைகள் கிழே:-
1)
தலைப்பு:  ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?

கதை:  முதலிரவில் கேள்வி

2)
தலைப்பு:   சுவரில் ஆணியடிப்பவன் கேட்ட கடைசிக் கேள்வி

கதை:   கன்சீல்ட் ஒயரிங்க்ப்பா

3)

தலைப்பு:   விடுமுறைக்கு ஊருக்கு வந்த கார்கில் வீரனும் அவன் நண்பர்களும்

கதை:   ரம் கொண்டாந்திருக்கியா?

4)


தலைப்பு:   ஆராய்ச்சிச் சாலையில் இருந்து ரோபோ வெளியே வந்தது.

கதை:  விஞ்ஞானி க்ளோஸ்


      நான் எழுதிய இரண்டு வார்த்தை கதைகள்

1)

தலைப்பு:   இன்று ரயிலில் டெல்லியை நோக்கி குடும்பத்தோடு உல்லாசப் பயணத்தில்  டிக்கெட்டை எடுத்துப் பார்க்கிறேன்.

கதை:          நாளைய  டிக்கெட்

2)


தலைப்பு: 

மூன்று மணி நேரம் புத்தக கண்காட்சியை சுற்றிப் பார்த்து விட்டு எதுவும் வாங்கவில்லை

கதை:       பால்கோவா  சூப்பர்

3)
 
தலைப்பு: 

இந்த பத்துப் பேரின் ஜனவரி மாத  Housing Loan EMI  அக்கெள்வுண்டில் பாஸ் ஆகுமா   பேங்க் மனேஜர் கவலை 

கதை:        சத்யம்  ஊழியர்கள்


4)
தலைப்பு: 
மும்பாய்த் தீவிரவாத தாக்குதலில் ஹோட்டல் பாத்ரூமில் 70 மணி நேரம் அடைந்து கிடைந்து வெளியே வந்தவன் சொன்ன முதல் வார்த்தை


கதை: செல் காணவில்லை        


25 comments:

 1. இந்த ஸ்டையிலுக்கு ஏதேனும் பெயர் உண்டா? ஹைக்கூ மாதிரி...?

  3rd and 4th are Good. :))

  ReplyDelete
 2. //நாளைய டிக்கெட்// "நேற்றைய டிக்கெட்" இன்னும் 'பகீர்'னு டாப்பா இருந்திருக்கும்! சுஜாதா அளவுக்கு இல்லைன்னாலும் (;-)) உங்களோடதும் நல்லாத்தான் இருந்தது!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்!

  ReplyDelete
 3. செல் காணலைன்னு தேடினவன் ஒருவேளை தீவிரவாதியா இருந்திருப்பானோ :)

  புதுமையான சிந்தனை

  ReplyDelete
 4. ரவி first and last super. மற்ற இரண்டும் ok. ஓ நீங்க தான் bookfare days ல krishna sweet கடை வாசல்லயே இருந்தவரா..தெரியாம போச்சே :))

  ReplyDelete
 5. நன்றி அம்பி,வெங்கட்,சின்ன அம்மிணி,உமா ஷ்க்தி

  ReplyDelete
 6. நல்லா இருக்குதுங்க..வித்தியாசமான நல்ல முயற்சி.

  ReplyDelete
 7. Wow !! Super dooper :) Enjoyed it !

  ReplyDelete
 8. ரொம்ப நல்ல இருக்கு...

  நானும் சில முயற்சிகள் செய்திருக்கிறேன் பாருங்கள் ..

  தலைப்பு : பஸ் விபத்தில் சிக்குவதற்கு முன் .. கண்டக்டர் , பயணியிடம்

  கதை : டிக்கெட் எடுத்துட்டிங்களா ..

  தலைப்பு : அரசியல்வாதி தன் மகனிடம் ...

  கதை : ஒழுங்கா படிக்கணும் ..

  தலைப்பு : அம்பாள் எல்லாத்தையும் பாத்துக்குவா.. கவலைய விடுங்கோ ...

  கதை : தட்சணை வையுங்கோ ...

  தலைப்பு : பிச்சைகாரனிடம் கடன் வாங்கும் வங்கி ஊழியர் ..

  கதை : வட்டிய குறைச்சுக்கப்பா ....

  ReplyDelete
 9. கே.ஆர்.பி.செந்தில்,
  முதல் வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி. நல்லா இருக்கு சார்!ஆனால் எல்லாம் கேள்வி பதில் டைப்பில் வருகிறது. அது இல்லாமல் (உதாரணம்: என்னுடைய -1,2,3 type) முயற்ச்சிக்கலாம்.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. " இந்த பத்துப் பேரின் ஜனவரி மாத Housing Loan EMI அக்கெள்வுண்டில் பாஸ் ஆகுமா பேங்க் மனேஜர் கவலை கதை: சத்யம் ஊழியர்கள்"

  பிரமாதம் ரவி

  ReplyDelete
 11. நல்லா வந்திருக்கு தலைப்பைபே கதை மாதிரி இருக்கு. சூப்பர்.

  ReplyDelete
 12. நல்லா இருக்கு ரவி.

  ப்ளாக் படித்துவிட்டு லேபர் வார்டில் இருந்து குழந்தையுடன் வரும் மனைவியை பார்த்து கணவன் :

  என்னோட படைப்பு.

  ReplyDelete
 13. சுஜாதா போல தலைப்பையும் மூன்று நான்கு சொற்களுக்குள் வைக்க முயல்வீராக.

  காட்டாக....

  உயர்ந்துவிட்ட இந்தியாவின் இமேஜ்
  ஸ்லம் டாக் மில்லியனர்.

  ReplyDelete
 14. நன்றி,

  கிருஷ்ணன்,மின்னல்,மணிகண்டன்
  (நல்லாஇருக்கு)வாசகன்(நல்லாஇருக்கு)

  ReplyDelete
 15. உலகத்தின் கடைசி மனிதன் உறங்கி கொண்டிருந்தான்...

  கதவு தட்டப்பட்டது..!!

  ReplyDelete
 16. மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும்

  அரசியல்வாதியின் கனவு

  ReplyDelete
 17. தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல்!!

  04-03-2030

  ReplyDelete
 18. வித்தியாசமான நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 19. நன்றி பரமார்த்த குரு வருகைக்கு. “தமிழ் மீனவர்கள்’ எனக்குப் பிடித்தது.

  நன்றி கார்த்திகைப் பாண்டியன் வருகைக்கு.

  ReplyDelete
 20. கல்க்கல். நீங்க சொன்ன சுஜாதா கதைகளை படிச்சுருக்கேன். உங்க கதைகள் நல்லாஇருக்கு.

  ReplyDelete
 21. நன்றி சத்யா!

  ReplyDelete
 22. சுஜாதாவின் ரசிகன் என்பதால் இந்த "பின்"தொடர்வை ரசிக்கமுடிகின்றது....

  ..........தயாஜி வெள்ளைரோஜா..........

  ReplyDelete
 23. உலகத்தின் கடைசி மனிதன் உறங்கி கொண்டிருந்தான்...

  கதவு தட்டப்பட்டது..!!


  இதை ஒரு முறை சுஜாதா சொல்லியுள்ளார்,.... ஒரு மர்மநாவல்;ஆசிரியர் சொல்லியுள்ளார் என.....
  அதன் பிறகு மிக சமீபத்தில் ஆனந்த விகடன் புத்தகத்தில் இதை சொன்னவர் பற்றிய குறிப்பு வந்துள்ளது......

  ReplyDelete
 24. //தயாஜி வெள்ளைரோஜா said...//

  வருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.கணினி பிரச்னையால் தாமதமாக பதில்.

  //உலகத்தின் கடைசி மனிதன் உறங்கி கொண்டிருந்தான்...கதவு தட்டப்பட்டது..!!//

  நானும் படித்திருக்கிறேன்.நன்றி.

  ReplyDelete
 25. sujatha is great

  sujatha fans are great

  by ramaprabha

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!